சர்ச்சில் – ‘’ வெள்ளைத் திமிர் ‘’ உருவாக்கிய வங்காள உணவுப் பஞ்சம்
( இந்தப் பதிவு , திருமதி மதுஸ்ரீ முகர்ஜி ( Madhusree Mukerjee ) அவர்களின் Churchill’s Secret War – The British Empire and the Ravaging of India during World War II என்ற ஆய்வு நூல் குறித்த ஒரு மதிப்பீடு )
1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி , ஜெர்மனி ( Germany ) போலந்து ( Poland ) நாட்டின் மீது படை எடுத்து ஆக்ரமிப்பு செய்தது . அடுத்த செப்டம்பர் 3 ஆம் தேதி இங்கிலாந்து நாடு ஜெர்மனி மீது போர் அறிவிப்பு பிரகடனம் செய்து இரண்டாவது உலக மஹா யுத்தத்தை ( World War II ) தொடங்கி வைத்தது . அந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டின் காலனி ( Colony) என்ற வகையில் இந்தியாவும் , நேச நாடுகளின் கூட்டணியில் ( Allied States ) கட்டாயமாக சேர்க்கப்பட்டது . இந்தப் போர் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ( Imperial States ) இடையே உள்ள நாடு பிடிக்கும் போர் வெறியாகவும் , காலனிய மக்களை துயரத்தில் ஆழ்த்தி அவர்தம் நாட்டு வளங்களை , இந்த போர் வெறிக்கு பயன்படுத்திக் கொண்ட செயலாகவும் தான் இருந்தன , எனப் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தின !
சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill (30 November 1874 – 24 January 1965 ) இங்கிலாந்து ( United Kingdom ) நாட்டின் இரு உலகப் போர்களின் போதும் அந்த நாட்டின் பிரதமாராக இருந்தவர் .
சர்ச்சில் , 1940 ஆம் ஆண்டு மே ( May ) திங்கள் 10 ஆம் நாள் , இங்கிலாந்து நாட்டின் யுத்தகால பிரதமராக பொறுபேற்றுக் கொண்டார் . அவர் இந்தப் போரில் , இந்தியாவின் வளங்களை கட்டாயமாக எடுத்து , இந்த நாட்டின் மக்கள் அழிவைப் பற்றி சிறிதும் , கவலைபடாமல் ஈடுபட்டார் . போர்த்தேவைக்காக , இந்தியாவில் விளைந்த உணவுப்பொருட்களை , இங்குள்ள மக்களின் தேவைகளைப் பற்றி யோசிக்காமல் ஏற்றுமதி செய்தார் . இந்த விளைவு , இந்தியாவில் , குறிப்பாக , வங்காளத்தில் பெரும் உணவுப் பஞ்சம் வந்தது . இந்த பஞ்சம் நிகழ்ந்த இடம் வரைபடத்தில் உள்ளது (https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2f/Map_of_Bengal_districts_1943.png )
இந்தப் பஞ்சம் காரணமாக சுமார் 30 இலட்சம் இந்தியர்கள் உணவின்றி , பட்டினியால் மாண்டு போனார்கள் .
நமது பாரத நாட்டில் தொன்று தொட்டு , நெடுங்காலமாகவே உணவுப் பஞ்சம் வந்தால் அதனை சமாளிக்கும் அமைப்புகள் இருந்து வந்தன . மத்திய காலத்தில் ஊர்க் கிராமப் பஞ்சாயத்துகள் , பேரரசுகளை நம்பி இராமல் , தன்னளவில் , இந்தக் கிராமப் பஞ்சாயத்துகள் செயல் ஆற்றி வந்தன. இந்தப் பேரசுகள் ஆட்சிகள் காலம் முடிந்த பிறகு , முகாலயர் ஆட்சிகாலம் வரையிலும் சிறப்பாக செயல் பட்டன . இந்த அமைப்புகளை அழித்தவர்கள் , அந்நியர்களான , நாடு பிடிக்க வந்த காலனிய ஆட்சி அரசுகள்தான் !
