GST மற்றும் Demonetization வந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்கிறீர்களா? எல்லாம் சரியாக நடந்தது என்கிறீர்களா? இது பாரபட்சமாக இல்லையா என கேட்பவர்களுக்கு..
GST மற்றும் Demonetization ஐ கிழித்து தொங்கவிட ஒரு பெரும் கூட்டமே எதிரணியில் இருக்கிறது..ஆனால் அது ஏன் செய்யப்பட்டது என்று அரசு தரப்பு நியாயத்தை பேச யாருமில்லை.. அதைத்தான் என்னை போன்றவர்கள் செய்ய வருகிறோம்..
Demonetization திட்டமிடுதல் சரியில்லை, செயல்படுத்தும் முறை சரியில்லை என மோடியை விமர்சிப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.. முதலில் எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் நாட்டு மக்களையும், கீழே வேலை செய்யும் அதிகாரிகளையும் நம்பித்தான் இந்த முடிவை எடுத்தார் பிரதமர்.. விரிவாக திட்டம் போட்டிருந்தாள் விஷயம் வெளியே கசிந்து, முன்னதாகவே கருப்பு பணத்தையெல்லாம் வெள்ளையாக மாத்தியிருப்பார்கள் கயவர்கள்.. ஆனால் பிறகு அதிகாரிகள் பல இடங்களில் சொதப்பினார்கள்.. உதாணரணத்திற்கு புதிய நோட்டுக்களை வங்கிகளில் கொண்டு சேர்க்க தாமதம், 500 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டை முதலில் கொண்டு சேர்த்தது என சொல்லிக்கொண்டே போகலாம்.. இது போன்ற ஒவ்வொரு விஷயத்தையும் பிரதமர் செயல்படுத்த முடியாது..இந்த முடிவால் சிறு தொழில் செய்யும் பலர் தினக்கூலிகளுக்கு சம்பளம் கொடுக்க இயலாமலும், விற்க்கும் பொருளுக்கு ரொக்கம் கிடைக்காமலும் கடும் அவதிப்பட்டார் என்பது முற்றிலும் உண்மை.. ஆனால் அதை அன்று பிரதமர் செய்யாமல் விட்டிருந்தாள், இன்று நம்மிடம் புழக்கத்தில் உள்ள பணத்தை விட, மேலும் 3 லட்சம் கோடிகள் அதிகமாக இருந்திருக்கும், இந்த அளவு வருமான வரி செலுத்துபவர்கள் எணிக்கை அதிகமாகியிருக்காது, சுமார் 2.75 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் சரியாக கணக்கு காண்பிக்காத பணம் மாட்டிக்கொண்டிருக்காது , இவ்வளவு போலி நிறுவனங்கள் அழிக்கப்பட்டிருக்காது, தீவிரவாதிகளிடம் இருந்த ரொக்கம் அழிக்கப்பட்டிருக்கும் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.. அதனால் பாதகம் இல்லாத முடிவு நான் கூறவில்லை, ஆனால் சாதகங்களை பேச ஆள் இல்லை என்பதுதான் என் கருத்து.. பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கதான் அரசு முயன்று வருகிறது.. அது நடந்துகொண்டிருப்பதால்தான் மீண்டும் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.. இதை எல்லாம் மற்ற மாநிலங்களில் உணர்ந்ததால்தான் Demo க்கு பிறகு பல மாநிலங்களில் பாஜக வென்றது.. ஆனால் தமிழ்நாட்டில் ஊடகங்கள் எல்லாம் திமுகவின் வசம் இருப்பதால் நல்லதை பேச ஆள் இல்லை இங்கே (தமிழ்நாட்டு பாஜக தலைமையும் சேர்த்துதான்)
GST என்பது புதிய வரி இல்லை.. ஏற்கனவே இருந்த பல மறைமுக வரிகளை ஒன்றிணைத்து ஒரே வாரியாக கொண்டுவந்தார்கள்.. இதனால் பெரிதாக விலைவாசிகளெல்லாம் உயர்ந்துவிட்டது என்பது பொய்.. ஒரு சில வியாபாரிகள் GST என பெயரை சொல்லி தாங்கள் தன் பொருட்களுக்கு விலையை ஏற்றி லாபம் பார்பதற்க்கெல்லாம் பிரதமர் பொறுப்பாக முடியாது..உதாரணத்திற்கு, முன்பு வரியோடு சேர்த்து சினிமா டிக்கெட் 120 ரூபாய் இருந்தது.. இப்பொழுது தியேட்டர் காரர்கள் டிக்கெட் விலையை மட்டுமே 120 ரூபாயாக உயர்த்தி, அதற்க்கு மேல் GST போட்டிருக்கிறார்கள்.. இதற்க்கெல்லாம் மோடியை குறை சொல்வதா? GST என்பது 25 லட்சம் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு கிடையாது.. GST தாக்கல் செய்யும் முறைகள் பற்றி முதலில் தெரியாமல் திணறிய வியாபாரிகள், இப்பொழுது சரியாக போய்க்கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.. எந்த ஒரு புதிய மாற்றத்தை மேற்கொள்ளும்பொழுதும், ஆரம்பத்தில் கொஞ்சம் திணறுவது சகஜம்தான்.. GST வந்ததால் உணவு பதுக்கல்கள் பெருமளவில் குறைப்பு , மறைமுக வரி ஏமாற்றுதல் ஒழிப்பு , மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான தொழிற்போட்டி (வெறும் வரிச்சலுகை கொடுத்து தொழிற் முதலீடுகளை ஈர்க்காமல்) என சொல்லிக்கொண்டே போகலாம்..
நாடு நன்றாக இருக்கவேண்டும் என்று நம் நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும்.. எனக்கு என்ன கிடைத்தது என்றே எப்பொழுது பார்த்தாலும் இந்த திராவிட காட்சிகள் நம்மை சிந்திக்க வைத்ததுதான் இங்கே இவ்வளவு குமுறல்களுக்கு காரணம்
ஜெய் ஹிந்த்