Wednesday, 7 November 2018

S400__ ஏவுகணை நன்மைகள் ,, ஒரு பார்வை

#S400__ ஏவுகணை 
நன்மைகள் ,, ஒரு பார்வை

நீண்ட காலம் தள்ளி போய் கொண்டே இருந்த ஒப்பந்தம்  சுபமடைகிறது

இந்திய ராணுவ வரலாற்றிலேயே S400 ஏவுகணை வாங்குவது தான் ஒரு மாபெரும் திருப்புமுனை என்பது சிலருக்கு மட்டுமே புரியும் தகவல்..

நன்மைகள் ,
-----------------------
* உலகில் உள்ள வான் தடுப்பு ஏவுகணைகளில் S400 தான் நம்பர் ஒன்.. இந்த ஏவுகணையை மீறி ஒரு சிறு பந்து கூட அதன் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைய முடியாது..இந்திய எல்லையில் இந்த ஏவுகணைகளை நிறுத்தினால் 400  கிலோமீட்டர் அங்கு வரும் எந்த எவுகணைகளையும் தகர்த்து விடும், ஒரு நாடு நம் நாட்டின் மீது ஏவுகணை வீசினால் அங்கே தடுத்து அந்த நாட்டில் மீதே விழ வைத்து விடும்

* இது வரை அத்து மீறினால் மட்டுமே உதை வாங்கிய பாக்கிஸ்தான், இனி இந்தியா மீது அணுகுண்டு போடுவேன் என்று கூறிய நொடியே உதைவாங்குவது உறுதி.. காரணம், அவர்கள் அணுகுண்டு போட்டாலும் அதை இந்தியாவில் விழ விடாது இந்த S 400..

இந்த ஏவுகணை இந்திய சீன எல்லையில் 400 கிலோ மீட்டர்  கண்காணிக்கும் தன்மை கொண்டது ,,இது   இந்தியாவுக்கு சீன மீரட்டலில் இருந்து பாதுகாக்க மிகவும் அவசியமான ஓன்று

இந்த ஒப்பந்தத்தால் அமைதி நிலவும். சீன, பாகிஸ்தான் நாடுகள் ராணுவ ரீதியாக நம்மை சீண்டுவதற்கு விரும்பவே விரும்பாது. நமது ராணுவ பலம் பல மடங்கு கூடும். எதிரி நாடுகள் நம்மை தாக்க அஞ்சும் , அதனால் , செலவினங்கள் குறையும் ,, உயிர் இழப்பது குறையும் ,, இதுவெல்லாம் நம்மிடம் ஆயுதங்கள் இருக்கிறது என்றால் தான் எதிரிக்கு ஒரு பயம் வரும் ..

மோடியின் அரசு அமைந்த பிறகு ஒரு விஷயத்தில் அனைவருக்கும் மிகவும் தெளிவு இருக்கிறது. இந்தியாவிற்கு  பாகிஸ்தான் ஒரு பொருட்டே அல்ல,, ஆனால் முந்தைய ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தான் எதோ மிக பெரிய ராணுவ வல்லமை படைத்த நாடு என்பது போலவும், இந்தியா  அவர்களை பார்த்து அஞ்சுவது போலவும் ஒரு தோற்றத்தை இங்கும் பாகிஸ்தானத்திலும் ஏற்படுத்தியிருந்தார்கள்.

உதாரணம்

நமது இந்திய ராணுவ வீரன் தலையை அறுத்ததற்கு நமது அன்றைய பிரதமர் மன்மோகன் அவசரமாக அமெரிக்கா சென்று அன்றைய அதிபர் ஒபாமாவிடம் கெஞ்சி கொண்டு இருந்தார்,, பிறகு அவர் சமாதானமாக முடித்தார் என்பது வரலாறு ,, ,

அன்றய கால கட்டத்தில் பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் அலறும் ,, நாம் அமெரிக்கா என்ன சொல்ல போகிறதோ என்று பயந்து அமெரிக்காவையே பார்த்து கொண்டு இருப்போம் ,, அது ஒரு காலம்,,, ஆனால் இன்று அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஏவுகணை ஒப்பந்தம் போடுகிறோம் , 

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சிறிது காலம் ( காங்கிரஸ் ஆட்சியில் மிரட்டியதை போல ) எங்களிடம் அணுஆயுதங்கள் இருக்கிறது என்று கூறி மிரட்டியதுபாகிஸ்தான் . அதன் பிறகு இவரின் செயல்பாட்டைபார்த்த பிறகு அது போன்ற பேச்சுக்களே கிடையாது. அமைதி ஆகி விட்டார்கள் என்பதை விட அவர்கள் பயந்து அடங்கி விட்டார்கள் என்பது தான் உண்மை.

