Thursday, 22 November 2018

பாண்டேயும் ப சிதம்பரமும்

தந்தி TV யில் பாண்டேவை_ ப.சிதம்பரம்_வச்சி_செஞ்ச_ அந்
Highlightshts (வீடியோ பார்க்காதவர்களுக்காக)
எழுத்துகளுடன்.......

ப.சிதம்பரம்: 5 லட்சம் பேரு, வேணாம் 10 லட்சம் பேரு, வேணாம் விடுங்க 20 லட்சம் பேரு கருப்பு பணம் வெச்சிருக்கான்னே வெச்சிப்போம், அதுக்காக பண மதிப்பிழப்பு செய்து நூறு கோடி மக்கள் மீது துயரத்தை சுமத்தணுமா?

பாண்டே: நூறு கோடி மக்களும் வங்கி வரிசையில் நிக்கலையே..

ப.சிதம்பரம்: வங்கி வரிசையில் நிற்பது மட்டுமே துயரம் அல்லவே? குழந்தைக்கு பேதி போகுதுன்னு தனியார் மருத்துவமனைக்கு போனால் (பணம் இல்லை என்பதற்காக) அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சொல்லியிருக்கிறார்கள். போகும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டது? இது துயரம் இல்லையா?

பாண்டே :- டீமானிடிசேசனால துன்பங்கள் வரும்னு மோடியும் கூடத்தான் சொன்னாரே????

ப.சி :- அத மட்டும் தான் சொன்னாரா?? அடுத்து என்ன சொன்னார்.....

பாண்டே :- அதற்கான பலன் கிடைக்கும்னு சொன்னாரு......

ப.சி :- கிடையாது அத்தோடு சேர்த்து 50 நாளில் பிரச்சனை தீரவில்லை என்றால் என்னை #முச்சந்தியில்_நிக்க_வைத்து_கொளுத்துங்கள்_என்றார்...!

ப.சிதம்பரம்
கூறும்போது டீமானிசேசனை நான் நடைமுறைபடுத்திருந்தால் 15 நாள் அவகாசம் கொடுத்து இருப்பேன். இது போல 90% அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள், இந்த மாதிரி வரிசையில் நின்று இருக்க வேண்டியதில்லை.

(ப.சிதம்பரம் கூறும் வழிமுறையை தான் 2014ம் ஆண்டில் குவைத் நாடும் தினார் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து அதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து எந்தவித பிரச்சினையும் மக்களுக்கு கொடுக்காமல் தினார் நோட்டுக்களை மாற்றிக்கொண்டது என்பது கூறிப்பிடத்தக்கது)

பாண்டே: டீமானிட்டைசேசன உலக வங்கி பாராட்டியிருக்கே..!

ப.சி: எங்க பாராட்டுச்சி காட்டுங்க!

பாண்டே: நான் வச்சிருக்கேன்.!

ப.சி: எங்க காட்டுங்க..!
பாண்டே அது.......அங்க...!

ப.சி: டீமானிட்டைசேஷன் ரைட்டு’னு அது சொன்னதா காட்டுங்க பார்ப்போம்..!
பாண்டே: அப்படி அது சொல்ல..!

ப.சி: அப்புறம்......!
பாண்டே : ஒரு லட்சம் பேருக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பியிருக்கோமே

ப.சி : நோட்டீஸ் அனுப்பினாலேயே அவன் குற்றவாளி ஆயிட மாட்டான் பாண்டே, வழக்கு பதியனும், பதில் சொல்லனும், தீர்ப்பு வரனும் அப்பரம் தான் அவன் குற்றவாளி..

பாண்டே : 17 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப போறோம் (பாஜக அனுப்ப போகுதாம்)

ப.சி : (பலமான சிரிப்பு) புரிஞ்சுக்கவே மாட்டிங்குறீங்களே பாண்டே, வருமான வரித்துறையால் 17 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பவே முடியாது, வழக்கு போடனும், பதில் சொல்லனும், தீர்ப்பு வரனும், மேல்முறையீடு இதுலாம் பல பல பல்லாண்டு காலம் ஆயிடும், நம்ம அரசால அதை செய்யவே முடியாது

ப.சி : டீமானிட்டைஷேசன் க்கு பிறகு முதலாளிகள் யாருமே பணத்தை முதலீடு செய்யவே பயப்படுறாங்க

பாண்டே : நல்ல பணம் வச்சிருக்கவங்க எதுக்கு சார் பயப்படனும்..?

ப.சி : நீங்கதான் நோட்டீஸ் அனுப்பிட்டாலே குற்றவாளிகள் னு சொல்றீங்களே. இந்த லட்சணத்துல யார் விரும்பி குற்றவாளி ஆக நினைப்பாங்க

பாண்டே : 20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில எதுவும் நடக்கலையே

ப.சி : 20 ஆண்டுங்குறதே தப்பு..
அதுல பாதி 10 ஆண்டுகள் பாஜக உடைய ஆட்சி
ஆக காங்கிரஸ் செய்யாதது தப்புனா அதுல BJP க்கும் சமமான பங்கு இருக்கு.

