Tuesday, 23 October 2018

இக்கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை.

ஜப்பான் நாட்டில் யோஷினோ (Yoshino) மாவட்டத்தில், டென்கவா (Tenkava) என்னுமிடத்தில் சுமார் 1700 மீட்டர் உயர மலையின் மேல் "ஷுஜெண்டோ"
(Shugendo) என்னும்
7-ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட பழமை வாய்ந்த மதத்தினைப் பின்பற்றுபவர்களால் வணங்கப்படும் புகழ் வாய்ந்த "ஓமினேஷன்ஜி"
(Ominesanji) ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மலையின்  புனிதத்தைக் காக்கவும், மதம் சார்ந்த பண்பாட்டினைப் பேணிகாக்கவும், பெண்களுக்கு இம்மலையில் ஏற அனுமதி இல்லை என அறிவிப்புப் பலகையே வைக்கப்பட்டுள்ளது. மிகவும் வளர்ச்சி கண்ட நாடான ஜப்பானிலேயே மக்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிக்கப்படுகின்றது. ஆனால், ஆன்மீகத்தின் பிறப்பிடமான  நம் நாட்டில், நம் நாட்டின் ஆணிவேராகத் திகழும் இந்து மதத்தையே அழிக்கும் நோக்குடன், கேரளாவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள கம்யூனிஸ்ட் மூதேவிகள் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு உச்ச நீதிமன்றமும் ஒத்து ஊதுகின்றது. மூன்று முட்டாள்கள் சேர்ந்து தீர்ப்பு என்ற பெயரில் இந்து மக்களின் மத நம்பிக்கையில் விளையாடி இருக்கிறார்கள்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதித்து, அதனை நிறைவேற்றுவோம் எனக்கூறும்
"பிணநாய்" விஜயன், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து ஏன் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார் என்று கேட்க யாருக்கேனும் தைரியம் இருக்கிறதா? எதிர்த்து கேட்டால் மதவாதி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயம்.

வந்தேறி மதங்களுக்கு வந்தனம் சொல்லிக் கொண்டு, நம்மை வளர்த்தெடுத்த தாய் மதத்தை சில தறுதலைகள் துண்டாட நினைப்பதைக் கைகட்டி, சகல துவாரங்களையம் மூடிக்கொண்டு "நான் மதச்சார்பற்றவன்" என கூறிக்கொண்டு, ஈனப்பிறவிகளாக இன்னும் எத்தனை நாட்கள் வாழப் போகிறீர்கள்?

இந்துக்களுக்கு ஆதரவாகப் பேசினால் மதவாதமாம்! பிற மதங்களுக்கு ஆதரவாகப் பேசினால் அது சிறுபான்மை ஆதரவாம்! "சந்தனம் எங்கள் நாட்டின் புழுதிமண்" என்றுரைத்த ஆழ்வார்களும், நாயன்மார்களும் உலாவிய இத் தமிழ்நாட்டில், இது பெரியார் மண் என்ற ஓலக்குரல்  ஒலிப்பதை இன்னும் எத்தனை நாட்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்?

கோவில்களின் சொர்க்கபூமியான தமிழகத்தில், நாத்திகம் பேசும் நாதாரிகளை நாடாள விட்டது மாபெரும் குற்றம். உண்மை வரலாற்றினை  உருமாற்றி சில ஊதாரிகள் மற்றும் ஊழல் பெருச்சாளிகளின் வாழ்க்கையினை பாடப்புத்தகத்தில் வைத்தால், அதைப்படிக்கும் நம் சந்ததியினர் தான் உருப்படுவார்களா?

காமக் கிழவன்களையும், பெண்பித்தர்களையும் தமிழினத்தின் அடையாளம் எனக்கூறும் அவலநிலை இனியும் தொடரத்தான் வேண்டுமா?

தாய் மொழியையும், தாய் நாட்டையும், தாய் மதத்தையும் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். இந்து என்ற ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் இணைந்து தேசம் காப்போம்.! இந்து தர்மத்தை மீட்டெடுப்போம்! சத்ரபதி சிவாஜி, ஸ்வாமி விவேகானந்தர், மஹாகவி பாரதி ஆகியோர் கனவு கண்ட இந்து சாம்ராஜ்யம் அமைப்போம்! இந்து மதம் என்பது வெறுமனே மதம் அல்ல. அது வாழ்வியல் நடைமுறை.
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...