Saturday 29 December 2018

20 ஆண்டுகளில், முதல் முறையாக இது நடந்துள்ளது

https://www.facebook.com/100030969018491/posts/120343149007985/

MODI s foreign trips


55 மாதங்கள்; 92 நாடுகள்; ரூ.2,021 கோடி செலவு; 13,607 கோடி டாலர்கள் முதலீடு வரவு பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் ஒரு அலசல்


55 மாதங்கள்; 92 நாடுகள்; ரூ.2,021 கோடி செலவு; 13,607 கோடி டாலர்கள் முதலீடு வரவு #பிரதமர்_மோடிஜி_அவர்களின்
வெளிநாட்டுப் பயணம்.
 
#பிரதமர்_நரேந்திர_மோடிஜி_அவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ரூ.2,021 கோடி செலவாகி இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

#பிரதமர்_நரேந்திர_மோடிஜி_அவர்கள், கடந்த 4 ஆண்டுகள்  7 மாதங்களாக அதிகாரத்தில் உள்ளார். தற்போது இன்னொரு மைல் கல்லையும் நெருங்கி வருகிறார்.

அடுத்த சில மாதங்களில், பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதற்குள்  இன்னும் இரண்டு நாடுகளுக்கு சென்றால்  அதிக வெளிநாடு பயணம் மேற்கொண்ட இரண்டாவது  இந்திய பிரதமராக  இருப்பார்.  மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 113 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்து உள்ளார்.  இதுவரை பிரதமர் மோடிஜி 92 நாடுளுக்கு பயணம் செய்து உள்ளார்.  மன்னுமோகன் சிங் பிரதமராக இருந்தபோது 93 நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார்.

#பிரதமர்_மோடிஜி 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில்  92னு நாடுகளுக்கு  பயணம் செய்து உள்ளார். மன்னுமோகன் சிங் தனது 2 ஆட்சி காலங்களில் (10 ஆண்டுகளில்)  93 நாடுகள் பயணம் செய்து உள்ளார். இந்திராகாந்தி  தனது 3 ஆட்சிகாலங்களில் (15 ஆண்டுகள் ) 113 நாடுகளுக்கு  பயணம்  செய்து உள்ளார்.

#பிரதமர்_மோடிஜி_அவர்களின் இந்த 92 நாடுகள் பயணத்திற்கு சுமார் ரூ.2021 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இதனை ஒப்பிடும்போது #பிரதமர்_மோடிஜி தனது 5 ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் பயணம் செய்து உள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது  மன்னுமோகன் சிங்கின் 50 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.1350 கோடி செலவழிக்கப்பட்டு இருந்தது.

2009 முதல்  2018 ஆம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்கும்போது, இந்திய பிரதமர்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயணங்கள் பற்றிய விவரங்களை வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

#பிரதமர்_மோடிஜி_அவர்கள், அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம், #பிரதமராக_மோடிஜி_அவர்கள் பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சென்றார். அதற்கான செலவு எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் #மோடிஜி_அவர்கள்_பிரதமர் ஆனதிலிருந்து 55 வெளிநாடுகளுக்கு  சென்றுள்ளதாகவும் இதில் சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சென்றுள்ளதாகவும் கூறினார். #பிரதமர்_நரேந்திர_மோடிஜி_அவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை ரூ.2,021 கோடி செலவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் அதிக முதலீடு செய்த முதல் 10 நாடுகளுக்கும் #பிரதமர்_மோடிஜி சென்றிருந்ததாகவும், #மோடிஜி_அவர்களின் வெளிநாட்டு பயணங்களால் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் 13 ஆயிரத்து 607 கோடி டாலர்கள் அன்னிய நேரடி முதலீடாக வந்துள்ளதாகவும், ஆனால் இது மன்னுமோகன் சிங் பிரதமராக இருந்த 2011 முதல் 2014 கால கட்டத்தில் 8 ஆயிரத்து 184 கோடி டாலராக மட்டுமே இருந்தது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

92 நாட்டு பயணங்களுக்கு #மோடிஜி 2,021 கோடி ரூபாய் செலவிட்டால், ஒரு நாட்டிற்கான சராசரியான செலவு  22 கோடி ரூபாய்.

