Monday, 12 November 2018

எதற்கு சார் விஜய் அவர்களின் மதத்தினை இழுக்க வேண்டும்?

ஓரு. முக்கிய அருவிப்பு....எதற்கு சார் விஜய் அவர்களின் மதத்தினை இழுக்க வேண்டும்?

கீழ் வரும் விவரங்களை தயவு கூர்ந்து புரிந்துகொள்ளுங்கள் :

2015 FCRA (Foreign Contribution REgulation Act) வெளியிட்ட தகவல் என்ன...???

கூறுவது என்னவென்றால்
-1994 முதல் 2012ஆம் ஆண்டுக்கு மட்டும் 1,16,073 கோடி ரூபாய் இந்தியாவிற்குள் வெளி நாடுகளில் இருந்து நன்கொடை என்ற பெயரில் NGOகளுக்கு வந்துள்ளது.

மீண்டும் கூறுகிறேன் தொகை 1,16,073 கோடி. (1,16,073,00,00,000 ரூபாய்)
-அந்த தொகையில் பெரும் பங்கு மதம் மாற்றும் கிருஸ்தவ மிசினரிகளுக்கு தான் வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை.

ஆண்டுக்கு சுமார் 10,000கோடி ரூபாய் மதம் மாற்ற இந்தியாவில் செலவுசெய்யும் கிருஸ்தவ மிசினரிகள் இந்த செயல் என்ன சரி???

-41,844 NGO களில் 55% மேல் முறையாக கணக்கு காட்டவில்லை. இந்த முறையாக கணக்கு காட்டாத அனைத்து அமைப்புகளின் நிதி ஆதாரம் வரும் வழிகளை மோடி ஆட்சிக்குவந்த உடன் முடக்கிவிட்டார்.

இன்று இந்த மிசினரிகள் பெரிய அளவு கணக்குகாட்டவேண்டி இருப்பது அவர்கள் மதம் மாற்றும் வேலைக்கு பெரும் இடையூறாக இருக்கிறது.

மதம் மாற்றுவதற்கு தலைக்கு 3லட்சம் தர தயார் , மதம் மாற்றி பெயரை மாற்றா தேவையான Affidavit of Religion Conversion அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்க இங்கேயே ஆயிரம் கிருஸ்தவ இயக்கங்கள் வேலை செய்கின்றன.

அவர்கள் கைகள் மிக பெரிய அளவில் கட்டபட்டுவிட்டன.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆலயங்களும் வரிந்து கட்டிகொண்டு மோடிக்கு எதிராக பிரச்சனைகளை அடுத்து அடுத்து தூண்டிவிட ,

அதற்கு பக்கா ஆதரவு சென்னையில் உள்ள கிருஸ்தவ கல்லூரிகளில் மாணவர்களை நாட்டை காப்பாற்ற என்ற மறைமுக போர்வையில்

தூண்டிவிட்டு போராட்டங்களை அடுத்து தூண்டிவிட்டு கொண்டே இருக்கும் இந்த சூழலில்.....

அப்படி வரும் 10,000கோடியை மருத்துவமனைகளாக கட்டினால் மாவட்டத்திற்கு 3 Multi Speciallity Hospital கட்டாலாமே?????

என்று ஏன் விஜய் பேசக்கூடாது???? ஏன் அப்படி வசனத்தை அட்லீ எழுத கூடாது???

அதை விட்டுவிட்டு இந்துகளின் பல ஆண்டுகள் மன காயத்தில் ஏன் இந்த இயக்குனர் குழப்ப வேண்டும் என்று

இந்துகள் கோவம் கொள்வதில் நியாயம் இருக்கா இல்லையா என்று நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள்.

நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர். அவர் கிருஸ்தவராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

அவருக்கு பிடித்த மதத்தில் அவர் இருக்கிறார்.நடிகர் விஜய் ஒரு கிருஸ்தவர், UK குடியுரிமை பெற்ற கிருஸ்தவர் என்று நினைக்கிறேன்.

அவர் மகன் Jason ஞானஸ்தானம் எடுத்தது ஐரோப்பிய தேசத்தில். இவர் கிருஸ்தவர் இல்லை கூறுவது சும்மா அரசியல்.

இந்த படத்தை எடுத்த இயக்குனர் அட்லீ தனது எல்லா படத்திலும் கிருஸ்தவம் தூக்கி பிடிக்கும் காட்சிகளை வைப்பதாக கூறுவதிலும் உண்மை உண்டு.

