உலகிலேயே இரண்டு அணு ஆயுத, எதிரி நாடுகளுடன் (சீனா, பாகிஸ்தான்) நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரே நாடு இந்தியா.
கடந்த 70ஆண்டுகளில் இந்த இரண்டு அணு ஆயுத நாடுகளாலும் ஆறுமுறை தாக்கப்பட்டு பெரும் இழப்பை சந்தித்த நாடு இந்தியா.
தீவிரவாதத் தாக்குதல்,
எல்லையில் எதிரி நாடுகளுடன்
ராணுவ மோதல் என வருடம் முழுவதும் பதட்டத்துடனே போர் போன்றதொரு சூழலில் பொழுதைக் கழிக்கும் நாடு இந்தியா.
இப்படி எந்நேரமும் பாதுகாப்பு சம்பந்தமான சவால்களை எதிர்நோக்கியிருக்கும் அளவுக்கு 60 ஆண்டுகாலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் பலவீனப்பட்டு இருந்த இந்தியாவை ஐந்தே ஆண்டுகளில் தலைநிமிரச் செய்து, எதிரி நாடுகளுக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து, நாட்டிற்கெதிரான அச்சுறுத்தல்களை துணிச்சலுடன் எதிர் கொண்ட ஒரே தலைவர் நரேந்திரமோடி மட்டுமே.
நாட்டில் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும்,உறுதியான முடிவை உடனடியாக எடுக்கும் நரேந்திரமோடி போன்ற தலைவர் மீண்டும் பிரதமராக வரவேண்டுமா.....
அல்லது
அமேதி தொகுதியில் வெற்றிபெற வாய்ப்பில்லை எனத்தெரிந்ததும், ஏற்கனவே சித்திக் என்ற வேட்பாளரை அறிவித்த, கேரளா வயநாடு தொகுதியில் நானே போட்டியிடுகிறேன் என குறுக்கே புகுந்து, சித்திக்கை வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்து, தானும் வேட்புமனு தாக்கல் செய்யாமல், ஒரு வாரத்திற்கும் மேலாகியும், இதுவரை ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் எல்லாரிடமும் ஆலோசித்து, ஆலோசித்து, தான் போட்டியிடும் தொகுதியைக்கூட முடிவெடுக்க முடியாமல் காலத்தைக்கடத்தும் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டுமா ....
ராகுலைப் போன்ற முடிவெடுக்கும் திறன் ஆறவே இல்லாத ஒரு கோமாளி பிரதமரானால், நாட்டின் எதிர்காலம் , நாட்டின் பாதுகாப்பு, என்ன ஆகும் என்பதைப்பற்றி நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.
#மீண்டும்மோடி #வேண்டும்மோடி
ஆர்.முனுசாமி வெள்ளோடு.
No comments:
Post a Comment