Saturday, 10 November 2018

இதோ 2019 வரப்போகிறது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

இதோ 2019 வரப்போகிறது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

யாரை தேர்ந்தெடுப்பது? அது உங்கள் விருப்பம் .. ஆனால் நான் யாரை தேர்ந்தெடுக்க போகிறேன் எதற்காக இந்த முடிவெடுத்தேன்.

IIT, IIM, CA என்று படிக்கவில்லையென்றாலும் நானும் ஏதோ படித்தவன்தான். பொருளாதாரத்திலும், அரசியலிலும் சிறிது ஞானம் உள்ளவன்தான். இதையெல்லாம் தாண்டி இந்தியன் என்ற உணர்வு அதிகமுள்ளவன். அதனால் என்னாலேயே  இந்த முக்கியமான முடிவை எடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

என்னை பொறுத்தவரை  பொருளாதாரம், கட்டுமானம் , வெளியுறவு கொள்கை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, ஊழல் மற்றும் கறுப்புப்பணம் எதிர்ப்பு,   தவிர .... மோடி இல்லாவிட்டால் வேறு யார் என்ற 7 கேள்விகள் எனது மனதிற்குள் எழுந்து அதற்கான விடைகள் எனது முடிவை எடுக்க உதவியது.

பொருளாதாரம் :

மிகவும் பின்னால் போகவேண்டாம் 2004 - 2014 வருடத்திய பொருளாதார வளர்ச்சியும் 2014-18 இப்பொழுது உள்ள பொருளாதார வளர்ச்சியையும் பார்த்தாலே எந்த ஆட்சியில் பொருளாதாரம் நன்றாக வளர்ந்து இருக்கிறது என்று தெரிந்துவிடும்.

சென்ற UPA ஆட்சியில் 10 வருடங்களில் பொருளாதாரத்தில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருக்கலாம். GST , IBC (Insolvency and Bankruptcy Code ) போன்றவற்றை கொண்டு வந்திருந்தால் இந்நேரம் நமது பொருளாதாரம் இன்னும் நன்றாக வளர்ந்திருக்கும். ஆனால் டெல்லியில் கோலோச்சிக்கொண்டிருந்த லூட்டியங்களும் , கூட்டணிக்கட்சிகளும் எழுத்த இழுப்புக்கெல்லாம் சென்ற அரசாக தான் இருந்தது சென்ற UPA அரசு. மன்மோகன் சிங்கிற்கு தெரியாத பொருளாதாரமா? ஆனால் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையே. முடிவு எடுக்கும் அதிகாரம் சோனியா குடும்பத்தினரிடமும், அநத குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த பா சிதம்பரம் போன்றவர்களிடம் தானே இருந்தது. அவர்கள் கொள்ளையடிப்பதில் தானே முழுநேரமும் செலவிட்டார்கள்.

GST யை அமல் படுத்த நேரம் முடிவு செய்து அந்த நேரத்தில் அமல் படுத்திய இந்த அரசை பாராட்டியே ஆகவேண்டும். சிறு சிறு பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்பட்டு வரி வசூலில் சாதனை செய்துகொண்டிருக்கிறார்கள். மறைமுக வரிகள் நீக்கப்பட்டதால் , ஊழல் குறைந்து வணிகர்கள் தாங்களாகவே வரி தாக்கல் செய்ய வைத்துள்ளது இந்த அரசு.

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுபவர்களை கிடுக்கி பிடி போட்டு வசூல் செய்ய வகை செய்யும் IBC மசோதா / சட்டம் .. ஏமாற்றவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனம்.

கிட்டத்தட்ட 30 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பித்துக்கொடுத்து மானியத்தை அதில் நேரடியாக செலுத்தி ஊழல் எதுவும் நடைபெறாமல் தடுத்ததோடு மட்டுமில்லாமல் பல  ஆயிரம் கோடி ரூபாய்கள் சேமித்து இருக்கிறது.

இதையெல்லாம் விட சென்ற அரசு குப்பையாக மாற்றி வைத்த பொருளாதாரத்தையும் அதிகரித்துகொன்டே சென்று கொண்டிருந்த நிதி பற்றாக்குறையையும், பணவீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்து, ஊழல் மற்றும் செயல் இழந்த சென்ற UPA அரசு மீது நம்பிக்கையில்லாததால் முதலீடு செய்ய அயல்நாட்டு நிறுவனங்கள் தயங்கியதால் அதல பாதாளத்திற்கு சென்ற அந்நிய முதலீடு இந்த அரசின் செயல்பாட்டில் திருப்தியடைந்து இந்தியாவில் முதலீடு செய்ய ஆரம்பித்ததால்  , இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ளது.