இப்படி கூட்டணியில் கோவில்கள் கட்டுவதை வைத்து பேசுவது மாற்று மத உள்விவகாரத்தில் தலையிடுவது என்ன பிரச்சனை உருவாக்கும் வேலை தானே???

ஒருவேளை விஜய் அவர்களுக்கு தெரியாமல் அட்லீ ஏமாற்றி எழுதி இருக்கலாம்,

இல்லை சத்தியராஜ் - சீமான் என்ற செபாஸ்டீன் கூட்டணி வேலையாக இருக்கலாம்.

எது எப்படியோ கிருஸ்தவர்கள் - இந்து மக்களின் மத உள் விவகாரத்தில் குழப்புவது ஏற்புடையது அல்ல. இதனால் தான் விஜய் அவர்களின் மதம் இழுக்கபடுகிறது.

என்றாவது இந்துவாக வாழும் ரஜினி இப்படி மாற்று மத விவகாரங்களை காயபடுத்தியது உண்டா????

எனவே பெரிய நடிகர்கள் கவனமாக வசனங்கள் தேர்வு செய்யவேண்டும்.
  .     தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் உச்சநீதி மன்றம் இதை ஏன்கண்டு கொள்ள வில்லை இதற்காக அரசியல் சட்ட சாஷணத்தின் படி ஏன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த பணத்தில் அரசு உயர் அதிகாரிகளுக்கும் பங்கு வருகிறதா? இதற்கு தூய்மையான அரசு விஷாரணைகமிசன் போடலாமே ?

நன்றி - தேசபக்தர்கள்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. நாம் அனைவரும் சமூகவலைதளம் மூலம் பாஜக வெற்றி பெற பணிகளை செய்வோம்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது.  நாம் அனைவரும் சமூகவலைதளம் மூலம் பாஜக வெற்றி பெற பணிகளை செய்வோம்.  300+ தொகுதிகளில் சமூகவலைதள தாக்கம் அதிக அளவில் இருந்து வெற்றியை நிர்ணயிக்கும்.

நமோ ஆப் பதிவிரக்கம் செய்வோம்.  அதில் பல முக்கியமான செய்திகள் உள்ளன.   லிங்க் கீழே..

Join me on NaMo App in the journey to transform India.

Click http://nm-4.com/dnldapp/app.php?promo=D3HLVN-F

ட்விட்டர் கணக்கு துவக்குவோம். பாஜக ஆதரவு ட்ரெண்டிங் செய்வோம்.  ட்ரெண்டிங் என்பது ஒன்று இரண்டு ட்வீட் செய்வதல்ல 50-100ட்வீட்கள் செய்வோம்.  நம் Friends of TN BJP ட்விட்டர் கணக்கு: @TN4BJP.  Please follow us.  ட்ரண்டிங்கில் கலந்து கொள்ள நம் வாட்ஸப் குழுவில் இணைவோம்.  லிங்க் கீழே.
https://chat.whatsapp.com/4VkB7BNhqJULHo21OlVQaw

Friends of TN BJP சமூகவலைதள குழுமத்தில் 250+ வாட்ஸப் குழுக்கள்,  முகநூல் குழு மற்றும் பேஜ்கள், ட்விட்டர்,  டெலிகிராம் கணக்குகள் உள்ளன. இணைவீர். தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கான வாட்ஸப் குழுக்கள் உள்ளன.  கீழே உள்ள நம் வெப்சைட் லிங்க் மூலம் நம் வாட்ஸப்,  முகநூல் குழுக்களில் நேரடியாக இணையமுடியும்.  லிங்க் கீழே..

www.friendsoftnbjp.online

நாம் இந்த பதிவை நம் முகநூல் Timelineல் பதிவு செய்வோம்.  நம் வாட்ஸப் மற்றும் முகநூல் குழுக்களில் பகிர்வோம்.  இதன் மூலம் அதிக அளவில் நண்பர்கள் நம் Friends of TN BJP யில் எளிதாக இணையமுடியும்.

பத்மநாபன்

எஸ்ஸார் ஸ்டீல் வங்கிக் கடன் தொடர்பாக, ரூ.50,000 கோடி மீட்கப்பட்டது என்று சொன்னால், சில ஹாஃப் பாயில் மண்டையர்கள், --
“வெளி நாடு ஓடிச் சென்றவர்களின் கடன் என்னாச்சு?”, என்கிறார்கள்.

