Wednesday, 28 November 2018

சிலமாதங்களுக்கு முன் கோரா.காம் தளத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை

சிலமாதங்களுக்கு முன் கோரா.காம் தளத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை நண்பர்களால் பரவலாக பகிரப்பட்டது...

2019 தேர்தலில் மோடியை ஜெயிக்கவிடக்கூடாது என்று சர்வதேச அளவில் நடக்கும் சதியையும் , அதற்கு இங்கு நடக்கும் சதிவேலைகளையும் விரிவாக குறிப்பிட்டிருந்தது அந்தக்கட்டுரை....

தங்கள் நாட்டுக்கு  எதிரான ஒரு மிக பலமான கூட்டணியை உருவாக்கியதால் ஏற்கனவே வெறுப்பின் உச்சத்தில் இருந்த சீனாவுக்கு டோகாலாம் விவகாரம் ஒரு பெரும் சறுக்கலாக அமைந்தது.... இனி மோடியை நீடிக்கவே விடக்கூடாது என்ற முடிவுடன் இறங்கியுள்ள சீனா தங்கள் அடியாட்களான கம்யூனிஸ்டுகளுடனும் காங்கிரசுடனும் கைகோர்த்துள்ளது...

தன்னார்வத்தொண்டு  நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கிறித்தவ மதமாற்ற சக்திகள் வாடிகன்மூலம்  தங்களால் இந்திய அரசியலில் விதைக்கப்பட்ட சோனியாவுக்கு எப்படியாவது மோடியை தோற்கடிக்கவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளன... மேற்படி உத்தரவை சிரமேற்கொண்டு செயல்படத்தான் சோனியா நேரடி அரசியலில் இருந்து ஒதுங்குவதுபோல நடித்துக்கொண்டு திரை மறைவு சதிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்...

முத்தலாக் தடைச்சட்டம் மூலம் சற்றும் எதிர்பாராமல் தங்கள் சமூகப்பெண்களிடமே ஆதரவு பெற்றுவிட்ட மோடியை எப்படி எதிர்கொள்வதென்று புரியாமல் அவரைக்கவிழ்க்க எவரோடு வேண்டுமானாலும் கூட்டுச்சேர வஹாபியர்கள் தயாராகிவிட்டனர்...

பண மதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி , ஈ வே பில் என அடுத்தடுத்து மோடி எடுத்துவரும் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கருப்புப்பண முதலைகள் மோடியை வீழ்த்தும் சக்திகளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத்தயாராக உள்ளனர்...

மேலே குறிப்பிட்ட சக்திகள் அனைவரும்மோடி எதிர்ப்பு என்ற ஒரு புள்ளியில் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர்...அவர்களின் நடவடிக்கையில் மோடிக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேர்ப்பது மட்டுமல்லாமல் , தேசிய  ஜனநாயககூட்டணியில் உள்ள கட்சிகளை வெளியே இழுப்பதும் ஒரு முக்கிய அம்சம்...அதன் எதிரொலிதான் அரைவேக்க்காட்டுப்பயல் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை வெளியேறியதும்  , தற்போது சந்திரபாபு நாயுடு நடத்தும் நாடகமும்...குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மட்டுமல்ல , அவர் தலை உயரத்துக்கு தங்கமாக குவித்தாலும் நாயுடு தேசிய ஜனநாயகக்கூட்டணியை விட்டு வெளியேறியே தீருவார்... 

இதுநாள் வரை எதிரும் புதிருமாக அரசியல் நடத்திய மாயாவதி - அகிலேஷ் , சந்திரபாபு நாயுடு - கே.சி.ஆர்  , மம்தா - மார்க்சிஸ்ட் ஆகியோர் மோடி எதிர்ப்பு என்ற ஒரே நோக்கத்திற்காக ஒரே அணியில் இணைவர்...

