Wednesday, 17 October 2018

கிருஷ்ணர் வணங்கும் ஆறுபேர் யார் ??????

கிருஷ்ணர் வணங்கும் ஆறுபேர் யார் ??????

நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார். வியப்பாக இருக்கிறது அல்லவா?

கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார்.

ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள்.

கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்:

நித்யான்ன தாதா,

தருணாக்னிஹோத்ரி,

வேதாந்தவித்,

சந்திர சஹஸ்ர தர்சீ,

மாஸோபாவாசீச,

பதிவ்ரதா ச ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே!!!!!!

பொருள்:

இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்:

தினமும் அன்னதானம் செய்வோர்,

தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,

வேதாந்தம் அறிந்தவர்கள்
,
சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர்,

மாதா மாதம் உபவாசம் இருப்போர்,

பதிவ்ரதையான பெண்கள்.

அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை நாம் அறிந்தால்தான் அந்த ஆறு வகையான மக்களின் முழுப் பெருமையையும் நாம் அறிவோம்:

(1).நித்ய அன்ன தாதா: அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். திருவள்ளுவரும் கூட:-
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)
பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.
மனு ஸ்மிருதியில் 3-72 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருகிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.
அதிதி தேவோ பவ: (விருந்தாளி என்பவன் இறைவனுக்குச் சமம்) – என்று வேதம் கூறுகிறது.
அந்தக்காலத்தில் தான் உண்பதற்கு முன்னால் வாசல் திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்து யாரேனும் விருந்தாளிகள் அல்லது வழிப்போக்கன் வருகிறார்களா என்று பார்த்துவிட்டே உணவருந்த செல்வார்கள்.
தர்மர் நடத்திய ராஜ சூய யாகத்தில் புகுந்து பரபரப்பை உண்டாக்கிய கீரி சொன்ன கதை எல்லோருக்கும் தெரியும். இப்படி தினமும் அன்னதானம் செய்வோர், இது தவிர அன்னக்கொடி ஏற்றி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னம் இடுவோர் ஆகியோரை க்ருஷ்ணன் வணங்குகிறார். இவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்னம் இடுகிறார்கள்!!

(2).தருண அக்னிஹோத்ரி: அந்தக் காலத்தில் ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் பிராமணச் சிறுவர்கள் சமிதாதானம் என்று தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ஔபாசனம் என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இதை தவிர அக்னிஹோத்ரம் என்ற அக்னி காரியம் சூரியனை உத்தேசித்து சரியாக சூரியன் உதிக்கும் காலத்திலும் அஸ்தமனம் ஆகும் காலத்திலும் நடத்த வேண்டும். இதை எல்லோரும் செய்துவிட முடியாது. தனது தந்தை ஒரு அக்னிஹோத்ரியாக இருந்தால் மட்டுமே தானும் அக்னிஹோத்ரம் செய்யமுடியும். இவர்கள் காணக்கிடைப்பது அபூர்வம். இப்படித் தவறாமல் செய்துவரு வோரை கிருஷ்ணனே வணங்குகிறார் நாம் வணங்கத் தயக்கம் உண்டோ!

(3).வேதாந்த வித்:- வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்/முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். வேதாந்தத்தில் நாட்டம் ஏற்பட வேண்டும் என்றால் பலகோடி ஜென்மங்களில் புனியம் செய்து இருக்க வேண்டும். உலக விஷயங்களை துறந்து வேதாந்த விஷயங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து வேதாந்த சிந்தனையிலேயே வாழ்வை கழிப்பவன் வேதாந்த வித். அந்த வேதாந்திகளையும் கிருஷ்ணன் வணங்குகிறார்! இவர்களும் காணக்கிடைப்பது அபூர்வம்.

(4).ஆயிரம் பிறை கண்ட அபூர்வ சிகாமணி: சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும் இப்படி ஆயிரம் முறை காண 81 ஆண்டுகள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். அத்தகையோரையும் கண்ணபிரான் வணங்குவார். இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கத்தை ஏனைய மதத்தினரும் நம்மிடமிருந்து கற்றனர்.
ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால் ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும். அடடா! மேகம் மறைக்கிறதே. இன்னும் சந்திரனைக் காணவில் லையே என்று ஏங்கி சிவனை நினைத்து நிற்பர். இன்னும் பலர் அவர்களது இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வேண்டிக் காத்திருப்பர். ஆகையால்தான் கிருஷ்ணன் அவ்வளவு மதிப்பு தருகிறான்.

