கார்ப்பரேட் எதிர்ப்பு என்று செய்திகள் மீமிஸ் படித்ததும் பொங்கும் நபர்களுக்கும் முக்கியமாக மாணவர்கள் , இளையவர்க்காக இந்தப் பதிவு:
காசு இல்லை என்றால் காதலிக்கு மட்டும் அல்ல தாய் தந்தையருக்கும் கூட நீ பாரமாவாய் இதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் பொறுமையாக மேற்கொண்டு படிக்கவும்.
----------------------------------------------------------------------------------
முதலில் கார்ப்பரேட் என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது?
என்னிடம் ஒரு 25லட்சம் இருக்கு. அதை நான் வங்கியில் போட்டு வச்சா அது 7% வட்டி தான் தரும். அதனால் இடம், வீடு வாங்கிப் போட்ட அது எவ்வளவு போகும் என்ற ஒரு கணிப்பு இப்போ கஷ்டம். எனக்கு வருடம் ஒரு வருமானம் வேண்டும் அதே நேரம் என்னுடைய இந்த 25லட்சம் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். என்ன செய்யலாம்!!!
என் நண்பர் ஒருவர் தொழிற்சாலை தொடங்கப் போகிறார் , அவரிடம் முதலீடாக நான் போட்டு வச்சா எனக்கும் லாபத்தில் ஒரு பகுதி வரும் , என் முதலீடும் கம்பெனியில் சேர் என்ற முறையில் கம்பெனி சொத்தின் மதிப்புடன் என் முதலீட்டின் மதிப்பும் கூடும். இது தொழில் முதலீடு.எப்படி நிலம் , தங்கம் வாங்கிப் போடுவது போல இது தொழில் முதலீடு.
அந்த நண்பன் தொடங்கும் தொழிலின் மொத்த முதலீடு மதிப்பு 1கோடி என்றால் நான் 25% என்னுடையது. அந்தத் தொழில் வருடம் 20லட்சம் லாபம் தரும் என்றால் லாபத்தில் 25% அதாவது 5லட்சம் என்னுடையதாக லாபம் பிரித்து கொடுப்பான். { செலவினம், வரி எல்லாம் போக ஒரு நல்ல ரிட்டன் இருக்கும்} இது நல்ல முதலீடு தானே? என் முதலீடும் 5 வருடத்தில் திரும்ப கிடைக்கும் , அது தவிர கம்பெனி மதிப்பு உயர உயர என் முதலீட்டின் மதிப்பும் உயரும். ஆக முதலீடு மதிப்பு உயரும் ; எனக்கு என் முதலீட்டின் மூலம் ஒரு வருமானமும் கிடைக்கும்.
எனவே நான் என் நண்பன் நிறுவனத்தில் முதலீடு செய்வது சரி தானே?
ஆனால் வெளியுலகம் என்ன நினைக்கும்? என் நண்பன் 1கோடி முதலீட்டில் தொழில் நடத்துகிறான் ; அந்த கம்பெனி மூலம் லாபம் அவனுக்கு வருடம் 20லட்சம் கிடைக்கிறது என்று. வெகுஜன மக்கள் யாருக்கும் அதில் எத்தனை முதலீட்டாளர்கள் என்ற விவரம் தெரியாது. அதனால் அவன் அதைத் திருப்பி முதலீட்டாளர்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்கிறான் என்பது எவனுக்கும் தெரியாது.
இங்கே முதலில் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள தவறும் விசயம் இது தான்... முதலீட்டாளர்கள் விவரம் தெரியாமல் பேசுவது.... ஒரு உண்மையான எடுத்துக்காட்டுக்கு வருவோம்.....
இப்போது இதே தான் infosys என்ற நிறுவனம் 2016ல் மொத்த வருமானம் 68,484 கோடி. அதில் லாபம் 25,231கோடி. ஆனால் அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் ???