நமது ஒரே எரிச்சல் சீனாதான். அவர்கள் இன்றைய நிலையில் எவ்வளவு பலம் இருப்பதாக இருந்தாலும் நம்முடன் யுத்தம் செய்ய மாட்டார்கள்,, செய்யவும் முடியாது ,, போரில் சீனா இந்தியாவை தோற்கடிக்க முடியாது ,, அதை ஆணி தரமாக சொல்லுவேன் ,, பூலோக ரீதியில் அவர்களுக்கு இந்திய போர் சீனாவுக்கு  கை கொடுக்காது அது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அவர்களை  நாம் நம்பவே முடியாது.

ஆனால்  இன்று நம்மிடம் நேரு போன்ற கோழைகள் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும் ,, போர் என்பது பரப்பளவை வைத்து எடை போட கூடியது அல்ல ,, தலைமையை பொறுத்தது 

ராணுவ தளவாடங்களை வாங்கி குவிக்கும் நாடுகளில் நாம் மிகவும் முன்னிலை பெற்றிருக்கிறோம். ரஸ்யா  அமெரிக்க என்று இருவரிடமும் வாங்குகிறோம். பெரிய ஆயுத கஸ்டமர் நாம். ராணுவ வலிமையை மீண்டும் பெருக்குவதற்கு நாம் இருபது வகையான ஒப்பந்தங்கள் செய்வதுடன் அணுவுலை மற்றும் விண்வெளியில் நமது வீரர்களை அனுப்புவதில் அதற்கான பயிற்சி நிலையத்தை இந்தியாவில் நிறுவுவதற்கு கூட ஒப்பந்தம் உருவாக போகின்றன. உலகமே நமது ஒப்பந்தத்தை பார்க்கிறது.,,

இதன் சிறப்புகள்         
---------------------------------
* மொத்தம் ஆறு பேட்டரிகள் , 2300 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், இனி இந்தியாவும் முழுவதும் இந்த ஏவுகணை பாதுகாப்பு வலையத்திற்குள் வந்து விடும்..

.* சீனா வாங்கியுள்ள S400, 250 கீலோமீட்டர் மட்டுமே சென்று இடை மறிக்கும்...

* இந்தியா வாங்கும் இந்த ஏவுகணை ,ரஷ்ய S400ஐவிட பலமானதாக மாற்றப்படுகிறது என்பது தான் இதில் மேலும் சிறப்பு...!! ??

* ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யாதான் உலகின் முன்னோடி  ,அதே போல் ரேடார் தொழில்நுட்பத்தில் ரஷ்யாவை விட இஸ்ரேல்தான் முன்னோடி  ரஷ்யாவும் ,இஸ்ரேலும் சற்று பகைமையோடு இருந்தாலும் ,இந்தியா இருவருக்குமே மிக மிக நட்பு நாடு..

* ஆகையால இந்தியா வாங்கும் இந்த S400 ஏவுகணையில் இஸ்ரேலின் அதி நவீன ரேடார்களை, பொருத்த இந்தியா திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் இந்தியா S400, ரஷ்யாவின் S400 ஏவுகணையை விட பலமானதாக மாற உள்ளது..

* இதில் உள்ள ஒரே கருவியில் 8 லாஞ்சர ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் 16 ஏவுக ணைகளை உடனடியாக ரீ-லோட் செய்து 400 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 30 கிலோ மீட்டர் உயரத்து க்குள் இருக்கும் 36 இலக்குகள் மீது ஒரே நேரத்தில் தாக்கி அழிக்க முடியும்.

