நண்பர் Sasi Kumar அவர்கள் பதிவு.
'தூய்மை இந்தியா' திட்டத்தின் மூலம் 8 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது..
'தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின்' கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்கள் 100 சதவீதம் மின்சாரம் பெற்றுள்ளன..
'உன்னத் ஜோதி'திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் 35.83 கோடிக்கும் மேற்பட்ட LED பல்புகள் வினியோகம் செய்யப்பட்டு மின்சார விரயம் குறைக்கப்பட்டுள்ளது..
'சுரக்ஷா காப்பீடு திட்டம்' மூலம் வெறும் ரூ.12 மட்டும் பிரீமியமாக செலுத்தி ரூ.2 லட்சம் பெறக்கூடிய காப்பீட்டில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து உள்ளன..
'ஆயுஷ்மான் பாரம்' உலகின் மாபெரும் சுகாதார காப்பீடு திட்டமாகும். 5 லட்சம் காப்பீட்டில் 50 கோடி மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம்..
'இந்திரதனுஷ் திட்டத்தின்' மூலம் 4 கோடிக்கும் அதிகமான குழந்தை மற்றும் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து (Vaccine) அளிக்கப்பட்டுள்ளது..
'சுரக்ஷித் மாத்ரிதவா அபியான் திட்டம்' கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதி தரமான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
'உஜ்வாலா திட்டத்தின்' மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ்யுள்ள 3.5 கோடி குடும்பங்கள் இலவச கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர்..
'முத்ரா திட்டத்தின்' மூலம் 12 கோடி சிறு தொழில் முனைவோருக்கு 6 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.. முத்ரா திட்டத்தின் 50 % பயனாளிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் 2 கோடி இளைஞர்கள் திறன் மேற்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர்..
'ஆவாஸ் யோஜனா திட்டத்தின்' மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற 1 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்ட உதவி..
'சுகன்யா சம்ரிதி' என்ற செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 1.30 கோடிக்கு மேல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு
கடந்த நவம்பர் மாதம் வரை சுமார் ரூ.20,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது..
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் செயல்படுத்தப்படும் 104 மாவட்டங்களில் பெண் பிறப்பு விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது..
'பயிர் காப்பீடுத்திட்டத்தின்' மூலம் மிக குறைந்த பிரிமியத்தில் விவசாயிகள் முழுமையான பாதுகாப்பு பெற்றுள்ளனர்.
கரீப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக உற்பத்தி விலையின் 1.5 மடங்கு பெறுதல்.12.5 கோடிக்கு மேலான மண்வள அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளது..
வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 29 % அதிகரித்துள்ளது..
கருப்புப்பணம் மற்றும் வரி ஏய்ப்புச் சட்டம் 2015 ல் நிறைவேற்றப்பட்டு அயல் நாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப்பணத்தின் மதிப்புக்கு இணையான சொத்தினை கைப்பற்ற அனுமதிக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
மொரீசியஸ், சைப்ரஸ், சிங்கப்பூருடன் இரட்டை வரிவதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம். சுவிட்சர்லாந்துடன் பகிருடன் உண்மை கால தகவல் மீதான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது..
பினாமி சொத்து சட்டம், கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம், வருவாயை தாமாக முன்வந்து தெரிவிக்கும் சட்டம் போன்றவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுயுள்ளது..
'விளையாடு இந்தியாவின்' கீழ் திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வருடாந்திர நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மருந்துகளுக்கு அரசே அதிகபட்சவிலை இவ்வளவுதான் என்று நிர்ணயம் செய்து விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. நேரடியாக 'பிரதமர்மந்திரி மருந்துக்கடைகள்' மூலம் மருந்துகள் விலை மேலும் குறைக்கப் பட்டுள்ளது.
மூட்டு மாற்று சிகிச்சைகள் மற்றும் இதய ஸ்டன்ட்கள், 50-70 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.