50 நாடுகளுக்கு மன்னுமோகன் சிங்கின் பயணத்திற்கான செலவு  ரூ. 1,350 கோடி செலவாகும். இது ஒரு நாட்டிற்கான சராசரியான செலவு  27 கோடி ரூபாய் ஆகும்.

ஒவ்வொரு பயணத்திலும் #பிரதமர்_மோடிஜி_யின் பயண நாட்களின்  எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் செலவை குறைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என பிரதமர் அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபாவில் அமைச்சர் வழங்கிய தகவலின்படி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு #மோடிஜி 9 நாள் பயணத்தின்போது (ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 17, 2015) ரூ. 31.25 கோடி  தனி விமானத்திற்கு அதிக செலவாக இருந்தது.

2014-15 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு பயணங்களுக்கான விமான சேவைகளுக்கான செலவுகள் ரூ. 93.76 கோடி, 2015-16-ல் இது ரூ. 117.89 கோடி. 2016-17 ஆம் ஆண்டில், செலவு ரூ. 76.27 கோடி மற்றும் 2017-18-ல் செலவினம் ரூ. 99.32 கோடி.

மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகிய நாடுகளுக்கு (நவம்பர் 11 முதல் நவம்பர் 20, 2014) வரையிலான  தனி விமான செலவு ரூ.22.58 கோடியாக இருந்தது.

மன்னுமோகன் சிங்குடன் ஒப்பிடுகையில் மெக்சிகோ மற்றும் பிரேசில் (ஜுன் 16 முதல் ஜூன் 23, 2012) ஜி -20 மற்றும் ரியோ +20 உச்சி மாநாட்டிற்கு ரூ.26.94 கோடி  பயணம் மேற்கொண்டுள்ளார்.

வெளிநாட்டு வருகைகள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றால் செய்யப் படுகின்றன,
அவை மிகவும் அழுத்தம் தரக்கூடியவை. #பிரதமர்_மோடிஜி_அவர்கள், 480 சிறப்பு
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். 

பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் 2015-16 ஒரு வருட காலத்திற்குள், அவர் 24 நாடுகளுக்கு விஜயம் செய்தபோது பரபரப்பாக இருந்தது. இந்த ஆண்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு #மோடிஜி பயணம் செய்தார்.

55 மாதங்களில் #பிரததமர்_மோடிஜியின் பயணங்கள் , இராஜதந்திர கொள்கைகளின் சுவாரஸ்யமான கலவையை சித்தரிக்கின்றன.

#பிரதமர்_மோடிஜி 4 நாடுகளுக்கு ஒரு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். இங்கிலாந்து, அமீரகம், தென் ஆப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்பட 10 நாடுகளுக்கு 2 முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். பிரான்ஸ் மற்றும் ஜப்பானுக்கு மூன்று முறை  பயணம் செய்து உள்ளார். ஜெர்மனி, நேபாளம், ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு  4 முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு 5 முறை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

1947 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சுதந்திர  இந்தியாவின்  முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, 68 நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார்.  1949  அக்டோபர் 11 முதல் 15 வரை  வரையான முதல் வெளிநாட்டு பயணமாக நேரு ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று இருந்தார்.

அவரது மகள், இந்திரா காந்தி, 15 ஆண்டுகளுக்கு  பிரதமராக நீடித்த  மூன்று கால கட்டங்களில் 115  நாடுகளுக்கு பயணம் செய்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து பின்னர் பிரதமரான ஒரே தலைவர் #வாஜ்பாய்_அவர்கள்  அவரது காலங்களில் அவர் 48 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். #வாஜ்பாய்_அவர்கள 1977-ல் ஐ.நா. பொதுச் சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் இந்திய வெளியுறவு மந்திரி என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இந்தியாவின் 5-வது பிரதமராக இருந்த சவுத்திரி சரண் சிங்  (ஜூலை 28 1979 முதல் ஜனவரி 14 1980 ) இவர் ஒருவர் மட்டுமே  வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளாத பிரதமர் ஆவார்.