(5) மாத உபவாசி: மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகளிலும் உபவாசம் – உண்ணா நோன்பு—கடைப் பிடிக்க வேண்டும். அதையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். சுத்த உபவாசம் என்பது நிர்ஜலமாக (தண்ணீர் கூட பருகாமல்) அல்லது தண்ணீர் மட்டுமே பருகி உபவாசம் இருப்பது. இப்படி இருப்போர் கண்ணனால் வணங்கப் படுவர். இது எளிதல்ல.இப்படி இருப்போர் மிகமிகக் குறைவு. அவர்களை நாமும் வணங்குவோம்.

(6)இறுதியாக கண்ணன் கை எடுத்துக் கும்பிடுவது யாரை என்றால் பதிவ்ரதா விரதம் அனுசரிக்கும் கற்புக்கரசிகளை!! உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு அணுகு முறை இந்து மதத்தில் மட்டும் உண்டு. சாத்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். தமிழ் மொழியில் இதற்கு முன்று அற்புதமான சொற்களை படைத்து வைத்துள்ளனர்: உண்மை, வாய்மை, மெய்மை (மனோ, வாக், காயம்). இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனையும் நினையாது கனவனை மட்டுமே தெய்வம் போலக் கருதுபவர் “பெய் எனப் பெய்யும் மழை” — என்பான் பொய்யா மொழிப் புலவன் வள்ளுவன் (குறள் 55).
அட! இப்படிப் பத்து கற்புக்கரசிகளைக் கண்டுபிடித்து வறண்ட பகுதிகளில் எல்லாம் மழை பொழியச் செய்துவிடலாமே! அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் போட்டுவிடலாமே என்று சிலர் நினைக்கலாம். இதன் தாத்பர்யம் என்னவென்றால் அவர்களிடம் அவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் எளிதில் அதைப் பிரயோகிக்க மாட்டார்கள்.
அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன் கெஞ்சுகிறான்: தாயே உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறான். என் முதுகில் / தோளில் ஏறி அமருங்கள். அடுத்த நிமிடம் இராமனிடம் சேர்ப்பிக்கிறேன் என்று. சீதை சிரிக்கிறாள். என் கற்பின் ஆற்றலால் ஈரேழு புவனங்களையும் எரிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. ஆயினும் கணவனின் வில் ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக்கும் எதையும் செய்ய மாட்டேன் என்கிறாள்.
நமக்கும் தெரியும் ராவணன் வதம் என்பதே இராமாவதாரத்தின் நோக்கம் என்று.
உலகில் ஏழு நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அணுகுண்டைப் பிரயோகிக்கிறார்களா? இல்லையே. இது போல பெண்களிடம் உள்ள மகத்தான ஆற்றலை அவர்கள் அரிதே பயன்படுத்துவர்.
அந்தக் காலத்தில் எல்லா பெண்களும் திரிகரண சுத்தியுள்ள (சொல், செயல், சிந்தனை = மனோ வாக், காயம்) கற்புக்கரசிகளாக இருந்தார்கள். இதனால்தான் மனு சொன்னார்:
எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும். எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை (மனு 3-56)
மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள் சாபம் இட்டால் அந்தக் குடும்பங்கள் அடியோடு அழிந்து போகும் (மனு 3-59)
தந்தைமார்கள், கணவன்மார்கள், மைத்துனன்கள், சகோதர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமானால் பெண்களை மதிப்போடு நடத்துங்கள். அவர்களை ஆடை அணிகலன்களால் அலங்கரியுங்கள் (மனு ஸ்மிருதி ஸ்லோகம் 3-55).
இப்படியெல்லாம் பாரட்டப்பட்ட பதிவிரதைகளை கண்ணன் வழிபடுவதில்
வியப்பேதும் உண்டோ? கணவனை தெய்வமாக நினைக்கும் பெண் இந்த காலத்தில் அபூர்வம் என்று சொல்லவா வேண்டும்?

கண்ணன் வணங்கும் ஆறுவகை மக்களை எங்கெங்கெலாம் நீங்கள் காணுகிறீர்களோ அங்கெங்கெல்லாம் நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுங்கள்!! உங்களுக்கும் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

ஸ்ரீராமஜயம்

இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் திருநாவுக்கரசரா ? ஏசுவா?

இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் திருநாவுக்கரசரா ? ஏசுவா?

திருநாவுக்கரசர் மற்றும் ஏசுநாதர் இருவர் வாழ்வையும் நாம் ஒப்பீடு செய்து பார்க்கின்றோம்.