அமலாக்கத் துறை முடக்கியுள்ள, , சொத்துக்களில், சில: (நாட்டைவிட்டு ஓடிப்போனவர்கள்)

.a)  TDKவின் ஜால்ரா எனப்படும் அஹமது படேலின் ஜால்ராக்கள் என்று சொல்லப்படுவோருக்கு, தொடர்புடைய "ஸ்டெர்லிங் பயோடெக்"  தொடர்பான, ரூ.4,703 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

.b)  மல்லையா --- இதுவரை முடக்கப்பட்ட சொத்துகள் ரூ.9,890 கோடி

.c)  நீரவ்-மெஹுல்--- இதுவரை முடக்கப்பட்ட சொத்துகள் ரூ.7,664 கோடி

.மேலே காணும் ரூ.22,000 கோடி என்பது சாம்பிள்தான்.

.அமலாக்கத்துறை வலைத் தளத்தில், நூற்றுக்கணக்கான கேஸ்களில், நடவடிக்கை எடுக்கப்படுவதைப் பற்றி செய்தி உள்ளது.

.நம்மூர் மேதாவி பனாசினா, கானாசினா சொத்துக்களும் கூட முடக்கப்பட்டுள்ளன.

நாட்டை விட்டு ஓடிப்போனவர்களின்( Fugitive Economic Offenders ), சொத்துக்களை கையகப்படுத்த, மோடிஜியால் விசேஷ சட்டம்  ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ராஜ்ய சபாவில், தாமதமான நிலையில், அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. அந்த அளவுக்கு, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் பேராதரவும், உற்சாகமும், ஒத்துழைப்பும் காணப்பட்டது!!!.

ஒத்துழைப்பு தராத, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மோசடி ஆசாமிகளைப் பற்றி, மௌனம் காக்கும் ஊடகசாரிகளும், பப்புவின் அடிமைகளும், --

“மல்லையா, நீரவ்” விவகாரத்தில், மோடிஜியை தாக்குவது, பச்சை, கருப்பு, நீலம் என்று சகல வர்ண அயோக்கியத்தனம்.

அவர்களுடைய சொத்துக்களை முடக்கும், மோடிஜி குற்றவாளி; --

அவர்களுக்கு கடன் தந்து, கடன் நீட்டிப்பு தந்து, அச்சமேதுமின்றி, தெனாவெட்டாக, சாராய பார்ட்டி, ஐ.பி.எல். விழா என்று உல்லாச வாழ்க்கை வாழ அனுமதித்த பப்பு காங்கிரஸ் நல்ல கட்சி. –

நல்லாயிருக்குதுடா, ஒங்க நியாயம்?!!   

நம் கண்ணுக்கு கண்ணான, தேசத்துக்கு செய்யப்பட்ட துரோகங்கள், ஒவ்வொன்றாக களையெடுக்கப்படுகின்றன.

சட்டங்கள் இயற்றுவதும், ஃபோன் பேங்கிங் முறைகேடுகள் தொடராமல் பாதுகாக்க நெறிமுறைகள் வகுப்பதும், மோடிஜியின் கடமை.

சட்டங்களை அமல்படுத்தி, உள்ளே தள்ளுவது, அதிகாரிகளின் கடமை.

குறை காணும் பட்சத்தில், “யாரை, விமர்சிப்பது?”, எனும் அடிப்படை புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம்மூர் மேதாவி, 2 மாதங்களுக்கொருமுறை, கோர்ட்டுக்கு சென்று, கைது கூடாது என்று ஆர்டர் வாங்கிக் கொண்டு, அலைகிறார்.

ராஜ மரியாதையுடன், மேதாவிக்கு, அனுமதி வழங்கப்படுகிறது.

ஜாமீன் தரும் கோர்ட்,
வாய்தா தரும் கோர்ட்,
ஓட்டைகளுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் அதிகாரி ---

போன்றவர்களைக் கேள்வி கேட்க வழியில்லாத கோமாளிகள், மோடிஜி மீது விமர்சனம் செய்ய பாய்ந்தோடி வருகின்றனர்.

ரூ.200 கூலிக்கு, மோடிஜி ஃபோபியா  மீம்ஸ் போடுவதை, பார்ட் டைம் தொழிலாக வைத்துக் கொண்டு, சிலர் அலைகிறார்கள்.