இரண்டாவது உலக மஹா யுத்தம் 1939 ஆண்டு முதல் 1945 ஆண்டு வரை , தொடர்ந்து நடை பெற்றது . இங்கிலாந்து நாட்டின் போர்த் தேவைகளுக்கு ஏற்ப , பாரதத்தின் உணவுப் பொருட்கள் பிரதமர் சர்ச்சிலின் உத்தரவின் பேரில் , தொடர்ந்து ஏற்றுமதி செய்யபட்டு வந்தன . இந்த நிலையில் 1942 ஆம் ஆண்டில் , வங்கத்தில் இயற்கைப் பேரழிவுகள் நடந்தன – நோயினால் பயிர் உற்பத்தி பாதிப்பு , சூறாவளி காற்று , பேய்மழை என மக்களை வாட்டி வதைத்தன . அடுத்து வந்த 1943 ஆம் ஆண்டு , முன்னர் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளினால் உணவு உற்பத்தி குறைந்து பஞ்சம் தலை விரித்து ஆட்டம் போட்டது .
இம்மாதிரியான ஒரு பஞ்ச காலத்தில் ஒரு மக்கள் நலன் நாடும் அரசு , மற்ற இடங்களில் இருந்த உணவுப் பொருட்களை , பஞ்சப் பகுதிக்கு கொண்டு சென்று , மக்கள் நிவாரணப் பணிக்கு முன்னுரிமை கொடுத்திருக்கும் , ஆனால் அன்று இருந்தது , போர்வெறி மிக்க ஏகாதிபத்திய இனவெறி பிடித்த பிரதமர் சர்ச்சிலின் ஆட்சியின் கீழ் அல்லவா எங்கள் அருமை மிக்க பாரத நாடு அடிமைப் பட்டுக் கிடந்தது ?
வங்காளத்தில் மக்கள் பஞ்சம் காரணமாக , கும்பல் கும்பலாக மடிகிறார்கள் என்று செய்தி சர்ச்சிலுக்கு தெரியாமல் இல்லை . அன்று இந்தியாவுக்கான அமைச்சர் அமெரி ( Leopold S Amery – Secretary of State for India ) , இந்திய வைஸ்ராய் லின்லித்கோவ் ( Victor Alexander John Hope, 2nd Marquess of Linlithgow ) ஆகிய இந்த மூவருக்கு இடையில் இருந்த கடிதப் போக்குவரத்தை ( கடிதங்கள் , தந்திகள் ) நோக்கும் பொழுது – வங்காளத்தின் பஞ்சம் குறித்து சர்ச்சிலுக்கு நன்கு தெரியும் என்பது புலனாகிறது . சர்ச்சில் இது பற்றி கவலை கொள்ளவில்லை . யுத்தப் பணிக்கு தேவைபடும் அனைத்து உணவு வகைகளையும் இங்கிருத்து ஏற்றமதி செய்ய உத்தரவிட்டுக்கொண்டே இருந்தார் . மேலும் அந்த சமயத்தில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் தங்கள் வசம் உள்ள மிகையான அரிசியை , இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முன்வந்தன , ஆனால் இவற்றை கொண்டு செல்ல கப்பல்களை இங்கிலாந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரின . இந்த வேண்டுகோளை சர்ச்சில் நிராகரித்தார் . நம வங்கம் தந்த சிங்கம் “ நேதாஜி ” சுபாஷ்சந்திர போஸ் அவர்களும் சுமார் 1 லட்சம் டன் ( 1 lahk MT ) வரை வெளிநாட்டில் இருந்து இந்தியா கொண்டு வர அனுமதி கோரினார் . இந்த அனுமதியும் மறுக்குபட்டது !
சர்ச்சில்லுக்கு ஏன் இந்தியர்கள் மீதான இத்தகு வெறுப்பு ?
இரண்டு விதமான காரணங்களை யூகிக்கலாம் :
ஒன்று – சர்ச்சிலின் குடும்பம் அந்த நாட்டின் புகழ் பெற்ற ஒரு பிரபுக் குலக் குடும்பம் ( Dukes of Marlborough, ) . அவரது தந்தையும் , பாட்டனாரும் பாரளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் . சர்ச்சில் இளமையிலேயே ஓர் உயர் ஆங்கிலேய வாழ்க்கை முறையில் (British Aristocracy ) வளர்ந்து , அவர் இறக்கும் வரையிலும் , ஓர் ஏகாதிபத்திய ( Imperialist ) மன நிலையில் இருந்தவர் . “ வெள்ளைத் திமிர் ” என நான் மேலே குறிப்பிட்டது இதைத்தான் . அவர் ஓர் இனவெறியர் .