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் 67 இடங்களில் 66 இடங்களைக் கைப்பற்றி வாகை சூடிய பா.ஜ.க -


https://www.facebook.com/185115731901122/posts/602645746814783/

திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் 67 இடங்களில் 66 இடங்களைக் கைப்பற்றி வாகை சூடிய பா.ஜ.க - ஒட்டுமொத்தமாக தர்த்தெறியப்பட்ட கம்யூனிஸ்ட் கோட்டை

http://www.kathirnews.com/2018/12/29/tripura-election-bjp-victory/

சவால்களை சமாளித்து சாதனையை நெருங்குகிறது புனித கங்கை மீட்பு திட்டம்:

சவால்களை சமாளித்து சாதனையை நெருங்குகிறது புனித கங்கை மீட்பு திட்டம்:

காங்கிரஸ் அரசால் முடியாது என கைவிடப்பட்ட திட்டத்தை சாதித்து காட்டும் மோடி சர்க்கார்! - கதிர்
http://www.kathirnews.com/2018/12/29/namami-gange-success-modi-govt/

சவால்களை சமாளித்து சாதனையை நெருங்குகிறது புனித கங்கை மீட்பு திட்டம்:

சவால்களை சமாளித்து சாதனையை நெருங்குகிறது புனித கங்கை மீட்பு திட்டம்:

காங்கிரஸ் அரசால் முடியாது என கைவிடப்பட்ட திட்டத்தை சாதித்து காட்டும் மோடி சர்க்கார்! - கதிர்
http://www.kathirnews.com/2018/12/29/namami-gange-success-modi-govt/

சவால்களை சமாளித்து சாதனையை நெருங்குகிறது புனித கங்கை மீட்பு திட்டம்:

சவால்களை சமாளித்து சாதனையை நெருங்குகிறது புனித கங்கை மீட்பு திட்டம்:

காங்கிரஸ் அரசால் முடியாது என கைவிடப்பட்ட திட்டத்தை சாதித்து காட்டும் மோடி சர்க்கார்! - கதிர்
http://www.kathirnews.com/2018/12/29/namami-gange-success-modi-govt/

NEWYEAR என்று வாழ்த்து சொல்வதைக்கூட இனிமேல் முற்றிலும் புறக்கணிப்போம்

அனைவருக்கும் வேண்டுகோளுடன் வணக்கம்:

ஜனவாி 1 NEW YEAR நெருங்கி கொண்டிருக்கிறது..அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி கொண்டு இருப்பீா்கள்.

ஆனால் என் கேள்வி?? நாம் ஏன் NEW YEAR கொண்டாடவேண்டும்?

நமக்கும் ஜனவாி 1 NEW YEAR தின கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? சொல்லப்போனால் ஒரு கிறிஸ்துவ பண்டிகையை நம்மீது திணித்து NEW YEAR என்றால் அதை கொண்டாடியே ஆகவேண்டும் எனும் நிலைமையை உருவாக்கி நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளனா்..

டிசம்பா் 25 இயேசு பிறக்கிறாா்..அன்றிலிருந்து ஏழாவது நாள் அவருக்கு பெயா் சூட்டப்படுகிறது..ஆகவே அவா் பிறந்த டிசம்பா் 25ஐ கிறிஸ்துமஸ் ஆகவும்,அவருக்கு பெயா் சூட்டப்பட்ட தினத்தை ஜனவாி 1 NEW YEAR எனவும் பெயாிட்டு  முன்னாள் இந்துக்கள்  அவா்களது பண்டிகைகளாக கொண்டாடி வருகிறாா்கள்.அவா்கள் கொண்டாடுவதில் அா்த்தம் உள்ளது..

ஆனால் முழுக்க முழுக்க கிறிஸ்துவா்களின் பண்டிகையான NEW YEAR தினத்தை நாம் ஏன் கொண்டாடி கொண்டு இருக்கின்றோம்..இன்னும் சொல்லப்போனால் நம் கலாச்சாரத்தை சீரழித்து கொண்டு இருப்பதில் NEW YEAR கொண்டாட்டங்களுக்கு மிகப்பொிய பங்கு உண்டு..பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை இந்த கேடுகெட்ட NEWYEAR கொண்டாட்ட மோகம் நம்மை(இந்துக்களை) முன்னாள் இந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது..

