உதயநிதிக்கு வயது 41. முரசொலி நாளிதழ் நிர்வாக இயக்குனராக இருக்கிறார். அவர் பிறந்த ஆண்டான 1977 முதல், கட்சி உறுப்பினராக உள்ளார். சமூக ஆர்வலராக உள்ளார். கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார் : செய்தி
உதயநிதி ஸ்டாலின்...
கருணாநிதியின் குடும்பத்தில் பிறந்ததால்... வழக்கம் போல, பிறக்கும் போதே ஒருகையில் திமுக உறுப்பினர் அட்டையுடனும், மறுகையில் திமுக கொடியுடனும் பிறந்தார். அரசியலில் இருந்தாலும் கூட, தன் வயிற்றுப் பிழைப்புக்காக சிறுவயதில் வீடுவீடாக பேப்பர் போட்டும், உணவகங்கள், மளிகை கடைகள் என்று வேலை பார்த்தும்... சிறுகச் சிறுக சேர்த்துவைத்த... பல கோடிகளை போட்டு சினிமாவில் படங்களை தயாரித்து, அரைவயிற்று கஞ்சியை குடித்துவந்தார். தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட உதயநிதி... அதனாலேயே கூட தன் சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கு, 'ரெட் ஜெயண்ட் மூவீஸ் ' என்று, முத்தமிழில் பெயரிட்டார்.
ஒரு கட்டத்தில்... இவரின் வசீகரிக்கும் அழகை பார்த்தும், கணீரென்ற உச்சரிப்பை கேட்டும்... தமிழக மக்கள், உதயநிதி மீது மயக்கத்தில் விழுந்தனர். இதை நன்கு உணர்ந்த தமிழ் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, "உதயநிதி சினிமாவில் நடித்தால் மட்டுமே, இனி தமிழ் சினிமாவை பிழைக்க வைக்க முடியும்" என்று ஒருமனதாக தீர்மானம் போட்டு, இவரின் வீட்டின் முன் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயற்சிக்க... இயல்பிலேயே அடுத்தவர் துயர்கண்டு துடித்துப் போகும் உதயநிதி, தன் சினிமா நடிப்பு வாழ்க்கையை துவக்கினார். மறுபக்கம்... "திமுகவின் தலைமையை, உதயநிதி ஏற்க வேண்டுமென்று முழக்கமிட்டு, ஏராளமான திமுக தொண்டர்கள் தீ குளிக்க முயல... "தன் மகன் என்பதற்காக, என் தந்தை எப்படி எனக்கு சலுகை காட்ட வில்லையோ... அவர் வழிவந்த நானும் என் மகனுக்கு சலுகை காட்ட மாட்டேன். என்னைப் போல உழைத்து... தகுதியும், திறமையையயும் வைத்து மேலே வரட்டும்" என்று, திரு. ஸ்டாலின் போர்க்கொடி தூக்கி... உதயநிதியின் கையைப் பிடித்து, இரக்கமே இல்லாமல், கதறக்கதற தரதரவென இழுத்துச் சென்று, திமுகவினர் நிற்கும் வரிசையில் கட்டகடேசி தொண்டராக நிறுத்திவிட்டார். ஆனாலும்... மாவீரன் உதயநிதி, மனம் தளரவில்லை. இரவில் தன் பிழைப்புக்கான சினிமா போஸ்டர்களையும், கொள்கைக்காக திமுக போஸ்டர்களையும்... தெருத் தெருவாக ஒட்டி வருகிறார்.
உதயநிதியின் கொள்கைப் போராட்டங்கள்...
உதயநிதி ஆறுமாத குழந்தையாக, தன் தாயார் திருமதி. துர்கா அவர்களின் மடியில் படுத்திருந்த போது, திடீரென எழுந்து முழக்கமிட்டுக் கொண்டே... சாலையில் வேகமாக வந்த ஒரு லாரியை நோக்கி ஓட ஆரம்பித்தார். அவரின் தாயாரும் பின்னால் ஓடி... ஒருவழியாக காப்பாற்றி தூக்கி வந்துவிட்டார். மாலை வீட்டுக்கு வந்த திரு. ஸ்டாலின் இதைக்கேட்டு, "ஆறுமாத குழந்தை... முழக்கமிட்டு சாலையில் ஓடியதா ?" என்று, அதிர்ச்சி அடைந்தார். நம்ப மறுத்தார். செர்லாக் சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்த உதயநிதி கண்விழித்தார். பேச ஆரம்பித்தார். "தந்தையே... அம்மா சொல்வது உண்மைதான். நான் சாலையில் ஓடியது... தமிழை செம்மொழி ஆக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைகாகத்தான். அதைத்தான் முழக்கமிட்டு... லாரியில் தலையை குடுக்க ஓடினேன்" என்றார். இந்த செய்தி, திமுகவினர் மத்தியில் காட்டுத்தீ போல பரவியது. ஆர்ப்பரித்தனர், ஆனந்த கூத்தாடினர். மத்திய காங்கிரஸ் அரசு மிரண்டுபோய், தமிழை செம்மொழியாக அறிவித்தது.
இத்தனை வீறுகொண்ட போராட்டங்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு வரும் உதயநிதி, நாட்டை ஆளும் தகுதியும், திமுகவை திறம்பட வழிநடத்தும் திறமையும் இருந்தும் கூட... தலைவர் ஸ்டாலினின் மகன் என்ற ஒரேஒரு அற்ப காரணத்துக்காக... இன்று திருவாரூரில் இடைத் தேர்தலுக்கான சீட் மறுக்கப் பட்டிருக்கிறார். இப்படி எத்தனையோ சொல்லொனா துயரங்களை அடக்கிக் கொண்டு, இன்றும் திமுகாவின் கடைக்கோடி தொண்டனாக, ஒரு ஏழை குடியானவனின் மகனைப் போல, லிட்டருக்கு 3 கிலோமீட்டர் மட்டும் மைலேஜ் கொடுக்கும், சாதாரண ஹம்மர் காரில்தான் வலம் வருகிறார் #இளைய_தளபதி_உதயநிதி !!! 😔😢😭