சர்ச்சிலின் இந்த இனவெறி குறித்து சில தகவல்கள் :
// Churchill exclaimed “ I hate Indians . They are a beastly people with a beastly Religion ” - Mansergh , The Transfer of Power – Vol III , 3
// The Prime Minster ‘ hates India and everything to do with it ‘ Wavell observed in his diary on 27th Jul , after witnessing an outburst in the War Cabinet // Schofield , Wavell : Soldier & Statesman , 286 (Field Marshal Archibald Percival Wavell, 1st Earl Wavell – Viceroy and Governor General )
காந்தி குறித்து // Gandhi came to represent Hindu guile - a malignant subversive fanatic – a thoroughly evil force // Churchill , India , 95
இரண்டு – இனவெறி மற்றும் நிறவெறி இவற்றின் ஊடாக இருக்கும் சமய வெறுப்பு . சர்ச்சில் , தனது ஆழந்த கிறித்துவ சமய நம்பிக்கைகளின் எதிரான இந்து மத நம்பிக்கைகளை கொண்டு இருந்த அன்றைய இந்தியர்களின் மீதான வெறுப்பும் , அவரது இந்த மனநிலைக்கு ஓர் காரணம் என இன்று நாம் ஊகிக்க வேண்டி உள்ளது . கீழ்காணும் ஒரு சம்பவத்தை பார்க்கலாம் :
// Back in London , Churchill told his private secretary that ‘ the Hindus were a foul race “ protected by their mere pullulation from the doom that is their due ” ( Pullalation means rapid breeding ) . He wished that Air Chief Marshall Arthur Harris , the head of the British bomber command , could ‘ send some of his surplus bombers to destroy them ‘ // Colville , The Fringes of Power , Vol II , 203
நூலாசிரியர் திருமதி மதுஸ்ரீ முகர்ஜி , இந்த நூலினை பலவிதமான ஆவணகளின் சான்றுகளோடு இந்த வங்காளப் பஞ்சம் பற்றி எழுதி உள்ளபோதிலும் , அன்று 1943ஆம் ஆண்டு பஞ்சத்தில் சிக்கி பின்னர் தெய்வாதீனமாக , உயிர் பிழைத்து , இன்று முதியவர்களான சில வங்காளிகளை நேர்காணல் செய்தும் , அந்தக் குறிப்புகளை இந்த நூலில் பதிவு செய்து உள்ளது , மிக சிறப்பான ஓர் காரியம் . அந்த நேர்காணல் குறிப்புகளை நாம் இன்று வாசித்தால் கூட , நம் கண்களில் கண்ணீர் பெருகும் என்பது உண்மை . ஒரு காலத்தின் ஓர் உயரிய பண்பாடு , காலனிய ஆட்சிக் கொடூரங்களினால் , இந்தக் கேவல நிலையை எப்படி அடைந்து என்பதே நம் முன் நிற்கும் வினா !
அந்த பஞ்ச காட்சிகளை , நூலாசிரியர் வரிகளில் சில பார்போம்
- // A man with a female child requested everybody he met to buy the baby . As nobody agreed to his proposal , the man threw the baby into the well and fled away //
- // Gyanenranath Panda of Chongra village , having become crazed with hunger , slew his father , mother , grandmother , grandfather , wife , son , daughter – everyone in the house //
- // A schoolteacher in Mosisadal reported seeing children picking and eating undigested grains out of a beggar’s diarrhoeal discharge //
நம் நாடு பல இடர்பாடுகள் கடந்து , நம் பாரத நாட்டின் மக்களும் பல இன்னல்களைக் களைந்து , இந்த 2018 ஆண்டில் , தேசப்பற்று ஒன்றினையே தன் உயிர் மூச்சு எனக் கருதும் , அனவரதமும் மக்கள் நலன் நாடும் ஒரு தலைவர் , நம் பாரத பிரதமாராக இன்று இருப்பது நம் நல்ஊழ் என்றுதான் சொல்லவேண்டும் , ஏனென்றால் , எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு , நம் பாரத நாட்டின் பொருளாதாரம் இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளி உலக அரங்கில் 5 அவது இடத்தை அடையும் என செய்திகள் தெரிவிகின்றன (https://www.news18.com/news/business/in-2019-india-will-pip-britain-to-become-5th-largest-economy-arun-jaitley-1810927.html )
மேலே சொன்ன செய்தியை கேட்ட பிறகு , நம் நாட்டை இனரீதியாகவும் , மத ரீதியாவும் வெறுத்த சர்ச்சிலின் ஆன்மா என்ன நினைக்கும் ?
யாருக்கு தெரியும் – Churchill will be turning in his grave !
No comments:
Post a Comment