Thursday, 27 December 2018

இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ! . .

இஸ்லாமின் சாதிப் பட்டியல் இதோ!
.
.
‘Social Stratification Among Muslim – Hindu Community’ என்ற நூலில் A. F. இமாம் அலி என்பவர் கூறுகிறார்:-
முகமதியர் ஆட்சிக் காலத்திலேயே, முகமதிய சமூகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது.
1. உயர்சாதி முகமதியர்கள்.
2. வீட்டுவேலை செய்பவர் மற்றும் அடிமைகள்
3. பொது ஜனங்கள், மற்றவர்கள்
உயர்சாதி முகமதியர்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகின்றனர்:-
1. அஹல் இ. தெளலத்: ஆளுகின்ற வர்க்கத்தினர். இதில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.
2. அஹல் இ. சஅதாத்:- அறிவுஜீவி வர்க்கத்தினர். இதில் இறையியல், நீதித்துறை, மதகுருமார்கள், சையது முதலியோர், கவிஞர்கள், எழுத்தாளர்கள் அடங்குவர்.
3. அஹல் இ. மூராத்:- மகிழ்ச்சியூட்டும் வர்க்கத்தினர், இசை வல்லுனர்கள், நாட்டிய வல்லுநர்கள் முதலியோர் அடங்குவர்.
இவர்களுக்குள் உள்ள சாதிச் சண்டைகள் இன்றும் இஸ்லாமிய நாடுகளிலேயே காணலாம். மேலும் பல பிரபலமான பிரிவுகள் உள்ளன. அவைகளை Caste and Social Stratificationa Among Muslim in India என்ற நூலில் இம்தியாஸ் அகமத் என்பவர் கூறுகிறார்:-
1. கன்னிகள்:- ஹனபீ, ஷாபீயீ, மாலிதீ, ஹம்பல் பிரிவுகள், இமாம் ஜாஃபர்தூஸி (தபிஸ்தான் என்ற நூலில் குறிப்பிட்டபடி)
கன்னிகளுக்குள் 65 பிரிவுகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுகிறது. இன்றும் இந்நான்கு பிரிவுகளில் பல உட்பிரிவுகள் உள்ளன.
2. ஷியாக்கள்:- ஜைதிய்யா, இஸ்மாயீலி/சபியுன், அஸ்னா
அஷ்ரிய்யா/இமாமீயா/கைஸானியா/ஹாஸிமீயா, காலியா/குல்லத் இவ்வைந்து பிரிவுகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன.
3. காரிஜிக்கள் (வெளியேறிவிட்டோர்)
4. முஃதஸிலா ( நடுநிலையாளர்)
5. முர்ஜிகள் (தாமதப்படுத்துவோர்)
6. வஹாபிகள் (அடிப்படைவாத பிரிவுகள் பல உண்டு)
7. பஹாவீ
8. ஸனூஸி
9. கைதியானி
10. அஹ்மதியா
11. ஸீபிகள்இதைத்தவிர ரவாண்டிகள் (பிறவி சுழற்சி கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்கள்) ஸஃபித்ஜாமகன் (கடவுள் மனித உருவில் அவதாரம் எடுத்தார் என்ற கோட்பாடு கொண்டவர்கள்)
ரெளஸேனியர்கள், அக்பாரிகள், க்வாஜாரிகள் (அஜாரிகா, இபாதியா, நேஜ்தட் அஜாரியா, அஜ்ரிதா, ஸூஃபாருஜ் ஜியாதியா பிரிவுகள் உள்பட). பாபிக்கள் முதலிய பிரிவுகள்.
இந்தியாவிலேயே மதமாறிய முஸ்லிம்கள் பல மாநிலங்களில் OBC பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அச்சாதியினர் பின்வருமாறு:
1. ஆந்திரா – மஹாதர்
2. அஸ்ஸாம் – மைமால் (மீன்பிடிப்பவர்) மணிப்பூர் முஸ்லிம்கள்.
3. பீஹார் – பதியரா, சிக், தஃலாங்கே, தஃபாலே, ஃபகீர், கதிஹர், ஹீமா, கரஞ்சியா, துஸ்ஸ ¡ர், தர்ஜி, கஸாய், பங்கி, மதாரி, மிரியாஸின், மர்ஸிகா, மோமின், முக்ரோ, நட், பமானியா, ரங்ரீஜ், சாயி, தாகுரை.
4. குஜராத் – பஃவான், தேஃபர், ஃபகீர், கதாய், கலியவா, கஞ்சி, ஹிங்கோரா, ஜட், தாரி, ஹ லாரிகாத்தி, தர்பன், மக்ரானி, மெளசாரி, குரேஸி, மியானா, மீர், மிராசி, பஞ்சார ¡, சந்தி, பத்னி, ஜாமாத், துர்க், ஜமாத், தேபா, வாகேவ்
5. ஜம்மு-காஷ்மீர் – பட், தார், தூம், தூமா, ஹஜ்ஜன், ஜூலாஹா, லோஹர், லோனே, குல்ஃபகீர், கும்ஹார், மோசி, தேலி, நல்பந்த்
6. கர்நாடகம் – அன்சாரி, ஜூலாய், தம்போரி, யேரி, சஃபார்பந்தி, தர்ஜி, தோபி, ஃபகீர், தகராஸ், ஜர்கள்
7. கேரளம் – மோப்ளா (மாப்பிள்ளை)
8. பஞ்சாப் – பகிர், மேகாதி
