Friday, 25 January 2019

மோடி யின் வரலாறு


https://www.facebook.com/groups/1828757960722252/permalink/2253754178222626/
.


ஏழைக் குடும்பத்தில் கிராமத்து மண்வீட்டில் பிறந்து வளர்ந்து, ஒன்பது வயதிலேயே ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு , ஸ்வாமி விவேகானந்தரைத் தனது மானசீக குருவாக நினைந்து, பாலப் பருவத்தில் சாது சேவை செய்து,

17 வயதில் இமயமலைக்குச் சென்று ஒன்றரை வருடங்கள் குகைகளிலும்,பாறை இடுக்கிலும் வாழ்ந்து , கிடைத்த கிழங்குகளையும் ,, பழங்களையும் உண்டு, எங்கிருக்கிறான் என்னவானான் என்று தாய்க்கும் மற்றவர்களுக்கும் கூடத் தெரியாமல் வாழ்ந்து,

பிறகு வீடு திரும்பி மீண்டும் கைலாயம் சென்று வந்து, தேனீர் விற்று,1971 யுத்தத்தின்போது போர்முனைக்குச் சென்ற வீரர்களுக்கு இலவசமாகத் தேனீர் வழங்கிச் சேவை செய்து, ஆர்எஸ்எஸ்ஸின சேவைப் பணிக்காகக் காட்டிலும் மேட்டிலும் அலைந்து,

2001ல் குஜராத் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்படி வாஜ்பாய் அவர்கள் கேட்டபோது மறுத்து ,பிறகு எல்லோரின் வற்புறுத்தலின் பேரில் பொறுப்பேற்று, இரவு பகல் உழைத்து குஜராத்தை மாதிரி மாநிலமாக உயர்த்தி, உலகிலேயை மிகப் பிரம்மாண்டமான நர்மதை பாசனத் திட்டத்தை நிறைவேற்றி,

பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தக் காரணம் தனிக் கழிப்பறைகள் இல்லாததென்று அறிந்ததும் எல்லாப் பள்ளிகளிலும் மாணவிகளுக்குத் தனிக் கழிப்பறை கட்ட வைத்து, வீடுகளுக்குத் தானே நேரில் சென்று மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்பும்படி பெற்றோரைக் கேட்டுக் கொண்டு, தனக்கு வந்த பரிசுப் பொருள்களை அவ்வப்போது ஏலம் விட்டு பெண்குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்கி ,

பிரதமரானதும் தனது தனிப்பட்ட சேமிப்பு அனைத்தையும் குஜராத் அரசு டிரைவர் மற்றும் கடை நிலை ஊழியர் சங்கத்துக்கு நன்கொடையாக அளித்து, தாயின் காலில் விழுந்து அவர் அளித்த ஆசியுடன் ஒரு ரூபாயையும் பெற்றுக் கொண்டு,

அண்டை நாடுகளுடன் நல்லுறவை வேண்டி அந்நாடுகளின் தலைவர்களைத் தனது பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்து, இந்தியாவின் சாபக்கேடாக இருந்த அசுத்தம்,திறந்த வெளிக் கழிப்பிடங்களை ஒழிக்க 'தூய்மை இந்தியா' திட்டம் கொண்டுவந்து,

வங்கியின் பக்கமே போக முடியாத நிலையிலிருந்த கோடிக்கணக்கான ஏழைகளுக்கு ஜனதன் கணக்கைத் திறக்க வைத்து, வருடத்திற்குப் 12 ரூபாயிலும், 330ரூபாயிலும் ஏழைகளுக்குக் காப்பீடு கொண்டுவந்து, பென்ஷன் இல்லாதவர்களுக்கு 'அடல் பென்ஷன் திட்டம்' கொண்டுவந்து,

100நவீன நகரங்கள் அமைக்கும் திட்டம், துறைமுகங்களை இணைக்கும் பாரத்மாலா திட்டம், சரக்கு ரயில்களுக்கான தனி ரயில்பாதைத் திட்டம் கொண்டுவந்து, மின்வெட்டு அறவே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றி,,

நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி அளித்து, 7கோடி குடூம்பங்களுக்கு இலவச சமையல் இணைப்பு வழங்கி, நீர்வழிப்போக்குவரத்துத் திட்டம் தொடங்கி குறைந்த செலவில் சரக்குப் போக்குவரத்தை நடத்தத் திட்டம் கொண்டுவந்து, மிகமிகக் குறைந்த பிரீமியத்தில் பயிர்க்காப்பீடு கொண்டு வந்து,மண்வள அட்டை தந்து, குறைந்தபட்ச விவசாயக் கொள்முதல் விலையை ஒன்றரை மடங்காக உயர்த்தி, 2022க்குள் விவசாயிகளின் லாபத்தை இருமடங்காக்கத் திட்டம் கொண்டு வநது ,

50 கோடி பேருக்கு 5லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு கொண்டுவந்து, கோடிக்கணக்கான ஏழைகளுக்குப் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் கொண்டுவந்து, தொழில் தொடங்க கியாரண்டி இல்லாமல் முத்ரா கடன் திட்டம் கொண்டு வந்து,

