மின்சார ரயில்களில் இனி கழிவறை வசதி: பிரதமர் மோடியின் “தூய்மை இந்தியா” திட்டத்தால் சாத்தியமாகிறது
Kathir Online
Home
தமிழ் நாடு
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இனி கழிவறை வசதி: பிரதமர் மோடியின் “தூய்மை இந்தியா” திட்டத்தால் சாத்தியமாகிறது!
By Kathir WebDesk - 5th December 2018 153 0
சென்னையிலிருந்து அரக்கோணம், திருப்பதி, ஜோலார்பேட்டை, நெல்லூர் ஆகிய ஊர்களுக்கு நீண்ட தூரம் செல்லும் புறநகர் ரயில்களில் முதன்முறையாக பசுமை கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடிந்து வரும் மார்ச் மாதம் முதல் பயணிகள் இந்த வசதியை பெறுவார்கள். சென்னை – அரக்கோணம் மார்கத்தில் செல்லும் 6 ரயில்களின் பெட்டிகளிலும், 7 பெட்டிகளைக் கொண்ட ஒரு ரயிலில்களின் மையப்பகுதியிலும் இந்த கழிவறைகள் இது வரை பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்.
அவர்கள் மேலும் கூறுகையில் ஆவடி ரயில் பெட்டி பராமரிப்பு கூடங்களிலிருந்து 11 பெட்டிகளைக் கொண்ட 2 மோட்டார் கோச்களும், 6 ட்ரைலர் கோச்களும் பராமரிக்கப்படுகின்றன, இவற்றில் 66 கழிவறைகளை பொருத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிக்கப்பட்டு வரும் மார்ச் மாதத்தில் இருந்து பயனுக்கு வரும் என்று அதிகாரிகள் கூறினர். பிரதமர் மோடியின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகிய தூய்மை இந்தியா திட்டம் மூலமே இதுபோன்ற திட்டங்கள் சாத்தியமாகின்றன என்றும் இந்த திட்டத்தின் மூலம் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் குறிப்பாக டயபட்டிஸ் நோயாளிகள் அதிகம் பயன் பெறுவார்கள் எனவும் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறினர்.
No comments:
Post a Comment