9. ராஜஸ்தான் – ஜூலாஹா
10. உத்திரபிரதேசம் – அன்சாரி, கஸாப், பஞ்சாரா, காயஸ்தா
11. மேற்கு வங்காளம்- அன்சாரி, பகிர், சைன்
மேற்கண்ட உதாரணங்கள் எதைக்காட்டுகின்றன?
இஸ்லாமிலும் சாதிகள் உண்டு என்பதைத்தானே! இந்த சாதிகள் பற்றி ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் வீரமணிக்கும் தெரியாதா? தெரியாது என்று இவர்கள் சுலபமாகப் பொய் சொல்லிவிடுவார்கள். அதனால் இவர்களுக்கு தெரிந்த மாதிரி மேலும் ஓர் ஆதாரத்தை நாம் காட்டலாம்.இஸ்லாமின் சாதிப் பற்றி அம்பேத்கர்!
அம்பேத்கர்
ஈ.வே. ராமசாமி நாயக்கரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாயணத்தின் இருபக்கங்கள் என்று சொல்கின்றார்களே, அந்த ஒரு நாணயத்தின் ஒரு பக்கமான டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-
”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர். 1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.
அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.
மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.
சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.
I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:
1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்
II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.
2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்
3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி
4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா
III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”
மேலும் இஸ்லாமியர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ள பஞ்சாயத்து முறையைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறுவதாவது:-
”பஞ்சாயத்தின் அதிகாரம் சமூக விஷயங்களில் மட்டுமன்று வாணிகம் முதலான விஷயங்களிலும் செல்லுபடியாகும். இதர பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. பஞ்சாயத்து இதில் மிகுந்த கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறது. இதன் விளைவாக இந்துக்களைப் போன்றே முஸ்லிம் பிரிவினரும் மிகப்பல சந்தர்ப்பங்களில் அகமணக் கட்டுப்பாட்டுக்கு மிகக் கண்டிப்பான முறையில் உட்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்பு மணத்தடை முஸ்லிம்களில் மேல்தட்டுப் பிரிவினருக்கும் அதே போன்று கீழ்த்தட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒரு துமா இன்னொரு துமாவைத் தவிர வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இந்த விதி மீறப்படுமாயின் அவ்வாறு மீறும் குற்றவாளி உடனே வலுக்கட்டாயமாக பஞ்சாயத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறான். அவன் அவமானப்படுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டு அவனது சமூகத்தில் இருந்து வெளியேற்றபடுகிறான்; இத்தகையப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் சாதாரணமாக இன்னொரு பிரிவில் தன்னை இணைத்துக் கொள்ளமுடியாது; அவன் தனது வகுப்புக்குரிய தொழிலை கைவிட்டு, பிழைப்புக்காக வேறொரு தொழிலைக் கைக்கொண்டாலும், அவன் எந்த வகுப்பில் பிறந்தானோ அந்த வகுப்புக்குரிய சுட்டுப் பெயருடன்தான் இந்த சமுதாயத்தில் அவன் நடமாட முடியும். ஜொலாஹாக்கள் என்ற பதம் கசாப்புக்கடைக்காரர்களைக் குறிக்கும்; இவர்களில் ஆயிரக்கணக்கானோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டபோதிலும் இன்னமும் ஜொலாஹாக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.”இந்தியாவின் இதர மாகாணங்களிலும் இதே போன்ற நிலையே நிலவுகிறது. இது சம்பந்தமான விவரங்களை அந்தந்த மாகாணங்களின் குடி மதிப்புக்கணக்கு அறிக்கைகளில் காணலாம். ஆர்வமுள்ளவர்கள் அவற்றைப் படிக்கலாம். இது எப்படியிருப்பினும் வங்காளம் நமக்கு என்ன உண்மையைப் புலப்படுத்துகிறது? முகமதியர்கள் சாதிமுறையைப் பின்பற்றுவதோடு தீண்டாமையும் கைக்கொள்கின்றனர் என்பதையே அது காட்டுகிறது.
