https://www.facebook.com/groups/1594930380530366/permalink/2119493551407377/
.
.
#இந்தியா_மோடி_சர்க்காரின் பொருளாதார ஸ்திர நடவடிக்கைகள் எதிரொலி: 2030-ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 2-வது சக்தியாக மாறும்: பிரிட்டிஷ் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனம் கணிப்பு
தற்போது உலகின் முன்னணி பொருளாதார நாடாக அமெரிக்கா உள்ளது. இரண்டாவதாக சீனா உள்ளது. இந்தியா முதல் 10 நாடுகளில் உள்ளது. ஆனால் 2030-ஆம் ஆண்டில் இந்த நிலைமை தலை கீழாக மாறும் என்றும் சீனா #அமெரிக்காவின் இடத்தைப் பிடித்து உலகின் முதல் முன்னணி பொருளாதார நாடாக மாறும் என்றும் இந்தியா சீனாவின் இடத்தை பிடித்து இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்றும், அமெரிக்கா மூன்றாவது இடத்துக்கு சென்றுவிடும் என்றும் பிரிட்டிஷ் நிதி சேவைகள் நிறுவனமான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு கணித்துள்ளது.
மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையிலான உள்நாட்டு மொத்த உற்பத்தி அடிப்படையில் கணக்கிட்டு ஆய்வு செய்து இந்த நிறுவனம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. அந்த கால கட்டத்தில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி $64.2 ட்ரில்லியனாக இருக்கும் என்றும், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி $46.3 ட்ரில்லியனாக இருக்கும் என்றும், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி $31 ட்ரில்லியனாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம்(GDP) நிர்ணயிக்கப்படுகிறது, இது ஒரு காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து இறுதி பொருட்கள் மற்றும் சந்தைகளின் சந்தை மதிப்பை அளவிடும். இந்த அளவுகோல்படி 2030-ஆம் ஆண்டில் அமெரிக்காவை வீழ்த்தி சீனா முதல் இடம் பிடிக்குமென்றும், சீனாவின் இடத்தை இந்தியா கைப்பற்றும் என்றும், அமெரிக்கா 3-வது இடத்துக்கு சென்றுவிடும் என்று கூறும் இந்த நிறுவனம் இந்தோனேசியா நான்காவது இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறுகிறது. 5-வது இடத்தை தற்போது வேகமாக வளர்ந்து வரும் நாடான துருக்கி பிடிக்கும் என்றும் கணித்துள்ளது.
உலகின் சிறந்த பொருளாதார நாடுகளில் முதல் 10 நாடுகளில் ஒன்றான பிரேசில் 6-வது இடத்தை பிடிக்கும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. தற்போது இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.6 டிரில்லியன் ஆக இருக்கும். 7-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக எகிப்து திகழும் என்றும் இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும், $7.9 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ரஷ்யா எட்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும், ஜப்பானும் ஜெர்மனியும் முறையே $7.2 டிரில்லியன் டாலரும், $6.9 டிரில்லியன் டாலர்கள் உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு ஜப்பான் 9-ம் இடத்திலும், ஜெர்மனி 10-வது இடத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் 10 முக்கிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் உள்ள இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை 2030-ஆம் ஆண்டில் இந்த பட்டியலில் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது மார்ச் மாத இறுதிக்குள் நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தலில் இரண்டாவதாக மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தால் மேற்கண்ட தேசிய தேர்தல்களில் இரண்டாவது முறையாக பதவி ஏற்றால் 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி வீதம் அவருக்கு ஓரளவு நிம்மதியை தரும் எனவும் அந்த பிரிட்டிஷ் நிறுவனம் கூறியுள்ளது. பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டில் பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வு, விவசாய விளை பொருள்களின் உற்பத்தி வீழ்ச்சி போன்றவற்றால் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது.
ஆனால், தற்போது பல பொருள்களின் மீதான விலைவாசி வீழ்ச்சியால் வளர்ச்சி சதவீதம் கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் மாதம் பட்ஜெட் அறிவிக்கப்படும் என்பதால் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும், வருடாந்திர வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத்துக்கான நிதி அதிகரிப்பு அதிகமாக இருக்குமாறும், அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் கிராமப்புற கோரிக்கைகளை முடுக்கிவிட மோடி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் எனவே அடுத்த ஆண்டு சிறந்த வளர்ச்சி ஆண்டாக இருக்குமென்றும், மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நிதிசார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு நேரடியாக பலன்களை கொண்டு செல்லும் திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவற்றால் இந்தியாவின் வளர்ச்சி எதிர்காலத்தில் உச்சத்தில் இருக்கும் என்றும், குறிப்பாக இன்னும் 12 ஆண்டுகளில் உலக அளவிலான உயர்மட்ட பொருளாதாரப் போட்டி சீனா – இந்தியாவுக்கு இடையில்தான் இருக்குமென்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment