https://www.facebook.com/groups/1802075443422233/permalink/1952088018420974/
.
ரஃபேல்ஸ் பிரிஞ்சு மேயும் தமிழாக்க பதிவு.
ரபேல் : பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனின் பேச்சை கேட்க முடியாதவர்களுக்கான பதிவு.
திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொன்னால் அது உண்மையாகும். ஆனால் அதை சரியான விவரங்களுடன் அது பொய் என்று நிரூபித்தால் , அந்த பொய்யை சொன்னவர்கள் அதள பாதாளத்தில் விழுவார்கள். பிறகு அவர்கள் என்றாவது உண்மையை சொன்னாலும் அதை மக்கள் நம்பமாட்டார்கள். அது தான் நடந்தது பாராளுமன்றத்தில்.
ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் உச்சநீதிமன்றமே இதில் எந்த ஊழலும் இல்லை, எந்த தவறும் நடக்கவில்லை என்று கூறிய பிறகும் ரபேல் விமான ஒப்பந்தத்தை பற்றி சில பொய்களை மக்களிடம் பரப்பி வருக்கிறார்கள். இதில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்
1. 126 விமானங்கள் வேண்டிய இடத்தில் எதற்காக 36 விமானங்கள் மட்டும் வாங்குகிறார்கள்?
2. நாங்கள் செய்த ஒப்பந்த விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 3000 கோடி ஊழல் நடந்திருக்கிறது.
3. இவ்வளவு தொகை கொடுத்து வாங்கும்போது பேங்க் கியாரண்டி ஏன் வாங்கவில்லை?
4. HAL க்கு கிடைத்திருக்கவேண்டிய ஒப்பந்தத்தை தடுத்து அம்பானிக்கு கொடுத்துவிட்டார் மோடி. இதில் அம்பானி பல நூறு கோடிகள் மோடிக்கு லஞ்சமாக கொடுத்து இருக்கிறார்.
இவை தான் குற்றச்சாட்டுகளாக முன் வைக்கப்பட்டது. இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டால் பாராளுமன்ற கூட்டு குழுவின் விசாரணை தேவை என்று தேய்ந்துபோன ரெகார்ட் போல அதையே சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
சரி இதற்கு இந்தியாவின் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் அளித்த பதில் இதோ.
இந்திய விமானப்படையில் உபயோகப்படுத்திக்கொண்டிருந்த போர்விமானங்கள் பழையதாகி அதன் திறன் குறைந்துவிட்டதாலும், அதை விட அதிக திறனுள்ள போர்விமானங்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டதாலும்,கார்கில் போருக்கு பிறகு இந்திய விமான படையின் பலத்தை தக்கவைத்துக்கொள்ள போர்விமானகள் வாங்கவேண்டும் என்று மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் அரசால் 2002 ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சீனாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள போர்விமானங்களை அதிகப்படுத்தி கொண்டிருந்த வேளையில் இந்தியாவின் விமானப்படையில் ஸ்குவாட்ரன் குறைந்துகொண்டே வந்தது. (ஒரு ஸ்குவாட்ரன் என்பது 18 போர்விமானங்கள் கொண்ட யூனிட்). அதன்படி தங்களுக்கான தேவையை சரியாக அறிந்து தெரிவிக்கும்படி விமானப்படை பணிக்கப்பட்டது
எப்படி பட்ட போர்விமானங்கள் வேண்டும் அதில் என்னவெல்லாம் சாதனங்கள், தளவாடங்கள் பொறுத்தப்படவேண்டும் என்ற தங்களுடைய தேவையை ( SQR - Services qualitative requirement ) விமானப்படை 2006 ம் ஆண்டு அப்பொழுது இருந்த காங்கிரஸ் அரசிடம் தெரிவிக்க அதன்படி தயாரிப்பாளர்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரப்பட்டது. அதில் டாஸால்ட் என்ற பிரென்ச் கம்பெனி தங்களுடைய ரபேல் போர் விமானங்களுக்கு மற்றவர்களை விட குறைந்த விலையை கொடுத்து இருந்ததால் அந்த விமானத்தை வாங்க முடிவு எடுக்கப்பட்டு அதற்கான குழு அமைத்தது காங்கிரஸ். அவர்களும் அந்த கம்பெனியுடன் எல்லா விலை உட்பட பேச்சுவார்த்தைகளையும் நடத்திமுடித்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ( Terms & Conditions ) முடிவு செய்து அரசுக்கு தெரிவித்தது. ராணுவ அமைச்சகம் அந்த கோப்பை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது ( பா சிதம்பரம் - நிதி அமைச்சர் ). நிதி அமைச்சகம் தனது பங்கிற்கு எல்லா வழிமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டதா என்று பார்க்க மறுபடியும் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஏற்கனவே அமைக்கப்பட்ட குழு செய்த வேலையையே திரும்பவும் செய்து அறிக்கையை சமர்ப்பித்தது. இருந்தாலும் காங்கிரஸ் அரசு ஒப்பந்தத்தை நிறைவு செய்யவில்லை. அப்போதைய ராணுவ அமைச்சர் அமைச்சர் பத்திரிகையாளர்களிடத்தில் பணம் எங்கிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி விமானப்படை மிகவும் அவசரம் என்று சொல்லியும் காங்கிரஸ் அரசு ஏன் விமானங்களை வாங்கவில்லை? எது அவர்களை தடுத்தது. இதற்கு காங்கிரஸ் தலைமைதான் காரணம். அவர்களுக்கு ஏதோ படியவில்லை. நாட்டின் பாதுகாப்பைவிட அவர்களுக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்பதாலேயே எல்லா செயல்முறைகளும் முடிந்தும் அந்த ஒப்பந்தத்தை காங்கிரஸ் கிடப்பில் போட்டது.