மொத்த 2,285,616,160 சேர்கள். அப்போ ஒரு சேருக்கு எவ்வளவு கிடைக்கும்? கொஞ்சம் கணக்கு போடுங்கள் இந்த லாபம் பல ஆயிரம் கோடி எல்லாம் மொத்தமாகப் பார்க்கும் பொது தான் பிரமாண்டமான வருமானம் போல தெரியும்.
ஒரு சராசரி கணக்கின் படி சுமார் 1000 சேர் (5லட்சம் ரூபாய் மதிப்பிலான சேர்) நீங்கள் வைத்திருந்தால் அன்று உங்கள் அந்த நிறுவனத்தின் முதலீட்டின் மூலம் கிடைத்த வருமானம் 1 லட்சம் ரூபாய். ஆக 5 லட்சத்திற்கு வாங்கிய என் சேர் மூலம் எனக்கு 18%க்கும் மேல் ரிட்டன் கிடைத்துள்ளது... ஒரு fixed deposit விட இது நல்ல ரிட்டன்... {என்னைப் போல் எத்தனை லட்சம் முதலீட்டாளர்கள் வீடு இதனால் வருமானம் பெறுகிறது ???? கொஞ்சம் யோசிக்கவும்.}
அடுத்து நீங்கள் யோசிக்க வேண்டிய விசயம் :
ஒரு பக்கம் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்து பல லட்சம் குடும்பம் என்றால் இன்னொரு பக்கம் அந்த நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பினை பெற்ற ஊழியர்கள் குடும்பம் வேலைவாய்ப்பின் மூலம் பயனடைகிறது. அப்படிப் பார்த்தால் infosys நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 200,364 பேர்.... ஆக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பி சுமார் 10லட்சம் குடும்பங்கள் பிழைப்பு இருக்கிறது... இதை உங்களால் முதலில் உணரமுடிகிறதா?????
நான் எளிமையாகக் கூறிவிட்டேன் ஒவ்வொரு நிறுவனமும் பல போராட்டங்களைச் சந்திக்கின்றன.. அதே அளவு மோசமான எதிரிகளையும் வைத்துக் கொண்டு.. 10,000 ரூபாய் வருமானம் உங்களுக்கு ஒரு கடையில் இருந்து வந்தால் அதையே ஆயிரம் போட்டி இருக்கும் என்றால் இதை எல்லாம் எவ்வளவு சிக்கல் இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்...
கண்மூடித்தனமாக கார்ப்பரேட் நிற்யுவனர்கள் என்றால் ஏதோ ஏலியன் போல் பார்ப்பதை முதலில் திருத்துங்கள்... அப்போ தான் உங்களுக்குத் தொழில் சார்ந்த புத்தியும் - பணம் தேடுவதற்கான சரியான வழிகளும் புரியும்...
அடுத்து இந்த நிறுவனகள் மூலம்
எனவே பெரிய லாபம் , பெரிய கம்பெனி என்பது அல்ல விஷயம். அந்த நிறுவனத்தின் முதலீடு எத்தனை முதலீட்டாளர்கள் என்பதுவே விஷயம். ஆனால் இந்தப் பொருளாதாரம் தெரியாத சீமான் போன்றவர்கள் மக்களை எப்படி உசுப்பிவிடுவர் என்றால் 25,231 கோடி லாபம், ஆனா என் அப்பத்தா சோத்துக்கு வழி இல்லை.
இப்படி ஒரு துறையில் இருக்கும் பிரச்சனை புரியாமல் பெரும் நிறுவனங்களை இவன் அப்பத்தாக்களுடன் ஒப்பிடுவது எந்த அறிவார்ந்தவன் செய்வான்???
