இந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் ,
ஆழ நோக்கினால் பிரபஞ்ச உண்மை வெளிபடும்என முதன் முதலில் நிரூபித்தவர் பிறந்த நாள் இன்று..
தமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன்
திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர்
சந்திர சேகர வெங்கட் ராமன்
இயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது
பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது
ஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி அவர்தான்
அதாவது ஓளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் சொன்ன முடிவு, சூரிய ஓளியின் 7 நிறங்களில் நீல நிறம் அதிகமாக சிதறடிக்கபடுகின்றது அதனாலே வானமும் கடலும் நீலமாக தெரிகின்றன
இந்த முடிவு பவுதீக உலகை புரட்டிபோட்டது. அவர் சொன்ன ஆய்வு முடிவு உண்மை எனவும் நிரூபிக்கபட்டது, 1930ல் அவருக்கு நோபல் பரிசும் கொடுக்கபட்டது.
அக்காலம் ஐன்ஸ்டீன் எல்லாம் ஒளிபற்றி ஆராய்ச்சி செய்த காலம். அந்த நேரத்தில் சிவி ராமனின் முடிவு ஐன்ஸ்டீனையே வியக்க வைத்தது
சாதாரண சாதனை அல்ல அது.
இந்திய விஞ்ஞானி இயற்பியலில் வாங்கிய முதல் நோபல் அது.
அதன் பின் உலகின் எல்லா விருதும் தேடி வந்தது, இங்கிலாந்து வழங்கிய சர் பட்டம் இத்தாலி , அமெரிக்கா என எல்லா நாடுகளும் கொண்டாடின
தன் முதுமை காலத்தை ராமன் மைசூரில் கழித்தார், காரணம் மைசூர் சமஸ்தானம் அவரை சிறப்பு விருந்தினராக அமர்த்தி கவுரவபடுத்தியது
இன்று சர் சிவி ராமனின் பிறந்த நாள், உலகெல்லாம் கொண்டாடபட்ட ராமன் ஒரு தமிழர். தமிழர் அறிவின் உச்சம்
ஆனால் இத்ததமிழகத்தில் கலைஞர் அண்ணா, ராமசந்திரன் போல அடையாளபடுத்தபட்டாரா? என்றால் இல்லை.
ஏன்? ஏனென்றால் அவர் பிராமணர்
தமிழ்நாட்டில் பிறந்த அறிவு சூரியனான அவர் பிராமணர் என்பதால் மறைக்கபட்டார்
அறிவாளிகளையும், பெரும் சிந்தனையாளர்களையும், கற்றவர்களையும் ஜாதிகளை பார்த்து கொண்டாட மறுக்கபட்டோம் அல்லது மறக்கடிக்கபட்டோம்
அவர்கள் பிராமணராயிருந்தால் இன்னும் கூடுதல்
வெறும் குப்பைகளையும், பிதற்றல்காரர்களையும் பெரும் பிம்பமாக உருவாக்க தொடங்கினோம், விளைவு பெரும் விபரீதம் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன
அதனை விடுங்கள், இனி திருத்த முடியாது. இங்கு எல்லாமே அப்படித்தான்
ராமன் எப்படி இந்த நீலநிற விஷயத்தை கண்டுபிடித்து நோபல் வாங்கினார்?
விஷயம் ஒன்றுமல்ல , சூரியன் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வருவதாகவும், கண்ணனும் ராமனும் நீல நிறம் கொண்டவர்களாகவும் சொல்வது இந்துமதம்
7 குதிரைகள் என்பது சூரிய ஒளியில் இருக்கும் 7 நிறங்கள் என்பதை விஞ்ஞானம் படித்த ராமன் உணர்ந்தார், அது என்ன கண்ணன் நீலநிறம் என்பது அவரை சிந்திக்க வைத்தது.
அதிலே ஆராய்ச்சியினை செலுத்திய அவர் விஞ்ஞான உண்மையினை கண்டறிந்தார்
ஆம் நிறங்களில் விஸ்வரூபம் எடுப்பது நீல நிறம் என்ற தெளிவு அவருக்கு கிடைத்தது
வானமும், கடலும் நீலமாக இருப்பதன் விஞ்ஞான தத்துவம் அவருக்கு புரிந்தது
இந்த நீல நிற விஸ்வரூபத்தைத்தான் இந்துக்கள் கண்ணனில் கண்டார்களா? என்பது விளங்கிற்று
இந்த நாட்டின் ஆதார மத நம்பிக்கையிலிருந்து விஞ்ஞான விளக்கத்தை கொடுத்தார் ராமன், உலகம் அவரை கொண்டாடியது
இப்படி இன்னும் எத்தனை விஞ்ஞான தத்துவம் இந்துமதத்தில் ஒளிந்திருக்கின்றதோ தெரியாது, அதற்கு இன்னொரு ராமன் வந்தால்தான் தெரியும்
பகுத்தறிவு அது இது என சொல்லி தமிழகத்தில் அந்த தமிழனின் புகழ் மறைக்கபட்டாலும் உலகில் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது
இன்றும் அது ராமன் விளைவு என்றே கொண்டாடபடுகின்றது
வெள்ளையன் அப்படிபட்ட தமிழர்களை சாதி பாராது ஊக்குவித்தான் ராமன் உலகினை புரட்டிபோடும் முடிவினை சொன்னார்.
