Wednesday, 27 March 2019

இந்தியா தன் அதிநவீன செயற்கை கோள் எம்சாட் என்பதை அடுத்தமாதம் 1ம் தேதி விண்ணுக்கு செலுத்துகின்றது, அது மிக நவீனமானது #29 செயற்கைகோளுடன் செலுத்தபடும் அந்த கோள் விண்ணில் 7563 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தபடும் இதில் இருந்து மிக நுட்பமாக விளக்கபடும்! #அதில் மிக மிக நவீன வசதிகள் உண்டு, நடமாட்டம் மட்டுமல்ல அது போக அணு ஆயுத ரகசியம், சிக்கல்

Courtesy Stanley Rajan

#பெரும் அறிவிப்பு என #மோடி சொன்ன விஷயம் இதுதான்!

#இந்தியா தன் அதிநவீன செயற்கை கோள் எம்சாட் என்பதை அடுத்தமாதம் 1ம் தேதி விண்ணுக்கு செலுத்துகின்றது, அது மிக நவீனமானது

#29 செயற்கைகோளுடன் செலுத்தபடும் அந்த கோள் விண்ணில் 7563 கிமீ தூரத்தில் நிலைநிறுத்தபடும் இதில் இருந்து மிக நுட்பமாக விளக்கபடும்!

#அதில் மிக மிக நவீன வசதிகள் உண்டு, நடமாட்டம் மட்டுமல்ல அது போக அணு ஆயுத ரகசியம், சிக்கல் என்றால் எலக்ட்ரானிஸ் விஷயங்களை கட்டுபடுத்தும் நுட்பம் என நிறைய உண்டு

#தீவிரவாதிகளின் தகவல் தொடர்பை இடைமறிப்பது, கோடிங் டிகோடிங்கை நொடியில் செய்வது என ஏக விஷயங்கள்!

#விமான கடத்தல் போன்ற விஷயங்களில் இது பெரும் கைகொடுக்கும், யுத்தம் என்றால் ஆயிரம் அலாவுதீன் பூதத்திற்கு சமம்!இதனால் இந்தியாவின் உளவுபார்க்கும் திறன் மட்டுமல்ல பாதுகாப்பும் பன்மடங்கு உயரும்!

#இப்படியான செயற்கோளை விண்ணில் நிறுத்தினால் எதிரி நாடு சும்மா இருக்குமா? இருக்கும் , எப்பொழுது இருக்குமென்றால் செயற்கைகோளை தகர்க்கும் ஏவுகனைகள் அந்நாட்டில் இருந்தால் இருக்கும் இல்லாவிட்டால் தகர்த்துவிடும்!

#அமெரிக்கா ரஷ்யா, சீனா என மூன்று நாடுகளிடமும் இது உண்டு விண்வெளி என்பது ஆதிக்கபோட்டி நடக்குமிடம், ஒரு செயற்கைகோளை தகர்க்க பல கட்டங்களை தாண்ட வேண்டும்!

#லேசர் போன்ற கதிர்களாலே ஏவுகனையினை பொசுக்கும் நுட்பமெல்லாம் அங்கு உண்டு, அதை எல்லாம் சமாளிக்கும் வண்ணம் ஏவுகனை செய்வது என்பது மகா சிக்கலானது விண்வெளியில் நடக்கும் சண்டை வெளிதெரியாது என்பதால் பல சொல்வதில்லை!

#பலமுறை அமெரிக்க செயற்கை கோள் ரஷ்யாவினை உளவுபார்க்கும் பொழுது ரஷ்யா இப்படி உடைத்திருக்கின்றது
அதைவிட முக்கியமாக விண்வெளியில் புல்டோசர் போல ஒன்றை சுற்றவைத்திருக்கின்றது ரஷ்யா!

#அதாவது ஒவ்வொரு நாடும் செயற்கைகோள் செலுத்தபடுவதால் அங்கும் குப்பை அதிகம் குப்பை செயற்கை கோளை உடைக்கின்றேன் என ரஷ்யா வைத்திருக்கும் அந்த புல்டோசர் பலமுறை அமெரிக்க உளவு செயற்கை கோளை உடைத்தும் தள்ளியிருக்கின்றன‌!

#இது போக செயற்கை கோளை தகர்க்கும் ஏவுகனைகளும் அவர்களிடம் உண்டு சமீபத்தில் அமெரிக்க உளவுசெயற்கை கோளை சீனா தகர்த்தது!

#தன் மிக அதிநவீன உளவு செயற்கை கோளை செலுத்தும் இந்தியா கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் இந்த ஏவுகனை சோதனை முடிவு இன்று அறிவிக்கபடுகின்றது!மிஷன் சக்தி எனும் அச்சோதனையில் அக்னி 5 ரக ஏவுகனை பயன்பட்டிருக்கலாம் என்கின்றார்கள்!

#சுருக்கமாக சொன்னால் தங்கம் வாங்குவது பெரிதல்ல அதை காக்க லாக்கர் வேண்டாமா? குறைந்தபட்சம் வெட்டரிவாளாவது வேண்டாமா?அதுதான் இது!

#நிச்சயம் இது மிகபெரிய விஷயம் இது, ராணுவத்திற்கான உளவு செயற்கைகோளை செலுத்துவதும் அதை காக்க செயற்கைகோளை தகர்க்கும் ஏவுகனையினை செலுத்துவதும் மாபெரும் விஷயம்!

#உலகில் நாம் 4ம் இடத்தில் இருக்கின்றோம் என்றாலும் இஸ்ரேலும் களத்தில் உண்டு
இந்தியா இதனால் உலகின் மிகபெரும் வலிமையான நாடாக மாறியிருக்கின்றது, மாபெரும் பாதுகாப்பினை தேசம் பெற்றிருக்கின்றது!

#இது நமது செயற்கைகோளுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல, இந்தியாவினை உளவு பார்த்து கொண்டிருக்கும் சீன அமெரிக்க செயற்கை கோள்களுக்குமான எச்சரிக்கையும் கூட‌!

#இதெல்லாம் 1980லே உலகிற்கு வந்துவிட்ட விஷயங்கள், அன்றே இந்தியா இதனை பெறவேண்டும் என இந்திராவும் கலாமும் கனவு கண்டனர்
அவர்கள் தொடங்கிய திட்டம் #மோடி காலத்தில் நடந்திருக்கின்றது!

#இந்திராவினையும் கலாமினையும் இந்த இடத்தில் நினைத்து பார்க்க வேண்டும்
அக்னி ஏவுகனைகளை மேம்படுத்திய அந்த டெய்சிதாமஸ் என்பவரும் மறக்கமுடியாதவர்!

#தேசம் மாபெரும் சாதனையினை செய்திருக்கின்றது காலத்தில் பெற வேண்டிய பெரும் பாதுகாப்பினை தேசம் பெற்றிருக்கின்றது

#அரசியல் தேர்தல்களை தாண்டி ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட வேண்டிய நேரமிது!

#பாரத் மாதா கி ஜே!💪💪💪

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...