இறைவனை என் தந்தையே என்று அழைத்த நாவுக்கரசர், மூன்று மரண தண்டனைகளிலிருந்தும் இறைவனால் காப்பாற்றப்பட்டார். உயிர்த்தெழுந்தார். 80 வயது வரை தமிழகம் முழுவதும் சுற்றித் திரிந்து இந்து மதத்தைப் பரப்பினார்.

இறைவனால் உயிர்த்தெழுந்ததற்கு தானே சாட்சியாக விளங்கினார். இது கி.பி. 9ம் நூற்றாண்டில் நடந்தது.
ஆனால் ஆண்டின் தொடக்கத்தில் ஆண்டவனை பரலோகத்தில் இருக்கும் பிதாவே என்று அழைத்த ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டதும் இறந்து விட்டார்.

அவரின் சீடர்கள் கண்களுக்கு மட்டும் அவர் பேயாக வந்து சைத்தானாக காட்சி அளித்தாக அவர்கள் கூறுகின்றார்கள்.

மற்றவர்கள் கண்ணுக்கு திருநாவுக்கரசரைப் போல வெளிப்படையாக இறை சக்தியை அவரால் நிரூபிக்க முடியவில்லை. காரணம் கடவுளால் அவரே கைவிடப்பட்டார்.

அதனால்தான் இன்றும் கடவுளுக்கு படைத்ததை' நாம் கிறிஸ்தவர்களுக்கு கொடுத்தால் அதை வாங்கி உண்ண மாட்டார்கள்.' காரணம் "கடவுள் பக்கம் பேய், பிசாசு நெருங்காது" என்பதற்கு இது மிகப் பெரிய ஆதாரம்.

ஆனால், நடைமுறையில் கடவுளை வணங்கும் இந்துக்களை அவர்கள் எது சைத்தான் என்று புரியாமல் நாம் வணங்குவது சைத்தான் என்று சொல்லுகின்றார்கள்.

ஏசுநாதர் சைத்தான் இல்லை என்றால் திருநாவுக்கரசரைப் போல நீண்ட காலம் வாழ்ந்து நிரூபிக்க வேண்டியதுதானே...?
அல்லது இறைவனால் ஏசு நாதர் கைவிடப்பட்டதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே...இன்று.

திருநாவுக்கரசர் எழுதிய தேவாரம் அவரே எழுதினார்.

ஆனால் பைபிளை பல பேர் எழுதினார்கள். பலவிதமாக எழுதினார்கள். ஆக இதில் உள்ள வசனங்களுக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பதில் அவர்களுக்குள் மிகப்பெரிய போராட்டம் நடப்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

மதுரைக்கு திருஞானசம்பந்தர் இந்து மதத்தைப் பரப்புவதற்காக புறப்பட்ட சமயம், அந்த நாடு முழுவதும் சமண மதமாக இருந்தது. அரசி மங்கையர்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே இந்துக்கள். அதுவும் வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில் இருந்தார்கள்.

இதுபோல நிலையில் ஏசுநாதர் தனக்கு எதிரான நிலை நாட்டில் நிலவியதுபோது இறையருள் இருந்தால் அங்கேயே நிரூபித்து மதம் மாற்றியிருக்க வேண்டும்.

ஆனால் இறையருள் இல்லாததால் நாட்டை விட்டு வெளியேறி ஒளிந்தார். அவருடைய சீடன் லூத்தாஸ் அவரை காட்டிக் கொடுத்தார். தன்னுடைய சீடன் காட்டிக் கொடுக்கக் கூடியவனா? இல்லையா? என்றே தெரிந்து கொள்ள முடியாத ஏசுவால் எப்படி இறைவனை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்.

அவ்வாறு அவர் கடவுள் பக்தி உள்ளவர் அல்ல என்பதால் இறைவன் சிலுவையில் அறைந்தபோது அவரை கைவிட்டார்.

ஆனால் திருஞானசம்பந்தர் தன் மதத்திற்கு எதிரான மதம் உள்ள இடத்தில் தன் மதத்தை பரப்ப எதிர்ப்பவர்கள் முன்பு இறைவன் தன் பக்கம் இருக்கின்றான் என்பதை நிரூபிக்க சென்றார்.

அவர் மதுரையில் தங்கிய மடத்திற்கு சமணர்கள் மன்னர் ஆதரவோடு அன்று இரவே தீ வைத்தனர். அப்போது அதனை கண்டு அஞ்சாத கடவுள் அடியார் திருஞானசம்பந்தர்,

‘‘பையவே சென்று பாண்டியற்கு ஏகுக’’ என்று பாடினார்.
அதனால் அந்த வெப்பம் ஞானசம்பந்தரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, தீ வைப்பதற்கு காரணமான பாண்டிய மன்னனுக்கு வெப்புநோய் உண்டானது.
அந்த நோயை மன்னனின் மதமான சமண மதத்தவர் தீர்க்க இயலவில்லை.