தமிழக நிறுவனங்களின் முதலீட்டாளர்களுக்கு பெரும் ஆபத்தைச் சமீபகாலமாக உருவாக்கிவருகிறார்கள் இங்கே இருக்கும் அர்பன் நக்சல் கூட்டம்... கம்யூனிஸம் "நல்ல விசயம் போல் தெரியும் ஆனால் அது உருவாக்கிய நாசம் மிகப் பெரியது என்ற வரலாற்றை உணராத மக்கள் வாழும் இடம் இந்தியா தான். அதிலும் தமிழ் நாட்டில் சமீபத்தில் வேகமாக நக்சல் சிந்தனை எதோ புரட்சிகர சிந்தனை போல் பரவுகிறது".
"இங்கே இருக்கும் நிறுவனங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பணத்தை திரும்பப் பெற்றால் என்ன ஆகும்???? பணியாட்களை குறைத்து மொத்த நிறுவத்தின் வேலைவாய்ப்பும் போகும். எனவே infosysநிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ஆடம்பரமாக வாழ்வது போல தெரியும் ஆனால் அவர்களை நம்பிப் பல லட்சம் கோடி போட்ட மக்கள் ஒருபக்கம் , அவனை நம்பி வேலை பார்க்கும் ஊழியர்கள் ஒருபக்கம் என்று இருபக்க நலனையும் கொண்டு வேலை செய்கிறான்" அவன் பிரச்சனை புரிந்து கொள்ளாமல் சும்மா அவன் பிளைட்ல பறக்குறான் என்றும் கார் வச்சுருக்கான் என்றும் பொறாமை கொள்வது எப்படிச் சரி!
-------------------------------------------------------------------------------------------------
இன்னும் சில தகவல்களைப் புரிந்து கொள்ளுங்கள்:
ரிலையன்ஸ் நிறுவனம் 1லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் jio. இதனைத் தொடங்க அவ்வளவு பெரிய முதலீட்டை அவரை நம்பிக் கொடுக்க மக்கள் இருக்கும் போது அவரைக் குறை சொல்ல ஏன் நமக்கு ஆர்வம் வருகிறது? (நீங்கள் ஏதோ அரசு கொடுத்து நிறுவனங்கள் ஆரம்பிக்கிறார்கள் என்று நினைக்கிறீரா??? அது உங்கள் தவறு இவ்வளவு பெரிய தொகையை அரசு தருவது இல்லை. இன்னும் சொல்ல போனால் அரசே பொதுத்துறை பங்குகளை விற்று இதே வழியில் மக்களிடம் பணம் வசூல் செய்து தான் நிறுவனங்கள் நடத்துகிறது. இதை எப்படி என்று பின்னால் பார்க்கலாம்.)
நீங்களும் நானும் இதே போல நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தால் எவன் அவ்வளவு பணத்தினை கொடுப்பான்??? ஆனால் முகேஸ் அம்பானி, பிர்லா குழுமம் , டாட்டா என்றால் நிச்சயம் நல்லவிதமாகத் தொழில் செய்யக் கூடிய புத்திசாலி என்பது அவர்கள் வரலாறு. எனவே அவரிடம் தங்கள் பணத்தைக் கொடுக்கிறார்கள் மக்கள். இதில் அவர்கள் பக்கம் என்ன தவறு ஒரு கார்ப்பரேட் முதலாளியாக?
அதுவும் ஒரே இரவில் யாரும் வர முடியாது. அவர்களை நம்பிக் கொடுக்கும் அளவுக்குத் தொழில் வளர்ச்சியின் மூலம் மக்களிடம் நம்பிக்கையைப் பெறவேண்டும். அதற்குத் தன்னை நம்பி பணம் போடும் முதலீட்டாளர்கள் லாபத்தைக் கொடுக்கவேண்டும். அவர் அனில் அம்பானி அவர்கள் முன்னர் தொட்ட நிறுவனமான ரிலையன் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான Jamnagar Refinery தினமும் 70கோடி லாபம் கிடைக்கிறது. அந்த நிறுவனத்தைக் கட்டி முடிக்க அவருக்கு மொத்த முதலீடாக தேவைப்பட்டது எவ்வளவு தெரியுமா ?? அந்த நிறுவனத்தை அவர் இன்சூரன்ஸ் மதிப்பு மட்டும் 50,000கோடி.
