Raj Udt:
புது அத்தியாயம் எழுதிய இந்தியா !
எப்படியோ பல தோல்விகளை உடைத்து, இன்று வெற்றியை நோக்கி நமது," காவேரி ஜெட் இன்ஜின்.."
சுதந்திரம் அடைந்ததிலிருந்து போர் விமானம் தயாரிக்க வேண்டும் என்பது நம் கனவு..
போர் விமானம் கூட தயாரித்து விட்டோம் , அதற்கு இன்ஜினை தயாரிக்க முடியவில்லை !
இந்தியாவின் Turbo ஜெட் இன்ஜின் கனவு நேற்று வரையிலும் கனவாகவே இருந்தது.
'நாம் தயாரித்து விட்டால், வெளிநாட்டில் இருந்து விமானங்கள் வாங்கி ஊழல் செய்ய முடியாதே", என்ற எண்ணம் கூட, இந்தியாவால் 60 ஆண்டுகள் ஜெட் இன்ஜின் தயரிக்க முடியாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.....!
உலகத்தில் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி,ஆகிய நாடுகளிடம்" மட்டுமே ஜெட் இன்ஜின் " டெக்னாலஜி உள்ளது..
அந்த வரிசையில் அடுத்தது இந்தியா இனி சேர்கிறது.....!
இந்த தொழில் நுட்பம் "காப்பி அடித்து" உருவாக்க முடியாத தன்மை கொண்டதால், சீனாவால நேற்று வரை கூட தன் முயற்சியில் வெற்றி பெறமுடியவில்லை.....!
நாம் சுய ஜெட் இன்ஜின் உருவாக்கும் திட்டம் ,30 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கியது.
1996 இல் இந்தியா "காவேரி என்ற பெயரில் ஒரு இன்ஜினை உருவாக்கியது.."
அந்த இன்ஜின் பல ஆண்டுகளாக தேவையான "உந்து விசையை தராமல் தோல்வி இன்ஜினாகவே இருந்து வந்துள்ளது.. ....!"
பல திருத்தங்களுக்கு பின்
காவேரி ஜெட் இன்ஜின் 2015ல் மீண்டும் "சோதிக்க பட்ட போதும், உந்து விசை (Thrust) போதவில்லை, எனவே திட்டம் கைவிடும் நிலைக்கு போனது.. ..?"
ஆனால் "மோடி அரசு வேறு விதமாக யோசித்தது.." தொழில்நுட்ப உள்ள நாடுகளில் நாம் உதவி கேட்டால் அது மறுக்காமல் உதவி செய்ய முன் வர வேண்டும் ,என திட்டமிட்டது.
பொதுவாக இது போல் தொழில்நுட்ப உதவிகளை எந்த நாடும் செய்வதில்லை !
என்றுமே இந்தியாவிற்கு பிரான்ஸின் தொழில் நுட்பம் மேல் ஒரு காதல்...!
பிரான்சை வழிக்கு கொண்டு வர, பிரான்ஸிடம் 36 ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்தது...
அதன் உப பலனாக நம் காவேரி இன்ஜினை மேம்படுத்த, மேற்பார்வை இடவேண்டும் என ஒப்பந்தம் போட்டது.. அதன் படி 2017 காவேரி இன்ஜினை மேம்படுத்தும் பணி துவங்கியது..
ஒரே வருடத்திற்குள் இன்று , இந்தியா அந்த இன்ஜினை மேம்படுத்திவிட்டது என செய்திபடிக்கும் போது, என்னால் கூட இந்த இமாலய சாதனையை நம்ப முடியவில்லை......!
நம் விஞ்ஞானிகள் வெற்றிபெற்றார்கள் என சொல்வதை விட. இந்த மோடி அரசு தான் வேறு கோணத்தில் யோசித்து நம்மை வெற்றி பெறவைத்துள்ளது, என சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை..
அடுத்த வருடம் நம் தேஜஸ் விமானத்தில் இந்த இன்ஜின் பொருத்த படும்.
2020 முதல் 100% மேக் இன் இந்தியா விமானம் விண்ணில் பறக்கும்..
இனி ,உலகில் சொந்த போர் விமானம் செய்யும் தொழில் நுட்பம் உள்ள ஐந்தாவது நாடு இந்தியா..
நாம் உருவாக்கிய தேஜஸ் விமானம், இதுவரை 4000 ஆயிரம் முறை ஒரு சிறு விபத்து கூட இல்லாமல் பறந்து
உலக சாதனை புரிந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்..
இனி வானம் நம் வசப்படும் !
எதையும் இன்னும் ஓர் முறை, வேறு கோணத்தில் முயற்சி செய்யலாம் என்பது மட்டுமே "மோடியின் வெற்றி தாரக மந்திரம்."
வந்தே மாதரம் !
No comments:
Post a Comment