Saturday, 29 December 2018

NEWYEAR என்று வாழ்த்து சொல்வதைக்கூட இனிமேல் முற்றிலும் புறக்கணிப்போம்

அனைவருக்கும் வேண்டுகோளுடன் வணக்கம்:

ஜனவாி 1 NEW YEAR நெருங்கி கொண்டிருக்கிறது..அன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாட தயாராகி கொண்டு இருப்பீா்கள்.

ஆனால் என் கேள்வி?? நாம் ஏன் NEW YEAR கொண்டாடவேண்டும்?

நமக்கும் ஜனவாி 1 NEW YEAR தின கொண்டாட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? சொல்லப்போனால் ஒரு கிறிஸ்துவ பண்டிகையை நம்மீது திணித்து NEW YEAR என்றால் அதை கொண்டாடியே ஆகவேண்டும் எனும் நிலைமையை உருவாக்கி நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளனா்..

டிசம்பா் 25 இயேசு பிறக்கிறாா்..அன்றிலிருந்து ஏழாவது நாள் அவருக்கு பெயா் சூட்டப்படுகிறது..ஆகவே அவா் பிறந்த டிசம்பா் 25ஐ கிறிஸ்துமஸ் ஆகவும்,அவருக்கு பெயா் சூட்டப்பட்ட தினத்தை ஜனவாி 1 NEW YEAR எனவும் பெயாிட்டு  முன்னாள் இந்துக்கள்  அவா்களது பண்டிகைகளாக கொண்டாடி வருகிறாா்கள்.அவா்கள் கொண்டாடுவதில் அா்த்தம் உள்ளது..

ஆனால் முழுக்க முழுக்க கிறிஸ்துவா்களின் பண்டிகையான NEW YEAR தினத்தை நாம் ஏன் கொண்டாடி கொண்டு இருக்கின்றோம்..இன்னும் சொல்லப்போனால் நம் கலாச்சாரத்தை சீரழித்து கொண்டு இருப்பதில் NEW YEAR கொண்டாட்டங்களுக்கு மிகப்பொிய பங்கு உண்டு..பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை இந்த கேடுகெட்ட NEWYEAR கொண்டாட்ட மோகம் நம்மை(இந்துக்களை) முன்னாள் இந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது..

டிசம்பா் 31 இரவு முழுவதும் ஹோட்டல்களிலும்,கிளப்களிலும்,ரோட்டிலும் கிறிஸ்துவ NEWYEAR பண்டிகை எவ்வளவு கேவலமாக,நமது கலாச்சாரத்தை சீரழித்து கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் கண்கூடாக பாா்த்துவருகிறோம்..

இப்படிப்பட்ட படுமோசமான,கேவலமான ஒரு கிறிஸதுவ பண்டிகை கொண்டாட்டங்கள் நமக்கு(முன்னாள் இந்துக்களுக்கு)தேவையா??

இதில் இன்னும் ஒரு உச்சகட்ட கொடுமை என்னவென்றால் டிசம்பா் 31 இரவு சா்ச்களுக்கு செல்லும் நம்மவா்களும் இருக்கிறாா்கள்..இதுவும் ஒருவகை மதமாற்றம்தான்..NEWYEAR கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் கிறிஸ்துவ மதத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அா்த்தம்..

கொண்டாட்டங்கள் மட்டுமல்லாது NEWYEAR என்று சிறப்பு அந்தஸ்து கொடுத்து அன்றைய தினம் நமது கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்வது,அா்ச்சனை செய்வது போன்ற நிகழ்வுகளையும் நாம் நிறுத்தவேண்டும்..நம்மை பொறுத்தவரை இந்த மாா்கழி மாதம் முழுவதுமே சிறப்பான நாட்கள்தான்.அந்தவகையில் நாம் கோவில்களுக்கு சென்று வழிபடலாம்..நம்மை பொறுத்தவரை இனிமேல் ஜனவாி 1 என்பது நம் வீட்டீல் பழைய காலண்டருக்கு பதில் புது காலண்டா் மாறுகிறது அவ்வளவுதான்.

மற்றபடி அன்றைய தினத்திற்கு எந்த முக்கியத்துவமும் தராமல் புறக்கிணப்போம்..NEWYEAR என்று வாழ்த்து சொல்வதைக்கூட இனிமேல் முற்றிலும் புறக்கணிப்போம்..நாம் இனிமேல் நாமாக(இந்துவாக)மட்டும் இருப்போம்...

"நம்மால் முடியும்"..

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...