* எஸ்-400 ட்ரயம்ப் ஏவுகணைகளில் உள்ள ரேடார் ளின் மூலம் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் வரும் விமானங்களை கூட கண்டுபிடித்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் அந்த விமானம் இருக்கும் பொழுது 123....கவுண்டவுன் சொல்லி
கண்ணிமைக்கும் நேரத்தில் மணிக்கு 17000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அழிக்க முடியும்..

* அமெரிக்கா வின் எப்.-35 போன்ற ஐந்தாம் தலைமுறை விமான ங் களை கூட அவை 400 கிலோ மீட்டர் தொலைவு க்குள் சுமார் 30 கிலோ மீட்டர் உயரத்துக்குள் எங்கு
தென் பட்டாலும்  தரையில் இருந்தே அழிக்கும் வல்லமை கொண்ட து..

* அமெரிக்காவின் 5 ம் தலைமுறை விமானத்துக்கே இந்த கதி என்றால் சீனாவின் 5ம் தலைமுறை போர் விமானமான செங்குடு ஜே-20 ரக போர் விமானம் எல்லாம் இந்த
எஸ்- 400 ஐ பாரத்தாலே உச்சா போய்விடும்.

* ரஷ்யா விடம் இருந்து இந்த ஏவுகணைகளை 2015 ல்  சீனா வாங்கி விட்டது. இந்தியா இரண்டாவதாக
வாங்க இருக்கிறது. அதை விட இப்போது நிவீனமாகி விட்டது  என்ன தான் மோடி அமெரிக்காவோடு நட்பு பாராட்டினாலும் இந்தியாவின் பாதுகாப்பு என்று வரும் பொழுது எந்த ஒரு சமரசத்துக்கும் அடிபணிய மாட்டோம் என்று முடிவு எடுத்து விட்டார்  இதுதான் தலைவனுக்கு உண்டான அடையாளம்

இந்த எஸ்-400 ட்ரயம்ப் ஏவுகணைகள் மட்டுமின்றி 4 கிரிகோரிவிச் போர்க்கப்பல்கள் அடுத்து காமோவ்- 226 டி என்கிற ஸ்மால் ரேஞ்ச் ஹெலி காப்டர்கள ஒரு 200 என்று ஒட்டு.மொத்த மாக சுமார் 67.000 கோடி மதிப்பில் ரஷ்ய அதிபர் புதினோ டு டீலிங் முடித்துள்ளார் மோடி..

இதில் சிறப்புஅம்சம் என்னவென்றால் காமோவ்- 226 டி ஹெலிகாப்டர்கள் ரஷ்ய தொழில்நுட்ப த்துடன் இந்தியாவில் வைத்தே இந்தியன் ஏரோ னெட்டிக்ஸ் லிமிடெட்என்கிற அரசு நிறுவனத்தின் மூலமாகவே மேக் இன் திட்டத்தின் மூலமாக உருவாக்க ப்பட இருக்கிறது..இது ஏதோ ரபேல் டீலிங்கில் உண்டான விமர்சனங்களால் உருவானதுஅல்ல.. மாறாக மோடி 2016 ல் ரஷ்யாவுக்கு சென்று இருந்த பொழுது உண்டான திட்டம் இது.

எனவே ரஷ்யா வோடு ஆயுத டீலிங்கை வைத்துக்
கொண்டால் பொருளாதார தடை விதிப்போம்
என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டலை
கண்டு கொள்ளாது ரபேல் டீலிங்கை விட மதிப்பு வாய்ந்த டீலிங்கை ரஷ்யாவோடு செய்து முடிந்தால் தடை விதித்து பார் என்று ட்ரம்புக்கு எதிர் சவால் விடுத்துள்ளா் மோடி..