Official Mobile App of PM Narendra Modi Launched:

Official Mobile App of PM Narendra Modi Launched:


https://youtu.be/t2Ndfgvk83I

இரும்பு_மனிதன்....... எதற்காக, ஏன் இந்த பெயர் ஒரு தனி நபருக்கு கொடுக்கப்பட்டது என தெரியுமா??

#இரும்பு_மனிதன்.......

எதற்காக, ஏன் இந்த பெயர் ஒரு தனி நபருக்கு  கொடுக்கப்பட்டது என தெரியுமா??

சுதந்திரம் அடைந்த பின்னும் கூட நாட்டின் பல பகுதிகள் வேற்று நாட்டவர்களிடம், வேற்று மதத்தினரிடம் இருந்த ஹைதரபாத், பாண்டிசேரி, சிக்கிம், மிசோரம்,இப்படி பல பகுதிகளை பாரதத்தோடும், காஷ்மீரை பகுதியை மன்னரோடு பேசி பாரதத்தோடு இணைய வைத்ததற்காக மட்டுமல்ல இந்த பெயர்.....

குஜராத்தில் சோம்நாத் ஆலயத்தை இஸாலாமிய படையெடுப்பாளர்கள் இடித்து அதன்மீது இருந்த பகுதியில் மசூதி கட்டினார்கள்...

ஒவ்வொரு ஹிந்துவுக்கும் மீட்க வேண்டும் என உணர்வு இருந்தாலும் பலர் அதை மீட்கும் போரில் வீரமரணம் அடைந்த வரலாறும் உண்டு.....

அப்படித்தான் தன் 15 வயது மகனோடு ஒரு தாய் சோம்நாதர் ஆலயம் இருந்த பகுதிக்கு வந்தார்.... ஆலயம் இடிக்கப்பட்டு மசூதியை பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.....

அதை பார்த்த மகன் எதற்காக அம்மா அந்த கட்டிடத்தை பார்த்து அழுது கொண்டிருக்கின்றீர்கள் எனகேட்க..... அதற்கு அந்த தாய் ப்ரம்மாண்டமான சோம்நாதர் ஆலயம் இஸாலாமிய படையெடுப்புகளால் இந்த ஆலயம் இடிபட்டதையும், இந்த ஆலயத்தை காப்பாற்ற எண்ணற்ற பேர் பலிதானமாக ஆனதையும் கூறினாள்.....

சொல்லிவிட்டு யார் இந்த அவமான சின்னத்தை மீட்க போகிறார்களோ தெரியவில்லை.... ஆனால் நீ எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும்..... இந்த அவமான சின்னத்தை சுக்குநூறாக இடித்து மீண்டும் உலக நாயகனான சோமநாதருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என தன் மகனிடம் சத்தியம் கேட்கிறாள்......

15 வயதே ஆன அந்த தாயின் மகன் எதை பற்றியும் யோசிக்காமல் ஓடும் தண்ணீரை தன் உள்ளங்கையில் அள்ளி தன் தாயின் கரங்களில் அடித்து சத்தியம் செய்து வாக்கு கொடுத்தான்......

நான் என்றாவது ஒருநாள் இந்த தேசத்திலேயே பெரிய மனிதனாக வருவேன்.... அப்பொழுது இந்த அவமான சின்னத்தை இடித்து விட்டு, சோமநாதனுக்கு ஆலயம் அமைப்பேன் என உரத்த குரலில் கூறிவிட்டு தன் தாயை அங்கிருந்து அழைத்துச்சென்றான்...

காலங்கள் உருண்டோடுகின்றது,தேசம் சுதந்திரம் அடைகின்றது.... அப்பொழுது தேசத்தின் மத்திய மந்திரி சபை பிரதமர் நேரு தலைமையில் கூடியது.... அதில் பல தீர்மானங்கள் சபையின் முன்னால் வந்தது..

அதில் ஒன்று தான் குஜராத் சோம்நாத் ஆலயத்தை இடித்து அதன்மீது கட்டப்பட்ட அவமான சின்னமான மசூதியை இடித்து விட்டு மீண்டும் சோமநாதரை நிர்மாணிக்கப்பட வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த தீர்மானத்தை சபையின் செயலாளர் படித்து பொழுது நேரு அவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தார்.... இதை செய்ய சபையும், தானும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறினார்.