ஆக, இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத் தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக்கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கம் இடமில்லை. இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்தும் தீமைகளையும் வரிந்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லிம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.”
குடிமதிப்புக் கணக்குக் கண்காணிப்பாளர் கூறியதாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகின்ற இந்த இஸ்லாமிய சாதிகள் கூட ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும், வீரமணிக்கும் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இஸ்லாமில் சாதி இல்லை என்று இவர்கள் மறுபடியும், மறுபடியும் பொய் சொல்வதற்குக் காரணமென்ன?
ஒன்று இஸ்லாமில் உள்ள சாதிகளை மூடிமறைத்து அம்மதத்துக்கும் இந்துக்களை மதமாற்ற உதவி செய்வதன் மூலம் இஸ்லாமியர்களிடமிருந்து தங்கள் அமைப்புக்கு பணம் பெறுவது.
இரண்டாவது, இஸ்லாமியர்களை விமர்சித்தால் தம் உயிருக்கு பாதகம் எற்படும் என்ற பயம்.
மூன்றாவது தங்களுடைய கருத்துக்கு எப்பொழுதும் யாராளும் மறுப்பு சொல்ல முடியாது என்ற ஆணவம்.
இவைகள்தான் காரணமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறதல்லவா! உண்மைகள் அவர்களுக்கே வெளிச்சம்!
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பொய் ஒரு புறமிருக்கட்டும். வீரமணி என்ன சொல்கிறார்? இந்து மதத்தைத் தவிர வேறுமதத்தில் சாதி இல்லையாம். இஸ்லாமிலே சாதி இருக்கின்றது என்று பார்த்தோம். அடுத்து இவருடைய தந்தை? ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதை கவனியுங்கள்:-
பிரத்தியட்சத்தில் பறைக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன். (குடியரசு 02-08-1931)
தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும், ஜெயின் மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை. கிருத்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை (குடியரசு 19-01-1936)
இதிலிருந்து தெரிவதென்ன?கிறிஸ்துவ மதத்திலும், பவுத்த மதத்திலும், ஜைனமதத்திலும் தீண்டாமையிருக்கிறது என்பது தானே? வீரமணியுடைய தந்தைக்கு பல மதங்களில் உள்ள தீண்டாமை தெரிகின்றது. ஆனால் பிள்ளைக்கு தெரியவில்லை. இதில் யார் உண்மையை சொல்லியிருக்கின்றனர்?
ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொன்னதில் தீண்டாமைதானே தவிர சாதி இல்லை என்று வாதிடலாம். ஆனால் சாதி இருப்பதால்தான் தீண்டாமையே இருக்கின்றது என்று இவர்கள்தான் சொல்லி வருகின்றனர். அதனால் தீண்டாமை இருக்கின்றது என்று சொன்னால் அங்கு சாதியிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் வீரமணி சொல்வது அப்பட்டமான பொய் என்பது தெளிவாகும். ஆனால் பொய் சொல்லி ஏமாற்றி திரியும் இவர்கள் பண்பாடுமிக்கவர்களாம்! இவர்களுடைய இதழுக்கு பெயர் ”உண்மை”யாம்! அதைவிட ”பொய்மை” என்று வைத்திருக்கலாம் அல்லவா!