ஆனால் மோடி தலைமையிலான இந்த அரசுபதவி ஏற்று 15 மாதங்களில் ஒப்பந்தத்தை நிறைவேற்றியது . பிரெஞ்சு அரசாங்கத்துடன் நேரடியாக பேசி இடைத்தரகர்கள் இல்லாமல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் அரசு கடைசியாக முடிவெடுத்த தொகையில் இருந்து 9% க்கு குறைவான விலையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
(இரண்டாம் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் ...)
அவசரத்திற்கு போர் விமானம் வாங்கும்போது குறைந்தது இரண்டு ஸ்குவாட்ரங்களுக்கு வாங்கவேண்டும் என்பது உலகெங்கும் விமானப்படையில் கடைபிடித்துவரும் நடைமுறை. அந்த நடைமுறைப்படி முதலில் 36 விமானங்கள் நேரடியாக அந்த டஸால்ட் கம்பெனியே தயாரித்து வாங்குவதென்றும் மீதம் இந்தியாவில் ட்ஸால்ட்டின் நேரடி கண்காணிப்பில் தயாரிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு முதலில் ஒரே ஒரு ஸ்குவாட்ரன்கு மட்டுமே அதாவது 18 போர்விமானங்கள் மட்டுமே நேரடியாக வாங்க முடிவெடுத்தது. (இது விமானப்படையின் அறிவுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை என்றே பார்க்கவேண்டும்.)
(முதல் கேள்வியான எதற்காக 36 விமானங்கள் வாங்க முடிவெடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்.)
ஏதாவது ஒரு கம்பெனியுடன் ஒப்பந்தம் போடும்போதுதான் அவர்களது வங்கியின் உத்திரவாதம் ( பேங்க் கேரண்ட்டி ) கேட்டு வாங்கப்படும். ஆனால் இரு நாடுகளுக்குள் ஒப்பந்தம் போடும்போது அப்படி பட்ட வங்கி உத்திரவாதத்திற்கு அவசியம் இல்லை. இதற்க்கு முன்பு இந்தியா அமேரிக்கா ரஷ்யாவுடன் ராணுவ தளவாடங்கள் விமானங்கள் வாங்க ஒப்பந்த போட்டபோதும் இப்படிதான் நடந்தது.
( இவை வாங்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் )
பிரான்ஸ் அதிபரே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதால் இதை விட வேறு உத்திரவாதத்திற்கு அவசியம் இல்லை.
மூன்றாவது கேள்விக்கான விடை கிடைத்திருக்கும்.
HAL :
ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேயும் HAL வாசலில் போய் இது உங்களுக்கு கிடைத்திருக்கவேண்டிய ஒப்பந்தம். மோடி அரசு இதை அம்பானிக்கு தாரைவார்த்துவிட்டது என்று கோஷம் எழுப்பினார்கள்.
ஆனால் நடந்தது என்ன?
காங்கிரஸ் அரசு பிரான்ஸ் கம்பெனி டஸால்ட் உடன் சேர்ந்து முடிவெடுத்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ( Terms & Conditions ) படி இந்தியாவில் தங்களது ரபேல் விமானங்களை தயாரிக்க தேவையான ஒப்பந்தகாரர்களை டஸ்ஸால்ட் கம்பெனியே முடிவெடுக்கும் என்ற நிபந்தனையும் இருந்தது. அவர்கள் HAL உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்படிக்கையும் ஏற்படவில்லை. அதற்க்கு இரண்டு காரணங்கள்
1. HAL இதே ரபேல் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க 2 .7 பங்கு அதிக மனித நேரங்கள் ( Man Hours ) ஆகும் என்று கூறியது. அதனால் விமானத்தின் விலை அதிகமாக இருக்கும் என்று கூறியது.