அந்த தொழிற்சாலை முதல்கட்ட முதலீடு மட்டும் 1.8லட்சம் கோடி. இந்த அளவு பணம் அவர் வீட்டு பீரோவில் இல்லை மக்கள் அவரை நம்பி முதலீடு செய்கிறார்கள்.
இது யாருக்கு லாபம்? அவரை நம்பி பணத்தை முதலீடு செய்த அனைவருக்கும் தானே? சரி இது முதலீட்டாளர்களுக்கு லாபம். நாட்டுக்கு? கடந்த ஆண்டு 7,827 கோடி நாட்டுக்கு வரியாகக் கட்டுகிறது Reliance Industries. அவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கி முகேஷ் அம்பானி அந்தத் தொழில் சாலையில் மொத்தம் 250,000 ஊழியர்கள் நேரடி வேலை வாய்ப்பும் , மறைமுகமாக 10.5லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
அதாவது
1.முதலீட்டார்களிடம் பணத்தினை வசூல் செய்யும் திறமையும் உண்டு ,
2.அதைக் கொண்டு வெற்றிகரமாகத் தொழில் தொடங்கும் புத்திசாலித்தனமும் உண்டு ,
3. அதன் மூலம் 250,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் ஒரு நிர்வாக திறமை உள்ளவர்
4.முதலீட்டாளர்களுக்கு லாபம் , நாட்டிற்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வரியும் கிடைக்கும்.
எப்படி வாய் கூசாமல் நாம் இந்த மனிதர்களைக் குறை சொல்வதே வேலையாக இருக்கிறோம்?????? சரி இந்த விசயத்தில் அவர் எப்படி வெற்றி பெற்றார்; நாமும் எப்படி தொழில் நடத்துவது? இப்படி ஏன் சிந்தனை வருவது இல்லை????? எல்லாரும் வேலை தேடினா எவன் தான் வேலைக் கொடுப்பது???? கேட்டால் அரசே எல்லாம் நடத்த வேண்டும் என்ற முட்டாள்தனமான கம்யுனிஸம் பேசுவது...
யாரைச் சொல்லி நொந்து கொள்ள நான்? என்ன மாதிரியான தொழில் எப்படி எங்கே தொடங்கலாம் என்று சிந்திக்கும் அறிவு இல்லாத ஒரு குருட்டு சமூகத்தை உருவாக்கிவிட்ட இந்தக் கல்வியாளர்களை நான் நொந்துகொள்வதா? இல்லை வேலை தேடி கார்ப்பரேட் கம்பெனி வாசலில் நின்று , அதே கார்ப்பரேட் காரன் விற்கும் jio சிம் வாங்கி புண்ணியவான் என்று சொல்லிவிட்டு அவனையே எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று புலம்பும் கூட்டம் என்றுமே அப்படியே இருக்கும் என்பதை நினைத்து நொந்து கொள்வதா?
கேட்டா இலுமினாட்டி , கம்மினாட்டினு எதையாது எவனாது சொன்னத அப்டியே உக்காந்து குழப்பவேண்டியது.
---------------------------------------------------------------------------------------------------------------
சில குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ளுங்கள்:
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன கொடுத்து தள்ளுபடி செய்கிறார்கள் என்று சொல்வது எல்லாம் முட்டாள்தனம். வட்டி இல்லாமல் கடன் திரும்பச் செலுத்த சொல்லிக் கூறுவதை நான் பார்த்தது உண்டு , இல்லையா நஷ்டமாகும் நிறுவனத்தின் சொத்துகளை விற்க அது சரியாக ஏலம் போகாமல் வங்கிகளுக்கு நஷ்டம் ஆவதை நான் படித்தது உண்டு.
