*சபரிமலை_ஓரு_வித்தியாசாமான_வழிபாட்டுஸ்தலம்*
***Saparimala History****
*ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்? தகவல்களை தொகுத்து இருக்கிறேன்.*
*1. உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும் சுமார் 40-50 மில்லியன் பக்தர்களை கொண்டு மெக்கா விற்கு அடுத்த படியாக அதிகம் பயணப்படுகிற இடம் சபரிமலை.*
*2. சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக பார்க்கப்படுகிற புண்ணிய கோவில் சபரிமலை*
*3. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற மதுரை ராஜசேகர பாண்டிய மன்னர் திருவிதாங்கூர் மன்னனால் உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி செய்தான். அவனின் வளர்ப்பு மகனே ஐயப்பன் (1194AD)*
*4. மதுரை ராஜசேகர பாண்டியன் பம்பை நதிக்கரையில் வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள் அவதாரமே குழந்தை மணிகண்டன் (ஐயப்பன்).*
*5. 12 வயது வரை மணிகண்டன் மனித உருவமாக வளர்ந்து தன அவதார நோக்கம் முடிந்த உடன் தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை.*
*6. பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும் சபரிமலை செல்வதில்லை. தன் தந்தை மதுரை ராஜசேகர பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு எந்தித்துவிடுவாரோ என்று அவர் கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.*
*7. பந்தள மன்னர் மதுரை ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண பெட்டி.. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை, வாள், மாலை போன்றவை உள்ளன.. ஓலை சுவடிகளை இன்றும் காணலாம்.*
*8. மதுரை ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் ஐயப்பனை கொண்டு வர சொன்னபோது இரண்டு முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.*
*9. இந்தியாவில் கோவில் வளாகத்தில் (சன்னிதானத்தில்) அரேபிய முஸ்லிம் வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது சபரிமலையில் மட்டுமே.. வாவர் ஐயப்பனின் நெருங்கிய நண்பர்.. இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு.*
*10. ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே நடை அடைப்பில் ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது. இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துரார்.இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி*
*11. Memoir of the survey of Travancore and Cochin states என்ற ஆங்கிலேயர் 1894 ல் எழுதிய புத்தகத்தில் சபரிமலைக்கு செல்வோர் அப்போதே ஆண்டு தோறும் 15000 என்று குறிப்பிட்டு இருக்கிறார். அப்போதைய மக்கள்தொகை தென் இந்தியாவில் 5 கோடிக்கும் கீழ்.*
*12. பரசுராமரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஐயப்பன் சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. இன்று அந்த சிலை உருக்கபட்டு கோவில் மணியாக கொடி மரம் அருகே காட்சி அளிக்கிறது.*
*13. தீவிபத்தை தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் மதுரை நவாப் ராஜமாணிக்கமும், பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியால் செய்யப்பட்டது.*
*14. கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ, முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால் கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’ என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம் செய்யப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும் என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு.*
*15. Kamakhya Temple (Guwahati, Assam), Lord Kartikeya Temple (Pehowa, Haryana and in Pushkar, Rajasthan) Haji Ali Dargah (Mumbai, Maharashtra) Mangal Chandi Temple, (Bokaro, Jharkhand) Sree Padmanabhaswamy Temple (Malayinkeezhu, Kerala) Patbausi Satra (Barpeta, Assam) Jain Temple (Ranakpur, Rajasthan) போன்ற கோவில்களை போல சபரிமலையும் பெண்களை அனுமதிப்பதில்லை.*
*16. ஐயப்பனை சாஸ்தாவாக வழிபடும் முறை தமிழகத்தில் இருப்பதே. முக்கியமாக தென் மாவட்டங்களில் அய்யனார் வழிபாடு மிக பிரபலம். அதில் ஆதி சாஸ்தாவாக காட்சி அளிக்கும் இடமே சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம்,*
*17. விரத முறையில் உணவை உண்டு அன்னதானம் செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில் மட்டுமே. மற்ற முறைகளில் விரதம் என்றால் உணவை உட்கொள்ளாமல் இருப்பது.*
*18. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் அதிகாரி,பாமரன் என பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே சபரிமலையின் தனிச்சிறப்பு.*
*19. 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை சபரிமலை யாத்திரையில் மட்டுமே காணப்பட கூடிய ஒன்று. வேறு எந்த கோவிலிலும் காண முடியாத கடுமையான விரத முறை.*
*20. அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும் அபாயத்திற்கு மத்தியில் நடைபயனமாக 60 கிலோ மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மட்டுமே.*
*21. கேரள கட்டுமான முறையையும் தமிழ்நாட்டின் சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின் ஒற்றுமை சின்னமாக இருப்பது சபரிமலையே.
*22. மணிகண்டன் கல்வியை குருவிடம் தான் பயில வேண்டும் என்று ஆசைப்பட்ட மதுரை ராஜசேகர பாண்டியனின் ஆசையே இன்று குரு தத்துவமாக குருசாமியாக ஐயப்ப யாத்திரையில் இருக்கிற வழக்கம்.. தன்னை காண வேணுமெனில் குரு மூலமாகத் தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன்*
*23. மற்ற கோவில்களை போல் தினமும் அல்லாமல் ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக நடை திறந்து இருக்கும் கோவில் சபரிமலையே*
*24. சபரிமலை யாத்திரையை தமிழக மக்களிடையே மிகவும் பிரபல படுத்தியவர் நவாப் ராஜ மாணிக்கம். பாடல்கள் மூலம் பிரபலபடுத்தியவர்கள் வீரமணி சோமு மற்றும் அவர் தம்பி கே வீரமணி.*
*25. இன்று போல் அடர்ந்த காட்டில் சாலை,ஹோட்டல்கள் இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக உணவும் பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக இருந்தவர் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணி்யம்.*
*26. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் வாவர் மசூதிக்கு சென்று வாவரை வணங்குவது வழக்கம். அதன் பிறகே பெருவழியில் நுழைகின்றனர். எந்த இந்து கோவிலிலும் இல்லாத இந்த முறை சபரிமலையை தனித்துவமாக காட்டுகிறது.*
*27. சபரிமலைக்கு மற்ற கோவில்களை போல் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம் இல்லை. ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியாலும் அதன் சக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் அதன் சைதன்யம் கூடிக்கொண்டே செல்வதாக நம்பப்படுகிறது.*
*28. பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் மதுரை ராஜசேகர பாண்டியன்.*
*29. சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.*
*30. சபரிமலையில் மாளிகைபுறத்து அம்மன் சன்னதி என்பது ஐயப்பன் வதம் செய்த பெண் மகிஷியின் தூய்மை வடிவமே. வதம் செய்த பிறகு ஐயப்பன் தன்னை மணந்து கொள்ள விருப்பம் சொன்ன போது “என் அருகிலேயே நீ இருக்கலாம் என்றும் எப்போது என்னை ஒரு கன்னிசாமியாவது வராமல் இருக்கிறாரோ அன்று உன்னை மணந்து கொள்கிறேன்” என்று கூறியவன் பிர்மச்சர்யம் கொண்ட ஐயப்பன்.. அந்த மாளிகைபுரத்து அம்மன் இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறாள்.. ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். இறைவன் அருள் புரியட்டும்…!* வணக்கம்_நட்பே.
Om namasivaya 🕉🕉🕉🙏 *#வாழ்க_வளமுடன்.*
This comment has been removed by the author.
ReplyDelete