காலாவதியான உளுத்துப்போன நூற்றுக்கணக்கான சட்டங்களைத் தூக்கியெறிந்து, அட்டஸ்டேஷன் முறையை ஒழித்துத் தாங்களே தங்கள் ஆவணங்களில் மக்கள் சுயச்சான்றுக் கையொப்பமிடும் முறையைக் கொண்டுவந்து,

இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கத் 'திறன் இந்தியா' திட்டம் அமல்படுத்தி, ஊழலை ஒழிக்க 'டிஜிடல் இந்தியா' திட்டம் கொண்டு வந்து, பேட்டரி முதல் பிளேன் வரை இறக்குமதி செய்து கமிஷன் வாங்கிய நிலையை மாற்றி 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தைக் கொண்டுவந்து, 'எழுந்து நில் தொழில் தொடங்கு' என்று 'ஸ்டாண்ட் அப் இந்தியா,,ஸ்டார்ட் அப் இந்தியா 'திட்டம் தொடங்கி,

பெண்குழந்தைகளுக்காக'செல்வமகள் திட்டம்' தொடங்கி, இலங்கையில் தூக்கில் தொங்கவிருந்த ஐந்து தமிழக மீனவர்களை உயிருடன் மீட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, இலங்கைத் தமிழருக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டிக் கொடுத்து,

பாரதியாரையும் , வள்ளுவரையும் நாடு முழுமையும் கொண்டாட வைத்து, மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அளித்து , கோடிக்கணக்கில் மருத்துவப் படிப்புக்குப் பணம் வாங்குவதை ஒழிக்க 'நீட் தேர்வு',கொண்டுவந்து, காங்கிரஸ் திமுக வால் ஒழிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மீண்டும் நடக்க வழி செய்து -

இன்னும் இன்னும் இன்னும் பல நன்மைகளைச் செய்த பிரதமர் மோடி செய்த தவறு -- கருப்புப் பண,கள்ளப்பண ஒழிப்புக்கான உயர் மதிப்புக் கரன்சி மதிப்பிழப்புத் திட்டம் ,

பலவரிகளை ஒழித்து ஒரே வரியாக வசூலிக்கும் 'ஒரே நாடு ஒரே சந்தை 'என்ற அடிப்படையில் ஜிஎஸ்டி கொண்டுவந்து வரி ஏய்ப்பைத் தடுத்தது,

எல்லா மானியங்களையும் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகச் செலுத்தி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்ததைத் தடுத்தது ,

நினைத்த இடத்தில் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று வந்த தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கியது,

ஒரு தலைவன் என்ன,சாதாரணக் குடிமகனே ஹிந்து என்று சொல்வது கேவலம் என்ற எழுதப்படாத விதியை மாற்றி 'நான் ஒரு ஹிந்து தேசியவாதி'  என்று சொன்னது..

இவைதான்!

இவற்றால் கடும் கோபமும்,, ஆத்திரமும் கொண்டவர்களுக்கு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற மனிதரைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

உங்களுக்கு?

Thursday, 24 January 2019

Lok Sabha election 2019: Survey predicts doom for Modi-Yogi’s BJP in Uttar Pradesh

Lok Sabha election 2019: Survey predicts doom for Modi-Yogi’s BJP in Uttar Pradesh
.

https://www.financialexpress.com/india-news/lok-sabha-election-2019-survey-predicts-doom-for-modi-yogis-bjp-in-uttar-pradesh/1453358/

Monday, 21 January 2019

*மோடியும் துரோகிகளும்*

*மோடியும் துரோகிகளும்*

     டில்லி, போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், விக்ரம், மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:
     *“இன்று, நம் பிரதமர்* *நரேந்திரமோடி,* அதிக அளவுவெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
     காரணங்களை எல்லாம் நான் நன்றாக அலசிப் பார்க்கும் போது, *ஒவ்வோர் ஊழல் அரசியல்வாதியும்,*  * கறுப்புப்பணம்* *வைத்திருப்பவரும்,* *தீவிரவாதியும், தேச விரோதியும்,* *தேசப் பற்று கொண்டுள்ள நம்* *பிரதமரின் ஊழலற்ற* *கொள்கைகளால் பெரிதும்* *பாதிக்கப் பட்டுள்ளனர்*
என அறிகிறேன்.
     *பண மதிப்பைக் குறைத்ததிலும்*  சரி, *
*ஆதார் அட்டையை வங்கிக்* *கணக்குடன் அல்லது வருமான* *வரிப் ‘பேன்’ அட்டையுடன்* *இணைத்ததிலும் சரி,* அவர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
     *ஆதார் எண்ணை* *இணைத்ததில்,* மஹாராஷ்ட்ராவில்,  ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட *10 லட்சம் பேர் மாயமாக* மறைந்து விட்டனர்.
     *3 கோடிக்கும் மேலான*
* போலி ‘எல் பி ஜி’ இணைப்புகள்* முடிவுக்கு வந்து விட்டன.
     *மதரஸாக்களில் ஸ்காலர்ஷிப்* வாங்கியதாகச் சொல்லப் பட்ட *195000 போலி குழந்தைகளைக்* காணோம்.
     *15 லட்சம் போலி ரேஷன்* *அட்டைகள்* காணாமல் போய் விட்டன.
     *ஏன் இவை மாயமாய்* *மறைகின்றன?*
     *திருடர்களின் மொத்த கறுப்பு* *சந்தையும் வெளிச்சத்துக்கு வந்து* *கொண்டிருக்கிறது. எனவே,* *எல்லாத் திருடர்களும் ஒன்றாகச்* *சேர்ந்து, உச்ச நீதி மன்றத்தில் ,* *ஆதாரை இணைப்பது நம்* *அடிப்படை உரிமைக்கு எதிரானது* என்று ஒரு மனுவைப் போட்டார்கள். *இதற்கு சில முதலமைச்சர்களும்* *உடந்தை. திருடர்களுக்குத் தனி* *ரகசிய உரிமை என்று என்ன* *இருக்கிறது?*
*1.  மோடி 3 லட்சம் போலி* *நிறுவனங்களை மூடி விட்டார்;*

