Friday, 22 March 2019

15 மில்லியன் (ஒன்றரைக் கோடி) பேர் வேலை வாய்ப்புக்கள் பெற்றிருக்கிறார்கள். ஆதாரம் இதோ

திமுக கூட்டணியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் "மோடி ஆட்சியில் இத்தனை ஆயிரம் வேலைகள் பறி போயின" என்று தினமும் தொலைக்காட்சி விவாதங்களில் சொல்லி வருகிறார்கள்
.
ஆனால் உண்மை என்ன?

15 மில்லியன் (ஒன்றரைக் கோடி)  பேர் வேலை வாய்ப்புக்கள் பெற்றிருக்கிறார்கள்.

என்ன ஆதாரம்?

பி.எப் ( EPFO)   ESI ஆகிய நிறுவனங்களில் எத்தனை பேர் புதிதாக உறுப்பினர்களாகச் சேருகிறார்கள் என்பதன்  அடிப்படையில் இந்த எண்ணிக்கையை கண்டறிந்திருக்கிறார்கள்.

அரசு விதிகளின்படி எல்லா நிறுவனங்களும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தங்களிடம் புதிதாகப் பணியில் சேருவோரின் எண்ணிக்கையை  EPFO விடம் தெரிவிக்க வேண்டும் 

அதே போல GST கணக்குகள் தாக்கல் செய்யும் போது  அந்த நிறுவனத்தில் எத்தனை நிரந்தரப் பணியாளர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும் (இது 2018 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது)

எனவே புதிதாக வேலை பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை இவற்றின் மூலம் அறியமுடியும். இந்தத் தகவல்கள் நிறுவனங்களிடமிருந்து வருவதால் தவறாக இருக்க முடியாது. This is a verifylable data

இப்போதுதான் இந்த முறை முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டு கணக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முறையில் தயாரிக்கப்பட்ட Towards Payroll reporting in India  என்ற அறிக்கை 2018 நிதி ஆண்டில் மட்டும் 3.68 மில்லியன் (36.8 லட்சம்) வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது

இதை முடிந்தவரை பகிருங்கள்.

#மாலன்

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...