Tuesday, 23 October 2018

மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்ன கிழித்தார்கள்?" என்ற கேள்வி எழுப்புகிறோம் நம்மில் சிலர்.

"முதல்வர் பினராயி விஜயன் எதற்கு நேரடியாக சபரிமலை விவகாரத்தில் தலையிட வேண்டும்? அவர் நேரடி தலையீடு  இல்லாமலேயே மாநில அரசு இயக்க முடியும் அவரால். அவர் இல்லாததால் (வெளிநாடு போயிருப்பதால்) எந்த பாதிப்பும் இல்லை" - பாலகிருஷ்ணன், சிபிஎம்.

சம்பந்தப்பட்ட மாநில முதல்வரே அங்கு நேரே சென்று ஏதும் செய்வதில்லை. இதுவரை அந்த அவசியம் நேரவில்லை.

இதில், "மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்ன கிழித்தார்கள்?" என்ற கேள்வி எழுப்புகிறோம் நம்மில் சிலர். அவர் நேரடியாக எதையும் கிழிக்க வேண்டிய அவசியம் இதுவரை வரவில்லை - சபரிமலை விவகாரத்தில்.

1) இன்று காலை 9 மணிக்கு இரண்டு பெண்கள் மலையேற, 10:12க்கு தலைமை பூசாரி உள்ளிட்டோர் அதை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாங்கள் வேலையை விட்டு போய் விடுகிறோம் என்கிறார் அவர்.

2) 10:25க்கு கவர்னர் சதாசிவம் காவல் துறையை அழைத்துப் பேசுகிறார்.

3) 10:47க்கு காவல்துறை அந்த பெண்களை திருப்பி அனுப்ப முடிவெடுக்கிறது.

4) 11:09க்கு அந்த பெண்கள் இருவரும் திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

5) கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை விட்டு பணியை தொடர்கிறார்கள். தேவசம் போர்டும் நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்க முடிவெடுக்கிறது.

நம் எதிர்பார்ப்பு, "நீதிமன்ற தீர்ப்பு தவறானது, பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்" என்பது.

அதுதான் இன்று நடந்தது.

நீதிமன்றத்தில் மனு சமர்ப்பிக்க போகிறது தேவசம் போர்டு - பாரம்பரியத்தை காக்க. அதற்கு ஏதுவாக, தேவசம் போர்டின் முடிவில் தலையிட்டு வந்த கேரள ஹிந்துவிரோத கம்யூனிச அரசு, தேவசம் போர்டு சுயமாக முடிவெடுக்க விட்டது.

இது கேரள அரசு தானாக எடுத்த முடிவா? அல்லது இதன் பின்னணியில் கவர்னர் யாரும் இருக்கிறார்களா என்பது பின்னால் தெரியவரும்.

புரையோடிப் போன ஜல்லிக்கட்டு போராட்டத்திலோ, காவேரி விவகாரத்திலோ, அல்லது வட மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் ரோஹிங்கிய பங்களாதேச பாய்மார் விவகாரத்திலோ, வங்காள தேச எல்லை பிரச்சினைகளை முடிவுக்க்கு கொண்டு வந்ததிலோ மோடி 'வெளிப்படையாக' எதுவும் அறிக்கை விடவில்லை.

ஆனால், அனைவரும் ஏற்கும் தீர்வுகள் கொண்டுவந்தார். இப்போது அந்த பிரச்சினைகள் இல்லை.

கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளால் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் கொல்லப்பட்டனர். இந்த கொலைகள் இப்போது நின்றதன் காரணம் என்ன?

மோடி பினராயிக்கு கொடுத்த எச்சரிக்கையா? ராஜ்நாத் சிங் கொடுத்த கடும் எச்சரிக்கையா?  ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் கேரளா சென்று அங்கு சட்ட மன்றத்தில் கொடுத்த எச்சரிக்கையா? கவர்னர் சதாசிவம் பினராயியை கவர்னர் மாளிகைக்கு சம்மன் செய்து கொடுத்த எச்சரிக்கையா? ஆனால், கொலைகள் நின்று விட்டன.

மோடி அரசின் வேலைகள் வெளிப்படையாகத் தான் இருக்கின்றன. நாம் சரியாக கவனிப்பதில்லை.

நாட்டின் பிரதமர் என்ற முறையில்  தன் பணியை திறம்படச் செய்து பிரச்சினைகளை முடித்து வைக்கிறார்.

மன்மோகன் போல வெளிப்படையாக அறிக்கை விட்டு காரியம் செய்யாமல் இருப்பதற்கும், அமைதியாக அறிக்கையே விடாமல் காரியம் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

என் ஆதரவு மோடிக்கே. என் வாக்கு தாமரைக்கே!

9am IST - Women stop approach 500m from temple

9:20am IST - Standoff between police and protesters continue

9:45am IST - Activist Rehana Fathima refuses to leave

10:12am IST - Temple priests join protests

10:25am IST - Governor summons DGP over Sabarimala standoff

10:38am IST - Head priest says he will shut temple if women enter

10:47am IST - Police say women won’t enter temple, to go back

11:09am IST - Women begin climb down, priests call off protest

4:08 PM - 19 Oct 2018 - Right now, there is nothing happening the state the needs the CM's direct intervention& physical presence. It is possible for him to run the government smoothly from wherever he is. So, his absence for three days, is not in anyway affecting the state: Kodiyeri Balakrishnan,CPI(M)

https://www.hindustantimes.com/india-news/sabarimala-row-live-updates-on-day-3-women-make-another-attempt-to-enter-temple-board-to-meet/story-Kk0WRtEAusmrj2ZrvEykGL.html
https://twitter.com/ANI/status/1053233857951133698

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...