Friday, 19 October 2018

பிள்ளையார் பிடிப்பதன் பலன்

🚩🚩
பிள்ளையார் பிடிப்பதன் பலன்

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தியைத் தருவார்.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும், வியாபாரத்தைப் பெருகச் செய்வார்.

வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். எல்லா வளங்களையும் தருவார்.

உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எதிரிகளின் தொல்லையில் இருந்து காப்பாற்றுவார்.

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வ நிலையைஉயரச் செய்வார்.

விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால், உஷ்ண நோய்கள் நீங்கும்.

சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

சாணத்தால் பிள்ளையார் செய்து வணங்கினால், சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால், வம்ச விருத்தி உண்டாகும்.

வெண்ணெயில் பிள்ளையார் செய்து வணங்கினால், கடன் தொல்லை நீங்கும்.

சர்க்கரையில் விநாயகர் உருவம் செய்து வழிபட்டு வந்தால், சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட தீராத நோய்கள் கூட தீரும்.

கல் விநாயகரை வணங்கி வந்தால் வெற்றிகளைத் தருவார்.

மண் விநாயகரை வழிபாடு செய்து வந்தால், உயர் பதவிகள் கொடுப்பார்.
அன்புடன் Mg 🚩

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!

1. வேங்கட மலை:

‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு
‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை:

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை:

வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை:

இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை:

விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை:

ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிற து.

7. ஆனந்த மலை:

ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

திருப்பதி மலைகளில் வீற்றிருக்கும் ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர்

திருப்பதி திருமலையில்,

1.த்ருவ ஸ்ரீநிவாசர்,
2. போக ஸ்ரீநிவாசர்,
3. கொலுவு ஸ்ரீநிவாசர்,
4. உக்ர ஸ்ரீ நிவாசர்,
5. மலையப்பர்

என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

1. த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பர். சுமார் பத்தடி உயரம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

2. போக ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ரக லசாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

3. கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி :

கொலுவு என்றால் ஆஸ்தானம் என்றுபொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு&செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறுயாரும் கலந்து கொள்ள முடியாது.

4. உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி :

இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்பசுவாமியை எழுந்தரு ளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

5. உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி :

இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றி யில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சியளிப்பவர் மலையப்பர்.

சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. இவர் வேறு. திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு
🙏🙏

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்..*.

*தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்..*.

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்

1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர்
2,தஞ்சை – பிரகதீஸ்வரர்
3,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
4,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
5,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு முன் தோன்றிய ஸ்தலங்கள்

1,திருப்புனவாசல் --  ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர் (வ்ருத்தகாசி)

காசிக்கு சமமான ஸ்தலங்கள்

1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்

தருமநூல்கள் 18.

கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது.

1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.

பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்

1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.

1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.

திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

ஜீவன் முக்தி ஸ்தலங்கள்.

1,திருப்புனவாசல் --  ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர். (வாழ்நாளில் ஒருமுறை வந்தாலே முக்தி. முக்தி அடைய முடியாதவர்கள் இக்கோயிலுக்குள் நுழைய முடியாது.)

ஐந்து அற்புதங்கள்.

1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி

திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}

காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.

12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.
1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.

பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.

திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.
1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.

1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய

திருச்சிற்றம்பலம்.

*என்றும் அன்புடன்,*

*எம்.சரவணக்குமார்@எஸ்.கே*
*<எஸ்.கே>தமிழ் இணையம் ™ வாட்ஸ் ஆப் குழு*
*மதுரை*👈🇮🇳🚀🌍
*வாட்ஸ் ஆப் எண்*
*9842171532*🌺🌻🌹🌼
*முகநூல்: SMS KING SK*

ஆலயம்_செல்வதால்_அறிவியல் #ரீதியாக_மனிதனுக்கு_ஏற்படும் #நன்மைகள்

#ஆலயம்_செல்வதால்_அறிவியல் #ரீதியாக_மனிதனுக்கு_ஏற்படும் #நன்மைகள்_தெரியுமா?