*2. ரேஷன் வியாபாரிகள் கோபமாக இருக்கிறார்கள்;*
*3. சொத்து (ரியல் எஸ்டேட்) டீலர்கள் எரிச்சல்* *அடைந்துள்ளார்கள்;*

*4. ஆன்லைன் அமைப்பால் இடைத் தரகர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;*

*5. மூடப்பட்ட 40000 போலி நிறுவனங்களின் (ஏன் ஜி ஓ) உரிமையாளர்கள் எரிச்சல் அடைந்துள்ளார்கள்;*

*6. கள்ளப் பணத்தைக் கொண்டு சொத்துக் கிரயம் செய்து வந்தவர்கள் கோபம் அடைந்துள்ளனர்;*

*7. ‘இ டெண்டர்’ முறையால், சில ஒப்பந்ததாரர்களும் கோபம் கொண்டுள்ளனர்;*

*8.  ‘கேஸ்’ நிறுவனங்கள் கோபத்தில் உள்ளன;*

*9. புதிதாக வருமான வரி வளையத்துக்குள் கொண்டு வரப் பட்ட 1 கோடியே 20 லட்சம் பேர் கோபமடைந்துள்ளனர்;*

*10. ‘ஜி எஸ் டி’ என்னும் புதிய வரி விதிப்பின்படி,  தானியங்கி வரி செலுத்தும் முறையால், வியாபாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்;*

*11. கறுப்பை வெள்ளையாக்குவது சிரமமாகி விட்டது;*

*12. நேரத்தில் வேலைக்கு வர வேண்டி இருக்கும் சோம்பேறி அரசு ஊழியர்கள் கோபப்படுகிறார்கள்;*

*13. வேலையும் செய்யாமல், லஞ்சமும் பெற்று வந்த அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;*

*14. ‘டிஜிடல்’ பொருளாதாரத்தால் பாதிக்கப் பட்டுள்ள கள்ளப் பண டீலர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்;*

*15. பயங்கரவாதிகளின் பணப் பரிமாற்றம் பெரிதும் பாதிக்கப் பட்டு விட்டது;*

*16. ரியல் எஸ்டேட் கும்பல், பணமாகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியாததால், கணக்கில் வராதப் பணத்தை எப்படி கணக்கில் ஏற்றுவது என்று விழித்துக் கொண்டுள்ளனர்.*

*17. கடந்த 4 ஆண்டுகளாக, ஒரு ஊழல் கூட கிடையாது. இதனால் பல அரசியல்வாதிகள் மோடி மீது வெறுப்பில் இருக்கிறார்கள். மோடி முந்தைய பிரதமர்களைப் போல, ஊழல் என்றால் தன் கண்களைப் பொத்திக் கொண்டு விடுவார் என எதிர் பார்த்தனர். எனவே, மோடியால் பாதிக்கப் பட்டுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் சேர்ந்து, ‘கிச்சடிக் கூட்டணி’யை ஏற்படுத்திக் கொண்டு, மோடி, இரண்டாம் முறையாகப் பதவிக்கு வந்து விடக் கூடாது என்று எல்லாப் பிரயத்தனங்களையும் செய்து வருகின்றனர். *
    *இப்போது, 125 கோடி இந்தியர்கள் முன்னுள்ளது, இந்த ஊழல் ‘கிச்சடிக் கூட்டணியை’ ஆதரிப்பதா, இல்லை இந்த நாட்டின் உண்மையான விசுவாசியான நம் பிரதமர் மோடியை ஆதரிப்பதா, என்பதே. பந்து உங்கள் பக்கம் தான் இருக்கிறது.*
     *ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!”*
     எளியப் பாமர மக்களிடம் இந்த உண்மைகளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். சத்தியமே வெல்லும்.

Sunday, 20 January 2019

Qualifications of RAHUL and MODI!!

Qualifications of RAHUL and MODI!!