இறையருள் பெற்ற இந்து சமய துறவி திருஞானசம்பந்தர்
‘‘மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு’’
என்ற இன்றும் உள்ள தேவாரப் பாடல் பத்து பாடி கூன் பாண்டியனின் வெப்பு நோயைப் போக்கினார்.

அத்துடன் கூன் பாண்டியனின் கூன்நிமிர்ந்து அவன் நின்றசீர் நெடுமாறன் என்று பெயர் பெற்றான்.

இதே கட்டத்தில் இறையருள் பெற்றிருந்தால் ஏசுநாதர் தனக்கு மரண தண்டனை விதித்த மன்னன் முன்பு தான் இறையருள் பெற்றவன் என்னை கொல்ல முடியாது என்று தன்னுடைய கடவுள் பக்தியை நிரூபித்து அந்த மன்னனை மனம் மாற்ற முடியவில்லை.

ஆனால் அவரை கடவுள் என்று சொல்லி பிரசாரம் செய்து இன்று பொய்யான கடவுள் கொள்கையை பரப்புகின்றார்கள். அவர்கள் முன்பு நம்முடைய மத உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் இந்திய மண்ணின் மைந்தர்கள் யாவர்க்கும் உண்டு.

நீங்கள் திருநாவுக்கரசாக, திருஞானசம்பந்தராக, அவருடைய வழிதோன்றல்களாக இருந்து இந்து மதத்தை உணர்ந்து உலகுக்கு , உணர்வுடன் பரப்பினால் அவர்களைப் போல சிவபெருமானின் அருள் உங்களுக்கும் கிடைக்கும்..

மதம் மாற்ற வேண்டாம் ...மனம் மாற்றுவோம் ..!

செல்வமகள்'* சேமிப்பு திட்டத்தில் குறைந்தளவு டெபாசிட் ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது டெபாசிட் ரூ.250 செய்தால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

*'செல்வமகள்'* சேமிப்பு திட்டத்தில் குறைந்தளவு டெபாசிட் ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது டெபாசிட் ரூ.250 செய்தால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கு கொண்டு வரப்பட்ட திட்டம், *சுகன்யா சம்ரிதி யோஜனா* திட்டம். இத்திட்டம் தான் தமிழ்நாட்டில் செல்வமகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் இது வரை 1 கோடிக்கும் அதிகமான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து, சில விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும்.

செல்வமகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 20 பைசா குறைத்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2016 ஏப்ரல் முதல் காலாண்டுக்கு ஒருமுறை சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய உதவும், 'செல்வமகள்' சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1,000 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஒவ்வொரு ஆண்டும் செய்யக்கூடிய குறைந்தபட்ச டெபாசிட் தொகையும் 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.

ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்

மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.

எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:-

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.

ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.

மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

#ஆர்எஸ்எஸ் இந்துமத இயக்கமா?

#ஆர்எஸ்எஸ் இந்துமத இயக்கமா?

                       எவன் சொன்னது சிவனைத்தான் வணங்கவேண்டும் என்று சொல்லவில்லை ஆர்எஸ்எஸ் விஷ்ணுவையோ பராசக்தியையோ வணங்கு என்று சொல்லவில்லை .
இந்த தேசத்தை தாயாக தெய்வமாக நினைத்து வழிபடும் தேசபக்தர்களை கொண்ட தன்னார்வ தொண்டு நிறுவனமே ஆர்எஸ்எஸ் .
இந்துத்வா என்பது மதம் சார்ந்ததல்ல.

இந்த மண்ணின் பாரம்பரிய கலாச்சார வாழ்க்கை முறை
இந்த மண்ணில் தோன்றியமதம் ஹிந்துமதம் மட்டுமே கிருஸ்தவமதம் நம்மை அடிமைபடுத்திய ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்டது .
இஸ்லாம் நம் தேசத்தின் வளங்களை கொள்ளையடிக்க வந்த முகலாயரர்களால் திணிக்கப்பட்டது.
இங்கிருக்கும் கிருஸ்தர்கள் இஸ்ரேலிலிருந்தோ இங்கிலாந்திலிருந்தோ வந்தவர்களல்ல இந்த மண்ணில் பிறந்த ஹிந்துக்களே .....

ஆங்கிலேயர்களின் துப்பாக்கி குண்டுக்கு பயந்தே
ராமன் ராபர்ட்டாகினான்
கிருஷ்ணன் கிருஸ்டோபராகினான்
ஜெகதீசன் ஜேம்ஸ் ஆகினான் .