எல்லோருக்கும் தெரிந்திருக்கும் .. இந்தியாவில் ஒரு சொத்து வாங்கவேண்டும் என்றால் அதன் விலை மூன்று பாகங்களாக பிரிக்கப்படும். 1. அந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 2. பதிவு கட்டணம் 3. கருப்பு பணம்

3 வது குறிப்பிட்ட காரணத்தினால்  ஒரு நிலத்தின் மதிப்பு அதன் உண்மையான மதிப்பை விட பல மடங்கு அதிகரித்தே இருந்துவந்தது. அது இப்பொழுது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு நிலத்தின் உண்மையான மதிப்பில் சொத்து வாங்க முடிவதால் சாமான்யனும்  வீடு நிலங்களில் வாங்க முடிகிறது.

இது எப்படி சாத்தியமாயிற்று ? இதற்க்கு முக்கிய காரணம் டெமோனிடைசேஷன். இன்னும் எதிர்க்கட்சிகளும், NGO க்களும் டெமோனிடைசேஷனை பற்றி குற்றம் சாரி வந்தாலும் கேலி செய்து வந்தாலும்,சாமானிய மக்கள் அதை ஆதரிக்கவே செய்கின்றனர்.

சென்ற UPA அரசில் வங்கிகள் வரைமுறை இல்லாமல் சரியான கோலேட்ரல் இல்லாமல் அரசியல் தலையீட்டாலும் அழுத்தத்தினாலும்  பலருக்கு கடன் கொடுத்ததினால் வராக்கடன் எல்லை மீறி போனது.. இந்த அரசு முடிந்த வரை அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல் வங்கிகள்  கடன் கொடுப்பதை சீரமைத்துள்ளது. இனி மேல் இது போன்று ஏமாற்றுவது மிகவும் கடினம்.

தடுப்பு மற்றும் சரி செய்யும் நடவடிக்கை 11 அரசு வங்கிகளில் எடுத்துவருகிறது இது மேலும் 6 வங்கிகளுக்கு விரிவாக்கப்படும்.

கடனை திருப்பி காட்டாமல் ஓடிப்போனவர்களை இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அமெரிக்காவின் வீண் ஜம்பத்தால் பல்வேறு நாடுகளின் டாலருக்கு நிகரான அவர்களது பணத்தின் மதிப்பு குறைந்தது. இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்தது. வரலாறு காணாத வீழ்ச்சி. கச்சா எண்னை விலை அதிகரித்தது. அதனால் இங்கும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது. வரலாறு காணாத ஏற்றம்.. இருந்தாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தால் வேறு எந்த பொருட்களின் விலையும்  ஏறவில்லை. பதுக்கல் காரர்களை ஒடுக்கியதால் டெமோனிடைசேஷனால் பல பதுக்கல்காரர்கள் பணத்தை இழந்து பதுக்கும் தொழிலை விட்டே ஓடியதால் ... பெட்ரோல் பொருட்களின் விலையேற்றம் வேறு பொருட்களின் விலையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.  UPA ஆட்சிக்காலத்தில் வெங்காயம், பூண்டு , தக்காளி , பருப்பு வகைகள் எல்லாமே மிக அதிகமான விலையில் விற்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்                  

வேறு நாடுகளுடன் பரிவர்த்தனைக்கு  டாலர் தான் உபயோகப்படுத்தி  வருகிறோம் அதையும் மாற்றி ஜப்பான் உட்பட சில நாடுகளுடன் நேரடியாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு (Infrastructure)
இதற்க்கு முந்திய அரசுகளை எடுத்துக்கொண்டால் உள்கட்டமைப்பில் இந்த அரசை போல வேகமாக வேறு எந்த அரசும் செய்யவில்லை என்று சொல்லலாம்.

சாலைகளாக இருக்கட்டும் , துறைமுகங்கள் மற்றும் கப்பல் சேவைகளாக இருக்கட்டும் விமான சேவைகளாக இருக்கட்டும், மின்சார துறையாக இருக்கட்டும் .. எல்லாவற்றிலும் இந்த அரசு அசுரவேகத்தில் பணியினை செய்துகொண்டு இருக்கிறது.

முந்தைய UPA அரசின் ஒரு நாளைக்கு 11 கிலோமீட்டர்கள் போடப்பட்டுக்கொண்டிருந்த நெடுஞ்சாலை துறை இந்த அரசில் 27 கிலோமீட்டர்கள் போட்டுகொண்டு இருக்கிறது ... வரப்பியும் நிதியாண்டு முடிவதற்குள் அது கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர்கள் என்று உயரும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. கான்ராக்ட் கொடுப்பது மட்டுமல்லாமல் கொடுத்த நேரத்திற்குள் எல்லா வேலைகளும் முடிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய சாதனை.

நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த பல துறைமுகங்கள் இப்பொழுது லாபத்தில் இயங்க துவங்கி இருக்கிறது.

நீர்வழி போக்குவரத்து கனவாகி இருந்த நேரத்தில் இந்த அரசு 4 வருடத்தில் அதை நினைவாக்கி இருக்கிறது.