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

ஓம் நமசிவாய 🙏🚩🚩

நரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி?*

*நரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி?*
இந்திய பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் போர் புரிந்திருக்கிறது.. இந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் நாட்டை சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்கி பாதுக்காக்க காங்கிரஸ் அரசு 1968 ல் Enemy Property Bill என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.. அந்த சட்டத்தின் படி, எதிரி நாட்டு பிரஜைகளின் இந்தியாவில் இருக்கும் சொத்தை நம் நாட்டு அரசு கையகப்படுத்தி பாதுகாக்கலாம் என்கிற சட்டம்.. இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தெரியவில்லை.. அவர்கள் சொத்தை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? பாகிஸ்தான் கூட 1971 அங்கே இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.. ஆனால் இந்தியர்களின் சொத்துக்களை பாதுகாக்கவில்லை, மாறாக அதை வித்து பணம் பார்த்தது... நாம்தான் அதை இன்று வரை பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம்..
ஆனால் நரேந்திர மோதி அவர்கள் பிரதமரான பிறகு, அப்படிப்பட்ட சொத்து இந்த நாட்டில் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுக்க சொன்னார்.. அதில் அவருக்கு கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியது.. ஆம்.. கிட்டத்தட்ட 9000 க்கும் மேற்பட்ட சொத்துக்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்.. ஆனால் இந்திய அரசு அதை விற்க முடியாது.. இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த மஹ்முதாபாத் நகரின் (Pakistan) ராஜா, 2005 ஆம் ஆண்டு வந்து, என் சொத்துக்களை திரும்பக்கொடு என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டப்படி, இந்திய அரசு சொத்துக்களை பாதுகாக்கத்தான் முடியுமே தவிர, உரிமை கொண்டாட முடியாது..
ஆனால் மோடி விடவில்லை.. 2017 ல் enemy property act எனும் புதிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்தார்.. அதாவது, இந்த நாடு வேண்டாம் என்று குடியுரிமையை துறந்து, நம் எதிரி நாடுகளுக்கு சென்றவர்களுக்கு, இந்த நாட்டின் சொத்து மீது எந்த உரிமையும் இல்லை.. அதை இந்திய அரசு தாராளமாக சொந்தமாக்கி, விற்கலாம் என்கிற சட்டம்.. இந்த நாடே வேண்டாம் என்றவருக்கு, இந்த நாட்டின் சொத்து மீது உரிமையில்லை என்ற சட்டத்திருத்தம்..
அதின் அடிப்படையில், இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க போகிறது.. அந்த சொத்துக்களின் ஏல நடவடிக்கை தற்போது ஆரம்பமாகி இருக்கிறது
அதுமட்டுமின்றி, சீனா போன்ற நாடுகள், இந்தியாவுடன் போர் புரிய தயக்கம் காண்பிக்கும்.. ஏனெனில் , பல சீனா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருக்கின்றன.. அவைகளின் சொத்து மதிப்பு பல லட்சம் கொடிகள் தேறும்.. அப்படி போர் (சிறிய போரோ பெரிய போரோ) வந்தால், அந்த நிறுவனங்களின் சொத்துக்களெல்லாம் இந்திய அரசுக்கு போய்விடும்.. அதின் தாக்கம் அவர்கள் நாட்டில் பிரதிபலிக்கும்..
இப்படி நாட்டின் மீது அக்கறை உள்ள தலைவரை தரக்குறைவாகவும், நய்யாண்டி செய்தும் பேசும் கூட்டங்களெல்லாம் தலைகுனியட்டும்

வார்த்தைகளின் சக்தி*

*வார்த்தைகளின் சக்தி*

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.

ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் *நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.  "வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்*.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குணிந்தான்.

*நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் எவ்வளவு  சக்தி உள்ளது என்பதை பரிசோதனை பண்ணிப் பாருங்கள் புரிய வரும்*.

Congress world no-2 Corrupted party.

Congress world no-2 Corrupted party.

According to BBC,
among the *World's 10 most Corrupt POLITICAL PARTIES*

*Our Country's Most Respected Party CONGRESS 'INC' in on No. 2*

www.bbcnewshub.com/top-10-list-of-most-corrupt-political-party-in-the-world-2018/

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் வாங்கிய

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகளில் வாங்கிய கோடிக்கணக்கான ரூபாய் கடனை கட்டாத சுறாமீன்களைத் தான் தறபோது நாம் பார்த்து வருகிறோம் இதில் பல திமிங்கலங்கள் உள்ளன.

ஜின்டால் ஸ்டீல்
45,000 கோடி .
பூஷன் ஸ்டீல்
44,478 கோடி .
லான்கோ
44,364 கோடி .
எஸ்ஸார் ஸ்டீல்
37,284 கோடி .
பூஷன் பவர்
37,248 கோடி .
அலோக் இண்ட்ரிஸிஸ்
22,075
அம்டெக் ஆட்டோ
14,074 கோடி
மோனட் இஸ்பாட்
12,115 கோடி ,
எலக்ட்ரோ ஸ்டீல்
10,273 கோடி .
ஈரா இன்ஃப்ரா
10,065 கோடி .

இப்படித் தொடர்கிறது கடன்காரர்களின் பட்டியல் இவர்கள் கடன் வாங்கியது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில்...

கடனாளிகள் பெயரை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பெயரை வெளியிட மறுத்தவர் தான் முன்னாள் ரிசர்வ் பேங்க் கவர்னர் மற்றும் காங்கிரஸ் கட்சியன் அறிவிக்கப்படாத பொருளாளர் திருவாளர்.ரகுராம் ராஜன்

இவரை மீண்டும் அதே பதவியில் அமர்த்தத் தான் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஏன் தமிழக திராவிட வியாபாரிகள் கூட்டம் கூட பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை கடுமையாக விமர்சித்தனர் .

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிான பாஜக அரசு கடனாளிகள் பெயரை அறிவித்தது அதில் சிலர் தான் மேலே உள்ள பட்டியலில் உள்ளவர்கள்.

விஜய் மல்லையா கடன் வாங்கி தப்பியோடிய காரணத்தை ஆராய்ந்தது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பாஜக அரசு .

இம்மாதிரியான மோசடிகளை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதை தடுக்க NCLT "தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் " 2016 ல் அமைத்தார் .

அடுத்து FRDI
"Financial Resolution Deposits and Insurance"

இந்த இரண்டும் தான் காங்கிரஸ் வளர்த்த ஒவ்வொரு முதலையாய் வெளிவர காரணம் .

கடனை அடையுங்கள் அல்லது கம்பெனியை வங்கியிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று  வங்கிகள் அதிரடியாக அறிவித்துவிட்டன.

பல நிறுவனங்கள் பயந்து கம்பெனியை விற்று கடன் கட்ட தயாராகி வருகிறது .

எந்தப் பின்னணியையும் தெரிந்து கொள்ள மாட்டோம் வழக்கம் போல மோடி ஒழிக என குரல் கொடுப்போம் .

ப.பி

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...