Thursday, 4 April 2019

நாம் ஏன் பீ ஜே பி க்கு வாக்களிக்க வேண்டும் ?

நாம் ஏன் பீ ஜே பி க்கு வாக்களிக்க வேண்டும் ?

1. "புலி வருது புலி வருதுன்னு " நம்மையும் பயமுறுத்தி , அந்தப் புலியை உள்ளே ( காஷ்மீரில் ) உலவ விட்டு நாட்டையும் வேட்டையாடி , இரட்டை வேடம் போட்ட காங்கிரஸ் போல அல்லாமல் , ஒரு முறத்தால் அடித்தே அந்தப் புலியை (பாகிஸ்தானை) ஓட ஓட விரட்டி உலக சாதனை படைத்த ஒரு காரணத்துக்காகவே என் ஓட்டு BJP க்கு !

2. பிஜேபி , ஊழலை வேரறுக்கும் கட்சியாதலால், மக்கள் பணம் இனி வரும் நாட்களில் , ஊழல் பெருச்சாளிகளால் சூறையாடப் படாது என்பது  என் இரண்டாவது நம்பிக்கை !

வளர்ச்சி திட்டங்கள் :

1. உலக வங்கி, நமது பிரதமர் திரு. மோடிக்குப் பிடித்தமான  " CLEAN  INDIA " திட்டத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளது ; இத்திட்டத்தை  ஆதரித்து 1.5 பில்லியன் டாலர் ஊக்கத் தொகையையும் அறிவித்துள்ளது
http://www.worldbank.org/en/news/press-release/2015/12/15/world-bank-approves-usd-1point5-billion-support-india-universal-sanitation-initiatives

2. சூரிய சக்தி  ஆய்வை ஆதரிக்கும் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான " அணு சக்தி ஒப்பந்தம்" , IAE யினால் ( Inventions for Energy Alternatives ) பாராட்டுப் பெற்றுள்ளது . இந்த ஒப்பந்தம், சூரிய சக்தியின் பயன்பாட்டில் , இந்தியா உலக அளவில் நிகழ்த்தப் போகும் சாதனைகளில் ஒரு மைல் கல்லாகும் .
http://www.world-nuclear-news.org/NP-India-Japan-reach-agreement-on-nuclear-cooperation-1412155.html

3. இன்னும் ஒரு வருடத்தில் , 100 ரயில் நிலையங்களில் இலவச WIFI சேவையும் , 20 லட்சம் பேருக்கு Android Developers வேலை வாய்ப்பும் கொடுக்க Google நிறுவனம் சம்மதித்துள்ளது .
http://www.cnet.com/news/google-to-install-free-wi-fi-at-400-railway-stations-in-india/

4. மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியின் முக்கிய திட்டங்களில் ஒன்றான " இலவச Online  CBSC புத்தக சேவை "  விரைவில் அமல் படுத்தபட உள்ளது ..
http://indianexpress.com/article/india/education-news/cbse-books-to-be-made-available-online-for-free/

5. இந்தியா , U.A.E. யுடன் ஒரு முக்கியமான எண்ணெய் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரில் அல்லாமல்  இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய U.A .E ஒப்புதல் அளித்துள்ளது . அதன் நன்மைகள் கீழேயுள்ள லிங்க்கில் :
https://www.kamadenu.in/news/special-articles/11515-india-uae-sign-currency-swap-deal.html

6. ரயில்வே நிர்வாகம் Scrap அயிட்டங்களை  ஏலம் விட்டதில்  3000 கோடி ரூபாயை .அரசுக்கு வரவு வைத்துள்ளது . ஆன்லைனில் இந்த ஏலம் வெளிப்படையாக நடந்ததால் இதில் எந்த ஊழலும் இல்லை .

7. "MakeinIndia" என்கிற 'இந்தியாவிலேயே தொழில் உற்பத்தி செய்யும் கொள்கைக்கு ஆதரவாக மஹாராஷ்டிர மாநிலத்தில் 15.2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான commitment  கிடைத்துள்ளது . இதில் ஒரு 10% கிடைத்தால் கூட 1.52 லட்சம் கோடி முதலீடு செய்யப் படும் .

8.  சென்னைத் துறைமுகத்திலிருந்து கண்ட்லா துறைமுகத்துக்கு முதன்முதலாக 800 கார்கள் ( first batch ) அனுப்பியதில், போக்குவரத்து செலவு மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. இது போன்ற Cargo ( within the country ) போக்குவரத்துக்கு இதுவரை சட்டத்தில் இடமில்லை ; பொருளாதார  நலன் கருதி இந்த சட்டத்தை தற்போதுள்ள அரசு மாற்றியமைத்துள்ளது .

BJP அரசு செய்த சிறு பிழைகள் :

1. பீ ஜே பி செய்த தவறுகள் என்று சுட்டிக் காட்டப் படும்  demomitisation , GST போன்றவை உலக நாடுகளால் பாராட்டுப் பெற்ற அருமையான schemes என்றாலும் , இந்தியாவில் அவற்றைக் கொண்டு கொண்டு வந்த நேரமும் , விதமும் சரியில்லாததால் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன ; இன்னொரு term கால அவகாசம் பீ ஜே பி க்கே கொடுத்தால் , அதை அவர்களே சரி செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன .

2.  பீ ஜே பி செய்த இன்னொரு தவறு , குற்றவாளிகளை கண்டு பிடித்தும் , அவர்களை உலவ விட்டு எந்த நடவடிக்கையும்  எடுக்காமல், மெத்தனமாகக் காலம் தள்ளுவது .
ஆனால், இதில், காவல், நீதித் துறைகளும் சம்பந்தப் பட்டதாலும் , சட்டங்களில் பல ஓட்டைகள் இருப்பதும் கூடக் காரணங்களாக இருக்கலாம் .  இந்தத் தவறும் கூட இன்னொரு term கால அவகாசத்தில் சரி செய்யப் படலாம் . அது, மக்கள் கையில் உள்ளது.

நாட்டில் சிறப்பான வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன ; நாம் நினைக்கும் வேகத்தில் செயல்படா விட்டாலும் , இந்த ஊடகங்களின் கூப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அமைதியாகத் தனது வேலைகளையெல்லாம் ,  இந்த அரசு செய்து கொண்டுதான் வருகிறது . 
எந்த ஆரவாரமும் இல்லாமல் செயல் படும் இந்த அரசின் சாதனைகளை இந்திய மக்கள் நாம் பகிர்வோம்

Facebook

https://www.facebook.com/100026573453662/posts/281782936050819/

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...