பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடைபெற்றது உத்தர பிரதேசத்தில்! அதுவும் பல ஆண்டுகளாக எந்த இஸ்லாமியரும் தொழுகையே நடத்தாத வெறும் கட்டிடம் அது! It was only a disputed structure.
அது இடிக்கப்பட்டது உத்தரப் பிரதேச மாநிலத்தில்! அதற்கு 'சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறி விட்டது'- என்று கூறி உ.பி யில் கல்யாண்சிங் தலைமையிலான BJP அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது! அதிலாவது ஏதோ ஒரு நியாயம் இருந்தது.
ஆனால் சம்பவத்துக்குத் தொடர்பே இல்லாத மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல் பிரதேஷ் ஆகிய மற்ற 3 மாநில BJP அரசுகளும் கலைக்கப்பட்டன.
ராமர் கோயில் கட்டுவதை ஆதரித்த கட்சியின் அரசுகளாம் அவை! எனவே சிறுபான்மையினர் மனம் 'புண்பட' அந்த அரசுகளும் காரணமாம்! எனவே சம்பவம் நடைபெறாத, சம்பவம் நடைபெற்ற மாநிலத்துக்கு அண்டை மாநில அரசுகள் என்ற வறட்டுக் காரணத்துக்காக சம்பவத்துக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாத மற்ற 3 மாநில BJP அரசுகளும் கலைக்கப்பட்டன.
1992 ஆம் ஆண்டு 26 வருடம் முன்பு நடந்த சம்பவம் - இன்று பலருக்கு மறந்தும் போயிருக்கும் - இளைய தலைமுறைக்குப் புதிய செய்தியாகவும் இருக்கும்.
அதாவது சம்பவம் நடந்தது ஒரு மாநிலத்தில் - கலைக்கப்பட்டதோ அத்துடன் சேர்த்து அண்டை மாநிலம் என்பதால், சம்பவத்துக்கு நிர்வாகரீதியாகப் பழி கூற எந்த முகாந்திரமும் இல்லாத இதர 3 மாநில அரசுகள்!
இன்று சபரி மலை?
ஒரு முஸ்லிம் பெண், கிறிஸ்தவப் பெண், நாத்திகப் போராளிப் பெண் மூவரும் திட்டமிட்டு சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையை, அந்த ஆலயத்தின் சாந்நித்யத்தை குலைக்கவே மலை ஏறுகிறார்கள்!
*அதில் ஒருத்தி சானிடரி நாப்கின்களுடன் இருமுடி கட்டியதாக செய்தி வருகிறது!
*அதிலும் அவள் மது புட்டியுடனும், மார்பகத்தைக் காட்டிக் கொண்டும் கொடுத்த படங்கள் வெளியாகின்றன!
*அவள் வேற்று மதத்தவள் - அவளுக்கும் ஐயப்பன் பக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
*ஆக இவர்களின் நோக்கம் ஐயப்ப தரிசனம் அல்ல - அந்த ஆசார நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதும் சிதைப்பதும்தான் என்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது.
*ஆனால் அந்த மாநில அரசு இவள்களுக்கு முழு போலீஸ் பாதுகாப்புக் கொடுத்து, வனத்துறை சீருடை, தலைக் கவசம் எல்லாம் கொடுத்து ஐயப்ப தரிசனத்துக்கு அனுப்பி வைக்கிறது!
*அந்த ஐயப்ப பக்தர்கள் கண்ணீர் மல்க, போலீசின் காலில் விழுந்து கதறுகிறார்கள். ஐயப்பன் சரண கோஷம் தவிர வேறு எந்த அநாகரிக கோஷமும் இல்லை - பிரிவினை வாதப் பதாகை எதுவுமில்லை - ஒழிக கோஷம் எதுவுமில்லை!
*ஆனால் ஐயப்பனுக்கு சம்பந்தமே இல்லாத - ரெஹானா ஃபாத்திமா, மேரி போன்ற பெயர்களைக் கண்டாலே உனக்கும் ஐயப்பனுக்கும் என்ன சம்பந்தம்?- எனக் கேட்க அரசுக்குத் தெரியாதா? போலீஸ் பந்தோபஸ்துடன் மலைக்குக் கூட்டிவர வேண்டிய அவசியம் என்ன?
*அந்த தந்திரி பதறிப்போய் மனம் வெம்பி நடையைச் சாத்தி சாவியை ஒப்படைக்கும் அளவுக்கு அரசு படுமோசமாக நடந்து கொண்டுள்ளது.
'மத உணர்வுகளைப் புண்படுத்துதல்'- 'ACTING AGAINST THE SECULAR FABRIC OF THE CONSTITUTION OF THE COUNTRY'- 'DELIBERATELY SUPPORTING THE ANTI HINDU FORCES'...- ஆகிய காரணங்களுக்காக டிஸ்மிஸ் செய்யத் தகுதியான அரசு பினராய் அரசு!
அன்று சம்பந்தமே இல்லாத பக்கத்து 3 மாநில BJP அரசுகளை நரசிம்மராவின் மத்திய காங்கிரஸ் அரசு டிஸ்மிஸ் செய்தது!
இன்று இந்து மத உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவதில் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ள பினராய் விஜயனின் அரசை டிஸ்மிஸ் செய்ய BJP தயங்கக் கூடாது!
NOW THE IRON IS HOT - STRIKE IT!
#DismissKeralaGovt
No comments:
Post a Comment