Thursday, 14 February 2019

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் * முலாயம் சிங் பேச்சு

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்

* முலாயம் சிங் பேச்சு

புதுடில்லி

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என லோக்சபாவில் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசினார். லோக்சபாவில் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர்.

அப்போது, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசியதாவது: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து கட்சிகளையும், மோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது லோக்சபாவில் இருந்த பிரதமர் மோடி, புன்னகைத்தபடி, முலாயமுக்கு நன்றி தெரிவித்தார்.

அவரது மகனும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ், உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு எதிராக மாயாவதியுடன் கைகோர்த்து உள்ளார். லக்னோ விமான நிலையத்தில் தன்னை மாநிலத்தில் ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியதாக புகார் கூறியுள்ள அவர், டில்லியில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.

***  இப்போ எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் பூனை மேல் மதில் போல் உட்கார்ந்திருப்பார்கள். மோடி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று இவர் சொல்லுவதை பார்த்தால் யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்பதுபோல் உள்ளது... எனக்கு தெரிந்து முலாயம் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடியவர் அல்ல.

செய்தி மற்றும் படம்: தமிழ்செல்வி

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...