Tuesday, 29 January 2019

ஒரு தமிழக பா.ஜ.க காரனின் பதிவு. ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும்

ஒரு தமிழக பா.ஜ.க காரனின் பதிவு.
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும்.

எங்களுக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தான் எங்கள் சொத்து என்று நகையாடும் நீங்கள் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திருச்சியில் இளந் தாமரை மாநாட்டுக்காக கூடிய போது ஏமாந்து போன பழைய பாட்டில் வியாபரிகளை பத்திரிக்கை வெளியிட்ட போது தெரிந்திருக்கலாம் எவ்வளவு ஒழுக்கமான தொண்டர்கள் என்று.

BJP வந்தால் மதகலவரம்  வரும் என கூறிய எதிர்கட்சிகள் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத போது சாதி சண்டையை உருவாக்கியதை நினைவு கூற முனைகிறேன்.

இன்னும் சொல்ல போனால் உதயநிதி ஸ்டாலினுக்கு மகுடம் சூட்ட தயாராகும் திராவிட கட்சிகள் அதை ஆதரிக்கும் மக்களே உற்று நோக்குங்கள் இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு மட்டும் அல்ல அரசியல் பின்புலம் இல்லாதவர்களையும் மிக பெரிய பதவிகளில் அமர்த்தும்  பா.ஜ.க வை பார்த்து நகையாடுவது எந்த விதத்தில் நியாயம் ....

25 ஆண்டுகளாக கோலோச்சிய கம்யூனிஸ்ட் சிந்தாந்தம் திரிபுராவில் பாஜக வின் வளர்ச்சியால் அழிந்ததற்கு காரணம் என்ன...?

வேறொன்று மில்லை அவர்கள் நாட்டை துண்டாட நினைத்தார்கள் நாங்கள் வளர்ச்சியை பற்றி பேசினோம். அவர்கள் இந்து முஸ்லிம் கிருஸ்துவன் என்று மதத்தை வைத்து உடைக்க நினைத்த போது நாங்கள் ஒவ்வொரு இந்தியனுக்கும் இலவச காப்பீடு கொடுத்தோம்...

அவர்கள் சீனாவுக்கு விலை போன நேரத்தில் நாங்கள் பழங்குடி மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு கொடுத்தோம்...

பிரிவினை வாதத்தை அறுவடை செய்த போது நாங்கள் இந்திய உணர்வை விதைத்து சென்றோம் ...

அவர்கள் நக்சல்களுக்கு நிதி ஓதுக்கிய போது நாங்கள் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கினோம்...

அவர்கள் இளைஞர்களை நக்சலாக்க விரும்பினார்கள். நாங்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக மாற்றினோம் ...

இது தான் எங்களின் திரிபுரா நாகலாந்து வடகிழக்கு மாநிலங்களில் வெற்றிக்கான காரணம்..

நீங்கள் ஏழை முதல்வர் மாணிக் சர்க்காருக்காக கூச்சலிடுகிறீர்கள்.

நாங்கள் ஏழையாகவே மக்களை வைத்திருந்த முதல்வரை வீழ்த்தி விட்டோம் என்று பெருமிதத்தில் வெற்றியை கொண்டாடுகிறோம்.

உங்களுக்கு தெரியாது என்னை போன்ற இளைஞர்கள் பலர் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவிலும், நாகலாந்திலும்.

இந்திய கட்சிகளிலே அதிக இளைஞர்கள் பதவியில் இருக்கும் கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டுமே...

புரட்சி தலைவி அம்மா என்றீர்கள் அவரின் மரணத்தின் ஆயிரம் சந்தேகம் இருக்கும் சின்னம்மாவை தியாக தலைவி என்று அழைக்கும் போது வராத வெட்கம் தமிழச்சியின் வீரம் அறிந்து நிர்மலா சீதாராமனுக்கு இராணுவ அமைச்சராக்கினோமே அதனால் தான் வெட்கப்படுகிறீர்களோ?

தமிழக இளைஞர்களே உங்கள் பார்வையை கொஞ்சம் நடுநிலைக்கு மாற்றுங்கள், உங்களை நான் பாஜகவில் இணையுங்கள் என்று கேட்க வில்லை, ஏன் எதிர்கிறோம் என்று சிந்தியுங்கள்...

H.ராஜாவை விமர்சிக்கும் நீங்கள் கருணாஸைத் தான் சட்டமன்றத்திற்கு அனுப்பினோம் என்று வெட்கப்படுங்கள்...

ஒற்றை MP யாக இருந்து கொண்டு இத்தனை திட்டங்கள் கொண்டு வந்த பொன்.ராதா கிருஷ்ணை விமர்ச்சிக்கும் நீங்கள் MP திருச்சியி சிவாவோடு கூத்தடிக்கும் MP சசிகலா புஷ்பாவைத்தைதான் அனுப்பி இருக்கிறிர்கள் என்பதற்காக தலை குனியுங்கள்...

தமிழிசையை கேலி பேசும் நீங்கள் உங்கள் தமிழச்சியாக கொண்டாடுவது கனிமொழிக்கும்  என்பதை மறந்து விடாதீர்கள்...

பா.ஜ.க வை எதிர்த்து மீம்ஸ் போடுபவர்களே... உங்களை வடிவேலுவை வைத்து ஏமாற்ற நினைத்த திமுக பின்னால் போகிறீர்களே... என்ன நியாயம்..?

உடையின் விலையை சொல்லி ஒதுக்கும் ஒரு பிரதமரை, ஒரு லட்சம் கோடி மேலாக             கொள்ளைக்கு துணை போன கனிமொழிக்கும் ஆ.ராசாவுக்கும் விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பது தான் உங்கள் தமிழ் பண்பாடா?