What would the resume of Narendra Modi and Rahul Gandhi be like for the post of the Prime Minister of India?
, Avid follower of india and its policies

Resume of Rahul Gandhi.. Has 10 qualities to be the PM…

Great Grandson of Pandit Nehru (Freedom Fighter and Ex PM)
Grandson of Indira Gandhi(Ex PM)
Son of Rajeev Gandhi (Ex PM)
Two times MP from Amethi
Janue Dhaari datatrrya Gotra Brahmin
Shiv Bhakth
Does not know what NCC stands for
Has gold making machine from potatoes
Has technology to bring man from Jupiter with reverse velocity
Is president of INC

Resume of PM Modi .

He has only 1 supporting fact to be the PM. That is number 5.

Son of Tea vendor
4 times CM of Gujarat
first time PM of India
One time MP from Varanasi
PM Modi dedicated his life onto the nation. What he gave which previous governments could not…
Ease of access to Railway foot over bridges with escalators,
Use toilets for every household
LPG gas connection to every household… thus reducing carbon footprint
Reduction in medical bills by introduction of generic medication from 30–80%
medical Insurance to the poor up to 500000
Farmer MSP and improving farmer income… Soil health card..
Farmer insurance.. instead of depending on the farmer loans
DBT to the low income under MNREGA
Motivation to the army and free hand to take decisions
Have 24 hour access to electricity
reduced terror attacks
increased tax payer base
simplified taxation with implementation of GST ( I have clearly stated implementation. Though GST was introduced by UPA they could not get all states to agree. Implementation one sees results instead of on paper. )
Reduced power tariff due to solar power
Good road/highway network reducing driving stress, reducing petrol consumption, reducing time travel
Quick connectivity between certain regions due to bridges over rivers (assam/arunachal pradesh) , tunnels (Kashmir), airports (sikkim)
Cleaner Ganga to take a dip
digital access to government services
motivation to the sportsperson…
increasing FDI
Improving image of India Internationally

Saturday, 19 January 2019

MODI INAUGURATES! GOOGLE search

https://www.google.com/search?q=MODI+INAUGURATES!!&oq=MODI%0AINAUGURATES!!%0A&aqs=chrome..69i57j0l3.2113j0j7&client=ms-android-samsung&sourceid=chrome-mobile&ie=UTF-8

MODI INAUGURATES!!

MODI
INAUGURATES!!

Have you noticed this? PM Modi is inaugurating one or other infrastructure project every few days. That too in different parts of the country. I decided to do a google search on "Modi inaugurates" and found some interesting results which I have put down here briefly. In a nutshell, this government has been finishing long pending projects and executing brand new projects in record time. I am sure there will be many more coming in the next few weeks before the election commission restrictions set in. This list itself is big, hope to see more. Nevertheless, please share this as much as possible. One question also needs to be asked, what has the Congress been doing all these many years?

1. Bogibeel rail bridge - largest rail and road bridge in India. built in Assam. Started in 2002, languished till 2015 and then launched on 25-Dec-2018
2. Solapur-Tuljapur-Osmanabad highway in Maharashtra - started in 2014 and finished on 9 Jan 2019
3. Varanasi multi modal port for inland waterway project - started Aug 2016, completed 12 Nov 2018
4. Eastern Peripheral expressway - foundation laid in Nov 2015, launched nov 2018
5. Western Peripheral expressway - started in 2006 by Haryana govt, languished till 2016, inaugurated in November 2018
6. India's largest Cancer hospital in Haryana - finished in 3 years, launched on 18 Dec 2018
7. Kollam Bypass in Kerala -13.1 km length. First foundation laid in 1972. Only 4.5 km completed till 2015. Inaugurated by Modi in Jan 2019
8. Bhawan-Bhairon Passenger Ropeway Inaugurated For Vaishno Devi Pilgrims – launched dec 25, 2018
9. First airport in Sikkim, first launched in 2008, work stalled till 2014 due to protests by villagers. Completed on 24th September 2018
10. Kishanganga dam project in Kashmir – 330Mw hydroelectric power plant. Started in 2007 was scheduled to be completed in 2016, halted due to Pakistan going to Hague. Re-started in 2014 and completed on 19 may 2018.
11. Two sewerage infrastructure projects worth Rs 199.65 crore under Namami Gange Programme in Prayagraj – 17 dec 2018
12. Jharsguda airport – second one in Odisha – joint one by AAI and state government. Started in July 2013 – launched in Sep 2018
13. Mundra LNG terminal in Gujarat – started 2015, launched Sep 2018
14. Kota Chambal bridge – started in 2006, stopped due to environmental clearances and re-started in 2007. Was to be completed in 2012 but kept delaying. Finally launched in may 2017
15. Bansagar canal project Mirzapur – agreement for water and power share between MP, UP and Bihar as well as construction. Originally started in 1978, completed and inaugurated by Modi in July 2018

So please ask the neutral and dynasty loving friends - what has dynasty been doing for so many decades - a government in 4.5 years could achieve so much - why couldn't they? This is called development that will make India a "developed" country, not doles or "secularism".

V NANDAKUMAR

லஞ்சம், ஊழல் பற்றி பேச இவருக்கும் தி.மு.க விற்கும் தகுதி உள்ளதா என்பதை பார்ப்பது அவசியம்.

.      லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்லிக் கொண்டு ஊர் ஊராக கிராம பஞ்சாயத்து என்ற பெயரில் காமெடி செய்து கொண்டுள்ளார்.