சுமார் 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வாங்க ப்படும் இந்த ஏவுகணைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்திய ராணுவத்தின் பயன் பாட்டுக்கு வந்து விடும்.. ஏற்கனவே ரபேல் விமான டீலிங்கில் காங்கிரஸ் வெறும் 60 ஆயிரம் கோடி டீலிங்கில் 1 லட்சம் கோடி ஊழல் என்று உளறி
வந்தாலும் அதைக்கண்டு கொள்ளாது அடுத்து
ஒரு 39.000 ஆயிரம் கோடியில் ரஷ்யாவுடன் ஒரு
மிகப்பெரிய ஆயுத டீலிங்கை முடித்து மோடி் மடியில்
கணம் இருந்தால் தானே பயப்படுவதற்கு என்று
மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

* அதுமட்டுமின்றி ரபேல் டீலிங்கை விட அதிக மதிப்பில் ரஷ்யா வோடு ஆயுத டீலிங்கை மோடி செய்ததன் மூலமாக நான் நேர்மையானவன். அதனால் என்னால் எந்த ஒரு துணிச்சலான முடிவையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எடுக்க முடியும் என்று நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளார்..

* இதோடு நமது சுய வான் தடுப்பு ஏவுகணையான PAD , AAD, ஆகாஷ் இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மிக அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் சேரும் பொழுது இந்திய ஏவுகணை புகாத நாடாக மாறும் என்பது, இந்தியனாக பெருமை பட வேண்டிய தருனம்

* 2020 இல் S 400 இந்திய படையில் இணைய உள்ளது..

இந்தியன்_என்ற_திமிர்_உள்ளவர்களுக்கு ஆனந்த கண்ணீரை வரவைக்க, வரும் ஏவுகணை.. இனி எம் பாரதம் ஏவுகணை புகா நாடு

பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ( PMFBY) பற்றி உங்களுக்கு தெரியுமா?

அன்பான..
விவசாயிகளுக்கு வேளாண்துறை  இனிய வணக்கங்கள்..

பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ( PMFBY) பற்றி உங்களுக்கு தெரியுமா?

உங்கள் பயிர்களை இன்சூரன்ஸ்.. அதாவது பயிர் காப்பீடு செய்து விட்டீர்களா?
போன வருசம் பயிர் காப்பீடுக்கு பணம் கட்டினேன் சார்.. எனக்கு பணம் கிடைக்கல சார்.. இது உங்க கேள்வியானால் உங்களுக்கான பதில் இதோ..
ஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்வோம் தோழர்களே...!

பயிர் மழை இல்லாமல் கருகினால் இழப்பீடு உண்டு.. அல்லது அதிக மழை பெய்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தால் பயிர் காப்பீடு நிவாரணம் கிடைக்கும்.. பயிர் காப்பீட்டுக்கு பணம் கட்டிவிட்டாலே மான்யம் அல்லது நிவாரணம் கிடைக்கும் என்று யாராவது சொன்னால் அதனை நம்ப வேண்டாம் விவசாய தோழர்களே..
பயிர் காப்பீடு குறித்த சில விளக்கங்கள்..
பயிர்  காப்பீடு..ஏன்? எங்கு? எப்படி?  யாரை? இப்படி உங்கள் அனைத்து கேள்விக்கும் பதில்..
உதாரணமாக தற்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்து பயிர்கள் மழையினால் சேதமடைந்து விட்டது.. அந்த பகுதியில் கடந்த காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள்  அனைவருக்கும் நிச்சயம் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும்...
காப்பீடு செய்யாத விவசாயிகள் நிலைமையை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்...
விவசாயிகள் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பது பழமொழி.. நாம்தான் புத்திசாலித்தனமாக வாழ கற்று கொள்ள வேண்டும்...
நாம் கட்டும் பிரிமியம் மிக குறைவு.. ஆனால் நமக்கு கிடைக்கும்  பலன் அதிகம்.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பயிர் செய்ய முடியாமல் தவித்த நமக்கு இந்த ஆண்டு ஆண்டவன் புண்ணியத்தில நல்ல மழை பெய்து நல்ல விளைச்சல் கிடைச்சிடுச்சின்னா.. இன்னும் சந்தோசமா பொங்கலை கொண்டாடுவோம்.. ( அப்ப.. ஏக்கருக்கு 388 ரூபாய் கட்டின பணம் கிடைக்குமா..? ஆச.. தோச.. நீங்க கட்டின பணம் இந்தியாவின் ஏதோ ஒரு விவசாயிக்கு நிச்சயம் நிவாரணமாக கிடைத்திருக்கும்...
     