ரயில்வே துறையை பொறுத்தவரை , சென்ற 10 வருட  UPA ஆட்சி காலத்தில் பல திட்டங்கள் போடப்பட்டது. பட்ஜெட்டில் பணம் ஒதுக்குவார்கள் .. ஆனால் ஒரு வேலையும் நடைபெறாது . 100 வருட பழமையான சிக்னல் முறையே பின்பற்றிக்கொண்டிருந்தோம். மிகவும் நெரிசலான டெல்லி கொல்கத்தா ரயில் பாதையை பற்றி கவலைப்படுவோர் யாருமில்லாமல் இருந்தது. வடகிழக்கு மாகாணங்கள் மற்ற மாநிலங்களுடன் ரயில் மூலம் நேரடியாக இணைக்கப்படாமல் இருந்தது. இவை எல்லாம் அவர்கள் பேசினார்கள் , பேசினார்கள் , பேசிக்கொண்டே இருந்தார்கள். அதை பேசி பேசி ஒட்டு வாங்கினார்கள். ஆனால் இந்த அரசு ரயில்வேக்கான  பட்ஜெட்டை மூன்று மடங்கு அதிகரித்து எல்லாவற்றையும் மாற்றியுள்ளது. இன்று 7 வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்கள் இணைக்கப்பட்டு விட்டது.

பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் ரயில்வே துறையில் அனுமதித்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் சிறந்த சேவையை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

வெளியுறவு துறை:

முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது. நமது குரலை செவிசாய்த்து உன்னிப்பாக உலக நாடுகள் கேட்கத்துவங்கியுள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளிலும் இப்பொழுது இரண்டே விதமான கட்சிகள்தான். இந்தியாவை (மோடியை) ஆதரிக்கும் கட்சிகள், இந்தியாவை (மோடியை) எதிர்க்கும் கட்சிகள்.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமேரிக்கா கொடுத்த அழுத்தத்தை எதிர்கொண்டதாகட்டும் , பல வழிகளில் சீனாவின் எதிர்ப்பை சமாளிப்பதாகட்டும், பாகிஸ்தானை எதிர்ப்பதிலாகட்டும்... ஜப்பான் , பிரெஞ்சு மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவிலாகட்டும் இந்தியாவின் வெளியுறவு துறை மிகவும் திறம்பட கையாண்டுகொண்டிருக்கிறது.

இதற்க்கு முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும்போது இந்த அரசின் செயல்பாடுகள் தீர்க்கமான முடிவோடு சரியான திசையிலேயே செல்வதாக கருதுகிறேன்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை:

இதை பற்றி பேசவேண்டுமானால்  அதற்க்கு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ வலிமையை மேம்படுத்துவதை பற்றி பேசவேண்டும்.

நக்சல் மாவோயிடுகளை ஒடுக்குவதிலாகட்டும், காஷ்மீர் விஷயத்திலாகட்டும் மற்ற அரசுகளோடு ஒப்பிடும்போது இந்த அரசு திறமையாகவே கையாண்டுகொண்டிருக்கிறது என்றாலும், இன்னும் அதிகமாக செய்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. அதுவும் காஷ்மீர் விஷயத்தில் செக்ஷன் 370 மற்றும் 35A வை றது செய்யாவிட்டால் என்ன நடவடிக்கை எடுத்தாலும் எந்த பிரயோஜனமும் இருக்காது என்பது என்னுடைய தீர்க்கமான எண்ணம் . இந்த விஷயத்தில் எனக்கு இந்த அரசிடம் சிறிது ஏமாற்றம் இருப்பது உண்மை.

ராணுவத்தை பொறுத்தவரை சென்ற அரசின் கையாலாகாத தனத்தால் தளவாடங்கள் விமானங்கள் கப்பல்கள் இல்லாமல் பலகீனமாக இருந்த நிலை மாறி , இப்பொழுது பலமான நிலைக்கு திரும்பியுள்ளது. ராணுவத்தின் துரித மற்றும் கடுமையான நடவடிக்கைகள் அதற்க்கு ஆளும் அரசின் ஆதரவையும்  கண்டு எதிரிகள் பயந்து போய் இருப்பது உண்மை.           

வேலைவாய்ப்பு :
இதை எப்படி கணக்கிடுவது? 2013 க்கு பிறகு புதியதாக PF ல் சேர்க்கப்பட்டவர்களை வைத்து கணக்கிடுவதா? புதியதாக தொழில் தொடங்கியவர்களை வைத்து கணக்கிடுவதா? எப்படி பார்த்தாலும் இந்த அரசு பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பது உண்மைதான்.

அரசு வேலை என்று எடுத்துக்கொண்டால் 60 வயது என்பது ஓய்வு பெரும் வயது. எவ்வளவு மெனெக்கிட்டாலும் அவ்வளவு ஓய்வு பெற்றவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக காலியான அரசு பணியிடத்தை நிரப்புவது மட்டுமே செய்யமுடியும். இதில் பெரிதாக எந்த அரசும் சாதித்துவிட முடியாது. ஆனால் தனியாகிற துறைகளை ஊக்குவிப்பது மூலம், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்து அதை வைத்து தொழில் தொடங்குவது மூலம் , சிறு குறு தொழில்கள் தொடங்க உதவுவது மூலம் அரசு பல கோடி வேலை வாய்ப்புகளை முருவாக்க முடியும். அதை தான் செய்திருக்கிறது இந்த அரசு.