          லஞ்சம், ஊழல் பற்றி பேச இவருக்கும் தி.மு.க விற்கும் தகுதி உள்ளதா என்பதை பார்ப்பது அவசியம்.

       லஞ்சம், ஊழல் என்பது  தமிழகத்தை பொறுத்தவரை கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம்.

        சுதந்திரம் அடைந்த பிறகான தமிழக அரசியலில் ஊழல் என்பது கிடையாது. ஊழல் ஆரம்பமானது அண்ணாதுரை மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான பின் தான்.

        அதற்கு முன் அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது பயந்து பயந்து யாருக்கும் தெரியாமல் வாங்கும் சொற்ப தொகையாக இருந்தது.

       புண்ணியவான் கருணாநிதி வந்ததும் இது அப்படியே மாறியது.

      வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல் என கருணாநிதி ஊழல் நாயகனாக வலம் வந்தார். கவனிக்கவும் ஊழல் மட்டும் தான். அதாவது அரசு டென்டர்களுக்கு கமிஷன் பெறுவது மட்டும். அதே காலத்தில் அரசு அலுவலகங்களில் வேலைக்கு மக்களிடம் லஞ்சத்தை வெளிப்படையாக பெற ஆரம்பித்தனர். அதாவது அவரவர் இருக்கும் பதவி, தகுதிகளுக்கு ஏற்ப லஞ்சம், ஊழல் வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்டது இந்த கால கட்டத்தில் தான்.

          அதன் பின் கருணாநிதி ஆட்சியிழந்து வனவாசம்  போன காலத்தை விட்டு விடலாம்.

        எம்ஜிஆர் மறைந்த பின் கருணாநிதி ஆண்ட இரண்டு ஆண்டு காலம்  1989 - 1991 ஊழல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை உண்டானது.

        ஆளும் வர்க்கம் அரசு அதிகாரிகளின் அதிகார வர்க்கத்தோடு இணைந்து ஊழல் செய்ய ஆரம்பித்தது. அரசு டெண்டர்கள் கமிஷன் பெறுவதற்காகவே கூடுதலாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இரண்டு கூட்டமும் பிரித்துக் கொண்டது.

      1991 ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க இந்த பார்முலாவை பயன்படுத்தி தான் வாரிக்குவித்து கொழித்தது. வகை தொகையில்லாமல் அப்போது குவித்த சொத்துக்கள் தான் பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் இன்று கொண்டு போய் விட்டுள்ளது.

       1996 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி ஊழலின புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். அதுவரை கான்டிராக்ட், கமிஷன் என்று கட்டிங் வாங்கிய அரசியல் வாதிகள் உறவினர்கள், பினாமிகள் பெயர்களிலேயே கம்பெனிகள் தொடங்கி அந்த கம்பெனிகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கி கொள்ளையடித்தனர்.

          இதன் பின்னணியில்  இருந்தது தி.மு.க தலைவரின் அடுத்த தலைமுறையான மாறன் பிரதர்ஸ். அதாவது பினாமி, உறவினர்கள் பெயரில்  கார்பரேட் நிறுவனங்கள் தொடங்கி அதற்கேற்ற வகையில் அரசின் விதிமுறைகளை உருவாக்கி, பாரம்பரியமான பிற போட்டி  நிறுவனங்களை அதிகார பலத்தால் நசுக்கி கொளுத்தனர். பிற்பாடு சட்ட சிக்கல்கள், வருமான வரி விவகாரங்கள் வரக்கூடாது என்பதற்காக அரசியல் வாதிகள், அதிகாரிகள், ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள் என ஒரு டீம் ஒர்க்காக  பக்காவாக பிளான் செய்து ஒரு புதிய வரலாற்றை படைத்தது இந்த கால கட்டத்தில் தான். மாறன் பிரதர்ஸ்சின் சன் டிவி, சுமங்கலி கேபிள் விஷன் எல்லாம் இந்த ரகம் தான்.

          மேலே சொன்னது எல்லாம் கருணாநிதி என்ற மூலவரின் மட்டம் எனில் அதற்கடுத்த மட்டமான அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அளவில் கல்வி தந்தைகளாகவும், வணிக வளாக உரிமையாளர்களாகவும்,  தொழில் அதிபர்களாகவும் மாறியிருந்தனர்.

       அதற்கும் கீழ்மட்ட வார்டு, வட்ட செயலாளர்கள் சைக்கிள் ஸ்டேன்ட், கார் பார்க்கிங், செருப்பு  பாதுகாப்பகம், பொது கழிப்பிட கான்டிராக்ட்களில் நுழைந்து மற்றவவர்களை விரட்டியடித்து   அடிமாட்டு  விலைக்கு எடுத்து விதிமுறைகளை மீறி பல மடங்கு கட்டணத்தை அடாவடியாக வசூலிக்க ஆரம்பித்தனர். தனது கட்சிக்காரன் என்பதால் இதற்கு அரசின் மறைமுக ஆதரவும் இருந்ததால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மாறாக அதிகாரிகளுக்கும பங்கு கிடைத்தது. பங்கு பெறுவோர் பட்டியலில்  அரசியல் வாதிகளும் சேர்ந்தனர்.

