Sunday, 13 January 2019

லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காமெடி


https://www.facebook.com/100027250731072/posts/255917221993300/

.      லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்லிக் கொண்டு ஊர் ஊராக கிராம பஞ்சாயத்து என்ற பெயரில் காமெடி செய்து கொண்டுள்ளார்.

          லஞ்சம், ஊழல் பற்றி பேச இவருக்கும் தி.மு.க விற்கும் தகுதி உள்ளதா என்பதை பார்ப்பது அவசியம்.

       லஞ்சம், ஊழல் என்பது  தமிழகத்தை பொறுத்தவரை கருணாநிதிக்கு முன், கருணாநிதிக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம்.

        சுதந்திரம் அடைந்த பிறகான தமிழக அரசியலில் ஊழல் என்பது கிடையாது. ஊழல் ஆரம்பமானது அண்ணாதுரை மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான பின் தான்.

        அதற்கு முன் அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது பயந்து பயந்து யாருக்கும் தெரியாமல் வாங்கும் சொற்ப தொகையாக இருந்தது.

       புண்ணியவான் கருணாநிதி வந்ததும் இது அப்படியே மாறியது.

      வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல் என கருணாநிதி ஊழல் நாயகனாக வலம் வந்தார். கவனிக்கவும் ஊழல் மட்டும் தான். அதாவது அரசு டென்டர்களுக்கு கமிஷன் பெறுவது மட்டும். அதே காலத்தில் அரசு அலுவலகங்களில் வேலைக்கு மக்களிடம் லஞ்சத்தை வெளிப்படையாக பெற ஆரம்பித்தனர். அதாவது அவரவர் இருக்கும் பதவி, தகுதிகளுக்கு ஏற்ப லஞ்சம், ஊழல் வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்டது இந்த கால கட்டத்தில் தான்.

          அதன் பின் கருணாநிதி ஆட்சியிழந்து வனவாசம்  போன காலத்தை விட்டு விடலாம்.

        எம்ஜிஆர் மறைந்த பின் கருணாநிதி ஆண்ட இரண்டு ஆண்டு காலம்  1989 - 1991 ஊழல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனை உண்டானது.

        ஆளும் வர்க்கம் அரசு அதிகாரிகளின் அதிகார வர்க்கத்தோடு இணைந்து ஊழல் செய்ய ஆரம்பித்தது. அரசு டெண்டர்கள் கமிஷன் பெறுவதற்காகவே கூடுதலாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு இரண்டு கூட்டமும் பிரித்துக் கொண்டது.

      1991 ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க இந்த பார்முலாவை பயன்படுத்தி தான் வாரிக்குவித்து கொழித்தது. வகை தொகையில்லாமல் அப்போது குவித்த சொத்துக்கள் தான் பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் இன்று கொண்டு போய் விட்டுள்ளது.

       1996 ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி ஊழலின புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தார். அதுவரை கான்டிராக்ட், கமிஷன் என்று கட்டிங் வாங்கிய அரசியல் வாதிகள் உறவினர்கள், பினாமிகள் பெயர்களிலேயே கம்பெனிகள் தொடங்கி அந்த கம்பெனிகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்களை வழங்கி கொள்ளையடித்தனர்.

          இதன் பின்னணியில்  இருந்தது தி.மு.க தலைவரின் அடுத்த தலைமுறையான மாறன் பிரதர்ஸ். அதாவது பினாமி, உறவினர்கள் பெயரில்  கார்பரேட் நிறுவனங்கள் தொடங்கி அதற்கேற்ற வகையில் அரசின் விதிமுறைகளை உருவாக்கி, பாரம்பரியமான பிற போட்டி  நிறுவனங்களை அதிகார பலத்தால் நசுக்கி கொளுத்தனர். பிற்பாடு சட்ட சிக்கல்கள், வருமான வரி விவகாரங்கள் வரக்கூடாது என்பதற்காக அரசியல் வாதிகள், அதிகாரிகள், ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள் என ஒரு டீம் ஒர்க்காக  பக்காவாக பிளான் செய்து ஒரு புதிய வரலாற்றை படைத்தது இந்த கால கட்டத்தில் தான். மாறன் பிரதர்ஸ்சின் சன் டிவி, சுமங்கலி கேபிள் விஷன் எல்லாம் இந்த ரகம் தான்.

