Thursday, 20 December 2018

இந்த நாகரிக அரசியல் திராவிட கழகங்களுக்கு எப்பொழுதுவரும்..?

ம.பி.யில் ஆட்சியை இழந்தாலும்,மக்களின் இதயங்களில் இடம் பிடித்த சிவராஜ் சிங் சவுகான்(பாஜக)
மத்திய பிரதேசத்தில் மூன்று முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்து, முதல்வராக பதவி வகித்தவர் சிவராஜ் சிங்.
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும்,பாரதிய ஜனதா கட்சி,அதைவிட 5 இடங்கள் குறைவாக109 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆட்சி அமைக்க குறைந்தது 116 எம்எல்ஏ க்கள் தேவை என்ற நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்எலஏ க்களின் ஆதரவுடன் அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
காங்கிரஸ் கட்சியின் முதல்வராக நேற்று கமல்நாத் பதவியேற்கும் விழா நடைப்பெற்றது.
அந்த பதவி ஏற்பு விழாவில்,மூன்று முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தவர்,சிறு சீட்டுகள் இடைவெளியில் ஆட்சியை இழந்தள்ள போதிலும்,உற்சாகத்தோடு எதிர்கட்சியினரின் அந்த விழாவில் பங்கேற்று,விழா மேடையில் புதிய முதல்வராக பதவி ஏற்கும் கமல்நாத் கையை தூக்கி பிடித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததும்,ராகுல் காந்தியுடன் கை குழுக்கி வாழ்த்து சொன்னதையும் பார்த்த,அவருக்கு ஒட்டு போடாத மக்களின் இதயங்களிலும் சிவராஜ் சிங் இடம் பிடித்தார்..
இந்த நாகரிக அரசியல் திராவிட கழகங்களுக்கு எப்பொழுதுவரும்..?

அதிகாரமிழந்த இரண்டே நாட்களில் அரசாங்க வீட்டை காலி செய்து விட்டார்

இந்த நாகரிக அரசியல் திராவிட கழகங்களுக்கு எப்பொழுதுவரும்..?

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...