டிசம்பா் 31 இரவு முழுவதும் ஹோட்டல்களிலும்,கிளப்களிலும்,ரோட்டிலும் கிறிஸ்துவ NEWYEAR பண்டிகை எவ்வளவு கேவலமாக,நமது கலாச்சாரத்தை சீரழித்து கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் கண்கூடாக பாா்த்துவருகிறோம்..

இப்படிப்பட்ட படுமோசமான,கேவலமான ஒரு கிறிஸதுவ பண்டிகை கொண்டாட்டங்கள் நமக்கு(முன்னாள் இந்துக்களுக்கு)தேவையா??

இதில் இன்னும் ஒரு உச்சகட்ட கொடுமை என்னவென்றால் டிசம்பா் 31 இரவு சா்ச்களுக்கு செல்லும் நம்மவா்களும் இருக்கிறாா்கள்..இதுவும் ஒருவகை மதமாற்றம்தான்..NEWYEAR கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் கிறிஸ்துவ மதத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அா்த்தம்..

கொண்டாட்டங்கள் மட்டுமல்லாது NEWYEAR என்று சிறப்பு அந்தஸ்து கொடுத்து அன்றைய தினம் நமது கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்வது,அா்ச்சனை செய்வது போன்ற நிகழ்வுகளையும் நாம் நிறுத்தவேண்டும்..நம்மை பொறுத்தவரை இந்த மாா்கழி மாதம் முழுவதுமே சிறப்பான நாட்கள்தான்.அந்தவகையில் நாம் கோவில்களுக்கு சென்று வழிபடலாம்..நம்மை பொறுத்தவரை இனிமேல் ஜனவாி 1 என்பது நம் வீட்டீல் பழைய காலண்டருக்கு பதில் புது காலண்டா் மாறுகிறது அவ்வளவுதான்.

மற்றபடி அன்றைய தினத்திற்கு எந்த முக்கியத்துவமும் தராமல் புறக்கிணப்போம்..NEWYEAR என்று வாழ்த்து சொல்வதைக்கூட இனிமேல் முற்றிலும் புறக்கணிப்போம்..நாம் இனிமேல் நாமாக(இந்துவாக)மட்டும் இருப்போம்...

"நம்மால் முடியும்"..

ஸ்மிருதி இரானி யிடம் கமல் வாங்கி கட்டிக்கொண்டார்

சிவன்:
#Uthamarasa_Ramalingam
#ShriramTkl

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார்,முனகினார்,வயதாகிவிட்டது,நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார்,ரொம்பக் குளிருகிறது… உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார்,

ஸ்மிருதி இரானிக்கும் கமலுக்கும் இடையிலான மோதல் என்பதாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்ந்து அடிவாங்குவது பொறுக்காமல் அவரை அடித்து வந்த அர்னாபே ஒரு கட்டத்தில் ஸ்மிருதியுடனான பேட்டி என்பதுபோல் அதைக் கொண்டு செல்லவேண்டிவந்துவிட்டது,

கமல் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்,வாயைத் திறந்தால் அடுத்ததாக ஃப்ரெஷ்ஷாக ஏதேனும் வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டியிருக்கும் என்பதால் மிக அழகாகச் சமாளித்தார் என்றே சொல்ல வேண்டும்,

*
நான் இந்தியாவை நேசிக்கிறேன். திரையரங்குகளில் தேசிய கீதம் பாடப்பட்டு அதற்கு எழுந்து நின்றால்தான் தேச பக்தன் என்று பரிசோதனை செய்யாதீர்கள்,திரையரங்கில் அது வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் என்றார்..,

