Thursday, 22 November 2018

ஒரே நாடு;ஆனால் பாகுபாடு*

*ஒரே நாடு;ஆனால் பாகுபாடு*

     உலகிலேயே ஹிந்துக்கள் அதிகமாக உள்ள தேசம் இந்தியா.

சுதந்திரத்துக்கு முன்னால், 18-7-1947 அன்று , பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட, இந்திய விடுதலைச் சட்டத்தின் கீழும், பாகிஸ்தான் போக, மீதி உள்ளப் பகுதி, “ஹிந்துக்கள் இந்தியா” என்று தான் குறிப்பிடப் பட்டுள்ளது.

     ஆனால், சுதந்திரத்துக்குப் பின் நம்மை ஆண்ட புண்ணியாத்மாக்கள், ஓட்டுக்காக, மதசார்பின்மை என்னும் பெயரில், மிகவும் சாதுக்களான ஹிந்து மதத்தினரை ரொம்பவும் வாட்டி வதைத்து வந்துள்ளனர்.

      இந்தியா சுதந்திரம் அடைய, “கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் ஒன்றை நடத்திய”, தேசப்பிதா, மஹாத்மாவை சுட்ட, நாதுராம் கோட்சே, கோர்ட்டில், தன் வாக்குமூலமாக 54 பக்க அறிக்கையைப் படிக்கும் போது கூட, மஹாத்மாவின் தியாகத்தைப் பாராட்டிய அதே வேளையில், அவர் வேறு மத அராஜக மக்களைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு, அப்பாவி ஹிந்துக்களை காலால் மிதிப்பதைப் பொறுக்காமல் தான் சுட்டதாகச் சொல்லியிருக்கிறார்.

     நேரு முதல், சோனியாவின் “ஜால்ரா”வாக இருந்த மன் மோஹன் சிங் வரை, காங்கிரஸ் ஆட்சியில், மத்திய, மாநில அரசுகளால், “மதச்சார்பின்மை” என்னும் பெயரில் , ஹிந்துக்கள் எல்லா விதத்திலும் வதைக்கப் பட்டது என்னவோ கசக்கும் உண்மைதான்.

இதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொண்ட ஹிந்துக்கள் , “கத்தியின்றி, ரத்தமின்றி” செய்த அடுத்த புரட்சியால் தான் வாஜ்பாயும் வந்தார்; இப்போது மோடிஜியும் ஆள்கிறார். மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்று அறிந்ததும், பூணூல் போட்டுக் கொண்டு என்ன பயன்? சிவ பூஜை செய்து என்ன பயன்?

     என் வழிபாட்டுத் தலங்களையும், மற்ற மத வழிபாட்டுத் தலங்களையும் அரசு எப்படி, “ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், மறு கண்ணில் வெண்ணையையும்” வைத்துப் பார்க்கிறது என்பதற்கு 10 அத்தாட்சிகள்:

1. அரசு ஹிந்து வழிபாட்டுத் தலங்ளில் தான் வைத்துக் கொண்டுள்ளக் கட்டுப்பாட்டை, கிறிஸ்தவ தேவாலயங்களிலோ, முஸ்லீம்களின் மசூதிகளிலோ, சீக்கியர்களின் குருத்வாராக்களிலோ, வைத்திருக்கவில்லை என்பது உண்மையா? இல்லையா?

2. மேலும்,  இப்போது அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஹிந்து வழிபாட்டுத் தலங்கள், நாளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் தடை ஏதும் இல்லை என்பதும், மற்ற மத வழிபாட்டுத் தலங்களை அவ்வாறு கொண்டு வர சட்டத்தில் இடம் வைக்க வில்லை என்பதும் உண்மையா? இல்லையா?

3. அரசு, ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் வருவாயைத் தானே நிர்வகிக்கிறது என்பதும், மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் வருவாயை அந்தந்த மதத்தினரே நிர்வகிக்கின்றனர் என்பதும் உண்மையா? இல்லையா?

4. ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தையும், அங்கு நடக்கும் சடங்குகளையும் தானே தன் இஷ்டத்துக்கு நடத்தும் அரசு, மற்ற மதத் தலங்களின் நிர்வாகத்திலோ, சடங்குகளிலோ தலையிட முடியாது என்பது உண்மையா? இல்லையா?

5. ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்களை விற்கவோ, வேறு வழியில் பங்கீடு செய்யவோ அதிகாரத்தைத் தன்னிடமே வைத்திருக்கும் அரசு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் சொத்துக்கள் பக்கம் நெருங்க முடியாது என்பது உண்மையா? இல்லையா?

6. ஹிந்து வழிபாட்டுத் தலங்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வந்துள்ள அரசால், மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் வருவாயைக் கொண்டு வர முடியாது என்பது உண்மையா? இல்லையா?

7. ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் வருவாயை, வேறு இனங்களில் செலவு செய்யும் அரசால், மற்ற மத வழிபாட்டுத் தலங்களின் வருவாயில் ஒரு பைசாவைக் கூட வேறு இனங்களில் செலவிட முடியாது என்பது உண்மையா? இல்லையா?

8. வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்திலோ, நடவடிகைகளிலோ ஹிந்து “பக்தர்கள்” குறுக்கிட எந்த அதிகாரமும் கிடையாது என்பதும், மற்ற மத வழிபாட்டுத் தலங்களில், அவ்வாறு குறுக்கிட , அதனதன் “பக்தர்களுக்கு” அதிகாரம் உண்டு என்பதும் உண்மையா? இல்லையா?

9. ஹிந்து வழிபாட்டுத் தலங்களின் வருவாயைக் கொண்டு நடத்தப் படும் கல்வி ஸ்தாபனங்களின் நிர்வாகத்தையும் தானே கையில் வைத்துள்ள அரசு, மற்ற மத வழிபாட்டுத் தலங்கள் நடத்தும் கல்விக் கூடங்களின் நிர்வாகம் பற்றிப் பேசக் கூட முடியாது என்பது உண்மையா? இல்லையா?

10. ஹிந்து வழிபாட்டுத் தலங்களால் நடத்தப் ப்டும் கல்விக் கூடங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர், மற்றப் பணியாளர், சேர்க்கப்படும் மாணவர்கள் போன்ற விவகாரங்களில் மதப் பாகுபாடு பார்க்காத அரசு, மற்ற மத வழிபாட்டுத் தலங்களால் நடத்தப் படும் கல்விக் கூடங்களில் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை என்பதில் குறுக்கிட முடியாது என்பது உண்மையா? இல்லையா?

     இதையெல்லாம் கேட்டால், என்னை மதசார்புடையவன் என்று பட்டம் சூட்டுவார்கள். மற்ற மதங்களை நான் மதிக்கிறேன்; வெறுக்க வில்லை.  அவற்றைச் சார்ந்தோர் பலர்  நண்பர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், என் ஹிந்து மதத்தை வைத்துக் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை நான் வெறுக்கிறேன். அத்தகையவர்கள் இனியும் பதவிக்கு வந்து, இன்னும் அதிக சேதத்தை ஹிந்து மதத்துக்கும், அதன் வழிபாட்டுத் தலங்களுக்கும் விளைவித்து விடக் கூடாது என்றும் எண்ணுகிறேன்.

இது தப்பா?

சம்மந்தபட்டவர்கள் எப்போது யோசிப்பார்கள்?

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...