- தலைவரே, என்ன காலைலயே பலத்த யோசனையா இருக்கீங்க?
- இல்லடா! நேத்து நாயுடுகாரு வந்தாருல்ல. இப்ப மத்திய பிரதேசத்துல எலெக்ஷன் வருது! அந்தக் கூட்டணிக்கு என்னை தலைமை தாங்க வான்னு சொல்லியிருக்காரு...
- மத்திய பிரதேசத்துலயா! அதுவும் உங்களையா!! அங்க ஹிந்தி தான பேசுவாங்க. உங்களுக்கு தமிழே தகராறு! சரியா பேசவராதே. அதுவும் இல்லாம அங்க கூட்டணி பத்தி எந்த பேச்சும் இல்லியே. அவர்கிட்ட நீங்க சரியா கேட்டீங்களா தலைவரே?
- ஆமாடா! மத்திய அரசின் தலைமை ஏற்க வான்னு சொன்னாரே.
- தலைவரே! மத்திய அரசு என்பது வேற! மத்திய பிரதேச அரசு வேற.
- அப்படியா? நல்ல வேளைடா நீ எனக்கு விவரமா சொன்ன. இல்லேன்னா நான் மத்திய பிரதேசம் போயி பிரச்சாரம் செய்ய துண்டுசீட்டு வேற எழுதி வச்சிருந்தேன். இந்தாப்பாரு, "ஏக் காவு மேன் ஏக் கிசான் கலைஞர் தாத்தா".
- உடனே அந்த துண்டு சீட்டை கிழிச்சுப் போட்ருங்க தலைவரே. இல்லை அதை எடுத்துட்டுப் போயி தமிழ்நாட்ல ஏதாவது கூட்டத்துல பேசிடப் போறீங்க.
- சரிடா! அப்ப நாயுடுகாரு சொன்ன மத்திய அரசுக்கு தலைமைன்னா, பிஎம் தானடா!
- ஆமாங்க தலைவரே.
- அப்ப சரி. ஆளப்போறான் தமிழன்னு போஸ்டர் அடிக்கச் சொல்லு. இல்லை வேண்டாம், ஆளப்போறார் "தளபதின்னு" போஸ்டர் அடிக்கச் சொல்லு. அதான் சரியா இருக்கும்.
- சரி தலைவரே! என்ன மறுபடியும் யோசனைல போயிட்டீங்க.
- இல்லடா. அடுத்த வருஷம் எலெக்ஷன் வரும். நான் பிஎம் ஆகி டெல்லி போயிடுவேன். அதுக்கு அடுத்த வருஷம் தமிழ்நாட்ல எலெக்ஷன் வரும். அப்ப இங்க தமிழ்நாட்டுல யாரை சிஎம் ஆக்கறது! யாரை நிதி அமைச்சர் ஆக்கறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன். நான் பிஎம் ஆனதும் இதை முடிவெடுக்க எனக்கு நேரம் இருக்குமானு தெரியாதுல்ல...
- ம்ம்ம்க்கும். அடுத்த மாசம் தமிழ்நாட்டுல 20 தொகுதில இடைத்தேர்தல் வருது மொதல்ல நாம இங்க டெபாசிட் வாங்க முடியுமானு பாப்போம் வாங்க தலைவரே...
நன்றி ! திரு.சுரேஷ்குமார்.
No comments:
Post a Comment