          மேலே சொன்னது எல்லாம் கருணாநிதி என்ற மூலவரின் மட்டம் எனில் அதற்கடுத்த மட்டமான அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அளவில் கல்வி தந்தைகளாகவும், வணிக வளாக உரிமையாளர்களாகவும்,  தொழில் அதிபர்களாகவும் மாறியிருந்தனர்.

       அதற்கும் கீழ்மட்ட வார்டு, வட்ட செயலாளர்கள் சைக்கிள் ஸ்டேன்ட், கார் பார்க்கிங், செருப்பு  பாதுகாப்பகம், பொது கழிப்பிட கான்டிராக்ட்களில் நுழைந்து மற்றவவர்களை விரட்டியடித்து   அடிமாட்டு  விலைக்கு எடுத்து விதிமுறைகளை மீறி பல மடங்கு கட்டணத்தை அடாவடியாக வசூலிக்க ஆரம்பித்தனர். தனது கட்சிக்காரன் என்பதால் இதற்கு அரசின் மறைமுக ஆதரவும் இருந்ததால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மாறாக அதிகாரிகளுக்கும பங்கு கிடைத்தது. பங்கு பெறுவோர் பட்டியலில்  அரசியல் வாதிகளும் சேர்ந்தனர்.

       2001 ல் ஆட்சியை கருணாநிதியிடமிருந்து தட்டிப் பறித்த ஜெயலலிதா இந்த ஊழல் வியூகத்தை அவர் பின்பற்றி சசிகலா வகையறாக்களும் அதிமுக பிரமுகர்களும் வாரி குவித்தனர்.

----------

         2006 ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சம் இதையெல்லாம் தாண்டி புதிதாக பரிணாம வளர்ச்சி அடைந்தது.

        கண்ணில் படும் சொத்துக்கள், தொழிற் சாலைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் பொது மக்களிடமிருந்து அடாவடியாக பிடுங்கப்பட்டது அல்லது அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கப்பட்டது.

          கார்பரேட் கம்பெனிகளை ஆரம்பித்து கொள்ளையடித்த கருணாநிதி குடும்பம் அரசாங்கத்தையே தங்களது சொந்த கம்பெனிகளாக மாற்றி வருமானம் பார்த்தது இந்த காலத்தில் தான்.

          ஊழல் பணத்தில் வெளிநாட்டில் சொத்துக்களை வாங்கி குவிக்கும் தொழில் நுட்பம் இந்த காலகட்டத்தில் தான் உச்சமடைந்தது.

      இதற்கு சிறந்த உதாரணம் அரசு போக்கு வரத்துக் கழகங்கள். நடத்துனர், ஓட்டுனர் வேலைக்கு மூன்று முதல் ஐந்து லட்சம் வரை வாங்கிக்கொண்டு சகட்டு மேனிக்கு ஆட்களை வேலைக்கு எடுத்தனர். ஒரு பேருந்திற்கு எட்டு பேர், பத்து பேர் ஊழியர்கள் என்ற அளவிற்கு போக்குவரத்துக் கழகங்களே சீரழிந்தது. மிதமிஞ்சிய பணியாளர்களால் போக்குவரத்து கழக சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டு சம்பளம் போடும் அளவிற்கு மோசமான நிலையை அடைந்தது.

        அரசு பேருந்து விபத்துகளில் நஷ்ட ஈடு தர முடியாமல் பேருந்துகள் நீதிமன்றத்தால் ஆங்காங்கு பறிமுதல் செய்யப்படாத நாளே கிடையாது என்ற அளவில் கேவலமான நிலைக்கு வந்தது.

      ஒட்டு மொத்த திரைத்துறையையும் கபளீகரம் செய்து அடாவடி + கார்பரேட் மூளையுடன் திமுக குடும்பம்  முன்னேறியது. மாவட்டம் தோறும் குறுநில மன்னர்களாக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும்  வலம் வந்தனர்.

        முன்பு நடந்ததெல்லாம் ஊழல் எனில் செய்யும் வேலையில் கமிஷன், பினாமி பெயர்களில் அரசு ஒப்பந்தம் பெறுதல் என இருந்தது. ஆனால் 2006 - 2011 வரை அரசு திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் மொத்த தொகையையும் சேதாரமின்றி அப்படியே   கபளீகரம் செய்தனர்.

