Wednesday, 5 December 2018

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வாங்கியதில் ₹360 கோடி கமிஷன்...

#அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வாங்கியதில் ₹360 கோடி கமிஷன்...

#சோனியா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான புரோக்கர் கிறிஸ்டியன் மைக்கேலை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் ஒப்புதல் ...

#நாளை இந்தியா கொண்டுவரப்படுகிறார்!

#மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்தபோது சோனியா குடும்பத்தினர் உட்பட மிக முக்கியமானவர்கள் சொகுசாக பயணம் செய்வதற்காக ₹3,600 கோடியில் பிரிட்டனைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக உடன்பாடு செய்யப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் தரகராகச் செயல்பட்ட துபாயை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து ₹360 கோடி கமிஷன் பெற்றதாகவும், இதில் 60 சதவீதம் தொகையான ₹225 கோடி ரூபாயை அவர் மட்டும் கமிஷனாக பெற்றதாகவும், மீதி தொகையை முக்கிய காங்கிரஸ் தலைவர் குடும்பத்துக்கு அளித்ததாகவும் சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் குற்றஞ்சாட்டின.

அவரை விசாரணைக்காக இந்தியா கொண்டுவருவதற்காகத் துபாய் நீதிமன்றத்தில் இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால், இந்த விவகாரத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் சி.பி.ஐ தன்னை வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைப்பதாகவும், கிறிஸ்டியன் மைக்கேல் துபாய் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக வாதிட்டு வந்தார்.

ஆனால் 2010-ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக கிறிஸ்டியன் மைக்கேல் சோனியா காந்தியை சந்தித்து பேரம் பேசியது, 2012-ஆம் ஆண்டு வரை பல முறை இவர் டெல்லி வந்து பாதுகாப்புத் துறை வட்டாரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் கொண்ட தொடர்புகள் குறித்து சி.பி.ஐ உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தது. இதை அடுத்து, துபாய் உச்ச நீதிமன்றம் கிறிஸ்டியன் மைக்கேலை இந்த வாரத்துக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது. அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்து விட்டதாகவும் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து விசாரணைக்காகக் கிறிஸ்டியன் மைக்கேல் இந்த வாரத்தில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளார், நாளை வரலாம் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்டியன் மைக்கேலின் தந்தை மறைந்த வோல்ப்கெங் மேக்ஸ் மைக்கேல் ரிச்சர்டு இந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று இத்தாலியை சேர்ந்த பத்திரிகை “Lettera 43’, சமீபத்தில் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் இந்தியா வந்ததும், விசாரணையின் மூலம் காங்கிரஸின் ஊழல் முகம் கிழியும் என்பதில் ஐயமில்லை.

https://t.co/w1IQCxxOLD

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...