பாஜகவுக்கு வெளியே மோடிக்கு எதிராக இத்தனை வேலைகள் செய்துள்ள சக்திகள் கட்சிக்கு உள்ளேயும் மோடிக்கு எதிராக உள்ள சக்திகளை ஒன்றிணைத்து வருகின்றனர்...2014ம் ஆண்டு தேர்தலின் போதே , கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் செய்ய  [ கூட்டணி ஆட்சி தான் என்ற நிலை ஏற்பட்டால் , பெரும்பாலான கட்சிகள் மோடியை பிரதமராக ஏற்கமாட்டார்கள் என்பதால் ] கட்சியின் மிக மூத்த தலைவர்கள் மூவர் தீவிர முயற்சியில் இறங்கினர்...தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக இதைத்தெரிந்துகொண்ட சங்கத்தலைமை கடைசி கட்டத்தில் ஸ்வயம்சேவக்குகளை முழுவீச்சில் களமிறக்கி பாஜகவை பிரமாதமாக வெற்றிபெற வைத்தது... இது மோடிஜிக்கும் தெரிய வந்ததால்தான் அவர்களை முழுமையாக [ சங்கத்தின் சம்மதத்துடன் ]  ஓரங்கட்டினார்...

2014 ல் செய்த அதே வேலையை மீண்டும் செய்ய முழு வீச்சில் இறங்கியுள்ளனர் மோடியின் உட்கட்சி எதிரிகள்...யஷ்வந்த் சின்கா துவக்கியுள்ள மோடி எதிர்ப்பு அணிக்கு இவர்களின் முழு ஆதரவு உண்டு... சத்ருகன் சின்கா போன்றவர்களை அவ்வபோது தூண்டிவிடுவதும் இவர்களே.... மிக சமீபத்தில் உருவாகியுள்ள பிரவீன் டொகாடியா - சஞ்சய் ஜோஷி - ஹர்திக் படேல் கூட்டணியை பின்னிருந்து இயக்குவதும் இவர்களே...[ குஜராத்தில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு மிக முக்கிய காரணம் பிரவீன் டொகாடியாதான்...]

ஆக , 2019 தேர்தலின் போது பலமுனைத்தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளார் மோடி.... கிட்டத்தட்ட  சக்ர வியூகத்தில் துரியானாதிகளின் முற்றுகையில் தன்னந்த‌னியாக சிக்கிக்கொண்ட அபிமன்யுவின் நிலைதான்....[ அபிமன்யுவை முன்நின்று வீழ்த்தியவர் குருநாதர் துரோணாச்சாரியார் என்பதை நினைவில் கொள்ளவும்.]

அபிமன்யுவைப்போல மோடிஜியும் வீழ்த்தப்பட்டால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை.... ஐம்பது வயது வரை எந்த அரசுப்பதவியிலும் இல்லாமல் தேசத்துக்காகவும் , கட்சிக்காகவும் பாடுப்பட்ட ஸ்வயம் சேவக் அவர்....இந்தியாவை பிச்சைக்கார நாடாகவே காட்டிய முந்தைய பிரதமர்களைப்போல அல்லாமல் ,  நாளை வல்லரசாக இருக்கும் மாபெரும் தேசத்தின் தலைவராக தன்னை காட்டிக்கொள்ளும் முயற்சிதான் அவருடைய தற்போதைய நடை ,உடை , பாவனைகள்.... பதிவியை விட்டு விலக நேர்ந்தால் , மீண்டும் அதே எளிமையான ஸ்வயம் சேவக்காக கட்சிப்பணிக்குத்திரும்ப அவர் தயங்கவே மாட்டார்...

ஆனால் , சோனியா தலைமையிலான கொள்ளைக்கும்பல் கையில் இந்த தேசம் இன்னும் ஒரு பத்தாண்டுகள் கிடைக்க நேர்ந்தால் இந்த தேசம் என்ன கதி ஆகும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.... அதைவிட்டு விட்டு மோடி அவரை மதிக்கவில்லை ...இவர் காலில் விழவில்லையென்றெல்லாம் லாவணி பாடிக்கொண்டிருக்காதீர்கள்... யாரை எங்கு வைக்கவேண்டுமோ  அங்குதான் வைத்திருக்கிறார்....

[ குறிப்பு ; நாளை யோகிக்கோ ,  ஃபட்னாவிசுக்கோ வழிவிடாமல் மோடி சிறுபிள்ளைத்தனமாக நட‌ந்துகொண்டாலோ   , பதவிக்கு வந்தவர்களுக்கு எதிராக குழிபறிக்கும் வேலைகளில் இறங்கினாலோ அவரையும் விமர்சிக்கத்தயங்க மாட்டேன்.... எனக்கு இந்த தேசமும் , ஹிந்துத்வமுமே முக்கியம்...தனி நபர்கள் அல்ல...]

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...