காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு...
இத்தாலி நாட்டைச் சார்ந்த சோனியாயை நீங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதற்க்கு நீங்கள் பெருமை படுகிறீர்களா? உங்களால் ஒரு தமிழனை தான் ஆட்சியில் அமர வைக்க முடியவில்லை.ஒரு இந்தியனை கூடவா தலைவனாக ஏற்றுக் கொள்ளும் அறிவு இல்லை. இந்தியா ஒரு மக்களாட்சி நாடு... ஆனால் இங்கு நடப்பதோ மன்னர் ஆட்சி முறை.காரணம் 70 ஆண்டுகளாக மத்தியில் குடும்ப ஆட்சி (காந்தி நேரு,மகள் இந்திரா காந்தி,மகன் ராஜீவ் காந்தி,மனைவி சோனியா காந்தி,மகன் ராகுல் காந்தி மற்றும் பின்வரும் சந்ததியினர்). 50 ஆண்டுகளாக மாநிலத்தில் குடும்ப ஆட்சி (கலைஞர்,மகன் ஸ்டாலின், பேரன் உதயநிதி மற்றும் அடுத்த சந்ததியினர்). அரசியல் தலைவரின் வாரிசுகள் என்ற ஒரே காரணத்திற்க்காக வேறு எந்த தகுதியும் பார்க்காமல் நம்மை ஆளும் தகுதியை அவர்களுக்கு வழங்குவது சரியா? ஒரு நாட்டையே ஆளும் தகுதி அரசியல் வாரிசுளுக்கு அளிக்க வேண்டும் யார் கூறியது எந்த விதி கூறுகிறது? எனினும் நாம் அவர்களையே தேர்ந்தெடுப்போம். பின் நாட்டில் அரசாங்கம் சரியில்லை என புலம்புவோம். இந்நாட்டு மக்களின் தலையெழுத்து அதுவாயின் அவர்களே மாறினாலொழிய தானாக மாறப்போவதில்லை. தமிழர் அல்லாதோர் காங்கிரஸை ஆதரிப்பது தவறு என்று கூறவில்லை... அது அவர் விருப்பத்தை பொருத்தது. ஆனால் எந்த ஒரு மான தமிழன், வீரத்தமிழச்சிக்கு பிறந்த எவனாவது காங்கிரஸ் க்கு ஆதரவு அளிப்பானா??? காங்கிரஸ் கட்சி தமிழனுக்கு இழைத்த துரோகத்தை நினைத்து பார்த்தால் அக்கட்சியை பழிவாங்கும் எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். ஆனால் இங்கோ காங்கிரசுக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.அட மானங்கெட்ட காங்கிரஸ் ஆதரவு தமிழனே என் இனமே காங்கிரஸ்+திமுக கட்சிகள் செய்த துரோகத்தினால் கொத்து கொத்தாக குண்டு மழைகள் போட்டு அழிக்கப்பட்டது. பச்சிளம் குழந்தைகள் என பாராமல் கொன்று குவித்தது. என் சகோதரிகளும் தாய்மார்களும் சீரழிக்கப்பட்டு கொள்ளப்பட்டனர். தமிழர்கள் தமிழ் நாட்டிற்க்கே அகதிகளாக வந்தனர்.இம்மண்ணின் மைந்தர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக கானும் போது உன் நெஞ்சம் பதைபதைக்க வில்லையா. தமிழனின் இன படுகொலைக்கு காரணமான காங்கிரஸ்+திமுக கட்சிகள் வேரறுக்க வேண்டும் என உன் நெஞ்சம் துடிக்க வில்லையா? ஆனால் இங்கோ காங்கிரஸ் கட்சி இனத்தை அழித்த ராஜபக்சே விற்க்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு அளிக்கிறது. மானங்கெட்ட தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் இருந்தாலும் நாங்கள் தமிழர்கள் தான் என்று வெட்கமில்லாமல் கூறுகின்றர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தமிழன் அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்படுவான். காங்கிரசுக்கு ஆதரவு அளித்துக் கொண்டு தமிழன் எனும் போர்வையில் திரியும் அனைவரும் என் இன அழிவிற்க்கு நீங்களும் ஒரு பொறுப்பானவர்கள் என்பதை மறந்து விடாதீர். நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளன் என்றால் நான் உங்கள் நேரடியான எதிரி ஆனால் நீங்கள் என் இனத்தின் மறைமுக துரோகி. உங்களைப் போன்றோர்களால் எந்நேரத்திலும் நாங்கள் முதுகில் குத்தப்படலாம் ஈழப்படுகொலை போல...மனம் திருந்துங்கள் மதிகெட்ட தமிழர்களே...
தமிழன் என்ற மான உணர்வுடன்......
No comments:
Post a Comment