முத்ரா திட்டத்தின் மூலம் 15 கோடி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கடன் கொடுத்து அவர்கள் தொழில் தொடங்க உதவியுள்ளது. மிகவும் மிக மிக குறைவாக 7 கோடி பேர் நன்றாக தொழில் செய்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் 7 கோடி ஒரே ஒருவருக்கு வேலை கொடுத்திருக்கார்கள் என்று வைத்துக்கொண்டாலும் 7 கோடி மொத்தம் 14 கோடி பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை தவிர புதியதாக PF ல் பதிந்துள்ளவர்கள் 1.5 கோடி பேர். ஆக மொத்தம் கிட்டத்தட்ட 14.5 கோடி வேலை வாய்ப்பை இந்த அரசு உருவாகியுள்ளது.

மேலும்:
இதையெல்லாம் தவிர வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா என்ற சுகாதார காப்பீடு அளித்தது ,  30 கோடி  பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் அளித்தது , இந்தியா முழுவதுள்ள மக்களுக்கு விபத்து மற்றும் உயிர் காப்பீடு அளித்தது, கிட்டத்தட்ட 75 லட்சம் கழிப்பறை காட்டிக்கொடுத்தது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இந்தியாவின் எல்லா இடத்திற்கும் மின்சார வசதி செய்து கொடுத்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாம் இந்த அரசு 4 வருடத்தில் செய்தது. இதற்க்கு முந்தைய அரசுகள் 60 வருடங்களாக செய்ய தவறியது.      

எதிர்க்கட்சிகள்,மேடைகளிலும் மீடியாவில் ட்விட்டரிலும் சொல்லும் நான்கே நான்கு குடைசாட்டுகளைதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 1. டெமோனிடைசேஷன் 2. GST யில் இருக்கும் பல சதவிகித வரிகள் 3. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு 4. மாட்டு வதைக்காக மக்களை தாக்குவது ...

டெமோனிடைசேஷனால் நேரடியாக பாதிக்கப்பட்டது பெரும் கருப்பு பண முதலாளிகளும் , பதுக்கல்காரர்களும்தான். பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை . அதனால் எனக்கு எதிர்க்கட்சிகள் கூற்றில் உடன்பாடில்லை. GST யை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சொல்வது வெச்சா குடுமி சரைச்சா மொட்டை போல  28 %  அதற்க்கு அடுத்து 0 % என்பது நகைப்பிற்கு உரியது. அரசிற்கு வருமானமே வரி மூலம் தான் என்னும்போது 28% வரி அதிகம் என்று உற்பத்தியாளர்களும் , மாநில அரசும் ( GST Council ) சொன்னால் நேரடியாக 0% கு தான் போகவேண்டும். அப்போகுது அரசின் வருவாய்க்கு என்ன செய்வார்கள்? முட்டாள்தனமான வாதம் எதிர்கட்சிகளுடையது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடையது .

பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் என்னை பொறுத்தவரை சரிதான். மக்களாகிய நமக்கும் இதில் பங்குண்டு .. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை நாமும் குறைத்துக்கொள்ளவேண்டும். இரு சக்கர வாகனங்களில் போக முடிந்த இடங்களுக்கு 4 சக்கர வாகனம் எதற்கு ? பேருந்து மின்சார ரயில் போன்றவற்றை உபயோக படுத்தவேண்டும் முடிந்த வரை.

பசு வதை தடுப்பு சட்டம் என்று இருக்கும் போது ... மாநில அரசுகள் அதை ஒழுங்காக அமல் படுத்தவேண்டும். மக்களை மக்களே துன்புறுத்துவதை நான் ஏற்கவில்லை .. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் பசு வதையையும், இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடுக்கவும் கடுமையான சட்டங்களை இயற்றி அதை சரியாக அமல்படுத்தி அதை தடுக்கவேண்டும். மறுபுறம் இந்த விஷயத்திற்காக  மக்களை மக்களே கொல்வதை தடுக்க கடுமையான சட்டமியற்றி அதை அமல்படுத்தவேண்டும்.