பயிர்கடன் லோன் வாங்கும் விவசாயிகளுக்கு தானாக இழப்பீடு அவர்களது வங்கி கணக்கில் வந்து சேரும்..
ஆனால் பயிர் கடன் வாங்காத விவசாயிகள் எப்படி பயிர் காப்பீடு செய்வது???
லோன் வாங்காத அனைத்து விவசாயிகளும் அனைத்து வேளாண்துறை பயிருக்கும் ரபீ பருவத்திற்கு வரும் 2018 நவம்பர் 30ம் தேதிக்குள் உங்கள் அருகாமையில் உள்ள தேசிய வங்கிகளிளோ.. கூட்டுறவு வங்கிகளிலோ.. அல்லது.. மத்திய அரசின் அனுமதி பெற்ற CSC பொது சேவை மையத்திலோ.. பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்..
முதலில் உங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் அதிகாரிகளை சந்தித்து உங்கள் கிராமத்தில் எந்தெந்த பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியும் ( Notified Village.. Notified Crop.. ) என தெரிந்து கொண்டு வேளாண்துறை அலுவலர்களிடம் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்யுங்கள்..
1. Amount ரூ.388/ஏக்கர்
2. பூர்த்தி செய்யப்பட்டு விவசாயிகள் கையெழுத்து போடப்பட்ட பயிர் காப்பீடு  விண்ணப்பங்கள்.
3.வங்கி கணக்கு புத்தகம் ஒரிஜினல்..
4. ஆதார் அட்டை
5. Computer சிட்டா..
6.விதைப்புசான்று  கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் ஒரிஜினல்..
7. விவசாயி போட்டோ 1 காப்பி..
இந்த அனைத்து ஆவணங்களையும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு எடுத்துச்சென்றால் அதனை ஸ்கேன் செய்து பிறகு ஆன்லைன் முறையில் பயிர் காப்பீடு செய்து ரசீது தருவார்கள்..
குறிப்பு:-
பொது சேவை மையங்களுக்கு செல்லும்போது சம்மந்தப்பட்ட விவசாயி நேரில் ஆதார் எண் கொடுத்து கைரேகை மூலம் பதிவு செய்ய வேண்டும்..
கைரேகை எடுக்கவில்லை என்றால் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட மொபைல். எண் மூலம்  பயிர் காப்பீடு செய்யலாம்..
அதனால் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் மொபைல் போனை அவசியம் எடுத்து வர வேண்டும்..
ஆதார் எண்ணில் கைரேகையும் எடுக்கவில்லை.. மொபைல் எண்ணும்
இணைக்கப்படவில்லை என்றால் அந்த விவசாயி நிச்சயம் பயிர் காப்பீடு செய்ய முடியாது..
ஆதார் சேவை மையங்களுக்கு சென்று மீண்டும் பதிவு செய்த பிறகுதான் அந்த குறிப்பிட்ட விவசாயி பயிர் காப்பீடு செய்து கொள்ள முடியும்...
நில உரிமையாளர் நேரில் வரவேண்டும்.. ஒருவேளை அவர் இறந்து போயிருந்தார் என்றால் அவரது வாரிசுகள் யாருடைய அனுபவத்தில் உள்ளது என்ற VAO சான்று அவசியம் தேவை..
பயிர் விதைப்புச்சான்று அடங்கல் வாங்கும்போது உதாரணமாக 2 ஏக்கர் நெல் விவசாயி முழுவதுமாக பயிர் காப்பீடு செய்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.. ஆனால் 2 ஏக்கர் பயிர் செய்துள்ளேன்.. 1 ஏக்கர். மட்டுமே பயிர் காப்பீடு செய்கிறேன் என்று சொன்னால் அந்த 1 ஏக்கர் எந்த பகுதி விவசாய நிலம் காப்பீடு செய்யபடுகிறது என்ற திசை வாரியாக அதே அடங்கலில்  செக்குபந்தி அவசியம்..
மேலும் விபரங்களுக்கு
உங்கள் பகுதி ADA , AO , DYAO , AAO  தொடர்பு கொள்ளுங்கள்..
விவசாயிகள் நலனில் அக்கறை உள்ள வேளாண்துறை

குபேர கிரிவலம்!

