Thursday, 18 October 2018

சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது* *சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு*

*சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது*
*சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு*
ஈரோடு மாவட்டம் நிச்சம்பாளையம் தமிழரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
என் பெற்றோர் கிறிஸ்தவர்கள்
எனக்கு விக்டர்ட ஜோசப் என்று பெயர் சூட்டி இருந்தார்கள்.
2015ஆம் ஆண்டு புத்த மதத்திற்கு மாறி
என் பெயரை தமிழரசு என்று மாற்றிக்கொண்டேன்.
எனக்கு புத்தமத ஆதிதிராவிடர் என்று சான்றிதழ் சாதிச்சான்றிதழ் கேட்டேன்
ஈரோடு பெருந்துறை தாசில்தார் தர மறுத்துவிட்டார்
எனவே எனக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு இருந்தார்
அவரது வழக்கறிஞர் ஜென்கின்ஸ் வில்லியம் வாதம்
கிறிஸ்தவ ஆதிதிராவிட பெற்றோருக்கு பிறந்தவர்கள்
பிற்காலத்தில் இந்து-புத்தமத சீக்கிய மதத்துக்கு மாறினார் அவரை அந்த மதத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு எஸ்சி என்ற சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த 2009ஆம் ஆண்டு அரசு ஆணை வெளியிட்டது
இதன்படி ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் புத்தமத ஆதிதிராவிடர் என்ற சான்றிதழ் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்
இதற்கு விளக்கம் அளித்த அரசு வழக்கறிஞர் நர்மதா சம்பத்
இந்த அரசாணை மனுதாரருக்கு பொருந்தாது
ஒரு மதத்திலிருந்து மாறியவர்கள்
அதே மதத்திற்கு மீண்டும் திரும்பினால் மட்டுமே அந்த அரசு ஆணை பொருந்தும்
ஆனால் இந்த மனுதாரர் இந்து மதத்துக்கு திரும்பவில்லை
மூன்றாவது மதமான புத்த மதத்துக்கு மாறியுள்ளார்
மேலும் 1977ஆம் ஆண்டு எஸ்சி எஸ்டி சட்டத்தில் புத்தமத ஆதிதிராவிடர் என்ற பெயரே இல்லை எனவே கோரிக்கையை ஏற்க முடியாது என்று வாதிட்டார்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு பின்னர்
மீண்டும் இந்து மதத்திற்கு மாறினால் அந்த சமுதாயத்தில் ஏற்றுக்கொண்டால்
அப்படிப்பட்ட நபர்களுக்கு எஸ்சி எஸ்டி என்ற சான்றிதழ் வழங்கலாம் என்றுதான் தமிழக அரசின் அரசு ஆணை கூறுகிறது
எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்

திமுக+கிறிஸ்தவம் இவர்களுக்குள் அப்படி என்ன நெருங்கிய பிரிக்கமுடியாத உறவு..??

திமுக+கிறிஸ்தவம் இவர்களுக்குள் அப்படி என்ன நெருங்கிய பிரிக்கமுடியாத உறவு..??

#நிஜம்

1975களில் முழுக்க முழுக்க ஏசுவின் உண்மையான எளிமையான விசுவாசிகளே ஊழியகாரர்களாக இருந்ததால் திமுகவிற்கும் கிறிஸ்தவத்திற்கும் மோதலே இருந்தது. மோதலுக்கு காரணம் கிருஸ்தவர்களின் ஒரு சில முக்கிய கல்லூரிகளில் இடம் கேட்டு திமுகவின் சில முக்கிய தலைகள் தொல்லை கொடுத்து வந்தது தொடர்பாக. அப்போதெல்லாம் ஊழியக்காரர்கள் கைகளில் காசே வைத்துக்கொள்ள மாட்டார்கள், கிறிஸ்தவ மக்களிடம் காசு கேட்கவும் மாட்டார்கள். ஏசுவை தவிர யாருக்கும் பயப்படவும் மாட்டார்கள். அரசியல்வாதிகளை கண்டுகொள்ளவே மாட்டார்கள். அத்தகைய ஆளுமையோடு இருந்த காலம் அது.

கொஞ்சம் கொஞ்சமாக காலங்கள் மாறின. பணம் பாதாளம் வரை பாயத்தொடங்கியது. கிறிஸ்தவத்திலும் மிகஅதிகமாகவே பாய்ந்தது. ஊழியத்திலும் பணம் கொட்ட தொடங்கியது. ஊழியகாரர்கள் ஏசுவை வியாபாரபொருளாக்கி பணம் தேட தொடங்கினர். அதற்காக அரசியல்வாதிகளோடு அதிக நெருக்கம்தேவைப்பட்டது. இதை திமுக பயன்படுத்த தொடங்கியது. முதலில் கிறிஸ்தவத்திற்கு உதவிக்கரம் நீட்டுவது போல நீட்டியது திமுக. முதலில் அவர்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினர். பிறகு காலம் செல்ல செல்ல கருணாநிதி மிகச்சரியாக கிறிஸ்தவத்தை பயன்படுத்த தொடங்கினார்.