மோடி இல்லாவிட்டால் அடுத்தது யார்?:
இந்த கேள்வி அடுத்த தேர்தலில் வாக்களிக்க மேலே உள்ள காரணங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்பது என்னுடைய எண்ணம்.
ஒருவன் பணக்காரன் என்பதால் அவனுக்கு  பிரதமராகும் தகுதி வந்துவிடுமா? ஒருவனது  தந்தை பாட்டி போன்றவர்கள் பிரதமராக இருந்தார்கள் என்பதால் அவனுக்கு பிரதமராகும் தகுதி வந்துவிடுமா? அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்தான் ராகுல் காந்தி. நேரத்திற்கு தகுந்தாற்போல மாநிலத்திற்கு தகுந்தாற்போல , இதுவாகவும் , இஸ்லாமியனாகவும், கிருஸ்துவனாகவும் வேடம் போடுவதா தகுதி ? இந்தியாவை பற்றியும், நமது பண்பாடு கலாச்சாரத்தை பற்றி தெரியாதவர்தான் ராகுல்காந்தி . பதவிக்காக மக்களிடையே பிரிவினை உண்டாக்கி கொண்டிருப்பவர்தான் ராகுல்காந்தி. இவருக்கு துளியும் கிடையாது பிரதமராகும் தகுதி.
இவர் இல்லை என்றால் தான்தான் என்ற மமதை கொண்ட பிரிவினை எண்ணம் கொண்ட மம்தாவா? இவரால் மேற்குவங்கத்தையே சரியாக ஆள முடியவில்லை.. இவரால் மேற்குவங்கத்தையே முன்னேற்ற பாதையில் கொண்டு வர முடியவில்லை . இவரையா நான் தேர்ந்தெடுப்பேன்?
சந்திரபாபு நாயுடு ...... ம்ம்ம்ம்  .... இவருக்கு மற்ற எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து ஆதரவளித்தால் ..... ம்ம்ம்ம் ஊழலில் திளைப்பவர் ஆயிற்றே .. நேர்மையானவராக எனக்கு தெரியவில்லை. பதவிக்காக முன்னுக்கு பின் முரணாக பேசுபவர். நம்பிக்கை தன்மையற்றவர். மாட்டேன் இவருக்கும் போடமாட்டேன் ... பின்பு யார் இருக்கிறார்கள் .. மோடி இல்லையென்றால் அடுத்து ....

4-5% GDPஎன்று தள்ளாடி கொண்டிருந்த பொருளாதாரத்தை சரியாக்கி, அதற்கான கட்டமைப்பை வலுவாக்கி 7-8%  GDP கொண்டுவந்த மோடிக்கே 2019ல் எனது வாக்கு.

உலக அரங்கில் இந்தியாவிற்கு என்று ஒரு பெரும் மரியாதையை ஏற்படுத்தி கொடுத்த மோடிக்கே 2019ல் எனது வாக்கு.

உள்நாட்டு பாதுகாப்பையும் , ராணுவ பலத்தையும் அதிகரித்த மோடிக்கே 2019ல் எனது வாக்கு

சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக முத்ரா கடன் கொடுத்து பல பிற்படுத்தப்பட்டவர்களை முதலாளியாகிய மோடிக்கே 2019ல் எனது வாக்கு.

என் மனதில் எழுந்த 7 கேள்விகளுக்கும் கிடைத்த ஒரே விடை மோடி அதனால் அவருக்கே 2019ல் எனது வாக்கு.  

மோடிக்கு மாற்றாக வென்று அரசியவாதி வந்தால் பிறகு பார்க்கலாம்.

நான் முடிவெடுத்துவிட்டேன் .. நீங்கள் ?

SRK

இந்துக்களுக்கான முகநூல் குழு(Facebook Group) இ

*இந்து*
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
           சொந்தங்களே
இன்றைய கால சூழ்நிலையால் இந்துக்களின் மீதி தினிக்கபடும் அநீதிகளை பாமர *இந்து* மக்களுக்கு அறிய செய்ய உதவும் ஒரு சில முயற்சியாக.

இந்துக்களுக்கான முகநூல் குழு(Facebook Group) இயங்கிவறுகிறது.
Link 👇👇👇👇
https://www.facebook.com/groups/1646389372255720/

இந்துகளுக்காக இயங்கும் *YouTube* channel
Link 👇👇👇👇👇
https://www.youtube.com/channel/UCt34sjyRNu16Xv4VXNJYQJA

இந்துகளுக்காக இயங்கும்
Telegram group
இந்து
https://t.me/Hindutn

இந்துகளுக்காக இயங்கும் Facebook Page
https://www.facebook.com/ImTamilanda/

இந்துகளுக்காக இயங்கும் Hike
Group
Click link to join. https://hike.li/0wbWyQBygR
https://hike.app.link/5YgsuiKnhG

இந்த Linkஐ பயன்படுத்தி தாங்களை இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இணைந்த பின்பு குறைந்தது 100 நபர்களுக்காவது பகிரவும் .

இந்து ஒற்றுமையே வெல்க.....

சோதிடம் மக்களின் மனத்தில் செய்யும் பல விபரீதங்கள்

சோதிடம் மக்களின் மனத்தில் செய்யும் பல விபரீதங்கள்

திருச்சி ஶ்ரீரங்கம் பகவத் சந்நிதியில் தன் பெண் திருமணத்திற்கு அர்ச்சனை செய்த பின் ஒரு சேவார்த்தி

ஏங்க திருப்பட்டூர் எப்படிப் போகணும்
என கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு கேட்டார்

அடுத்து அங்கே போகனுமாம் பின் இன்னும் இரண்டு கோவில்கள் வரிசையாக அடுத்த அடுத்த பயணமாம்