மறந்துவிடாதீர்கள்,இந்த வருடம் திருவண்ணாமலை குபேர கிரிவலம் செல்ல வேண்டிய நாள்!

5-12-2018

குபேர கிரிவலம்!

நீங்களும் செல்வந்தராக வேண்டுமா?

நாம் ஒவ்வொருவரும் முற்பிறவியில் என்ன பாவங்கள் செய்தோமோ தெரியாது. இப்பிறவியில் இப்படி கஷ்டப்படுகிறோம்.நமது அப்பா,தாத்தா,பாட்டனார் என்ன குற்றங்கள் செய்தார்களோ நமக்குத் தெரியாது அந்தப் பாவச்சுமையை நாமும் நமது பங்குக்குச் சுமக்கிறோம்.
சரி.பணக்கஷ்டத்தின் வேதனையை நாம் தினம் தினம் இல்லாவிட்டாலும்,அடிக்கடியாவது உணர்கிறோம். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம்.

அதென்ன குபேர கிரிவலம்!

ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார்.வந்து அவர் திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார்.அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார்.அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின் அருளாசியும், குபேரனது அருளும் கிடைக்கும்.இதன் மூலம் நாம்,நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும்.நாம்,நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும்,செல்வச்செழிப்புடனும் வாழும்.

இந்த ரகசியம் பல நூற்றாண்டுகளாக மகான்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது.கி.பி.2007 ஆம் ஆண்டில் ஜோதிடபூமி என்ற புத்தகத்தில் சென்னையில் வாழும் எனது மானசீக ஜோதிட குரு பி.எஸ்.பி.அய்யா அவர்கள் எழுதினார். எனவே, எனது நட்புவட்டம் அனைவரும் குபேர கிரிவலம் சென்றால் அவர்கள் அனைவரும் செல்வந்தராகலாம் என்பது நம்பிக்கை.
*இந்த ஆண்டின் குபேர கிரிவலம் 5.12.2018 புதன் அன்று.
*ஒரே ஒரு நாள் கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.
*
*(போன வருடமே ரொம்ப கூட்டமாக இருந்தது)*
*இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம்;மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும்.
இரவு 7மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
*கிரிவலம் செல்லும் போதே,அருணாச்சலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லலாம் அல்லது கிரிவலம் முடித்த பிறகும் தரிசித்துவிட்டு செல்லலாம்
*ஏதாவது ஒரு சூழ்நிலையால் அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க முடியாமல் போனாலும் தப்பில்லை.
*கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும்.
கிரிவலம் செல்லும் போது செருப்பு போடக்கூடாது.ருத்ராட்சம் அணிந்து, வேட்டி சட்டை (பெண்கள் அவரவர் பாரம்பரிய உடை)அணிந்து சிவ மந்திரங்களை மனதுக்குள் ஜபித்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம்.தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம்.அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.

ஏன் வெட்டிக்கதை பேசக்கூடாது? இந்த கிரிவலப்பாதையான 14 கி.மீட்டர்கள் முழுக்க ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.நமது வீண் பேச்சு அவர்களுக்கு தொந்தரவாக இருக்ககூடாது அதனால்!
குபேரன் குறிப்புகள்....
அலைமகளுடன் ஆந்தை.....

தென் நாட்டில் ஆந்தையைக் கண்டால் அலறி ஒடுகிறோம். ஆனால் வடநாட்டவர் தீபாவளி அன்று மகாலட்சுமியின் வாகனமாக அருகில் வைத்து வழிபடுகின்றனர். அன்று யார் வீட்டிலாவது ஆந்தை வந்து அமர்ந்து குரல் எழுப்பினால் லட்சுமி குபேரன் அருள் வரப்போகிறது என்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆந்தை கண்ணில் பட்டால் யோகம் அடிப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

குபேரன் பெயரில் தீர்த்தம்......