ஆனால் மொத்த கடனையும் 100000கோடி 20ஆயிரம் கோடி தள்ளுபடி செய்கிறார்கள் என்பது எல்லாம் எப்படி மக்கள் அதுவும் படித்தவன் நம்புகிறான் என்று எனக்குப் புரிவது இல்லை. டேய் இங்கே நீதிமன்றம் இருக்கிறது. அவர்கள் சும்மா விட்டுவிட மாட்டார்கள் ஞாபகம் இருக்கிறதா Sahara நிறுவனம்?? அவன் தான் பலவருசம் இந்திய கிரிகெட் டீமுக்கு ஸ்பான்சர், அவன் இன்றைய நிலை என்ன???? சின்ன முதலீட்டாளர்கள் விசயத்தில் தவறு செய்ய மொத்தம் தூக்கி சிறையில் வைத்துவிட்டது நீதிமன்றம். அவர் இத்தனைக்கு திறமையான நிர்வாகி ஆனால் செய்த குற்றத்தால் மொத்தமாக மதிப்பிழந்தார். இன்று எவரும் அவரை நம்பி முதலீடு செய்ய தயார் இல்லை. விஜய் மல்லையா விசயம் நாம் முன்னரே தெளிவாக விளக்கிவிட்டேன்.
இங்கே எப்படி ஆகிவிட்டது என்றால் நீதி மன்றம் ஒன்று இல்லவே இல்லை ; மக்கள் தான் நீதி கொடுக்கவேண்டும் என்ற ரீதியில் ஆகிவிட்டது.
இன்னொரு கொடுமை என்னவென்றால் ONGC , GAIL எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவிட்டது நம்ம நாம் தமிழர் கட்சி போராளிகளுக்கு. டேய் அறிவுகேட்டவனுகளா அது இந்திய அரசு நிறுவனம்டா.. என்னடா அநியாயம் பன்னுறேங்க. என்று சொன்னால் அதைக் காதில் வாங்காமல் அவன் இஷ்டத்துக்குக் கத்தி கத்திப் பேசி திரிகிறான்.
சலுகைகள் வழங்கவே இல்லை என்று கூறமுடியுமா ? என்றால் அப்படிக் கூறமாட்டேன்.
இந்தியா அனைத்து வாகனங்களையும் 2030க்குள் எலக்ரிக் வாகனங்களாக மாற வாகன உற்பத்தி ஆலைகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் என்னும் பொது அதற்கு ஆராட்சிகளை மேற்கொள்ள நிறுவனங்கள் உதவிசெய்யக் கேட்டு கொண்டன , அதற்கு மோடி அரசு 60%செலவினை ஏற்கத் தயார் என்று ஆதரவு தெரிவிப்பது சலுகை தான். ஆனால் அது நியாயமான சலுகை.
அதைவிட்டு விட்டு sun tv கேபிள் ஒளிபரப்புக்கு BSNL323 ISDN lines முறைகேடாகப் பயன்படுத்த அனுமதிப்பது , நிலக்கரி அல்ல நிறுவனங்களுக்குச் சலுகை என்ற பெயரில் விலை நிர்ணயம் செய்ததில் பெரும் நஷ்டத்தை உருவாக்குவது என்று அரசு சலுகை என்று கூறி பெரும் நிறுவனங்களிடம் பெரும் தொகைக்கு விலை போவது தவறு.
---------------------------------------------------------------------------------------------------------------
இறுதியாக :
நீ கையில் வைத்திருக்கும் போன்??? பேசும் நெட்வொர்க்???? உன் வீட்டில் இருக்கும் TMT கம்பி??? Facebook whatsapp???? youtube???? google??? நீ வோட்டும் கார் பைக்???? உன்னைச் சுற்றி பார் அனைத்துமே கார்ப்பரேட் தான்.... நீங்கள் முழுவதும் ஒரு விசயத்தைத் தமிழ் சினிமா கதா நாயகர்களால் தவறாக வழி நடத்தப்படுகிறீர்.. அவர்கள் உங்கள் உணர்வுகளைத் தூண்டி வியாபாரம் பார்க்கிறார்கள் அதை உணருங்கள்...