பசு மாட்டுக்காக ஒருவர் இறந்ததை உலகம் முழுதும் காட்டிய ஊடகம் கடந்த வாரத்தில் சென்னையில் கிருத்துவ
காப்பகத்தில் 1550 முதியோர் கொலையை கடுகளவும் விமர்சிக்காதது ஏன்..?

கொஞ்சம் சிந்தியுங்கள் என் நண்பா...

அம்பேத்கரின் பெயரில் கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் தான்  உங்களுக்கு தலைவன் என்றால்..., அம்பேத்கரின் பிள்ளையை குடியரசு தலைவராக அழகு பார்த்த என் கட்சி எனக்கு கடவுள்...

உங்கள் மூலையை மழுங்கடிக்க ஹைட்ரோ கார்பன்,கதிரா மங்கலம், மீத்தேன், கெயில் போன்ற திட்டங்கள் யார் ஆட்சியில் இருக்கும் போது கையெழத்திட்டார்கள் என்று கொஞ்சம் வள்ளுவனின் வழி வந்த பிள்ளையாக சிந்தியுங்கள்...

ஜல்லிகட்டு யார் தடுத்தது என்ற கேள்வியை உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள?

கட்டணமில்லா நவோதயா பள்ளிகளை முடக்கும் திராவிட கட்சிகள் பின்னால் எத்தனை கொள்ளை அடிக்கும் கல்வி கூடங்கள் இருக்கிறது என்று கணக்கெடுங்களேன்.

காவிரிக்கு குறை கூறும் கம்யூனிஸ்ட்களால் கேரள கம்யூனிஸ் அரசிடம் முல்லை பெரியாற்று பிரச்சினையை தீர்க்க முடியுமா? என்று கேளுங்கள்?

காவிரிக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் க

ர்நாடக காங்கிரஸிடம் பேசி காவிரி பிரச்சினை தீர்க்க முடியுமா? என்று கொஞ்ம் கேளுங்கள்?

காவிரி நீர் பிரச்சினை காலங்காலமாக பழி சுமத்துபவர்களே உங்கள் நொய்யலும் வைகையும் பவானியும் எங்கே...? வழித்தடம் எங்கே...?

மணல் அள்ளி ஆற்றை துவம்சம் செய்தது யார்?

50 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை தடுப்பனைகள், எத்தனை நீர் தேக்கங்களை உங்களுக்கு தந்தார்கள்?

வருடம் வருடம் வெள்ளமாக 90% நீர் கடலில் கலக்கிறதே இது தடுக்காமல்  கர்நாடக காவிரி நீருக்கு  கையேந்த வைக்கிறார்களே இது தான் தமிழ் இனத்தின் அடையாளமா?

கொஞ்சம் சுய பரிசோதனை செய்யுங்கள்.

ஈழத்தில் ஒன்றறை இலட்சத்து மக்களை கொன்று குவித்த காங்கிரஸ் திமுகவை திரும்பவும் ஆட்சியில் அமர்த்த துடிக்கிறிர்களே இது தான் உங்கள் தமிழ் இரத்தமா?

இன்னும் எத்தனையோ கேள்விகள் இதயத்தில் இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய சகோதரனுக்கு பா.ஜ.க தேவைப்படுகிறது. ஏனென்றால் அவன் பாகிஸ்தான் தீவிர வாதிகளால்  பாதித்தவன்...

ஆனால் இங்கு சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வென்றால் பட்டாசு  வெடிக்கும் மதசார்பற்றவர்களை என்ன தான் சொல்வது.

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உயிரை கொடுத்தாவது தமிழகத்தில் கால் பதிக்காமல் விட மாட்டோம்...

உங்கள் இதயத்தை திறக்கும் சாவி எங்களிடம் இருக்கிறது. நாங்கள் மதவாதிகள் அல்ல மிதவாதிகள்...

நாங்கள் நம் இளைஞனை கர்நாடக வுக்கும் கேரளாவுக்கும்  எதிராக கொம்பு சீவுவர்கள் அல்ல.

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் எதிராக தொழில் நுட்பத்தில்  போட்டியிட வைப்போம்...

அன்று கவுன்சிலர் பின்னால் துவங்கிய என் அரசியல் அத்வானி வீட்டில் அமர வைத்தது என்றால் என் பாதை சரி தானே...

போராடாமல்  அவமானப்படாமல் ஒருவன் இருக்க விரும்பினால் வரலாற்றின்  வாசலுக்கே இடம் இல்லை...

எங்கு நிராகரிக்கப் படுகிறாயோ அங்கு நீ நிராகரிக்க முடியாத மனிதனாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம்....

தமிழகத்தில் நல்ல  தலைவர் இல்லை...

ஆம், இங்கு தொண்டனை ஏமாற்றும் தலைவன் இல்லை ..

உங்களை தலைவனாக மாற்றும் அமைப்பு எங்களிடம் உள்ளது....

சிந்தியுங்கள் நண்பர்களே களமாடுவோம் தேசதுரோதிகளை அடையாளம் கொள்வோம்...

தமிழ் மானம் காப்போம்.....

கோவை குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர்களை நீங்கள் தேசியவாதியாகவும், வெடித்து சிதறியவர்களை இந்துவாக கடந்து போவதுதான் வேதனை தருகிறது...

அரிசி திருடியதாக மனநோயாளிக்கு மரண தண்டனை கொடுத்தவர்கள் எந்த மதத்தத்தை சார்ந்தவர்கள்.

இதே தவறை பாஜக ஆளும் மாநிலத்தில் நிகழ்ந்தால் என்ன செய்திருபீர்கள்...?

நாங்கள் தமிழனின்  மானம் காப்போம்.

வாழ்க பாரதம்... Kamalan babu

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...