அந்நியசெலவாணிகள் அனைத்தும் சர்ச்சுகள் மூலமே கைமாற்றப்பட்டது. தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கும் வெளி நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும் பண பரிமாற்றம் மற்றும் கொள்ளை பணங்கள் அனைத்தும் வெளிநாட்டு முதலீடுகளுக்காக சர்ச்சுகள் மூலம் கடத்தப்பட்டது. இதற்காகவே பகல் கொள்ளைக்கு காங்கிரஸோடும், பண பரிமாற்றங்களுக்கும் முதலீடுகளுக்கும் கிறிஸ்தவத்தோடும் உறவை வளர்த்துக் கொண்டார் கருணாநிதி.
திமுகவின் ஒட்டுமொத்த குடும்பமும் காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாகவும் MPகளாகவும் இருந்த காலத்தில் பல லட்சக்கணக்கான கோடிகள் சர்ச்சுகள் மூலமாக வெளிநாடுகளுக்கு பத்திரமாக அனுப்பி வைத்து முதலீடு செய்யப்பட்டது. இதில் முக்கியமாக அதிகம் சர்சுகளை பயன்படுத்தியவர்கள் கனிமொழி, மாறன் சகோதரர்கள் மற்றும் TR.பாலு. இவர்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளுக்கு கணக்கே கிடையாது. இந்த உதவிகளுக்காக சர்ச்சு பாதிரியார்களுக்கு 20% முதல் 30% வரை கமிஷன் வழங்கப்பட்டது. இவாஞ்சலிக் குரூப் பாதிரியார் ஒருவர் கருணாநிதி கூடவே எப்போதும் காட்சி தந்த அவர் சம்பாதித்தது மட்டுமே பலநூறு கோடிகள். சென்னையில் உள்ள மிகப்பெரிய சர்ச் மூலமாக மட்டுமே மிகப்பெரிய தொகைகள் கனிமொழிக்காக மாற்றி கொடுக்கப்பட்டது. இதற்காக ரொம்பவே மெனக்கெட்டு புரோக்கர் வேலை பார்த்தவர் பாதிரியார் ஜெகத் கஸ்பர். இதற்காக கஞ்சமகாராணி கனிமொழி தனது திருட்டு பணத்தில் கமிஷன் வழங்காமல் தமிழ்நாடு அரசு கஜானாவில் இருந்து கஸ்பருக்கு பணத்தை வாரி வழங்கினார். இதற்காக கனிமொழி தேர்ந்தெடுத்த வழிகள் தான் "தமிழக கலை பண்பாடு இலக்கிய கொண்டாட்டம்" "திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் புதிய வடிவில் வெளியீடு" "தமிழ் மாநாடு" இது போன்ற என்ன எழவு பொறுப்புகள் எல்லாமோ கொடுத்து கஸ்பர் காட்டில் பண மழை கொட்ட வைத்தார் கனிமொழி.

கருணாநிதி குடும்பம் ஆசியாவிலேயே பெரிய பணக்காரர்கள் ஆனது இப்படி தான். இத்தகைய பணம் கொழிக்கும்தொடர்பை இரண்டு தரப்பினரும் எப்போதும் விடமாட்டார்கள். ஆகவே தான் இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மத்திய அரசுக்கு அதிக எதிர்ப்பு வளர்க்கப்பட்டு வருகிறது. எப்போதும் ஏழை கிறிஸ்தவன் ஏழையாகவே தான் இருக்கிறான். கோடி கோடியாக சம்பாதித்தது அனைத்தும் கிறிஸ்தவ பெருந்தலைகள் மட்டுமே.

தற்போதைய மத்திய அரசு NGO அமைப்புகளுக்கு ஆப்பு வைத்ததால் இரண்டு தரப்பும் கத்துகிறது கதறுகிறது. எப்படியாவது ஆட்சி மாற்றத்திற்கு துடிக்கிறது. மத்தியில் காங்கிரஸும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சிக்கு வந்தால் நிலைமையை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

தமிழர்களே தமிழர்களே.. சிந்தியுங்கள் செயல்படுங்கள்..

--MC. சிவகுமார்
நாகர்கோவில்

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ? கேட்கமாட்டீர்கள் ... மதம் மாற்றிவிட்டால்.......

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ?   கேட்கமாட்டீர்கள் ...
மதம் மாற்றிவிட்டால்.......

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே
மயானம் போல் தோன்றும்.

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது.

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்.
இதற்கு தடையேதும் இல்லை.

ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு.
இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது.

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும்.
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது.
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய்

மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள்.

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா.

எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம்.

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம்.

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:-

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும்.

ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய்.

மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

*நல்ல பதிவுகளை பகிர்வோம்*
🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹
🕉✡🕉✡🕉✡🕉✡🕉✡🕉✡🕉✡🕉

வெடி வெடிக்கும் பழக்கம் புராண காலத்திலெல்லாம் இல்லை

*ஒருத்தர் எழுதுறார், வெடி வெடிக்கும் பழக்கம் புராண காலத்திலெல்லாம் இல்லை நடுவிலே தான் ஆரமித்தது அப்பிடி இப்பிடி னு வால்மிகி வரைக்கும் போய் அவர் கூடவே இருந்து  ராமாயண காலத்துல போய் வீடியோ எடுத்துட்டு வந்துட்டார். ஆனால் வெடிகளுக்கு நடைமுறையில் உள்ள பெயர்களை பார்க்கும் பொழுது நடுவில் வந்ததாக தெரிய வில்லை. இது பற்றி ஆராய ஆராய்ச்சியாளர்கள் கையில் விட்டு நம்ம விஷயத்துக்கு வருவோம்.*

*வெடி நடுவில் வந்ததாகவே வைத்துக்கொள்வோம் அதே போல் 100 150 வருஷத்துக்கு முன்னாடி யார் வீட்டிலும் fan இல்லை பனையோலை விசிரிதான், மிக்ஸி இல்லை அம்மி கல் தான் , கிரைண்டர் இல்லை ஆட்டு கல் தான். இவ்வளவு ஏன் புவி வெப்பமயமாதலின் முக்கிய காரணியாக சொல்லப்படும் ஏசியும் ஃப்ரிட்ஜும் அறவே இல்லை. ஆக வெடி வேண்டாம் என்று எழுதுபவர் தங்கள் வீட்டில் இது போன்ற உபகரணத்தை அறவே ஒழித்து விட்டு இப்படி எழுதட்டும்(வீட்டு க் காரம்மா கிட்ட அடி உதை வாங்கினால் நான் பொறுப்பில்லை)*

*அடுத்து அவர்கள் சொல்லும் இன்னொரு காரணம் விலங்குகள் பறவைகள் எல்லாம் பயந்து நடுங்குகிறதாம்.  தெரு நாய் மழைக்கு அவர் வீடு கார் ஷெட் பக்கம் ஒதுங்கினா இடம் கொடுபாரானு தெரியல. செல்போன் சிக்னல் ஆல் பறவைகள் இனம்  அழியுதுன்னு சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது எனவே அவர்வீட்டிலிருக்கும ஐபோன் ப்ளாக்பெரி இன்டர்நெட் wifi மோடம் எல்லாத்தையும் இன்று முதல் குப்பையில் போட்டு விடுவாரா?!*

   *அப்பறம் இந்த bike, car  பக்கம்லாம் போகாம cycleஉம் , public transport உம் பயன் படுத்துவரா?*

*தீபாவளி 1 நாள் மிஞ்சி போனா 12 மணி நேரம். ஆனால் AC fridge செல் போன் 365x24 மணி நேரம்.*

*ஆகவே இதுபோல துஷ்ட சக்தி விலகுவதற்காகவே நிறைய வெடிகளை கொளுத்தி போடுவோம் தீபாவளியை கொண்டாடுவோம். #diwali_with_cracker*

*குறிப்பு: லகர ளகர ணகர னகர பிழைகளை பொருத்தருளவும்*

Wednesday, 17 October 2018

அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹* 🌷🌷

🌹அமாவாசையை பற்றிய சில தெய்வீகத் தகவல்கள்🌹*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சாயி குணசேகரன்
9444000006
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமாவாசையை நல்ல நாளாகப் பலரும் கருதுவது கிடையாது. காரணம், அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம். தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.

ஆனால், வடக்குப் பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. *நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.*

ஆனால், பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

*சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?*

அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது, ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது. *அன்று, முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள்.* தங்களது தலைமுறைகளைச் சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள். *அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களைக் கரிசனத்தோடுப் பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.*

எனவே, *பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு* அவர்களுக்கு மரியாதை செய்து *அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்.* அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால், அது நல்லநாளே.

இந்துக்களில் *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.*

*முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.*
இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும், ஒன்று சோ்வதால் ஒரு *காந்த சக்தி ஏற்படுகிறது.*

அமாவாசையன்று, மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

*அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை, பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும்* என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*அமாவாசையன்று, விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக* ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

*ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள்.*
அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.

சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால், *சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது.*
அதனால்,  *அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.*

அமாவாசையன்று, *ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.*

*சாதாரணமாக, இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.*

அமாவாசையன்று, சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்பொழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா, நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

*வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு, அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும், தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.*

*அமாவாசையன்று, பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது* நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று, *தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம்.*

அமாவாசையன்று,
காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால், வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் *அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.*

*ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள்,* தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். *புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.* நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! *ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி!*
நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.

நகரங்களில் வசிப்பவா்கள் *அமாவாசையன்று, ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும்.*
இதர தானங்கள் தருவது, அவரவா் வசதியைப் பொறுத்தது.

*அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.*

*🌷எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள், ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும்.* இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

*முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய* ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.

அமாவாசை தினம் நமது சமயத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றது..! *தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது..!*

பாவங்களில் பெரிய பாவம், பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மைப் பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். *ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே, இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.*

*அமாவாசை வழிபடுவது எப்படி..?*
அன்று காலை *ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம்* கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து தெற்கு பார்த்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். *கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து* முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

*செய்யக் கூடாதவை:* அமாவாசை தினங்களில், *மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.* தர்ப்பணம் செய்யும் போது, *கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது.* தர்ப்பணத்தை, எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.

*கிருஷ்ணார்ப்பணம் சுபமஸ்து*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...