       2001 ல் ஆட்சியை கருணாநிதியிடமிருந்து தட்டிப் பறித்த ஜெயலலிதா இந்த ஊழல் வியூகத்தை அவர் பின்பற்றி சசிகலா வகையறாக்களும் அதிமுக பிரமுகர்களும் வாரி குவித்தனர்.

----------

         2006 ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சம் இதையெல்லாம் தாண்டி புதிதாக பரிணாம வளர்ச்சி அடைந்தது.

        கண்ணில் படும் சொத்துக்கள், தொழிற் சாலைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் பொது மக்களிடமிருந்து அடாவடியாக பிடுங்கப்பட்டது அல்லது அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கப்பட்டது.

          கார்பரேட் கம்பெனிகளை ஆரம்பித்து கொள்ளையடித்த கருணாநிதி குடும்பம் அரசாங்கத்தையே தங்களது சொந்த கம்பெனிகளாக மாற்றி வருமானம் பார்த்தது இந்த காலத்தில் தான்.

          ஊழல் பணத்தில் வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் தொழில் நுட்பம் இந்த காலகட்டத்தில் தான் உச்சமடைந்தது.

      இதற்கு சிறந்த உதாரணம் அரசு போக்கு வரத்துக் கழகங்கள். நடத்துனர், ஓட்டுனர் வேலைக்கு மூன்று முதல் ஐந்து லட்சம் வரை வாங்கிக்கொண்டு சகட்டு மேனிக்கு ஆட்களை வேலைக்கு எடுத்தனர். ஒரு பேருந்திற்கு எட்டு பேர், பத்து பேர் ஊழியர்கள் என்ற அளவிற்கு போக்குவரத்துக் கழகங்களே சீரழிந்தது. மிதமிஞ்சிய பணியாளர்களால் போக்குவரத்து கழக சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டு சம்பளம் போடும் அளவிற்கு மோசமான நிலையை அடைந்தது.

        அரசு பேருந்து விபத்துகளில் நஷ்ட ஈடு தர முடியாமல் பேருந்துகள் நீதிமன்றத்தால் ஆங்காங்கு பறிமுதல் செய்யப்படாத நாளே கிடையாது என்ற அளவில் கேவலமான நிலைக்கு வந்தது.

      ஒட்டு மொத்த திரைத்துறையையும் கபளீகரம் செய்து அடாவடி + கார்பரேட் மூளையுடன் திமுக குடும்பம்  முன்னேறியது. மாவட்டம் தோறும் குறுநில மன்னர்களாக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும்  வலம் வந்தனர்.

        முன்பு நடந்ததெல்லாம் ஊழல் எனில் செய்யும் வேலையில் கமிஷன், பினாமி பெயர்களில் அரசு ஒப்பந்தம் பெறுதல் என இருந்தது. ஆனால் 2006 - 2011 வரை அரசு திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் மொத்த தொகையையும் சேதாரமின்றி அப்படியே   கபளீகரம் செய்தனர்.

           போடாத ரோட்டிற்கு, தூர் வாரப்படாத நீர் நிலைகளில் குடி மராமத்துக்காக ஒதுக்கப்படும் பணத்தை அப்படியே ஸ்வாகா செய்தனர்.

      இதையெல்லாம் விட ஒரு பெரிய கொடுமையும் நடந்தது. மாநிலத்திற்கு ஒரு தலைமைச் செயலகம் தான் இருக்கும். தமிழகத்தில் மட்டும் இரண்டு தலைமைச் செயலகங்கள் அப்போது இயங்கியது. ஒன்று சென்னையில் ,  மற்றொன்று மதுரையில். அதாவது தமிழ்நாட்டையே குடும்ப சொத்தாக்கி இரண்டாக பிரித்து விட்டார்கள்.

.     சென்னையிலிருந்து    திருச்சி வரை சுடலை, திருச்சிக்கு தெற்கே உள்ள தென் தமிழகத்திற்கு அஞ்சா நெஞ்சர்.

        டிரான்ஸ்பர், டிரான்ஸ்பர் ரத்து, பதவி உயர்வு, அரசு வேலை, அரசு ஒப்பந்தங்கள்,  அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு அனைத்திற்கும் தனி அலுவலகமே போட்டு கோடிகளை குவித்தனர்.

        2011  வரை இது தொடரந்தது.

------------------

          இவ்வளவு நீண்ட பதிவை எழுத காரணம்  உள்ளது. தி.மு.க ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் ஊழலில் அடுத்த கட்டத்தை எட்டியது என்பது தான் வரலாறு.

      இந்த லட்சனத்தில் ஆட்சிக்கு வந்தால்  ஊழலை  ஒழிப்போம் என்று ஸ்டாலின் சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனம். கண்டிப்பாக ஸ்டாலினிற்கு் லஞ்ச ஊழல் பற்றி பேசவே தகுதி இல்லை. தாங்கள் சுரண்டியது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களிலிருந்து கோவில் வரை மக்களை கொள்ளையடிப்பதற்கென்றே ஒரு கூட்டத்தை வளர்த்து விட்டு இவர்களும் ஆதாயம்  ஆதாயம் அடைந்துள்ளனர்.