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மொத்தம் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் 20 தீர்த்தங்கள் மட்டுமே வெளியில் தெரிபவை. அவற்றில் ஒன்றுதான் குபேர தீர்த்தம். ஒவ்வொரு வருடமும் மாசி மக தீர்த்த உற்சவத்தின்போது குபேரன் இந்த தீர்த்தத்தில் தங்கி அனைவருக்கும் அருள்வதாக ஐதீகம். இந்திர தீர்த்தத்திலிருந்து சுற்றில் 6வதாக உள்ளது.

குபேரனுக்கு மருத்துவரான பிள்ளையார்.......
பணத்திற்கு அதிபதியாக நாம் குபேரனைப் குறிப்பிடுகிறாம். அவர் திருப்பதி வெங்கடாசலபதிக்கே கடன் கொடுத்தவர். ஒரு காலத்தில் குபேரன் எவருக்கும் பணத்தைத் தராமல் மூட்டை கட்டி வைத்திருந்தார். இதனால் பாவம் சேர்ந்து தொழு நோய் வந்து விட்டது. தன் நோய் குணமாக விநாயகரை வணங்கினார். அவருக்குப் பிள்ளையார் அருகம்பில்லை அரைத்து மருந்தாக கொடுத்து நோயை குணமாக்கினார். அதன் பிறகே குபேரன் மக்களுக்குப் பணத்தை வாரி இறைந்தார். எனவே விநாயகப்பெருமானை லட்சுமி குபேர கணபதியாக வழிபட்டால் குபேரனுடைய திருவருள் கிடைக்கும்.

கடன் அடைய மைத்ர முகூர்த்தம்......
உங்களுக்குப் பெரிய கடன் அடைபடாமல் இருக்கிறதாப கடன் அடைப்பட்டு நிம்மதி அடைவதும் குபேர யோகம் தான். மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் வாங்கிய தொகையில் சிறிதளவு அடைத்து விட்டால் ஒரு ஆண்டிற்குள் கடன் முழுவதும் அடைந்து விடும் என்பது உண்மை.
*குபேரலிங்கத்தின் ஆசிகளோடு உண்ணாமலை சமேத அண்ணாமலை அருள் பெறுக!!!*

https://m.dailyhunt.in/news/india/tamil/shakthi+online-epaper-sakonle/kubera+kirivalam-newsid-76090394

தமிழ் சினிமா மூலமாக மதப் பிரச்சாரத்தை செய்யும் மிஷநரிகள் !! தமி

தமிழ் சினிமா மூலமாக மதப் பிரச்சாரத்தை செய்யும் மிஷநரிகள் !!

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் பணியாற்றிய ஒரு துனை இயக்குனரோடு பேசிக் கொண்டிருந்தேன்.  பல விஷயங்களை புட்டு புட்டு வைத்தார். வெளிநாட்டு மத பிரச்சார கூட்டங்கள் எப்படி நம் மக்களை சினிமா மூலம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன ?  5 சதவீதம் கூட இல்லாத கிறிஸ்தவ நடைமுறைகள் ஏன் சினிமாவில் அதிகம் காட்டப்படுகின்றன போன்றவற்றை விளக்கினார்.

