Saturday, 30 March 2019

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலிலெ தான் விலைவாசி உயர்வு பேசப்படவில்லை. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலிலே தான் அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க செய்வோம் என

பதிவர்: ராஜா சங்கர்

விலைவாசி குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என பல நடுத்தர மக்களுக்கு புரிவதில்லை.

நீங்களோ நானோ நாளைக்கு அரிசி விலை இன்னும் ஓரு 50 ரூபாய் ஏறி கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் கூட பட்டினியாய் கிடக்கபோவதில்லை. ஆனால் ஏழை மக்களை யோசித்து பாருங்கள்?

அவர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் இது?

அதுவும் மாதா மாதாம் விலைகள் ஓரளவுக்கு அப்படியே இருப்பது?

ஏழை எளிய மக்கள் அதை மறந்துவிடும் அளவுக்கா இருக்கிறார்கள்?

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலிலெ தான் விலைவாசி உயர்வு பேசப்படவில்லை.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலிலே தான் அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க செய்வோம் என யாரும் வாக்குறுதி கொடுக்கவில்லை.

தமிழக வரலாற்றிலே முதல் முறையாக இந்த தேர்தலிலே தான் மீனவர்கள் துப்பாக்கி சூடும் காவிரி பிரச்சினையும் பேசப்ப்டவில்லை.

ஏனென்றால் மோடி இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

வெங்காயத்தை பதுக்கு வாஜ்பாயி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் ஞாபகம் இருக்கிறதா?

நடுவிலே கொஞ்ச நாள் பருப்பு விலையை ஏற்றி காண்பித்தார்களே பின்பு தூக்கி உள்ளே வைத்து பிதுக்கி பிடுங்கி விலைவாசியை குறைத்தாரே ஞாபகம் இருக்கிறதா?

ஏன் இதையெல்லாம் நாம் பேசுவதில்லை?

ஏன் சும்மா எதிரிகட்சிகளின் கஞ்சா குடிக்கிகளூக்கு விளம்பரம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்?

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...