           போடாத ரோட்டிற்கு, தூர் வாரப்படாத நீர் நிலைகளில் குடி மராமத்துக்காக ஒதுக்கப்படும் பணத்தை அப்படியே ஸ்வாகா செய்தனர்.

      இதையெல்லாம் விட ஒரு பெரிய கொடுமையும் நடந்தது. மாநிலத்திற்கு ஒரு தலைமைச் செயலகம் தான் இருக்கும். தமிழகத்தில் மட்டும் இரண்டு தலைமைச் செயலகங்கள் அப்போது இயங்கியது. ஒன்று சென்னையில் ,  மற்றொன்று மதுரையில். அதாவது தமிழ்நாட்டையே குடும்ப சொத்தாக்கி இரண்டாக பிரித்து விட்டார்கள்.

.     சென்னையிலிருந்து    திருச்சி வரை சுடலை, திருச்சிக்கு தெற்கே உள்ள தென் தமிழகத்திற்கு அஞ்சா நெஞ்சர்.

        டிரான்ஸ்பர், டிரான்ஸ்பர் ரத்து, பதவி உயர்வு, அரசு வேலை, அரசு ஒப்பந்தங்கள்,  அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு அனைத்திற்கும் தனி அலுவலகமே போட்டு கோடிகளை குவித்தனர்.

        2011  வரை இது தொடரந்தது.

------------------

          இவ்வளவு நீண்ட பதிவை எழுத காரணம்  உள்ளது. தி.மு.க ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்போதும் ஊழலில் அடுத்த கட்டத்தை எட்டியது என்பது தான் வரலாறு.

      இந்த லட்சனத்தில் ஆட்சிக்கு வந்தால்  ஊழலை  ஒழிப்போம் என்று ஸ்டாலின் சொல்வது சுத்த பைத்தியக்காரத்தனம். கண்டிப்பாக ஸ்டாலினிற்கு் லஞ்ச ஊழல் பற்றி பேசவே தகுதி இல்லை. தாங்கள் சுரண்டியது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களிலிருந்து கோவில் வரை மக்களை கொள்ளையடிப்பதற்கென்றே ஒரு கூட்டத்தை வளர்த்து விட்டு இவர்களும் ஆதாயம்  ஆதாயம் அடைந்துள்ளனர்.

       இதை புரிந்து கொள்ள பெரிய அளவில் போக வேண்டாம். நம்மூர் பொது கட்டண கழிப்பிடத்தை பற்றி ஆராய்ந்தாலே போதும்.
பப்ளிக் டாய்லட் என்று நாம் கடந்து செல்லும் சாதாரண பொது கழிப்பிடத்திலேயே கோடிகளில் ஊழல் செய்யும் அளவிற்கு தமிழ் நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கி வைத்துள்ளது தான் தி.மு.க வின் சாசனை.

          இந்த பப்ளிக் டாய்லட்டில் எத்தனை கோடிகள் பொதுமக்களின் பணம் அள்ளப்படுகிறது என்பதை ஒரு புரிதலுக்காக பாரக்கலாம்.

----------------------

தமிழ்நாடு மொத்த தாலுக்காக்கள் = 290

ஒரு தாலுகாவிற்கு தோராயமாக 10 பொது கட்டன கழிப்பிடம் எனில் தமிழகத்தில் உள்ள மொத்த பொது கட்டண கழிப்பிடங்கள் = 2900

ஒரு கட்டண கழிப்பிடத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 300 பொது மக்கள் பணம் கொடுத்து உபயோகிக்கின்றனர்.

ஒரு வருடத்திற்கு = 300 × 365 = 1,09,500

2,900 கழிப்பிடங்களை  ஒரு வருடத்தில் உபயோகிப்பவர்கள்
எண்ணிக்கை

       1,09,500 × 2,900 = 31,75,50,000

      இதை தோராயமாக 30 கோடி முறை மக்கள் பணம் செலுத்தி உபயோகிக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.

           அரசு நிர்ணயித்த கட்டணம் சிறுநீர் கழிக்க ரூபாய் 1.00, மலம்  கழிக்க
ரூபாய் 2.00.  இந்த கட்டணம் தான் பொது கழிப்பறைகளில் நமது பார்வையில் படும்படி எழுதி வைத்திருப்பார்கள்.