இது தான் கலிகாலமா?

Modi Rajyam on Facebook:

இது தான் கலிகாலமா?

தமிழகத்தின் முதல் அமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம்.

காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே மதுரைக்குச் சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார்.

மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்.

அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார்.

'' அப்போ..நான் வர்றேன்.. உடம்பை நல்லாப் பார்த்துக்க''

கிளம்பிய போது உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார்.

'' ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ''

''வேண்டாம்மா'' -

என்று முதலில் மறுத்தவர்

'' சரி..சரி.. எடுத்து வைங்க''-அடுக்களைக்குள் சென்று தரையில் உட்கார்ந்தார்.

அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள்.

அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அம்மாவைப் பார்த்துக் கைகூப்பினார் காமராஜர்.

'' அப்போ நான் வரட்டுமா?''

சொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தாயாரின் இறுதிக்காலத்தில் காமராஜர் சாப்பிட்டதாக இது குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் சாவி.

'' மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார். பல்லக்குக் கட்டுகிறவர் இலவசமாகக் கட்டித் தருகிறார்.

வந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை; பணமும் இல்லை; பத்து வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன்! பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி!''

- என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்தபோது எழுதினார் கவிஞர் கண்ணதாசன். 

விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீட்டை- இந்திரா காந்தியிலிருந்து, லால்பகதூர் சாஸ்திரி வரை பலரும் வந்திருக்கிற வீட்டை ப் பிறகு அரசுடமை ஆக்கியிருந்தார்கள்.

குமுதத்தில் எழுதுவதற்காக 95ல் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்குப் போயிருந்தேன்.

அருகில் இன்னொரு வாடகை வீட்டில் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் அங்கு போனேன்.

மிக எளிய வீடு.

காமராஜர் மறைந்த பிறகு பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான்.

அறுபத்து மூன்று வயதான,காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார்.

கணவர் இறந்துவிட அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மிகக் குறைந்த வருமானம் குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது.

'' நாங்க ஏழு பேர் இருக்கோம். சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூடக் கேட்டுப் பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா.. ''

- எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார்.

'' இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன்.. கூட்டுறேன்.. இந்தா இருக்கு..பாருப்பா ( பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டைச் சுட்டிக்காட்டுகிறார்.)

எங்க மாமா வீட்டிலே பெருக்கிற வேலையாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லுப்பா.. உனக்குப் புண்ணியமா இருக்கும்..

அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியாக் கிடைக்குமில்லைப்பா.. நான் அங்கே போய்ப் பெருக்கினா அவமானம்னு சொல்றாங்க.. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டைக் கூட்டிப் பெருக்கிறதில என்ன அவமானம் இருக்குப்பா..'' -

சொன்னபடி கசிந்து அழுதார் ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள். சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

'' மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கலை.. குடும்பத்துக்கும் சேர்த்துக்கலை..இப்போ பாருப்பா..விதவை பென்ஷனுக்கு மனுப் போடுற நிலைமையிலே இருக்கேன்''-

-சொல்லும் போது கைகூப்பின காட்சி முள்ளாய் உறுத்தியது.

அடுத்த வாரம் 96, மே மாதத்தில் குமுதத்தில் ''வீட்டுவேலை செய்யும் காமராஜரின் மருமகள்'' என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்தது.

வெளிவந்த மறுவாரத்தில்  ஆச்சர்யமானதொரு மாற்றம்!

முதல்வர் ஜெயலலிதா காமராஜரின் குடும்பத்திற்கு வீடும், வேலை வாய்ப்பும், வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது.

அந்த்த் தகவலைச் சொல்ல மறுபடியும் விருதுநகரில் உள்ள  கமலாதேவி வீட்டுக்குப்போனபோது அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார்.

கண்கள் ததும்பின.

கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள்என்று எழுத்தாளர் மணா மணா அவர்கள் எழுதியுள்ளார்.

இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார்.

இன்று ஆர்.கே.நகர் ஒரு தொகுதியில் வெற்றி பெற தினகரன் பல நூறு கோடி செலவு செய்கிறார்.எங்கிருந்து வந்தது?எதற்காக செய்கிறார்?இதற்கு முன் என்ன பதவியில் என்ன வேலையில் இருந்தவர்.எப்படி வந்தது இவ்வளவு பணம்?

