Sunday, 30 December 2018

அடேங்கப்பா.. தமிழிசைக்கு இவ்வளவு ஆதரவா.. தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ?

https://t.co/I7UNYYSvlh

.
https://www.facebook.com/402766503251765/posts/970619286466481/
..

அடேங்கப்பா.. தமிழிசைக்கு இவ்வளவு ஆதரவா.. தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ?

என்னதான் சொல்லுங்க, பாஜக தமிழக தலைவர் தமிழிசைதாங்க அதிரடி, சரவெடி என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர் நமது வாசகர்கள். அட ஆமாங்க.. ஏறத்தாழ பாதி பேர்.. உண்மைதான், ஏறத்தாழ வாக்களித்ததில் பாதி பேர் தமிழிசைக்குதான் தங்கள் பொன்னான வாக்குகளை அளித்துள்ளனர். 47.06 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். அட.. ஒருவேளை தமிழிசை சொல்வதை போல தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடுமோ?

இதில் சர்ப்ரைஸ் என்றால் தேமுதிக பிரேமலதாதான். அவருக்கு ஆதரவாக 17.99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். கனிமொழியைவிட சற்று அதிகம். எனவே பட்டியலில் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார், இந்த பெண் அரசியல்வாதி. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் லேசுப்பட்டவர் இல்லை. 3.52 சதவீதம் பேர் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
சசிகலா, டிடிவி தினகரன் அணியின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பிரச்சார பீரங்கி, சி.ஆர்.சரஸ்வதிக்கு ஆதரவாக 2.52 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அதிமுகவின் நிர்மலா பெரியசாமிக்கு, 1.18 சதவீதம் பேரும், பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு 2.85 சதவீதம் பேரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...