      விதிமுறைகள் மற்றும் சட்டப்படி   இந்த கட்டணத்தை வசூலித்தால் மலம் கழித்தல் + சிறுநீர் கழித்தல் இரண்டுக்குமாக சேர்த்து தமிழகத்தின் மொத்த கட்டண கழிப்பிடங்களின் ஒட்டு மொத்த வருட  வசூல் 40 கோடியை தாண்டாது.

        ஆனால் நடப்பது என்ன...? சிறுநீர் கழிக்க ஐந்து ரூபாயும், மலம் கழிக்க பத்து ரூபாயும் கொள்ளை அடிக்கின்றனர்.  அதாவது ஐந்து மடங்கு...! இந்த கணக்கை பார்த்தால் வருடத்திற்கு குறைந்தது 200 கோடிகள்.

      கொள்ளை கட்டணம் 200 கோடி - அரசு நிர்ணயித்த  கட்டணம் 40 கோடி = 160 கோடிகள்.

        புரிகிறதா...? கணக்கில் வராத மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட 160 கோடிகள் எங்கே செல்கிறது...?

-----------------

       இந்த இடத்தில் தி.மு.க உள்ளிட்ட அனைத்து திராவிட கட்சிகளுக்காக சில புத்திசாலிகள்...

       " சாதாரண கக்கூசில் நடக்கும் பிரச்சனைகளையெல்லாம் முதல்வர் பதவியிலிருப்பவர்கள் கவனிக்க முடியுமா...?"

      ... என்று கம்பு சுத்தலாம்.

     கவனிக்க வேண்டும்.., கவனித்து மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்தே ஆக வேண்டும். அந்த கூந்தலுக்காகத்தான் ஓட்டு போட்டு முதல்வராக தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.

      ஆட்சியில் அமர்பவர்கள் இந்த மக்களை சுரண்டும் கொள்ளைகளை தடுப்பதற்காகத்தான் அதிகாரிகளை சரியான  முறையில் வேலைவாங்கி அரசு இயந்திரத்தை இயக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளனர்.

          அரசாங்கம் என்பது அரசியல் தலைமையால் திட்டமிடப்பட்டு அதிகாரிகளால் மக்களுக்காக இயக்கப்படுவது.

       இந்த கழிப்பிட கொள்ளையை யாரெல்லாம் தடுத்து அந்த கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், தண்டிக்கவும் அதிகாரம் பெற்றவர்கள் என பார்க்கலாம்.

1. அந்தந்த பகுதி ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள். அதாவது உள்ளாட்சி துறை.

2. அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார், மாவட்ட ஆட்சியர். அதாவது வருவாய் துறை

3. வார்டு கவுன்சிலர், சட்ட மன்ற தொகுதி உறுப்பினர், பாராளுமன்ற தொகுதி உறுப்பினர். அதாவது அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள்.

4. காவல் துறை

5. மாவட்ட நீதித்துறையும் தாமாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள் - அதாவது நீதித்துறை.

        இத்தனை அமைப்புகள் பொது கழிப்பிட கட்டண கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றுள்ளன.

         ஆனால் இதுவரை இதற்கு எந்த துறையாவது நடவடிக்கை எடுத்தது உண்டா...? அல்லது யாராவது கேள்வி பட்டதாவது உண்டா...? எதுவும் கிடையாது.

     இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காகத்தான், மக்களை காக்கத்தான் இத்தனை துறைகள் உள்ளன. இந்த துறையில் உள்ளவர்களுக்கு மக்களின் வரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

        இவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என கண்காணித்து மக்களுக்காக வேலை செய்யத்தான் முதலமைச்சர் என்ற உயர்ந்த பதவி உள்ளது.

        பட்ட பகலில் அனைவரின் கண் முன்பாக, வெளிப்படையாக  அடிக்கப்படும்  இந்த கொள்ளை பற்றி அரசாங்கத்தின் இத்தனை துறைகளில் சம்பளம்  வாங்கும் ஒருவருக்கும் கூட தெரியாதா...? கண்டிப்பாக தெரியும். ஆனால் கண் தெரியாத குருட்டு துறையாக இதன் அதிகாரிகள் கடந்து செல்வதின் காரணம் என்ன...?

