நெல்லையில் ரூ.150 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 7 அடுக்கு மாடியுடன் பிரமாண்டமாக மத்திய பா.ஜ.க #மோடிஜி_அரசால் எந்தவித விளம்பரமும் இன்றி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி ரூ.120 கோடியும் மாநில அரசின் நிதி ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் பிப்ரவரி மாதம் இப்பணியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கட்டிடம் கட்டும் பணி எந்தவித விளம்பரமும் இன்றி கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. மத்திய அரசின் சார்பு நிறுவனமான HITES கட்டுமானப் பணிகளின் நிர்வாகத்தை மேற்கொண்டது.
ஐதராபாத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்த நிறுவனம் கட்டிடப்பணியை மேற்கொண்டனர். வளாகத்தில் 7 மாடிக் கட்டிடம் ஒன்றும், 5 அடுக்குக்கட்டிடம் ஒன்றும் மற்றும் மூன்று அடுக்கு கட்டிடங்கள் 2 ஆகியன கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. தனி மின் இணைப்பு வசதி மற்றும் ஜெனரேட்டர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திருச்செந்தூர் சாலை மற்றும் ஐகிரவுண்டு, டிஜஜி பங்களா செல்லும் சாலைகளையொட்டி இந்த பரந்த விரிந்த கட்டிடம் அமைந்துள்ளது.
நான்கு வழிச்சாலையின் மிக அருகே இருப்பதால் 4 தென் மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகள் மாநகருக்குள் நுழையாமல் போக்குவரத்து நெரிசலின்றி மருத்துவமனைக்குள் வரமுடியும்.
சுமார் 19,500 சதுர அடி பரப்பளவில் ரூ.79 கோடியே 63 லட்சத்து 74 ஆயிரத்து 335 ரூபாய் மதிப்பில் கட்டிடம் கடந்த ஆகஸ்டில் கட்டப்பட்டது.
இதையடுத்து ரூ70 கோடியில் அறுவைசிகிச்சை கருவிகள், அதிநவீன மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல்வேறு அதிநவீன சிறப்பு மருத்துவத்திற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.முதற்கட்டமாக நரம்பியல், இதயவியல், நெப்ராலஜி, யூராலாஜி, பிளாஸ்டிக் சர்ஜரி, மெடிக்கல் கேஸ்ட்ரோ ஆகிய துறைகளில் முழு வசதிகளும் கிடைக்க உள்ளன. குறிப்பாக பைபாஸ் சர்ஜரி, திறந்த இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக நோய்கள் தொடர்பான அறுவை சிசிக்சை வசதிகள், குடல், கல்லீரல் நோய்கள் தொடர்பான சிகிச்சைகள், தலைக்காயம் மற்றும் மூளை நரம்பியல் தொடர்பான சிகிச்சை வசதிகளும் கிடைக்கும்.
இந்த சிகிச்சை வசதிகளுக்காக தென்மாவட்டத்தினர் இதுவரை திருவனந்தபுரம் அல்லது சென்னை போன்ற தொலைதூர இடங்களுக்கு செல்லவேண்டி இருந்தது. கட்டிடப் பணிகள் நிறைவுபெற்றதோடு அறுவை சிகிச்சை அரங்குகளும் தயாராகிவிட்டதால் விரைவில் '#பிரதமர்_நரேந்திர_மோடிஜி
இதை திறந்து வைத்து மக்கள் பயன்பெர நாட்டு மக்களுக்கு அர்பணிக்க உள்ளார்....
No comments:
Post a Comment