       இதை புரிந்து கொள்ள பெரிய அளவில் போக வேண்டாம். நம்மூர் பொது கட்டண கழிப்பிடத்தை பற்றி ஆராய்ந்தாலே போதும்.
பப்ளிக் டாய்லட் என்று நாம் கடந்து செல்லும் சாதாரண பொது கழிப்பிடத்திலேயே கோடிகளில் ஊழல் செய்யும் அளவிற்கு தமிழ் நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி வைத்துள்ளது தான் தி.மு.க வின் சாசனை.

          இந்த பப்ளிக் டாய்லட்டில் எத்தனை கோடிகள் பொதுமக்களின் பணம் அள்ளப்படுகிறது என்பதை ஒரு புரிதலுக்காக பாரக்கலாம்.

----------------------

தமிழ்நாடு மொத்த தாலுக்காக்கள் = 290

ஒரு தாலுகாவிற்கு தோராயமாக 10 பொது கட்டன கழிப்பிடம் எனில் தமிழகத்தில் உள்ள மொத்த பொது கட்டண கழிப்பிடங்கள் = 2900

ஒரு கட்டண கழிப்பிடத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 300 பொது மக்கள் பணம் கொடுத்து உபயோகிக்கின்றனர்.

ஒரு வருடத்திற்கு = 300 × 365 = 1,09,500

2,900 கழிப்பிடங்களை  ஒரு வருடத்தில் உபயோகிப்பவர்கள்
எண்ணிக்கை

       1,09,500 × 2,900 = 31,75,50,000

      இதை தோராயமாக 30 கோடி முறை மக்கள் பணம் செலுத்தி உபயோகிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.

           அரசு நிர்ணயித்த கட்டணம் சிறுநீர் கழிக்க ரூபாய் 1.00, மலம்  கழிக்க
ரூபாய் 2.00.  இந்த கட்டணம் தான் பொது கழிப்பறைகளில் நமது பார்வையில் படும்படி எழுதி வைத்திருப்பார்கள்.

      விதிமுறைகள் மற்றும் சட்டப்படி   இந்த கட்டணத்தை வசூலித்தால் மலம் கழித்தல் + சிறுநீர் கழித்தல் இரண்டுக்குமாக சேர்த்து தமிழகத்தின் மொத்த கட்டண கழிப்பிடங்களின் ஒட்டு மொத்த வருட  வசூல் 40 கோடியை தாண்டாது.

        ஆனால் நடப்பது என்ன...? சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாயும், மலம் கழிக்க பத்து ரூபாயும் கொள்ளை அடிக்கின்றனர்.  அதாவது ஐந்து மடங்கு...! இந்த கணக்கை பார்த்தால் வருடத்திற்கு குறைந்தது 200 கோடிகள்.

      கொள்ளை கட்டணம் 200 கோடி - அரசு நிர்ணயித்த  கட்டணம் 40 கோடி = 160 கோடிகள்.

        புரிகிறதா...? கணக்கில் வராத மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட 160 கோடிகள் எங்கே செல்கிறது...?

-----------------

       இந்த இடத்தில் தி.மு.க உள்ளிட்ட அனைத்து திராவிட கட்சிகளுக்காக சில புத்திசாலிகள்...

       " சாதாரண கக்கூசில் நடக்கும் பிரச்சனைகளையெல்லாம் முதல்வர் பதவியிலிருப்பவர்கள் கவனிக்க முடியுமா...?"

      ... என்று கம்பு சுத்தலாம்.

     கவனிக்க வேண்டும்.., கவனித்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்தே ஆக வேண்டும். அந்த கூந்தலுக்காகத்தான் ஓட்டு போட்டு முதல்வராக தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.

      ஆட்சியில் அமர்பவர்கள் இந்த மக்களை சுரண்டும் கொள்ளைகளை தடுப்பதற்காகத்தான் அதிகாரிகளை சரியான  முறையில் வேலைவாங்கி அரசு இயந்திரத்தை இயக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளனர்.

          அரசாங்கம் என்பது அரசியல் தலைமையால் திட்டமிடப்பட்டு அதிகாரிகளால் மக்களுக்காக இயக்கப்படுவது.

       இந்த கழிப்பிட கொள்ளையை யாரெல்லாம் தடுத்து அந்த கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டிக்கவும் அதிகாரம் பெற்றவர்கள் என பார்க்கலாம்.

1. அந்தந்த பகுதி ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள். அதாவது உள்ளாட்சி துறை.

2. அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார், மாவட்ட ஆட்சியர். அதாவது வருவாய் துறை

3. வார்டு கவுன்சிலர், சட்ட மன்ற தொகுதி உறுப்பினர், பாராளுமன்ற தொகுதி உறுப்பினர். அதாவது அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள்.

4. காவல் துறை

5. மாவட்ட நீதித்துறையும் தாமாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள் - அதாவது நீதித்துறை.

        இத்தனை அமைப்புகள் பொது கழிப்பிட கட்டண கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளன.