இது சரியான பதில் போலவே தோன்றியது,ஆனால், பொது இடம் ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கச் சொல்வதை தேசபக்திக்கு வைக்கப்படும் சோதனையாக நான் கருதமாட்டேன்,அதை என் கடமையாக பெருமிதமாகச் செய்வேன் என்ற ஸ்மிருதியின் பதிலுக்கு கமலிடம் பதில் இல்லை,

நேருகூட ஒருமுறை நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தாராம். அவர் வந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அது வேண்டாம் என்று தடுத்தாராம். கமல் இதைச் சொன்னதும் உங்கள் கூட்டம் அன்றிலிருந்தே தேசிய கீதத்தை இசைப்பதை தடுக்கத்தான் சொல்கிறது. எனவே நீங்களும் அதையே தொடர்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்றார். கமல், ”குள்ள அப்பு’ போல் திரு திருவென முழித்தார்.

சட்டென்று வெகுண்டு இப்போது தேசிய கீதம் ஒலித்தாலும் நான் எழுந்து நிற்பேன். நான் என் தேசத்தை நேசிக்கிறேன் என்று சொன்னார். அர்னாப் அடுத்த அடியாக, நீங்கள் நல்ல நடிகர்தான். இந்த மேடையை நாடக மேடையாக்கவேண்டாம் என்று சொன்னார்.

(ஸ்மிருதி கூட வேறொரு இடத்தில், ”அடுத்தவர் எழுதிக் கொடுப்பதற்கு வாயசைக்கும் பழக்கமோ டியூஷன் எடுத்துக் கொண்டு வந்து பேச வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை’ என்று சொருகினார். கமல் சார் யாரையோ சொல்வதாக நினைத்துக்கொண்டு மய்யமாகப் புன்னகைத்தார்).

1984- சீக்கியப் படுகொலையில்தண்டிக்கப்பட்ட சஜன் குமார் விஷயத்தில் ஏன் இவ்வளவு பெரிய மயான மவுனம் என்ற கேள்விக்கு நீதி நிலைநாட்டப்பட்டதில் சந்தோஷம்தானென்று மென்று முழுங்கினார்.

*
தேசத்தை நேசிப்பதாகச் சொல்ல்லும் நீங்கள் தேசத்தை உடைப்போம் என்று சொல்லும் இஸ்லாமிய மாவோயிஸ பயங்கரவாதிகளைப் பற்றி ஏன் எதுவும் சொல்வதில்லை;அஃப்சல் குரு போன்ற பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களை எதிர்த்து எதுவுமே நீங்கள் ஏன் பேசுவதில்லை என்ற கேள்விக்கும் சரியான பதில் கமலிடம் இல்லை. மாவோயிஸ்டுகள் ஏன் ஆயுதத்தை ஏந்துகிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
என் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்திக் கொண்டிருப்பவரிடம் நான் எப்படி பேசமுடியும்… அவர்களை ஆயுதங்களை கீழே போடச் சொல்லுங்கள் என்று ஸ்ம்ருதி இரானியின் பதிலடிக்கு கமலிடம் எந்த பதிலும் இல்லை.

*
இந்து தீவிரவாதம் இந்து பயங்கரவாதம் என்ற வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டார். டெரரிஸம் என்று சொல்லவில்லை எக்ஸ்ட்ரீமிஸம் என்றுதான் சொன்னேன் என்றார். வேறு மத அடிப்படைவாதச் செயல்பாடுகளை இதுபோல் விமர்சிப்பீர்களா என்றபோது விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றிப் பேசியிருப்பதாகச் சொன்னார். ஹேரேம் படத்தில் பிராமண தீவிரவாதம் (?) பற்றியும் பேசியிருப்பதாகச் சொன்னார்.

*
தூத்துக்குடி விவகாரம் பற்றி பேச ஆரம்பித்த கமல்ஹாசனை அந்நிய முதலீட்டை ரகசியமாகப் பெறும் பல்வேறு என்.ஜி.ஓ.க்களின் தூண்டுதலால் தேசத்தின் வளர்ச்சிக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகள் பற்றிக் கேட்டபோது நான் நேர்மையானவன் எனக்கான பணம் நேர் வழியில் வருகிறது என்று மட்டுமே சொல்ல முடிந்தது.