பன்னீர் அவர்கள் டீ கடையில் வாழ்க்கையை தொடங்கியவர் இன்றைய நிலை?

தி.மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தை எப்படி பட்ட பொருளாதார சூழ்நிலையில் அரசியலுக்கு வந்தவர்.இன்று அவர்களின் கும்பத்தினரின் நிலை?

இதை எல்லாம் நாம் ஒவ்வொருவருமே அறிந்துதான் வைத்துள்ளோம்.இருந்தும் நாம் இவர்களைத்தான் தவைர்களாக ஏற்று கொண்டுள்ளோம்.

இது என்ன மன நிலை?

காமராஜரை தோற்க்கடித்து இப்படிப்பட்ட அரசியில் வாதிகளை கொண்டு வந்து கொண்டாடுகிறோம்.

இதேபோல் மோடிஜி அவர்களை தோற்க்கடித்து இந்தியாவை படுகுழியில் தள்ளி விட வேண்டுமா?

இது தான் கலிகாலமா?
பாமரனின் குரல்,

நன்றி Narendran Subramnian.

கங்கை சுத்தம் ஆகிறது

நரேந்திர மோடி

மற்றவர் எவராலும் முடியாது என்று கைவிரிக்கும் விஷயத்தை தான் செய்வேன் என்று சொன்னால் அதை எப்பாடுபட்டாலும் செய்துமுடிப்பார்..

பல ஆண்டுகாலமாக மாசு பட்டு மாசு பட்டு இனி புனித கங்கையை எவராலும் மீட்க முடியாது என்ற முடிவுகட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட விஷயம்..

இதற்க்கு முன் பல அரசாங்கங்கள் இதற்காக நிதி ஒதுக்கி,

அது கடைசியில் அரசியல்வாதிகளின் வயிறு வளர்க்க உதவியதோடு சரி..

2014 ல் வாரணாசி தொகுதியிலிருந்து போட்டியிட்ட மோடி, தாய் கங்கை அழைத்ததால் வந்தேன்..

ஒரு தாயின் புனிதத்தை பாதுகாக்க வேண்டியது மகனின் கடமை...

அழிந்துகொண்டிருக்கும் கங்கையை மீட்டெடுப்பேன் என்று சத்தியம் செய்தார்..

இதோ, 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அரசாங்கம் எடுத்த பல கடுமையான நடவடிக்கைகள் பலனளிக்க துவங்கியுள்ளது..

கங்கையில் உள்ள நச்சுத்தன்மை படிப்படியாக குறைந்துவருகிறது..

மீண்டும் நீர்வாழ் உயிரினங்கள் செழிக்க துவங்கியுள்ளன..

2019 க்குள் 80% கங்கை சுத்தமாகும் என்று தேசிய நீர்வளத்துறை உத்திரவாதம் அளித்திருக்கிறது

நம்ம ஊர்லயும் கூவத்தை சுத்தப்படுத்தறேன்னு பல்லாயிரம் கோடி பல முறை ஒதுக்கியது நம் திராவிட கட்சிகள்..

என்ன ஆச்சு?

கங்கை சுத்தம் ஆகிறது

நரேந்திர மோடி

மற்றவர் எவராலும் முடியாது என்று கைவிரிக்கும் விஷயத்தை தான் செய்வேன் என்று சொன்னால் அதை எப்பாடுபட்டாலும் செய்துமுடிப்பார்..

பல ஆண்டுகாலமாக மாசு பட்டு மாசு பட்டு இனி புனித கங்கையை எவராலும் மீட்க முடியாது என்ற முடிவுகட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட விஷயம்..

இதற்க்கு முன் பல அரசாங்கங்கள் இதற்காக நிதி ஒதுக்கி,

அது கடைசியில் அரசியல்வாதிகளின் வயிறு வளர்க்க உதவியதோடு சரி..

2014 ல் வாரணாசி தொகுதியிலிருந்து போட்டியிட்ட மோடி, தாய் கங்கை அழைத்ததால் வந்தேன்..

ஒரு தாயின் புனிதத்தை பாதுகாக்க வேண்டியது மகனின் கடமை...

அழிந்துகொண்டிருக்கும் கங்கையை மீட்டெடுப்பேன் என்று சத்தியம் செய்தார்..

இதோ, 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அரசாங்கம் எடுத்த பல கடுமையான நடவடிக்கைகள் பலனளிக்க துவங்கியுள்ளது..

