Tuesday, 8 January 2019

பிரதமர்_மோடிஜி_அரசின்_சாதனை நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2% : சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது

https://www.facebook.com/100021766747473/posts/393750841360471/
.

#பிரதமர்_மோடிஜி_அரசின்_சாதனை
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2% : சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது இந்திய பொருளாதாரம்

2018-19 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.2 சதவீதமாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு 6.7 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாய மற்றும் உற்பத்தி துறைகளின் செயல்திறன் அதிகரித்துள்ளதால் இது சாத்தியம் ஆனது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office) C.S.O தெரிவித்துள்ளது.

2018-19 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாயின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டை (first advance estimates) வெளியிட்ட C.S.O, 2018-19-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 2016-17 ஆண்டில் 7.1 சதவீதமும், 2015-16ல் 8.2 சதவீதமுமாக இருந்தது.

2017-18 ல் 6.5 சதவீதமாக இருந்த Gross Value Add GVA (மொத்த மதிப்பு கூடு), நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

C.S.O-வின் தரவுகள் படி, விவசாயம், வனவியல் மற்றும் மீன்பிடி ஆகிய தொழில்களின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 3.6 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இதன் வளர்ச்சி 3.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி துறைகளின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 8.7 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2017-18ல் 5.7 சதவீதமாக இருந்தது.

மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாடு சேவைகள் 2018-19 ஆம் ஆண்டில் 9.4 சதவீதமாக வளர்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இது 7.2 சதவீதமாக இருந்தது. இதேபோன்று கட்டுமான துறை 5.7 சதவீதத்திலிருந்து 8.9 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்சார் சேவைகள் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருக்கும். இது 2017-18ல் 6.6 சதவீதமாக இருந்தது.

இருப்பினும், சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2017-18 ல் 2.9 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக சரிவடையும் என்றும், வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் சேவைகள் ஆகிய துறைகளின்  வளர்ச்சியும் கடந்த நிதியாண்டை விட குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகளின் வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 8.9 சதவீதமாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

C.S.O-வின் மதிப்பீட்டின்படி, 2018-19 ஆம் ஆண்டின் தனிநபர் வருமானம் ₹1,25,397 ஆகும். 2017-18ல் ₹1,12,835 ஆக இருந்த தனிநபர் வருமானம் 11.1 சதவிகித வளர்ச்சியுடன் உள்ளது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் 7.2% ஜி.டி.பி வளர்ச்சியுடன் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...