     எல்லாம் திராவிட அரசியல் தான். ஊரில் உள்ள ரவுடிகள் தான் இதனை ஏலம் எடுத்து அமர்ந்திருப்பர். அவர்கள் கண்டிப்பாக ஆளும் கட்சியில் ஏதாவது ஒரு பொறுப்பில் இருப்பார்கள். வேறு எவரும் பொது கட்டண கழிப்பிடத்தை ஏலத்தில் எடுக்க முடியாது.

       சரி, இதை எதிர்த்து நீ ஏனப்பா ஒரு புகார் கொடுக்க கூடாது என கேட்கலாம். சோதனைக்காக தைரியமுள்ள எவராவது ஒரு புகாரை தட்டி விடுங்கள். அடுத்த அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கும். காவல் நிலையம் சென்றால் புகார் கொடுக்க போனவன் தலையின் மீது  நான்கு செயின் பறிப்பு வழக்குகள் பதியப்பட்டு லாடம் கட்டி விடுவார்கள்.

        ஆக, இதெல்லாம் ஒரு நன்கு திட்டமிடப்பட்ட நெட் ஒர்க். பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக சென்று கதவை தட்டுமிடங்களில் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்ட பணம் விகிதப்படி பிரித்து வழங்கி நீதிக்கான கதவை அடைத்து விட்டனர்.

      இன்று ஒவ்வொரு துறையும் இப்படித்தான் இயங்கி வருகிறது. இதற்கு இன்னொரு நல்ல உதாரணம் சினிமா தியேட்டர்கள்.

         எந்த சினிமா தியேட்டர்களிலும் ஐம்பது ரூபாய்க்கு குறையாமல் டிக்கெட் கிடையாது. ஆனால் டிக்கெட்டை வாங்கி பார்த்தால் பதினைந்து ரூபாய்க்கு மேல் அதில் கட்டணமாக இருக்காது. மீதி 35 ரூபாய் எங்கே செல்கிறது...?

       வணிகவரித்துறை, காவல் துறை, நீதித்துறை இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு துறைகள். அவர்களுக்கு தெரியாமல் இது நடக்கிறது என்றால் சீயான்களும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

---------------

       சாதாரண பொது கட்டண கழிப்பிடத்திலேயே வருடத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடிகள் வரை இவர்கள் அடித்திருந்தால்....

     தமிழக  அரசில் உள்ள அமைச்சகங்கள், துறைகள், வாரியங்கள், சமூக நலத்திட்டங்கள், இலவசங்கள், மாணியங்கள்... எக்சட்ரா...எக்சட்ரா....

        அனைத்தையும் கணக்கிட்டு பாருங்கள் தலை சுற்றும்.  ஐந்து வருடங்களில் பல லட்சம் கோடிகள்.... அதாவது மக்களின் பணத்தை அழகாக சுருட்டிக்கொண்டு போனது தெரியும்.

      திருட்டு ரயிலேறி வந்த கருணாநிதி குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் எப்படி வந்தது என்றும் புரியும்.

      இந்த லட்சணத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என மு.க ஸ்டாலின் சொல்வதையும் நம்பி ஓட்டு போட ஒரு முட்டாள் கூட்டம்.

---------------

     இது ஒன்றும் மு.க. ஸ்டாலின் மீதான காழ்ப்பணர்ச்சி பதிவு இல்லை. ஆனால் ஊழலின்  உண்மை வரலாறு இது தான்.

        லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை கொடுப்பேன் என ஸ்டாலின் சொல்வது உண்மை எனில்.....

        இப்போதும் கூட 90% பொது கட்டண கழிப்பிடங்கள், வாகன காப்பகங்கள் தி.மு.க வினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அவர்களிடம் சொல்லி அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும்தான் தி.மு.க வினர் மக்களிடம் வாங்க வேண்டும் என அறிவுறுத்தி அதை நடைமுறைப் படுத்தட்டும்.
அப்படி நடந்தால் திமுக ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்கவும் வாய்ப்புள்ளது என்பதை நாம் கொஞ்சம் நம்பலாம்.

----------  Bommaiyah Selvarajan.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...