இந்துமதம் கடல் போல எல்லாவித கழிவுகளையும் உள் வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது.
மிகவும் தந்திரங்கள் கொண்டது.
குறுக்கும் நெடுக்கமாக தம் மக்களை பிரித்து வைத்து ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருடன் உறவு கொள்ளாதபடி ஏற்பாட்டை செய்து அதை அந்த மக்களே உணராதபடி செய்து வைத்த முறையானது ....
அவ்வளவு எளிதில் அடுத்த மதத்துக்காரனுக்கு வந்து விடாது.
தலித் மக்களையும் இந்து என்கிறது.
ஆனால் அந்த மக்களை மற்ற இந்து மக்களுடன் உறவு கொள்ளாதபடி.... சேர்ந்து வாழாதபடி பார்த்துக்கொள்கிறது.
மீறினால் கடுமையாக தண்டிக்கிறது.
இந்திய அரசின் மிக உயரிய பதவியான ஜனாதிபதி பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும்.
ஆனால் அதே ஜனாதிபதி கடவுளை கும்பிட கோயிலுக்கு போனால் கோயிலுக்கு வெளியிலேயே நிருத்தி வைக்கும்.
அதுதான் தந்திரம்.
இந்திய வர்ண பண்பாட்டை இலக்கியமாக்க வால்மீகி என்ற தலித் கவிஞன் தேவைப்படுவான்.
இந்திய அரசுக்கு அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டால் அப்போது ஒரு தலித் அம்பேத்கர் தேவைப்படுவார்.
ஆனால் அந்த பிரிவு மக்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டால் கோயிலையே இழுத்து மூடும்.
இதே நிலைதான் இந்து மதத்திலிருக்கும் ஒட்டுமொத்த பெண்களுக்கும்.
"பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்தால் கோயில் இழுத்து மூடப்படும்" என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.
தமிழக ஆர்.எஸ்.எஸ் காரன் "ஐகோர்ட்டாவது மயிறாவது....."என்று சொன்னான்.
இப்போது கேரள ஆர்.எஸ்.எஸ் காரன் "சுப்ரீம் கோர்ட்டாவது மயிறாவது....." என்கிறான்.
அதாவது.....
அவாளுக்கு சாதகமாக இருந்தால் .....
கல்லும் கடவுளாகும்.
அவாளுக்கு சாதகமாக இல்லையேல்....
கடவுளும் கல்லாகும்.
அதாவது.....
" கடவுளாவது மயிறாவது"
இரா.திருநாவுக்கரசு
No comments:
Post a Comment