Tuesday, 20 November 2018

சித்தர்கள் என்பவர்கள் யார்?

சித்தர்கள் என்பவர்கள் யார்?

கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள்.

கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்கிறது தேவார பதிகம்.

மனிதன் யார் ? அவன் எப்படி பட்டவன்?உலகில் அவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொன்னவர்கள் இந்த சித்தர்கள்.

'சித்தர்'என்ற சொல் 'சித்'என்ற வடமொழி சொல்லில் இருந்து வந்ததாகும்.

இவர்கள் பல நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர்.

பழங்காலத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட பெயர் "நிறைமொழி மாந்தர்கள்","அறிவர்" போன்றவைகளாகும்.

சமண மதத்திலும்,பௌத்த மதத்திலும் இவர்களை "சாரணர்"என்று அழைத்ததாக  தஞ்சை தமிழ் பல்கலை கழக வாழ்வியற் களஞ்சியம் என்கிற நூல் கூறுகிறது.

இவர்கள் எல்லா சமயத்திற்கும் அப்பாற்பட்டவர்கள்.

மனிதர்கள் பார்க்க முடியாததை பார்க்கின்ற,செய்ய முடியாததை செய்கின்ற,தெரியாததை உணர்த்துகின்ற அதீத சக்தி உடையவர்களாக இருப்பார்கள்.

அண்ட வெளிகளில் ஏற்படும்சலனங்கள்,
சப்தங்கள் ஆகியவற்றை மந்திரங்களாக பிடித்து தரக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

இறைவனை இடைவிடாது தியானித்து தம் சித்தத்தை அடக்கி அக கண்ணால் இறைவனை கண்டு உணர்ந்து,தம் ஆத்ம சக்திகளால் செயற்கரிய செயல்களை செய்பவர்கள்.

உயிரும் இறைவனும் ஒன்றிய நிலையில் இருக்கும் யோக சமாதியை விரும்பி உணர்ந்தவர்கள்.

மௌனத்தை பிரதானமாக கொண்டு சித்தி அடைந்தவர்கள்.

இவர்கள் ரசவாத கலையை அறிந்தவர்கள்.
மண்ணை பொன்னாக்குவார்கள்.
கல்லை கற்கண்டாக மாற்றுவார்கள்.தகரத்தை தங்கமாக்குவார்கள்.

இவர்கள் எட்டு வகை பேராற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...