இந்த மாபெரும் விஞ்ஞானி ராமனுக்கு, தமிழகத்தில் பிறந்த அந்த மேதைக்கு நினைவிடம் இருக்குமா? அவர் பெயரில் பல்கலைகழகம் உண்டா? கல்லூரி உண்டா? இல்லை விருதுதான் உண்டா? என்றால் இல்லை
யார் யாருக்கோ அடையாளம் உள்ள தமிழகத்தில் இம்மண்ணின் அறிவு சூரியன், நோபல் வென்றவனுக்கு ஒரு நினைவு அடையாளமும் இல்லை
பின் எப்படி உருப்படும் தமிழகம்? நல்ல விஞ்ஞானிகள், சிந்தனையாளர் எப்படி வருவார்கள்?
பகுத்தறிவு, பிராமண வெறுப்பு, இந்து மத புறக்கணிப்பு என சொல்லி பல நல்ல விஷயங்களையும் தமிழகம் இழந்துவிட்டது. அதனை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.
7 குதிரைகள் பூட்டிய சூரிய தேரும், கண்ணனின் நீல நிறமும் வெறும் கட்டுகதை அல்ல, அவை எல்லாம் பெரும் விஞ்ஞான தத்துவம் என உலகிற்கு நிரூபித்தவர் பிறந்த நாள் இது
இந்துமதத்தில் இன்னும் ஏராளமான விஞ்ஞான தத்துவம் உறங்கிகொண்டிருக்கின்றது, மூட நம்பிக்கை எனும் பெயரில் அவைகளை புறக்கணிக்க கூடாது என உலகிற்கு செவிட்டில் அறைந்து சொன்ன இந்தியன் பிறந்த நாள் இது.
இந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் , ஆழ நோக்கினால் பிரபஞ்ச உண்மை வெளிபடும் என முதன் முதலில் நிரூபித்தவர் பிறந்த நாள் இது.
இன்று அந்த சர் சி.வி ராமனின் பிறந்த நாள். எங்கள் தமிழகத்திலும் ஒரு நோபல் விஞ்ஞானி இருந்திருக்கின்றான், அவன் உலக விஞ்ஞானிகளுக்கு, யூத , ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு சரிக்கு சமமாக அமர்ந்து விருது வாங்கியிருக்கின்றான் என்பதை நினைத்து பெருமை அடைவோம்.
முதல் முறையாக 1888ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றது இவர் மட்டுமே ..
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹுட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.(ஆனால் இவர் தன்னுடைய பெயருக்கு முன் சர் என்ற பட்டத்தை பயன்படுத்த விரும்பவில்லை)
இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.
மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.
பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.
அறிவியலிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் கொண்ட ராமன் தன்னுடைய எண்பத்தி இரண்டாம் வயது வரை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தார். இவரின் மரணம் தான் இவரின் தனது ஆய்வுகளுக்கு ஓய்வை தந்தது. இவரின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இன்றும் அறிவியல் இயற்பியல் மற்றும் தொழிற்துறை போன்ற பல்வேறு துறைகளில் பயன்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவ்வுலகில் இயற்பியல் துறை இருக்கும் வரை சர்.சி.வி.ராமன் பெயரும் உச்சரிக்கப்படும் என்பதில் துளியும் ஐயம் இல்லை எனலாம்.
பிராமணர்கள் தொன்றுதொட்டு தமிழோடு பின்னி பினைந்து பிரிக்க முடியாதவர்களாக இருப்பதே உண்மை.
தமிழகத்தின் மையப்பகுதியாம் திருச்சியில் பிறந்து உலகிற்கே இந்தியனை அறிமுகப்படுத்திய மாபெரும் அறிவியல் மேதையை இந்த பிறந்த நாளில் நினைவு கூர்வதில் பெருமை அடைகிறோம்...
நன்றி...
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨
🚩சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🚩