கங்கையில் உள்ள நச்சுத்தன்மை படிப்படியாக குறைந்துவருகிறது..

மீண்டும் நீர்வாழ் உயிரினங்கள் செழிக்க துவங்கியுள்ளன..

2019 க்குள் 80% கங்கை சுத்தமாகும் என்று தேசிய நீர்வளத்துறை உத்திரவாதம் அளித்திருக்கிறது

நம்ம ஊர்லயும் கூவத்தை சுத்தப்படுத்தறேன்னு பல்லாயிரம் கோடி பல முறை ஒதுக்கியது நம் திராவிட கட்சிகள்..

என்ன ஆச்சு?

லிப்ட் டெக்னாலஜியில் புதிய பாம்பன் பாலம்: வீடியோ வெளியிட்டு அசத்திய அமைச்சர்

லிப்ட் டெக்னாலஜியில் புதிய பாம்பன் பாலம்: வீடியோ வெளியிட்டு அசத்திய அமைச்சர்

இராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று. கப்பல் வரும்போது பாலம் தூக்கப்படும் காட்சியை காணவே அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவார்கள். கடந்த 1911ஆம் ஆண்டு தொடங்கி 1915ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாடல் நூறு ஆண்டை கடந்துவிட்டது.

இந்த நிலையில் இந்த பாலத்தில் தற்போது பழுது ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நூற்றாண்டை கடந்து விட்ட இந்த பாலத்திற்கு பதிலாக, 250 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இங்கு அமையவிருக்கும் புதிய பாலம் லிப்ட் டெக்னாலஜியில் கட்டப்படவுள்ளது. கப்பல் வரும்போது பாலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் லிப்ட் போல் தூக்கப்படும். கப்பல் சென்ற பின்னர் மீண்டும் கீழிறக்கப்பட்டு ரயில் பாதையாக பயன்படுத்தப்படும்.

இந்த புதிய பாலத்தின் மாதிரி வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தா வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Thank you Prime minister @narendramodi. I got my @PMAYUrban subsidy credited to my home loan account for purchase of my first dream Home.

Thank you Nikhil @dhamsaniya for sharing this with everyone:

Thank you Prime minister @narendramodi. I got my @PMAYUrban subsidy credited to my home loan account for purchase of my first dream Home. I got 235068 INR Credited directly to My Home Loan Account which reduced my EMI by 3000 INR.

சபரிமலை விவகாரத்தில் ஊடகங்கள் மறைத்த இன்னொரு தகவல்.*

*சபரிமலை விவகாரத்தில் ஊடகங்கள் மறைத்த இன்னொரு தகவல்.*

சபரிமலை விவகாரத்தில் வழக்கு தொடுத்த பெண் வழக்கறிஞர்கள் தங்களுக்கும் BJP / RSS க்கோ அல்லது வேறு எந்த கட்சிக்கோ தொடர்பு இல்லை எனவும், அவ்வாறு தொடர்பு உள்ளதாக செய்தி பரப்பிய Flowers TV சேனல் மற்றும் NEWS24 இணையத்தை இயக்கும் Insight Media City நிறுவனத்துக்கு 7 நாள்களுக்குள் போலி தகவல்களை நீக்கி மன்னிப்பு கேட்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

செய்தி ஆதாரங்கள்

https://barandbench.com/sabarimala-petitioners-legal-notice-malayalam-media-outlet-malicious-false-reporting/

https://www.deccanchronicle.com/nation/current-affairs/141018/no-link-to-rss-say-sabari-petitioners.html

நோட்டிஸ் புகைப்படங்கள் இணைக்கபட்டுள்ளது.

வழக்கு தொடுத்த 4 பெண் வழக்கறிஞர்கள்

1. Bhakti Pasrija Sethi,
2. Prerna Kumari,
3. Dr. Laxmi Shastri,
4. Sudha Pal

மேலும் News24 இணையத்தில் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள் எனவும் அதன் தலைவர் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும் எனவும் தவறான தகவல்களை நீக்கவும் கூறியுள்ளனர்.

மேலும் கேரள தேவசம் போர்ட் மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் இந்த தவறான தகவல்களை வைத்து தான் RSS க்கும் இந்த வழக்குகக்கும் தொடர்பு உள்ளது என கூறினார். அதை நம்பி தமிழகத்து போராளிகள் கம்பு சுத்துகிறார்கள்.