*
சபரி மலை விவகாரம் பற்றிய கேள்விக்கு கடந்த காலத்தில் தலித்துகளை கோவிலுக்குள் நுழைய விடவில்லை. அது மாறியதுபோல் இதுவும் மாறும்; மாற்றப்படவேண்டும் என்றார்.

இஸ்லாமியர்களின் உள் விவகாரமான முத்தலாக் விஷயத்தில் பாஜக தலையிடுவது சரியென்றால் சபரி மலை விஷயத்தில் பிறர் தலையிடுவதும் சரிதானே. உங்கள் தரப்பு என்றால் பாரம்பரியத்தை மதிக்கவேண்டும். எதிர் தரப்பு என்றால் அதில் நீங்கள் தலையிடுவீர்களா என்று அர்னாப் ஸ்ம்ரிதி இரானியிடம் கேட்டார். அடிப்படையில் இது தவறான கேள்வி.

முத்தலாக் விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கு குர்ரான் வழங்கியிருக்கும் சொற்ப பாதுகாப்பையும் பறிக்கும் அராஜகத்தைத்தான்பாஜக மாற்ற முன்வந்திருக்கிறது. உடனடியாக மூன்று தலாக் சொன்னால் செல்லாது. அது தண்டிக்கத் தக்கதுஎன்றுதான் சொல்கிறது. குர்ரானும் அதையேதான் சொல்கிறது. பல இஸ்லாமிய நாடுகள

ே ஏற்றுக்கொண்டிருக்கும் விஷயம் இது. ஆனால், சபரி மலை விவகாரத்தில் அந்தக் கோவில் என்ன விதிமுறையை முன்வைக்கிறதோ அதை நீதிமன்றம் அடியோடு மாற்றப் பார்க்கிறது.

தலித்களின் ஆலயப் பிரவேச விஷயத்தில் எந்தவொரு தர்ம சாஸ்திரத்திலும் அவர்களை உள்ளே நுழையக்கூடாதுஎன்று சொல்லவில்லை. எனவே பிற்கால மனிதர்கள் செய்த தவறை நீக்குவதென்பது தர்ம சாஸ்திரத்தை முறையாக அமல்படுத்தும் செயல்தான். சபரி மலையில் அந்தக் கோவிலின் தர்ம சாஸ்திரமே குறிப்பிட்ட வயதுப் பெண்களை வரவேண்டாம் என்று வரையறுத்திருக்கிறது. இது பின்னால் வந்த மனிதர்கள் செய்த தவறு அல்ல. எனவே இந்த ஒப்பீடுகள் சரியல்ல.

ஸ்ம்ருதி இரானி வட நாட்டிலும் அதுபோல் சில கோவில்களைல் பெண்களுக்கு அனுமதி இல்லாமல் இருப்பதையும் ஆண்களுக்கு பல கோவில்களில் நுழைய அனுமதி இல்லாமல் இருப்பதையும் சொல்லிக் காட்டினார். இங்கு நடப்பது சமத்துவ மறுப்பு அல்ல… பாரம்பரியத்துக்கான மரியாதை என்று சொன்னார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் கமல் மட்டுமல்ல அர்னாபும் திணறினார்.

*
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறை பற்றிக் கேள்வி எழுந்தபோது ஸ்ம்ருதி இரானி பிரதமரும் பாஜகவின் முக்கிய தலைவருமான நரேந்திர மோதி அதை மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. விசாரணை நடக்கிறது… நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னார்.

*
இந்துக்கள் இந்து அல்லாதவர்கள் என்று நாட்டை பாஜக துண்டாடுவதாக கமல் ஹாசன் சொன்னதை எடுத்து அர்னாபும் ஸ்மிருதி இரானியும் கேட்ட கேள்விகளுக்கு கமலிடம் எந்த பதிலும் இல்லை.