இன்னொருவர்

ஏங்க சுக்கிர ப்ரீதி பண்ண சொல்லி சொன்னாங்க அதாவது ஶ்ரீரங்க பெருமாளுக்கு பட்டு சாத்தவும் நம்பெருமாளுக்கு பன்னெண்டு அடி மாலை சாத்தவும் சொன்னாங்க என்றார்

தற்செயலாக வந்த கோயில்அர்ச்சகர் தம்பி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு மதுரகவி நந்தவனம் என்ற இடத்திலிருந்து சாத்தாத வைணவர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலைதான் சாத்துவார்கள் மற்றபடி வெளியில் இருந்து நாம் பணம் கொடுத்து வாங்கி கொடுக்கும் மாலைகளை சாற்றுவது கிடையாது என சொன்னார்

அதே போல் வேறு ஒரு குடும்பம் அதன் தலைவர்

பெண்ணுக்கு நாகதோஷம் நம்பெருமாளுக்கு பணிவிடை செய்யற ஆதிசேஷனுக்கு பன்னிரெண்டு முட்டை வாங்கி வைக்க  சொல்றாங்க என கூறினார்

நான் மிரண்டு போய்

ஶ்ரீரங்கத்தில் இப்படியெல்லாம் செய்யமுடியாது என அவருக்கு புரியவைப்பதற்குள் பட்ட பாடு

பெருமாளே முடியலை

தெருவுக்கு நாலு ஜோசியக்கரர்கள்

படித்த மற்றும் பாமர ஜனங்களுக்கும் எதை தின்னா பித்தம் தெளியும் என்ற நிலையில்

அதை உபயோகப்படுத்தி பல ஜோதிடர்கள் ஆளுக்கொரு விதமாக இதுவரை கேட்டேயிராத பல பரிகாரங்கள் சொல்லுகிறார்கள்

தேங்காயில் விளக்கெண்ணெய் விளக்கு
பூசணிக்காயில் விளக்கு
வாழைப்பழத்துல விளக்கு என
சிறப்பு பரிகாரங்கள்

ஜோசியக்காரங்க எல்லாம் குடும்ப பரிகாரம் என பக்கம் பக்கமாக நோட்டு போட்டு எழுதி தர

நம்ம மக்களும் கர்ம சிரத்தையா அதை செஞ்சு முடிக்க கோவில் மற்றும் ஊர் ஊராக அலையறத பார்த்தால்

நாள் கிழமைகளில் ( வியாழன் வெள்ளி சனி என பல நாட்களிலும்)

பகவான் சந்நிதிகளில தாயார் சந்நிதியிலோ ஒரு ஈ காக்கா காணோம்

மொத்த கூட்டமும் அன்றய தினத்தில் நவக்கிரக சந்நிதில் அல்லது குடும்ப ஜோதிடர் பரிகாரம் செய்ய சொன்ன சன்னதிகளில் வரிசை கட்டி நிற்கிறார்கள்

எள்விளக்கு கொண்டகடலை மாலை எலுமிச்சை விளக்கு என ஒரே பரிகார அமர்க்களம்

ஜோதிடத்தில் பரிகாரம் என்ற ஒன்றே கிடையாது

பகவானை மட்டுமே நம்புங்கள் வாழ்வே நல்லவிதமான மாறும்

உதாரணமாக ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விளக்குகிறேன்

பாரதத்தில் பாண்டவரான சகாதேவன் கௌரவ மன்னன் துரியோதன் தன்னிடம் பாரதபோரில் பாண்டவர்களை ஜெயிக்க பூமி பூஜை போட நல்ல நாள் குறித்து தர கேட்டப்போது அருமையான நாளை குறித்து கொடுத்தான்

அதன்படி யுத்த நாள் பூஜை நடந்தால் கௌரவர்கள் வெற்றி உறுதி

அதை அறிந்த தர்மர் கேட்டாராம்

ஏன் சகாதேவா அப்படி ஒரு நல்ல  நாளை குறித்து கொடுத்தாய் அவன் நம் எதிரி அல்லவா என கேட்க

சகாதேவன் சொன்னாராம்

உண்மையை சொல்லுவது ஜோதிட தொழில் தர்மம் அதனால் எதிரியே கேட்டாலும் சரியானதை மட்டுமே குறித்து கொடுப்பேன் என்றாராம்

ஜோதிடம் என்பது உண்மைகளை மட்டுமே சொல்லுவது தவறாக வழிகாட்டுவதல்ல

உடனே தர்மன் பகவான் கிருஷ்ணனை சரணடைய

பகவான் கிருஷ்ணன் சகாதேவன் குறித்து கொடுத்த அந்த அமாவாசை நாளுக்கு முதல்நாளே அமாவாசை தர்ப்பணம் செய்ய தன் செய்கையால் குழம்பிய சூரியனையும் சந்திரனையும் ஒருவருக்கு ஒருவர் நேரே பார்க்க வைத்து கௌரவர்களை குழப்பி விட்டு அமாவாசை இல்லா நாளில் பூஜையை போட வைத்து வெற்றியை பாண்டவர்கள் பக்கம் திருப்பினாராம்