சபரிமலை வழக்கை 2006 இல் தொடுத்தது Indian Young Lawyers Association சேர்ந்த ஐந்து பெண் வழக்கறிஞர்கள். இதன் தலைவர் வழக்கறிஞர் Naushad Ahmed Khan.

https://bharatabharati.wordpress.com/2016/02/11/an-open-letter-to-sabarimala-petitioner-naushad-ahmed-khan-true-indian-women/

நெல்லையில் ரூ.150 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 7 அடுக்கு மாடியுடன் பிரமாண்டமாக மத்திய பா.ஜ.க #மோடிஜி_அரசால் எந்தவித விளம்பரமும் இன்றி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் ரூ.150 கோடி மதிப்பில்  சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 7 அடுக்கு மாடியுடன் பிரமாண்டமாக மத்திய பா.ஜ.க #மோடிஜி_அரசால்  எந்தவித விளம்பரமும் இன்றி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி ரூ.120 கோடியும் மாநில அரசின் நிதி ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் பிப்ரவரி மாதம் இப்பணியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கட்டிடம் கட்டும் பணி எந்தவித விளம்பரமும் இன்றி கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. மத்திய அரசின் சார்பு நிறுவனமான HITES கட்டுமானப் பணிகளின் நிர்வாகத்தை மேற்கொண்டது.

ஐதராபாத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்த நிறுவனம் கட்டிடப்பணியை மேற்கொண்டனர். வளாகத்தில் 7 மாடிக் கட்டிடம் ஒன்றும், 5 அடுக்குக்கட்டிடம் ஒன்றும் மற்றும் மூன்று அடுக்கு கட்டிடங்கள் 2 ஆகியன கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. தனி மின் இணைப்பு வசதி மற்றும் ஜெனரேட்டர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திருச்செந்தூர் சாலை மற்றும் ஐகிரவுண்டு, டிஜஜி பங்களா செல்லும் சாலைகளையொட்டி இந்த பரந்த விரிந்த கட்டிடம் அமைந்துள்ளது.

நான்கு வழிச்சாலையின் மிக அருகே இருப்பதால் 4 தென் மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகள் மாநகருக்குள் நுழையாமல் போக்குவரத்து நெரிசலின்றி மருத்துவமனைக்குள் வரமுடியும்.

சுமார் 19,500 சதுர அடி பரப்பளவில் ரூ.79 கோடியே 63 லட்சத்து 74 ஆயிரத்து 335 ரூபாய் மதிப்பில் கட்டிடம் கடந்த ஆகஸ்டில் கட்டப்பட்டது.
இதையடுத்து ரூ70 கோடியில் அறுவைசிகிச்சை கருவிகள், அதிநவீன மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன சிறப்பு மருத்துவத்திற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.முதற்கட்டமாக நரம்பியல், இதயவியல், நெப்ராலஜி, யூராலாஜி, பிளாஸ்டிக் சர்ஜரி, மெடிக்கல் கேஸ்ட்ரோ ஆகிய துறைகளில் முழு வசதிகளும் கிடைக்க உள்ளன. குறிப்பாக பைபாஸ் சர்ஜரி, திறந்த இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய்கள் தொடர்பான அறுவை சிசிக்சை வசதிகள், குடல், கல்லீரல் நோய்கள் தொடர்பான சிகிச்சைகள், தலைக்காயம் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சை வசதிகளும் கிடைக்கும்.

இந்த சிகிச்சை வசதிகளுக்காக தென்மாவட்டத்தினர் இதுவரை திருவனந்தபுரம் அல்லது சென்னை போன்ற தொலைதூர இடங்களுக்கு செல்லவேண்டி இருந்தது. கட்டிடப் பணிகள் நிறைவுபெற்றதோடு அறுவை சிகிச்சை அரங்குகளும் தயாராகிவிட்டதால் விரைவில் '#பிரதமர்_நரேந்திர_மோடிஜி
இதை திறந்து வைத்து மக்கள் பயன்பெர நாட்டு மக்களுக்கு அர்பணிக்க உள்ளார்....

80000 கோடி வசூலித்த மோடி

80000 கோடி வசூல்

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...