         ஆனால் இதுவரை இதற்கு எந்த துறையாவது நடவடிக்கை எடுத்தது உண்டா...? அல்லது யாராவது கேள்வி பட்டதாவது உண்டா...? எதுவும் கிடையாது.

     இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத்தான், மக்களை காக்கத்தான் இத்தனை துறைகள் உள்ளன. இந்த துறையில் உள்ளவர்களுக்கு மக்களின் வரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

        இவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என கண்காணித்து மக்களுக்காக வேலை செய்யத்தான் முதலமைச்சர் என்ற உயர்ந்த பதவி உள்ளது.

        பட்ட பகலில் அனைவரின் கண் முன்பாக, வெளிப்படையாக  அடிக்கப்படும்  இந்த கொள்ளை பற்றி அரசாங்கத்தின் இத்தனை துறைகளில் சம்பளம்  வாங்கும் ஒருவருக்கும் கூட தெரியாதா...? கண்டிப்பாக தெரியும். ஆனால் கண் தெரியாத குருட்டு துறையாக இதன் அதிகாரிகள் கடந்து செல்வதின் காரணம் என்ன...?

     எல்லாம் திராவிட அரசியல் தான். ஊரில் உள்ள ரவுடிகள் தான் இதனை ஏலம் எடுத்து அமர்ந்திருப்பர். அவர்கள் கண்டிப்பாக ஆளும் கட்சியில் ஏதாவது ஒரு பொறுப்பில் இருப்பார்கள். வேறு எவரும் பொது கட்டண கழிப்பிடத்தை ஏலத்தில் எடுக்க முடியாது.

       சரி, இதை எதிர்த்து நீ ஏனப்பா ஒரு புகார் கொடுக்க கூடாது என கேட்கலாம். சோதனைக்காக தைரியமுள்ள எவராவது ஒரு புகாரை தட்டி விடுங்கள். அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கும். காவல் நிலையம் சென்றால் புகார் கொடுக்க போனவன் தலையின் மீது  நான்கு செயின் பறிப்பு வழக்குகள் பதியப்பட்டு லாடம் கட்டி விடுவார்கள்.

        ஆக, இதெல்லாம் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நெட் ஒர்க். பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக சென்று கதவை தட்டுமிடங்களில் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்ட பணம் விகிதப்படி பிரித்து வழங்கி நீதிக்கான கதவை அடைத்து விட்டனர்.

      இன்று ஒவ்வொரு துறையும் இப்படித்தான் இயங்கி வருகிறது. இதற்கு இன்னொரு நல்ல உதாரணம் சினிமா தியேட்டர்கள்.

         எந்த சினிமா தியேட்டர்களிலும் ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் டிக்கெட் கிடையாது. ஆனால் டிக்கெட்டை வாங்கி பார்த்தால் பதினைந்து ரூபாய்க்கு மேல் அதில் கட்டணமாக இருக்காது. மீதி 35 ரூபாய் எங்கே செல்கிறது...?

       வணிகவரித்துறை, காவல் துறை, நீதித்துறை இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு துறைகள். அவர்களுக்கு தெரியாமல் இது நடக்கிறது என்றால் சீயான்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

---------------

       சாதாரண பொது கட்டண கழிப்பிடத்திலேயே வருடத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடிகள் வரை இவர்கள் அடித்திருந்தால்....

     தமிழக  அரசில் உள்ள அமைச்சகங்கள், துறைகள், வாரியங்கள், சமூக நலத்திட்டங்கள், இலவசங்கள், மாணியங்கள்... எக்சட்ரா...எக்சட்ரா....

        அனைத்தையும் கணக்கிட்டு பாருங்கள் தலை சுற்றும்.  ஐந்து வருடங்களில் பல லட்சம் கோடிகள்.... அதாவது மக்களின் பணத்தை அழகாக சுருட்டிக்கொண்டு போனது தெரியும்.

      திருட்டு ரயிலேறி வந்த கருணாநிதி குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் எப்படி வந்தது என்றும் புரியும்.

      இந்த லட்சணத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என மு.க ஸ்டாலின் சொல்வதையும் நம்பி ஓட்டு போட ஒரு முட்டாள் கூட்டம்.

---------------

     இது ஒன்றும் மு.க. ஸ்டாலின் மீதான காழ்ப்பணர்ச்சி பதிவு இல்லை. ஆனால் ஊழலின்  உண்மை வரலாறு இது தான்.

        லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை கொடுப்பேன் என ஸ்டாலின் சொல்வது உண்மை எனில்.....

        இப்போதும் கூட 90% பொது கட்டண கழிப்பிடங்கள், வாகன காப்பகங்கள் தி.மு.க வினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அவர்களிடம் சொல்லி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும்தான் தி.மு.க வினர் மக்களிடம் வாங்க வேண்டும் என அறிவுறுத்தி அதை நடைமுறைப் படுத்தட்டும்.
அப்படி நடந்தால் திமுக ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கவும் வாய்ப்புள்ளது என்பதை நாம் கொஞ்சம் நம்பலாம்.

----------  Bommaiyah Selvarajan.

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...