நண்பர்களே அன்பர்களே பகவான் நினைத்தால் யார் வாழ்விலும் எத்தகைய நிலையிலும் எப்படிப்பட்ட மாற்றமும் நடக்கும்

தேவை பகவான் மேல் முழு நம்பிக்கையும் உண்மையான பக்தியும்

தினமும் உங்கள் வீட்டில் பெருமாள் சன்னதியில் காலை மாலை என நல்லெண்ணை விளக்கேற்றுங்கள்

முக்கியமாக உங்கள் குடும்ப குல தெய்வத்தை தினமும் வணங்குங்கள்

ப்ரபந்தம் திருப்பாவை என எது தெரியுமோ அதில் குறைந்தது நாலு பாசுரங்கள் சொல்லுங்கள் இல்லை உங்களுக்கு பிடித்த தேவாரம் திருவாசகம் என சொல்லுங்கள்

குழந்தைகளை பகவத் நாமாக்களை சொல்ல சொல்லுங்கள்

ஆத்மார்த்தமாக பகவானை வணங்குங்கள்

இல்லத்தின் அருகில் உள்ள ஒரு பகவத் கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் பகவானை மனமாற சேவியுங்கள்

பிறருக்கு நல்லதை நினையுங்கள்
நல்லதையே பேசுங்கள்

பகவானை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் அவர் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைக்கிறார்

எதற்க்கும்  நாம் கவலைப்பட தேவையில்லை

அரிய பிறப்பு மானிடபிறவி

பகவானை வணங்கி அனைத்தும் பெறலாம்

ஜோசியத்தை நம்புங்கள் ஆனால் பரிகாரம் சொல்லும் எந்த ஜோதிடர்களையும் அல்ல

பகவான் இருக்கிறான் நம்மை காப்பாற்ற

நாம் பகவானின் குழந்தைகள்

நம்மை கஷ்டப்பட வைத்து அவர் மகிழ்வாரா எனவே யாரும் எதற்க்கும் கலங்கமடைய வேண்டாம்

பகவான் கொடுக்க நினைப்பதை எந்த கிரகங்களாலும் அல்லது யாராலும் தடுக்க முடியாது கொடுக்க நினையாததை எந்த கிரஹங்களாலும் அல்லது யாராலும்  கொடுக்க முடியாது எனவே

பரிகாரங்கள் என பணத்தை நேரத்தை வீணாக்காமல் பகவானை மட்டுமே வணங்குங்கள் வெற்றி தானாக வரும்

ஜெய் ஶ்ரீராம்!

100 வருடங்கள் ஆனாலும் மறக்க மாட்டோம் உங்களின் சரித்திர சாதனையை!!

100 வருடங்கள் ஆனாலும் மறக்க மாட்டோம் உங்களின் சரித்திர சாதனையை!!

பல கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணிகளை எங்கள் மாவட்டத்திற்க்கு கொண்டு வந்தீர்கள்!!

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததால் பல பொய் வழக்குகளை சந்தித்தீர்கள்!!

சுயநலவாத சட்டமன்ற உறுப்பினர்களால் பல பொய் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது!!

முட்டாள் கூட்டங்களால் மாவட்டம் முழுவதும்  பொய் பிரசாரம் செய்யப்பட்டது!!

இந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து கொண்டு!!

எதிர்த்தவர்களை எல்லாம் குடும்பத்தோடு வருகை தர அழைப்பு விடுத்து கொண்டு!!

குமரி மாவட்ட பாஜக தொண்டர்களாகிய எங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக!!

கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க!!

உங்கள் தலைமையில் நாளை (10-11-2018) மார்த்தாண்டம் மேம்பாலம் (மாலை 4 மணி முதல் 7 மணி வரை) மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுவதை நினைத்து பெருமை கொள்கிறோம்..

குமரி மாவட்ட இளைஞர்களாக!! உங்களுக்கு  வாக்களித்த வாக்காளர்களாக!! பாஜகவின் தொண்டர்களாக!!

மீண்டும் நாங்கள் தயார் எங்கள் பொன் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுப்பதற்க்கு!!

எங்கள் வாக்கு தாமரைக்கு!! எங்கள் மாவட்ட வளர்ச்சிக்காக!! எங்கள் அன்பு தலைவர் பொன்னாருக்காக!!

இந்துக்களுக்கான வரலாற்று மாத இதழ்.*

*இந்துக்களுக்கான வரலாற்று மாத இதழ்.*

*இந்து மதத்திற்கான உலகின் முதல் வரலாற்று மாத இதழ்.*

*கிருத்துவனுக்கான வரலாறு கிருத்துவனிடம் உள்ளது.*

*இஸ்லாமியன் வரலாறு இஸ்லாமியனிடம் உள்ளது.*

*இந்துக்களுக்கான வரலாறு இந்துக்களிடம் உள்ளதா.?*

*சாமியை சிலையாக காண்கிறோம் அந்தச் சிலையின் சக்தி என்னவென்று இந்துக்களுக்கு தெரியுமா.?*

