Monday, 19 November 2018

சபரிமலை கோவில் ஒரு காலத்தில் பௌத்த கோவிலாக இருந்தது..!

கேரளாவை இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் அடித்திருக்கும் காமெடிதான் இந்த ஆண்டின் உச்ச காமெடி என்று சொல்லலாம்..!

அந்த கவர்மெண்ட்டின் வக்கீல் சுப்ரீம்கோர்ட்டில் சொல்கிறார்:

"சபரிமலை  கோவில் ஒரு காலத்தில்  பௌத்த  கோவிலாக இருந்ததுதான்..! அதற்கு ஆதாரம் உண்டு..! 'சரணம்' என்ற வார்த்தை  புத்த மதத்தில்தான் உபயோகப்படுத்தினார்கள் : 'புத்தம் சரணம் கச்சாமி..' என்று..!  அதிலிருந்துதான் 'சரணம்' அய்யப்பா,  சாமி 'சரணம்' என்றெல்லாம்  வந்தது..!"

அடப்பாவிகளா..!

நம்ம திருமாவளவன், வீரமணியெல்லாம் கூட தேவலாம்னு ஆக்கிட்டானுங்களே..?

இனிமே இப்டில்லாம் கூட சொல்வானுங்களோ..?:

"பாடல், இசை  என்பதெல்லாம்  பௌத்த மதம் தந்த கொடைதான்..!  பாருங்கள் அதில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று வருகிறதே, அந்த 'சரணம்' பௌத்த மத வார்த்தை தானே..?"

"பகவான் கண்ணன் பௌத்த மதத்தை சேர்ந்தவர்தான்..! 'நின்னைச் 'சரண'டைந்தேன் கண்ணம்மா.." னு பாரதி பாடியிருக்காரே..?"
^^^^^

கோர்ட்டில்,  கம்யூனிஸ்ட் கவர்மெண்ட் மேலும் சொல்வது : "சபரிமலை ஒரு செக்குலர் கோவில்.!" 

நாம் எப்போதாவது 'செக்குலர் ச்ர்ச்' ,  'செக்குலர் மசூதி'  என்ற வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோமா..?

சபரிமலை விவகாரத்தை, செக்குலர் விவகாரமாக்க கம்யூனிஸ்ட்ஸ் முனைகிறார்கள்..! 'இந்துத்வாவினர் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது அராஜகம் செய்வார்கள்; அவர்கள் பேர் கெடும்..!' என்று நினைக்கிறார்கள்..!  அமைதியாய், நெறி கெடாமல், மக்களுக்கு எந்த இடையூறும் வராமல், சட்டத்தை மீறாமல், கையாள வேண்டியது பிஜேபியினரின்  கடமை..!

கம்யூனிஸ்ட் பார்ட்டி என்ற  முட்டாள்தனமான அரசாங்கத்தை தாம்  தேர்ந்தெடுத்ததை எண்ணி கேரள மக்கள் தங்கள் தலையில் தாங்களே அடித்துக் கொள்கிறார்கள்..! இனி, கம்யூனிஸ்ட்  பார்ட்டி கேரளாவிலிருந்தும் வெளியேற வேண்டியதுதான்..!

பிஜேபிக்கு கேரளாவில் நேரம் கூடி வந்து விட்டது..!

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...