கார்ப்பரேட் எதிர்ப்பு என்று எடுத்த படத்தின் மதிப்பு 100 கோடி, கதா நாயகன் வாங்கிய சம்பளம் 20 கோடி , படம் எடுத்தவர் ஒரு கார்ப்பரேட் முதலாளி , படத்தை இயக்கியவர் சம்பளம் 10கோடி - ஆனால் பேசிய வசனம் ??? "உனக்குப் போக மீதம் இட்டிலி உன்னுடையது இல்லை அது தான் கம்யுனிஸம்".
இதை விட ஒரு கேடுகெட்ட ஏமாற்றும் வேலை ஒன்று உண்டோ????? அவர்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் எப்படி வாழ்வு வாழ்கிறார்கள் என்று கொஞ்சம் பார் அது உன் உணர்வுகளைத் தூண்டி அவர் சம்பாரித்த பணம்.... அவர்கள் அல்ல நீங்கள் தான் முட்டாள்கள்... எந்தச் செய்தி நிறுவனம் சொல் இங்கே சமூகத்திற்கு இயங்குகிறது என்று??? எல்லாமே வியாபாரம் தான்...
"பணம் சம்பாரிக்கும் இந்த பெரும் நிறுவனங்களைத் திட்டிய நாம் எத்தனைப் பேர் அவர்கள் எப்படி இவ்வளவு சம்பாரிக்கிரார்கள் என்றும் - அது போல் நாம் எப்படி சம்பாரிகளாம் என்று சிந்தித்தது உண்டா! அப்படித் தேடி இருந்தால் இந்நேரம் இங்கே பல படித்த பட்டதாரிகள் கார்ப்பரேட் வாசலில் போய் வேலை தேடமாட்டார்கள். உண்மையில் பிரச்சனை பணம் சம்பாரிப்பவனிடம் இல்லை. பணம் சம்பாரிப்பவனை பார்த்து பொறாமை கொள்பவனிடம் தான் உள்ளது".
1000 புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட ஒரு சினிமா திரையில் ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தில் அதிகம்.
ஆனால் இங்கே சினிமா என்பது முழுக்க வியாபார சிந்தனையாக மாறிவிட்ட நிலையில் எப்படி மக்கள் உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் அடையாளாம், சம்பாரிக்கலாம் என்று திரிவது ஒரு கேடுகெட்ட சமூகத்தை நாசம் செய்யும் செயல். திரைப்பட துறை ஒன்று போதும் இந்த நாட்டை நாசம் செய்வதற்கு என்று கூறும் அளவிற்கு விச செடியாக மாறி - மரமாக வளர்கிறது.
அம்பானி , பிர்லா , டாடா எவரும் நீங்கள் திரையில் பார்க்கும் எந்த நடிகரையும் விட அதிகம் உழைத்தவர்கள். எந்த முடிவும் கொள்ளாது கொஞ்சம் இவர்கள் வாழ்வின் தினமும் சந்திக்கும் விசயங்கள் பிரச்சனைகள் என்ன என்ன என்பதைத் தேடி புரிந்து கொள்ளுங்கள்.. அப்போது யார் உங்களுக்குச் சரியான வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதை உங்களால் உணரமுடியும்.
நம் நாட்டின் நிறுவனங்கள் நம் நாட்டின் சொத்துக்கள்.. நாளை நீயும் ஒரு பெரும் நிறுவனந்தை உருவாக்கினால் அதுவும் அப்படியே... தயவு கூர்ந்து பொறுமையாக நான் சொல்வதை சிந்திக்கவும்.
முதலில் கூறியதை மீண்டும் உனக்கு நியாபகபடுத்துகிறேன்
"காசு இல்லை என்றால் காதலிக்கு மட்டும் அல்ல தாய் தந்தையருக்கும் கூட நீ பாரமாவாய் இதை மனதில் கொள்".
-மாரிதாஸ்
{மீள் பதிவு}