பாரதிய ஜனதா தேசத்தின் வளர்ச்சி என்ற ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்குகிறது. ஒரு சாலை அமைக்கும்போதோ, மின் இணைப்பு கொடுக்கும்போதோ, அணை கட்டும்போதோ இந்துவா முஸ்லீமா என்று பார்த்துச் செயல்படுவதில்லை. அனைவருக்குமான வளர்ச்சியையை முன்வைத்தே நரேந்திர மோதியின் அரசு செயல்படுகிறது. அதில் ஓர் அங்கம் என்பதில் எனக்குப் பெருமையே. காங்கிரஸ் 60 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அமேதி தொகுதியில் அடிப்படை வசதிகள் ஒன்று கூட இல்லை. பாஜகவும் யோகியும் வந்த பின்னர்தான் அவை தலைகாட்டத் தொடங்கியுள்ளன என்றார்.

காங்கிரஸ் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வளர்ச்சிக் கனவுகளை முன்வைக்கிறது. பாஜக அரசு உண்மையான நலத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்று ஸ்மிருதி சொன்னதும் கமல் என்னிடமும் பல கனவுகள் இருக்கின்றன என்றார். உடனே ஸ்மிருதி, அதுதான் சொல்கிறேனே. உங்கள் குழு கனவு கண்டுகொண்டே இருப்பதில் வல்லவர்கள். நாங்கள் செயல் வீரர்கள் என்று மடக்கினார்.

*
தேசத்தின் வளர்ச்சியா… பிரிவினைவாதமா… குறுகிய அரசியல் கணக்குகளா… உங்களுடைய கருத்துகளுக்கு மாறுபட்ட மாவோயிஸ்ட், தீவிரவாத சக்திகள், ஊழல் சக்திகளுடன் எப்படி உங்களால் கூட்டணி வைக்க முடியும் என்று கமலிடம் கேட்டபோது நான் யாருடனும் கூட்டணி வைப்பதாகச் சொல்லவே இல்லையே என்று பம்மினார்.

*
ஒரே நாடு… ஒரே மொழி… ஒரே மதம் என்று பாஜக சொல்வதைக் கண்டித்து அவர் சொன்னதை மேற்கோள் காட்டிக் கேள்வி கேட்கப்பட்டது. நியூயார்க்கில் யாரோ ஒருவன் கமல ஹாசனை முஸ்லீம் என்று நினைத்து இந்தியா இந்துக்களுக்கே என்று சொன்னதாகச் சொன்னார். தலைவர்கள் டிப்ளமேட்டிக்காக அனைவரையும் அரவணைப்பதாகச் சொல்கிறார்கள். பாஜக தொண்டர்கள் அல்லது அந்த சிந்தனையால் பீடிக்கப்பட்டவர்கள் நாட்டின் பன்முகத்தன்மையை மதிப்பதில்லை என்று நிஜமாகவே உளறினார்.

நியூயார்க்கில் எங்கோ யாரோ சொன்னதை வைத்து பாஜகவைப் பற்றி இப்படி ஒரு முடிவுக்கு வருகிறீர்களே… அதே பாஜக மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களை நாட்டின் ஜனாதிபதியாகவே ஆக்கியதே அது உங்கள் கண்ணில் படவில்லையா… பாஜகவின் சித்தாந்தம் என்ன என்பதை நியூயார்க் கூவலை வைத்தா முடிவு செய்வது என்ற ஸ்மிருதியின் கேள்விக்கு கமலிடம் எந்த பதிலும் இருந்திருக்கவில்லை.

*
தெளிய வைத்துதெளிய வைத்து அடித்துவிட்டு அர்னாப் கடைசியாக, கமல் சார் தன்னுடைய கடைசிப் படத்தின் ஷூட்டிங்கையே இந்த நிகழ்சிக்காக நிறுத்தி வைத்துவிட்டு வந்திருக்கிறார். அதற்கு அவருக்கு மிகப் பெரிய நன்றி, பாராட்டு என்று தட்டிக்கொடுத்து (ஒழுங்கா ஊர்ப் போய்ச் சேர்ந்து திரையுலக வாழ்க்கைக்கு எண்ட் கார்டு போடற மாதிரியே அரசியலுக்கும் பெரிசா எண்ட் கார்டு போட்ரு என்று சொல்லாமல் சொல்லி) அனுப்பினார்.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...