Wednesday, 17 October 2018

செல்வமகள்'* சேமிப்பு திட்டத்தில் குறைந்தளவு டெபாசிட் ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது டெபாசிட் ரூ.250 செய்தால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

*'செல்வமகள்'* சேமிப்பு திட்டத்தில் குறைந்தளவு டெபாசிட் ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது டெபாசிட் ரூ.250 செய்தால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கு கொண்டு வரப்பட்ட திட்டம், *சுகன்யா சம்ரிதி யோஜனா* திட்டம். இத்திட்டம் தான் தமிழ்நாட்டில் செல்வமகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள், பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் இது வரை 1 கோடிக்கும் அதிகமான கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தக் கணக்கின் பழைய விதி முறைகளில் இருந்து, சில விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்தக் கணக்கை துவங்க இயலும். 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளரால் கணக்கைத் திறக்க இயலும்.

செல்வமகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 20 பைசா குறைத்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2016 ஏப்ரல் முதல் காலாண்டுக்கு ஒருமுறை சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

தபால் நிலையங்களில் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய உதவும், 'செல்வமகள்' சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு துவங்க குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1,000 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் பின், ஒவ்வொரு ஆண்டும் செய்யக்கூடிய குறைந்தபட்ச டெபாசிட் தொகையும் 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...