ப.சி: முதல்ல வந்து பணமதிப்பு நீக்கம் என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தால் நான் கேக்குறேன் R.K.நகர் தொகுதில தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செஞ்சிச்சு என்ன காரணம்..??

பாண்டே: 89 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கைப்பற்றபட்டது

ப.சி: (89 கோடி) பணம் புழங்குது அது கருப்பு பணமா வெள்ளை பணமா..??
பாண்டே: நிச்சயமா கருப்பு பணமா தான் இருக்கும்...

ப.சி: அறிக்கை வந்துச்சா இல்லையா...?? என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..??
பாண்டே: இல்லை வழக்கு இருக்கு...ஊஊ...

ப.சி: என்ன நடவடிக்கை எடுத்தீங்க...??
ஏன் அதிமுக எதுக்கு..?? நடவடிக்கை எடுங்களேன்..???

பாண்டே: அமைச்சர் விஜயபாஸ்கர் அவர் மனிவியோட, சகோதரனோட, தந்தையோட தினமும் IT ஆப்பீசுக்கு டெய்லி நடையா நடந்தாரு

ப.சி: IT ஆப்பீசுக்கு . . நடவடிக்கையா..?? அவர் மீது வழக்கு தொடர்ந்திருக்கீங்களா...?? வழக்குதொடர வேண்டியதானே..??
பாண்டே: வருமான வரித்துறை விசாரிக்குது...

ப.சி: விசரிசுட்டீங்கல்ல ஊழல் வழக்கு ஏன் தொடரல..??

பாண்டே: அது பேப்பர்தானே காணிச்சாங்க லிகியூட் கேஷ் எடுககலையே...

ப.சி: கிடையாது தேர்தல் ஆணையம் இதுவரை அரிக்கை வெளியிடவில்லை... தேர்தல் ஆணையம் ஆதர்மில்லாமலா நடவடிக்கை எடுத்தது..?? வருமானவரித்துறை கொடுத்த அறிக்கையின்படி விசாரித்துதான் தேர்தலை ரத்து செய்தது...

பாண்டே: இல்லை சார் (89 கோடி) பணம் பட்டுவாடா செய்யபட்டதாக ஒரு காகிதத்தை தான் காட்டுனாங்க...

ப.சி: நீங்க சொல்லுறது விசித்திரமா இருக்கு இந்த 89 கோடி மட்டும் முழு விசாரணை முடிஞ்சபிறகுதான் தீர்மானிக்கமுடியும் ஆனா மற்றவங்களுக்கு கொடுத்த நோட்டிசையே தீர்ப்பு மாதிரி பேசுனீங்க கொஞ்சநேரம் முன்னாடிவரை...

பாண்டே: இல்ல நீங்க என்ன சொன்னீங்க குற்றசாட்டு வச்சாலே ஒரு குற்றவாளி இல்லைன்னு சொன்னீங்க...

ப.சி: ஆமா இப்பவும் அதைதான் சொல்லுறேன்... ஆனா வழக்கு தொடருங்கன்னு சொல்லுறேன்... அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு இருக்கு அவர்கள் அமைச்சர்களாக தொடர்கிறார்கள் ஒருத்தர் முதல்வராக இருக்காரு நீங்க ஏன் இன்னமும் அவர்கள் மீது வழக்கு தொடரவில்லை..??

பாண்டே: அது செய்யவேண்டியது மாநில அரசுதானே வழக்கு தொடரனும்..?? (சட்டமேதை பாண்டே சறுக்கியது இங்கேதான்)

ப.சி: என்ன இது..?? வருமான வரித்துறை அறிக்கைக்கு மாநில அரசு என்ன செய்யும்..??

பாண்டே: வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துட்டு இருக்கு சார்...

ப.சி: வருமானவரித்துறை இந்த அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே..??

பாண்டே: FIR யாரு சார் போடுவா..?? (சட்டமேதை மேதகு பாண்டேயின் அடுத்த ஸ்லிப்)

ப.சி:
வருமானவரிதுறையே FIR போடலாம், வருமானவரித்துறை சட்டத்தை எடுத்து பாருங்க... ஏன் இன்னும் இந்த அமைச்சர்கள் மீது FIR கூட பதிவு செய்யவில்லை..???

ப.சி: மிஸ்டர் பாண்டே, புரியலையின்னா புரிஞ்சுக்க டிரை பண்ணுங்க.

தந்தி டிவி பாண்டே மட்டுமல்ல பணத்தை தடை செய்து பல உயிர்களையும் இழக்க வைத்து ஒரு ஆணியும் புடுங்காமல் இரண்டு வருடத்தை கொண்டாடிய மோடி மற்றும் அவர்களின் வகையறாக்களும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்போது புரிகிறதா ஆப்ரேஷனை டாக்டர் தான் பண்ணனும் இப்படி கம்போவுன்டர் வச்சிபண்ணிணா
இப்படிதான்
பாண்டேக்கள் இனியும்.....

#பகிரப்பட்டது

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...