அதுபோலத்தான் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்திலிருந்தோ அரபு நாடுகளிலிருந்தோ வந்தவர்களல்ல.
முகலாயர்களின் வாள்முனைக்கு பயந்தே இந்த மண்ணில்பிறந்த
ரங்கன்தான் ரஹீம் ஆகினான்
கந்தன்தான் காதர் ஆகினான்.
அமாவாசைதான் அப்துல் ஆகினான்
எனவேதான் இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொறு உயிரும் ஹிந்துவே என்பதில் ஆர்எஸ்எஸ் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டுள்ளது.

மதத்தால் நீ
                   இஸ்லாமியனாக இரு
                     கிருஸ்தவனாக இரு
                        ஹிந்துவாக இரு
ஆனால் மனதால் இந்தமண்ணின் பாரம்பரிய கலாச்சாரத்தை மதிக்கும்
                         இந்தியனாக இரு
இதைதான் இந்துத்வா என்கிறது ஆர்எஸ்எஸ் ,

இந்த மண்ணில் பிறப்பவன்.
ஹிந்துவாகத்தான் பிறக்கிறான் என்பதை கிருஸ்தவமும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் சொல்வேன் அதற்கு நான் சொல்லும் காரணம் ஒரு கிருஸ்தவ தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை கிருஸ்தவனாகத்தானே இருக்கமுடியும் பின் எதற்காக ஞானஸ்தானம் (கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தல்) என்று புனிதநீர் தெளித்து அவன்கிருஸ்தவனாக மாற்றப்படவேண்டிய அவசியமென்ன?
அவர்களுக்கு தெரியும் இந்த மண்ணில் ஜனிக்கும் ஒவ்வொறு உயிரும் ஹிந்துதான் என்று ஹிந்துவாக பிறந்துதான் சுன்னத் செய்து இஸ்லாமியராகவும் ஞானஸ்தானம் கொடுத்து கிருஸ்தவராகவும் மாறுகிறார்கள்.
அடிப்படையில் அனைவரும் இந்த மண்ணில் பிறந்த ஹிந்துக்களே இதுதான் ஹிந்துத்வா என்றால் ஏன் இங்குள்ள அரசியல்வியாதிகள் அனைவரும் எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி பாமரமக்களின் மனதில் எழலாம்.
அதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு இதுதான் இந்துத்வா என்பதை அறியாதவர்களா நம் அரசியல்வியாதிகள் என்றால் இல்லை அவர்கள் அறிந்ததே ஆனால் இதுதான் இந்துத்வா என்பதை மக்களுக்கு உணர்த்தி விட்டால் திராவிடன் ஆரியன் என்று பிரித்தாளும் இவர்களின் சூழ்ச்சி இங்கு எடுபடாமல் போய்விடும்.
திராவிடம் என்னும் மாயைக்குள் மக்களை மயக்கிவைத்திருக்கும் வரைதான் தமிழன்அல்லாதவர்கள் தமிழ்நாட்டில் கோலோட்சமுடியும்.
இந்துத்வா என்னும் தேசியம் இங்குவலுப்பெற்று விட்டால் போலிமதசார்பின்மை பேசும் மதசார்பற்றமாமாக்கள் திராவிடம் என்னும் திரைக்குபின்னால் திருடமுடியாது என்பதை உணர்ந்தவர்கள்தான் இந்துத்வாவை எதிர்க்கிறார்கள் .

இந்த மண்ணில் தோன்றியமதம் ஹிந்துமதம்.
ஐம்பெரும் காப்பியங்களும் மஹாபாரதமும் ராமாயணமும் பகவத்கீதையும் இந்த மண்ணில் தோன்றியது இந்தபுண்ணியபூமியை கருவாக உயிராக கொண்டது இந்ததேசத்தின் கலாச்சாரத்தோடு தழுவி பிண்ணிபினைந்தது.
ஆனால் பைபிள் இந்த மண்ணைப்பற்றியதா இல்லை இஸ்ரேலைத்தழுவி எழுதப்பட்டது .
கிருஸ்தவ தேசங்களை கருவாக கொண்டது குரான் அரபுதேசத்தை தழுவியது.

இந்தமண்ணின் புனிதநூல் பகவத்கீதையே இந்துத்வா என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டால் பகவத்கீதையை எதிர்க்கும் எண்ணம் இங்கு தோன்றாது தமிழகம்  நம் செயலில் தான் உள்ளது .
கடமையைச்செய்வோம்  தமிழகம் காண்போம்!

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...