ஒரு படத்திற்கு எவ்வளவு ரீச் இருக்கும் என்பதை பொறுத்து ரேட் பேசப்படுகிறதாம்.  குறிப்பாக அமெரிக்க,  ஐரோப்பா போன்ற நாடுகளில் இருக்கும் மிகப்பெரும் மிஷநரி நிறுவனங்கள் இந்தியாவில் மதம் மாற்றத்தை நிகழ்த்த தமிழ் சினிமாவை கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக மிக அதிகமாக பயன்படுத்துகின்றனவாம். வெள்ளைக்கார மிஷநரிகளிடம் உள்ளூர் கிறிஸ்தவ ஏஜன்டுகள்,  ஏழு கோடி மக்கள் இந்த சினிமாக்களை பார்க்கிறார்கள்,  இதன் மூலமாகதான் நாம் யேசுவின் போதனைகளை கொண்டு செல்ல இயலும் என்று ரேட் பேசி வைக்கிறார்களாம்,  இந்த பரப்புரைகள் காட்சியோடு ஒத்திருக்க வேண்டும்.  அதாவது கதாநாயகனும்,  கதாநாயகியும் சர்ச்சுக்கு செல்வது போல் காட்சி அமைத்தால் அதற்கு ஒரு ரேட்.  கதாநாயகன் நெற்றியில் திருநீரோடு,  சரச் ஃபாதரோடு இணக்கமாக பேசினால் அதற்கு ஒரு ரேட்,  சர்ச் ஃபாதர் மிக நேர்மையானவர்களாக காட்டப் படும் போது அதற்கு ஒரு ரேட்,  சாமியார்களை கேவலப்படுத்தி அல்லது பிரதமர் மோடி அவர்களை குறித்து அவதூறு பரப்பி காட்சி அமைத்தால் அதற்கு ஒரு ரேட்,
என லட்சங்களில் ஏன் சில சமயங்களில் கோடிகளில் பணம் கொடுக்கப்படுகிறதாம். இந்த பணம் பெரும்பாலும் மிஷநரிகளின் ஹவாலா நெட்வர்க் மூலமாக அளிக்கப்படுகிறது என்கிறார்கள்.  மேலும் இந்து நம்பிக்கைகளை நையாண்டி செய்வது,  கேவலப் படுத்துவது,  இளைஞர்களுக்கு மத்தியில் இந்து நம்பிக்கைகளை ஒழிப்பது போன்ற காட்சிகளும் உரிய முறையில் கவனிக்கப்படுமாம்.   "நீங்க வேனா பாருங்க ஒரு படத்துல கூட ஒரு இந்து இளைஞன் பக்தியோடு கோயிலுக்கு போய் சாமி கும்பிடறா மாதிரி காட்சி அமைக்க மாட்டாங்க,  பொம்பளைங்கள சைட் அடிக்க மட்டும்தான் ஒரு இந்து இளைஞன் கோயிலுக்கு போவான்ங்கற மாதிரிதான் காட்சி இருக்கும்.  இப்படி கிடைக்கும் நிதி மூலமாக தயாரிப்பாளர்களுக்கு படம் போணியாகவில்லை என்றாலும் ஒரு மினிமம் கியாரண்டி கிடைத்து விடும்" என்றார் நண்பர். 

இது சினிமாவுக்கு மட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகள்,  கிறிஸ்துமஸ் விழாக்கள் போன்றவையும் இதில் அடங்குமாம். ஒரு நடிகரின் பின்புலத்தை பொறுத்து ரேட் அமையுமாம்.  உதாரணத்திற்கு நடிகர் பிரபு என்றால் அவர் சிவாஜியின் மகன்,  முக்குலத்தோர் சமுதாயம், அதனால் நல்ல ஒரு ரேட்.  இப்படி ஃபிக்ஸ் செய்கிறார்களாம்.  உள்ளூர் மிஷநரி க்ரூப்புகள் இதற்கு தரகர்களாக இருந்து காரியத்தை முடித்து கொடுக்கிறார்களாம். 

தற்போது தமிழ் சினிமா உலகில் கிறிஸ்தவ மிஷநரிகளிடம் ஏதோ ஒரு வகையில் விலை போகாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்கிறார்கள்.  தற்போது திராவிட கூட்டங்களோடு சேர்ந்துக் கொண்டு கிறிஸ்தவ நெட்வர்க் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வலைப்பின்னலை பின்னிவிட்டது. ஒவ்வொரு துறையையும் அது விழுங்கு வருகிறது,  உதாரணத்திற்கு  இளையராஜாவுக்கு அடுத்து தற்போது இசைத்துறையில் நம்மவர்கள் யாரும் இல்லை,  முழுக்க முழுக்க இசைத்துறை கிறிஸ்தவ கூட்டங்கள் வசம் வந்து கொண்டிருக்கிறது.  ஒரு மிஷநரி ஆள் உள்ளே சென்று விட்டால்,  அவர்கள் நெட்ர்க்கையே உள்ளே கொண்டு சென்று விடுவார்கள் என்றெல்லாம் பலவற்றை அவர் விளக்கியபோது மனம் பதைபதைத்து போனது.
https://www.facebook.com/100002171102976/posts/2237144843034531/

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...