2. HAL தயாரிக்கும் தங்களுடைய ரபேல் விமானத்திற்கு தாங்கள் கேரண்ட்டி கொடுக்கமுடியாது என்று டஸ்ஸால்ட் கூறிவிட்டது.
அதாவது HAL இந்த விமானங்களை தயாரித்து இருந்தால் அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான டஸ்ஸால்டின் உத்திரவாதம் இல்லாமல் தான் உபயோகப்படுத்தி இருக்க முடியும்.
இதனாலேயே HAL க்கு இந்த ஒப்பந்தம் வராமல் போனது.
HAL வாசலில் நின்று இது உங்களது உரிமை என்று கோஷம் போட்ட ராகுல் காந்தியுடன் இருந்த மல்லிகார்ஜுன கார்கே தலைவராக இருக்கும் பாராளுமன்ற நிலைக்குழு ( Standing commitee )
HAL பற்றிய தனது அறிக்கையில் 30 வருடங்களுக்கு மேலாக HAL ஆல் ஒரு திறம் மிக்க போர்விமானம் கூட தயாரிக்க முடியவில்லை என்று அவர்களது திறனை பற்றியும் இந்த தொழில் நுட்பத்தில் அவர்களது நிபுணத்துவ குறைபாடு பற்றியும் காட்டமாக விமர்சித்துள்ளது. ஆனால் HAL ஐ ஊக்கப்படுத்தி அந்த நிறுவனத்திற்கு அதிக முதலீடு செய்து அவர்களது நிலையை பல வருடங்களாக காங்கிரஸ் உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி அவர்களது தலைமையில் உள்ள இந்த அரசுதான் HAL க்கு கிட்டத்தட்ட 1 லட்சம் கோடிகளுக்கு ராணுவ தளவாடங்கள், ஹெலிகாப்டர் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தையும் கொடுத்து அந்த நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளோம். HAL பற்றி பேசும் அருகதை காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.
மேலே சொன்ன காரணத்திற்க்காக HAL உடன் டாஸால்ட் ஒப்பந்தத்தை போடாமல் காங்கிரஸ் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட Terms & conditions படி அவர்களே அம்பானியின் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கும் இந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதையெல்லாம் நீதிமன்றம் கூர்ந்து கவனித்துதான் தீர்ப்பளித்துள்ளார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
எனது பக்கம் : மோடி என்ற தனி மனிதன் ஒரு இந்தியாவிற்கு கிடைத்த ஒரு தவப்புதல்வன். நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் மதம் இனம் பார்க்காமல் அன்பு வைத்துள்ளவன். அவன் தன்னுடைய எதிரிகளாக நினைப்பது ஊழல்வாதிகளையும் தேசத்துரோகிகளையும் தான். ஒரு சாராருக்கு மட்டும் என்று எந்த சலுகையும் காட்டாதவன். தன்னுடைய பதவியின் நிழல் தன்னுடைய உடன்பிறந்தவர்கள், உறவினர்கள் மீது படாமல் வாழ்ந்து கொண்டிருப்பவன். இவனா ஊழல் செய்வான். ஊழல் செய்பவனாக இருந்தால் 15 வருடம் முதல்வராக இருந்தபோதே ஊழல் செய்திருக்கமாட்டானா? ஒரு புகார் கூட இல்லையே அவன் மீது. இன்றும் அவனது தாய் சிறு வீட்டில் வசித்துவருகிறார். அவரது சகசாதர சகோதரிகள் சாதாரண மிடில் கிளாஸ் வாழ்க்கையை அவர்களது சம்பாத்தியத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த அரசின் மீது வேறு எந்த புகாரும் சொல்ல முடியாததால் காங்கிரஸ் கட்சியினரால் ஜோடிக்கப்பட்டதுதான் இந்த ட்ராமா.
அவர்களுக்கு பயம் எதிர்க்கட்சிகளுக்கு பயம். அவரை எதிர்க்கும் பலருக்கும் பயம். எதற்காக? இன்னொரு முறை இவன் பதவிக்கு வந்தால் ஊழல் செய்யும் எல்லா வழிகளும் அடைபட்டு போய்விடுமே என்கிற பயம். நாட்டை திண்டாடும் சக்திகளுக்கு இவன் தங்களை வேட்டையாடிவிடுவான் என்னும் உயிர் பயம்.
என்னை போன்ற தேசத்தை நேசிக்கும் மக்கள் ஒன்றிணைந்து இவனை அடுத்தமுறையும் பதவியில் அமர்த்துவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. இவனது தலைமையில் உலகத்தில் மிகவும் மதிக்கக்கூடிய நாடாக பலமிக்க நாடாக முன்னேறிய நாடாக, ஆற்றலும் அறிவும் மிகுந்த இளைஞர்கள் உள்ள நாடாக இந்தியா மாறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.
SRK