நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு பெரியதொன்றுமில்லை என நிரூபிக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கிறேன். புள்ளி விவரங்கள் பொய் சொல்வதில்லை என்கிற வகையில் அது நல்லதுவே.
ஆனால் என்னுடைய எண்ணம் அதற்கு நேர்மாறானது. பா.ஜ. கட்சியின் இந்தத் தோல்வி சாதாரணமான ஒன்றல்ல என்பதே என்னுடைய கருத்து. எனவே அதனைக் குறித்து உள்ளது உள்ளபடி கொஞ்சம் ஆராயலாம். Shall we?
First of all, it is a morale booster for the Congress Party. மோடி என்கிற சுனாமியால் அடித்துத் துரத்தப்பட்டு எங்கோ ஒரு அதலபாதாளத்தில் கிடந்த காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டனாலேயே நம்ப முடியாததொரு விஷயம். ‘காங்கிரஸ் முக்த் பாரத்’ படைக்கும் எண்ணமுடைய மோடி/அமித்ஷாவின் மீதான சம்மட்டி அடி இது. இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்டியிருக்கிறது. Let us admit.
இரண்டாவது, காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள். ஒவ்வொரு தொகுதியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் பெற்ற வாக்குகளுக்கும், பாரதிய ஜனதாக் கட்சி பெற்ற வாக்குகளுக்கும் உள்ள மிகச் சிறிய வித்தியாசத்தை மட்டுமே புள்ளிவிபரங்கள் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. அது உண்மைதான்.
அதேசமயம், இதற்கு முன்னர் அதே தொகுதியில் பாரதிய ஜனதாக் கட்சி பெற்ற வாக்குகளிலிருந்து எத்தனை சதவீதம் குறைந்திருக்கிறது அல்லது காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் அதிகரித்திருக்கிறது என்கிற விவரங்களை அதிகம் காண முடிவதில்லை. எதனால் அப்படி நடந்தது என்று ஆராய்வது மிக முக்கியமேயன்றி சப்பைக்கட்டுகள் கட்டுவதால் ஆவதொன்றுமில்லை.
மூன்றாவது, தேர்தல் செலவுகளுக்குப் பணமின்றித் தவித்துக் கொண்டிருந்த காங்கிரஸிற்கு இனி அந்தக் கவலையில்லை. ஏனென்றால் கர்நாடகா, இராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மூன்று பெரிய மாநிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் கணிசமானது. எனவே அங்கிருந்து சுருட்டும் பணம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க காங்கிரசுக்கு உதவிகரமாக இருக்கும். இதுவும் சாதாரண விஷயமில்லை.
நான்காவது, பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு அல்லது ஏழு மாதங்கள் மட்டுமே இருக்கையில் காங்கிரஸ் தனது ஓட்டுக்களைத் தக்கவைத்துக் கொள்ள பணத்தை வாறி இறைக்கத் தயங்கவே தயங்காது. விவசாயக் கடனை ரத்து செய்வது, வேலையில்லாப் பட்டதாரிக்குப் பணம் தருவதிலிருந்து சாப்பாட்டை ஊட்டிவிடுவது, கால் கழுவிவிடுவது வரைக்கும் காங்கிரஸ்காரர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள்.
இது நிச்சயமாக பாரதிய ஜனதாக் கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையிடும். இதன் பாதிப்பு அருகிலிருக்கும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஐந்தாவது, காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல் வழக்குகள் தேங்கிப் போகும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒருவேளை மோடி தோற்றால் காங்கிரஸ் கட்சிக்காரன் தன் மீது நடவடிக்கை எடுப்பான் என்கிற அச்சமே ஊழல் குற்றச் சாட்டுக்களை விசாரிக்கும் அதிகாரிகள் மத்தியில் குளிர் ஜுரத்தை ஏற்படுத்தும்.
அபிஷேக் மனு சங்வி போன்ற காங்கிரஸ் உத்தமர்கள் ஏற்கனவே இதற்கான எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறார்கள். எனவே எந்த அதிகாரியும் துணிந்து சோனியாவின் மீதோ அல்லது ராவுல் வின்ஸியின் மீதோ அல்லது ராபர்ட் வதேராவின் அல்லது ப.சிதம்பரம், மன்மோகன்சிங் போன்றவர்கள் மீதோ சுமத்தப்பட்ட ஊழல் குற்றத்சாட்டுகளின் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது சந்தேகம்தான்.
இதுபோல் இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நான் சொல்லவருவதனை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
காங்கிரசுக்கும், அதன் களவாணிகளுக்கும், முக்கியமாக தாவூத் இப்ராஹிம் போன்ற ஹவாலா ஆசாமிகளுக்கும் அதையெல்லாம் விட பாகிஸ்தானுக்கும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் ஒரு வாழ்வா, சாவா என்கிற போராட்டம். இந்தத் தேர்தலில் மீண்டும் மோடி ஜெயித்து வந்தால் மேற்படியாளர்கள் அடையவிருக்கும் நஷ்டம் அளவில்லாதது.
கள்ள நோட்டடித்தும், ஹவாலா பணத்தை வைத்தும் இதுவரை தாக்குப் பிடித்துவந்த பாகிஸ்தான் மோடியின் டிமானிடைசேஷனினால் ஏறக்குறைய திவாலாகும் நிலைக்கு வந்திருக்கிறது. மோடியின் வெற்றி பாகிஸ்தானைச் சிதறடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்த தேர்தலில் மோடி வென்றால் கண்டெய்னர்களிலும், ரகசிய இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்களைத் தூக்கியெறிவதனைத் தவிர காங்கிரசிற்கும், ஹவாலா பேர்வழிகளுக்கும், தி.மு.க. போன்ற கட்சிக்காரர்களுக்கும் வேறு வழியில்லை. எனவே எப்பாடு பட்டேனும் மோடி ஜெயிப்பதனைத் தடுக்கவே முயல்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்தக் கட்சி இயற்றும் முதல் சட்டமே செல்லாத பழைய நோட்டுக்கள் மீண்டும் செல்லும் என்பதாகத்தான் இருக்கும் என உறுதிபடச் சொல்கிறேன். Mark my words. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் பல லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் இந்தியாவெங்கும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
மோடி செய்த மிகப் பெரும் தவறு அருண் ஜெயிட்லி போன்றவர்களின் பேச்சைக் கேட்டு காங்கிரஸ் களவாணிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததுதான் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம். ஒரு குறைந்தபட்ச நடவடிக்கை கூட அவர்கள் மீது இதுவரை எடுக்காதது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் கசப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம் மோடி தன்னால் இயன்றதைச் செய்தார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஊழல்வாதிகளால் நிறைந்த சுப்ரீம் கோர்ட் போடும் முட்டுக்கட்டைகள் ஒருபுறம். அருகிலேயே இருக்கும் ஊழல்வாதிகள், திறமையற்ற அதிகாரிகள் இன்னொருபுறம். இவர்களை வைத்துக் கொண்டு மோடியால் இதைவிட என்ன செய்திருக்க முடியும்?
தேர்தலில் தோற்றால் மோடி துண்டை உதறி தோளில் போட்டுப் போய்க்கொண்டே இருப்பார். அவர் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தியா என்கிற ஏழைதேசம் இழப்பது அதிகமாயிருக்கும். இன்னொரு மோடி பிறந்துவர எத்தனை நூற்றாண்டுகளாகுமோ யாருக்குத் தெரியும்?
நமது மூடத்தனத்தால், சுயநலத்தால் வாராது வந்த மாமணியைத் தோற்போமோ? It’s Trillion Dollar question.
No comments:
Post a Comment