*இந்து ஆன்மீகம் தெரியும் இந்து ஆன்மீகத்தில் உள்ள அறிவியல் தெரியுமா.?*

*இந்துக்கள் பயன்படுத்தியது சந்திர நாட்காட்டியா?சூரிய நாட்காட்டியா?நட்சத்தெ நாட்காட்டியா?அல்லது காலநிலை நாட்காட்டியா?எந்த நாட்காட்டி என்று தெரியுமா.?*

*இந்துக்களின் வணிக முறை பற்றி தெரியுமா.?*

*இந்துக்களின் நீரியல் மேலாண்மை குறித்து தெரியுமா.?*

*உலகில் முதன் முதலில் தோன்றிய நாடு இந்தியா என்ற வரலாறு தெரியுமா.?*

*உலகின் முதல் மனிதன் இந்து என்ற வரலாறு தெரியுமா?.*

*மேற்கூறிய வரலாறு இந்துக்களுக்கு  தெரியாமல்  எப்படி இந்துக்களை இந்துக்களாக ஒருங்கிணைக்க முடியும்.?*

*மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் இவ்விதழில் வெளிவரும்.*

*இந்துக்களின் வரலாற்றை இந்துக்களுக்கு கொண்டு செல்லும் உலகின் முதல் இந்து வரலாற்று மாத இதழ்.?*

*சங்கம் என்பது சங்கிகளின் கூடாரம்(அங்கி,லுங்கிகளின் கூடாரம் அல்ல) சங்கம் வைத்து ஆன்மிக நெறி வளர்த்தோம் ஆகையால் இந்து சங்கம் என்ற மாத இதழ் 01.12.2018 அன்று வெளி வருகிறது இவ்விதழின் விலை 20 ரூபாய் இது ஒரு வண்ண இதழாகும் வருட சந்தா 300 ரூபாயாகும் இவ்விதழ் இந்துக்களின் பொக்கிசமாகும்,இவ்விதழை ஒவ்வொரு இந்துவும் வாங்கிப் படித்து  பயனடையாவும் மற்றவருக்கும் வாங்கிக் கொடுக்கவும்.*

*இந்து சங்கம் மாத இதழுக்கு மாவட்டம்,நகரம் வாரியாக டீலர்கள் அனுகலாம்.*

*விளம்பரங்கள் வரவேற்க்கப்படுகிறது.*
*இவ்விதழுக்கு நன்கொடையும் வரவேற்க்கப்படுகிறது.*
*சமஸ்கிருதம்,இந்தி,ஆங்கிலத்தில் இவ்விதழ் வேண்டுவோர் 1000 இதழுக்கு குறையாமல் முன்பதிவு செய்ய வேண்டும்.*

*கீழ்க்காணும் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தி விட்டு,கீழ்க்காணும் மின்னஞ்சலில் உங்கள் விலாசத்தை அனுப்பவும்.*

*V.parameswaran.*
*A/C.NO:6278882072*
*IFSC.CODE:idib000s082*
*BANk:Indian bank.*
*BRANCH:saligaramam*
*chennai.600093.*

*தொடர்புக்கு.*
*வ.சிவாஜி.*
*வரலாற்று ஆய்வாளர்.*
*நிர்வாக ஆசிரியர்.*
*+917867890890.*
*hindusangampress@gmail.com.*

100 வருடங்கள் ஆனாலும் மறக்க மாட்டோம் உங்களின் சரித்திர சாதனையை!!

100 வருடங்கள் ஆனாலும் மறக்க மாட்டோம் உங்களின் சரித்திர சாதனையை!!

பல கோடி ரூபாய்க்கான வளர்ச்சி பணிகளை எங்கள் மாவட்டத்திற்க்கு கொண்டு வந்தீர்கள்!!

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்ததால் பல பொய் வழக்குகளை சந்தித்தீர்கள்!!

சுயநலவாத சட்டமன்ற உறுப்பினர்களால் பல பொய் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது!!

முட்டாள் கூட்டங்களால் மாவட்டம் முழுவதும்  பொய் பிரசாரம் செய்யப்பட்டது!!

இந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து கொண்டு!!

எதிர்த்தவர்களை எல்லாம் குடும்பத்தோடு வருகை தர அழைப்பு விடுத்து கொண்டு!!

குமரி மாவட்ட பாஜக தொண்டர்களாகிய எங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக!!

கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க!!

உங்கள் தலைமையில் நாளை (10-11-2018) மார்த்தாண்டம் மேம்பாலம் (மாலை 4 மணி முதல் 7 மணி வரை) மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படுவதை நினைத்து பெருமை கொள்கிறோம்..

குமரி மாவட்ட இளைஞர்களாக!! உங்களுக்கு  வாக்களித்த வாக்காளர்களாக!! பாஜகவின் தொண்டர்களாக!!

மீண்டும் நாங்கள் தயார் எங்கள் பொன் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுப்பதற்க்கு!!

எங்கள் வாக்கு தாமரைக்கு!! எங்கள் மாவட்ட வளர்ச்சிக்காக!! எங்கள் அன்பு தலைவர் பொன்னாருக்காக!!

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...