இந்தியாவின் யோகா கலை உலகளவில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் ஏறத்தாழ 1.69 லட்சம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை கட்டமைக்கும் வேகம் முந்தைய அரசில் இருந்த ஒரு நாளைக்கு 12 கி.மீ என்பது ஒரு நாளைக்கு 27 கி.மீ ராக உயர்ந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 5469 ஆளில்லா ரயில் கடவுப்பாதைகள் நீக்கப்பட்டு. பெரும்பாலான பகுதிகள் அகலப்பாதையாக மாற்றப்பட்டு வலைத்தொடர்புடன் வடகிழக்கு பகுதிகள் முற்றிலும் இணைக்கப்பட்டள்ளது.
பணவீக்கம் 36 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 60.08 பில்லியன் டாலராக உயர்ந்தது.
நில வணிகம் ஒழுங்கு முறை சட்டம் (தஉதஅ) மூலம் வீடு வாங்குவோரின் உரிமைகள் மற்றும் முதலீடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.
எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை 142 என்பதிலிருந்து 100 உயர்ந்தது.
கணவனை இழந்த ஆதரவு இல்லாத பெண்களுக்காக நாட்டின் முக்கிய பகுதிகளில் தனியாக தங்கும்விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
SC, ST பிரிவினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.95 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 % அதிகரிக்கப்பட்டு 4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களுக்கு 'அதிகாரம்' அளிக்கும் வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.
பிரதமரின் முதியோர் பாதுகாப்பு திட்டத்துக்கான ஓய்வூதிய முதலீட்டு வரம்பு ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து சுமார் 87லட்சம் போலி கார்டுகள் நீக்கம். இதன் மூலம் அரசுக்குத் தினமும் 87கோடி இழப்பு சரி செய்யப்பட்டுள்ளது..
நாட்டின் இன்றைய மிம்சார உற்பத்தித் திறன் : 344,002 மெகா வாட்.. மன்மோகன் அரசு விட்டுச்செல்லும்போது வெறும் 199,877 மெகா வாட் தான். (லின்கேஜ் பாதையை முறைப்படுத்தி ஆண்டுக்கு 3000 கோடி இழப்பும் சரி செய்யப் பட்டுள்ளது)
மன்மோகன் சிங் அரசு விட்டுச்செல்லும் போது 1.6 billion units ஆக இருந்த சோலார் உற்பத்தி.. இன்று 25.90 billion unit ஆக உயர்ந்துள்ளது..
பாஸ்போர்ட் பெற எளிய நடைமுறை மற்றும் 58 நாடுகளுக்குச் செல்ல விசா தேவை இல்லை. உலகத்தில் passport index இந்தியாவின் கடவுச்சீட்டு ரேங்க் 74 (henleypassport ரேங்க் 81) மோடி பல நாடுகளுக்கு பறந்து பறந்து வேலை செய்ததால் வந்த வரவுகளில் ஒன்று..
எல்லை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரத்து 209 கோடி அனுமதிக்கப்பட்டு எல்லை பகுதியில் 246 கி.மீ க்கு வேலி - 566 கி.மீ தூரத்துக்கு எல்லை சாலைகள் - 785 கி.மீ க்கு பேரொளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
எல்லையில் வன்முறை சம்பவங்கள் 36.6 சதவீதம் குறைந்துள்ளது.
ரூ.2 லட்சம் கோடி செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப் படுகின்றன.
ரூ.5,35,000 கோடிக்கு மேலான மதிப்பில் நாடு முழுவதையும் இணைக்கும் பாரத் மாலா திட்டம்..
பனிரெண்டு வயதுக்கு குறைவான சிறுமியர் கற்பழிப்புக்கு மரண தண்டனை.. பதினாறு வயதுக்கு குறைவான சிறுமியர் கற்பழிப்புக்கு குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது..
முக்கியமாக இவை அனைத்தும் Aadhar திட்ட இணைப்பு மூலம் உண்மையான பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கப் பட்டுள்ளது..
No comments:
Post a Comment