*ஒருத்தர் எழுதுறார், வெடி வெடிக்கும் பழக்கம் புராண காலத்திலெல்லாம் இல்லை நடுவிலே தான் ஆரமித்தது அப்பிடி இப்பிடி னு வால்மிகி வரைக்கும் போய் அவர் கூடவே இருந்து ராமாயண காலத்துல போய் வீடியோ எடுத்துட்டு வந்துட்டார். ஆனால் வெடிகளுக்கு நடைமுறையில் உள்ள பெயர்களை பார்க்கும் பொழுது நடுவில் வந்ததாக தெரிய வில்லை. இது பற்றி ஆராய ஆராய்ச்சியாளர்கள் கையில் விட்டு நம்ம விஷயத்துக்கு வருவோம்.*
*வெடி நடுவில் வந்ததாகவே வைத்துக்கொள்வோம் அதே போல் 100 150 வருஷத்துக்கு முன்னாடி யார் வீட்டிலும் fan இல்லை பனையோலை விசிரிதான், மிக்ஸி இல்லை அம்மி கல் தான் , கிரைண்டர் இல்லை ஆட்டு கல் தான். இவ்வளவு ஏன் புவி வெப்பமயமாதலின் முக்கிய காரணியாக சொல்லப்படும் ஏசியும் ஃப்ரிட்ஜும் அறவே இல்லை. ஆக வெடி வேண்டாம் என்று எழுதுபவர் தங்கள் வீட்டில் இது போன்ற உபகரணத்தை அறவே ஒழித்து விட்டு இப்படி எழுதட்டும்(வீட்டு க் காரம்மா கிட்ட அடி உதை வாங்கினால் நான் பொறுப்பில்லை)*
*அடுத்து அவர்கள் சொல்லும் இன்னொரு காரணம் விலங்குகள் பறவைகள் எல்லாம் பயந்து நடுங்குகிறதாம். தெரு நாய் மழைக்கு அவர் வீடு கார் ஷெட் பக்கம் ஒதுங்கினா இடம் கொடுபாரானு தெரியல. செல்போன் சிக்னல் ஆல் பறவைகள் இனம் அழியுதுன்னு சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது எனவே அவர்வீட்டிலிருக்கும ஐபோன் ப்ளாக்பெரி இன்டர்நெட் wifi மோடம் எல்லாத்தையும் இன்று முதல் குப்பையில் போட்டு விடுவாரா?!*
*அப்பறம் இந்த bike, car பக்கம்லாம் போகாம cycleஉம் , public transport உம் பயன் படுத்துவரா?*
*தீபாவளி 1 நாள் மிஞ்சி போனா 12 மணி நேரம். ஆனால் AC fridge செல் போன் 365x24 மணி நேரம்.*
*ஆகவே இதுபோல துஷ்ட சக்தி விலகுவதற்காகவே நிறைய வெடிகளை கொளுத்தி போடுவோம் தீபாவளியை கொண்டாடுவோம். #diwali_with_cracker*
*குறிப்பு: லகர ளகர ணகர னகர பிழைகளை பொருத்தருளவும்*
No comments:
Post a Comment