அந்த நேரத்தில் சபையில் மந்திரிகளில் ஒருவர் எழுந்து தன் சிம்மக்குரலில் எழுந்து பேச  ஆரம்பித்தும், நேரு தன் இருக்கையில் அமர்ந்தார்.

இந்த தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது.... இந்த தேசத்தில் பல ப்ரம்மாண்டமான கோவில்களை இடித்து அதன்மீது மசூதிகள் கட்டியுள்ளனர்... இந்த தேசம் ஒன்று, மக்கள் அனைவரும் ஒன்று என நம்பியிருந்த நாம் மிகப்பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளானோம்....

நாடு மதத்தின் பெயரால் துண்டாடப்பட்டது.... நம்மால் எதையும் செய்ய முடியவில்லை... துண்டாடியவர்களின் வழிபாட்டு ஸ்தலம் இங்கு எதற்கு?  ஆகையால் இங்கே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்..  அரசின் செலவிலேயே அந்த அவமானச்சின்னம் இடிக்கப்பட வேண்டும்... மீண்டும் அந்த இடத்தில் ப்ரம்மாண்டமாக சோம்நாதருக்கு ஆலயம் அமைக்கப்பட வேண்டும், என கூறி விட்டு அமர்ந்தார்....

அதைக்கேட்டதும் நேரு அவர்கள் கடுமையாக எதிர்த்தும், ஆட்சேபித்தும் பேசினார்.... உடனே அந்த மந்திரி எழுந்து இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கின்றீர்கள் என கேட்டதும் நேருவை தவிர அத்துனை பேரும் தங்கள் கரங்களை உயர்த்தினர்... நேருவோ, இந்த அவமானம் தாங்கமால் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளி நடப்பு செய்தார்......

ஆனால் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.... குஜராத்தில் சோம்நாதர் ஆலயத்தின் மீது கட்டப்பட்ட அவமான சின்னம் இடிக்கப்பட்டு, மீண்டும் சோம்நாதருக்கு ஆலயம் அமைக்கும் பணி  அரசின் செலவிலேயே தொடங்கியது.....

திட்டமிட்டபடி கோவில் கட்டப்பட்டது... கோவில் கும்பாபிஷேகம் நடந்த பொழுது படேல் அவர்கள் உயிருடன் இல்லை.... ஆகையால் நம் நாட்டின் முதலாவது குடியரசுதலைவர் கலந்து கொள்வது என தீர்மானித்தார்... ஆனால் அதற்கும் திரு.நேரு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்... ஆனால் நேருவின் எதிர்ப்பையும் மீறி அதில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு ஸ்ரீ சோமநாதரை வழிபட்டார்......

தீர்மானம் கொண்டு வந்ததும், தன் தாய்க்கு சத்தியம் கொண்டு வந்ததும், நேருவை தெறிக்க வைத்ததும் சாட்சாத் பாரதத்தின் இரும்பு  மனிதன் என  நாம் போற்றி வணங்கும் மாமனிதன் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தான்.....

இன்றைக்கு அவரின் ஜென்ம தினம்.... அவரை போற்றி வணங்குவோம்.

வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பொட்ட ஹிந்து விரோத பகுத்தறிவுக்கும்தான்

வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்லா பொட்ட ஹிந்து விரோத பகுத்தறிவுக்கும்தான்...

1. ஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தை சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா? பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா?

2. கடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறிஸ்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா?

3. தியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா?

4. பிராமணன் பூணூலை அறுக்க துணிந்த உங்களுக்கு ஒரு கிறிஸ்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலை பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா?

5. தாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிட கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா?

6. எடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்த கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரசாரம் செய்ய தைரியமுண்டா?

7. கடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ வெ ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா? அல்லது அண்ணாதுரை , காமராஜர்,எம் ஜி ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்களிடம் திராணி இருக்கிறதா?

8. இந்துக்களை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்கள் முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது கூற அஞ்சுகிரீர்களா ?

9. நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள்,ஹவாலா திருட்டுக்கள் இவற்றில் இந்துக்கள்  பங்கு எவ்வளவு சதவிகிதம்,  பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா அதை மேடையில் பட்டியளிடும் துனிவுஇருக்கிரதா ?

10. இந்துக்களிடையே ஜாதி வெறியைதூண்டி பிறித்தாழ நினைக்கும் கருமர்களே பிற மத ஜாதிவேறுபாடுகளை மூடிமறைப்தேன் மேடையில் நாபேச நடுங்குதேன்?

11. சிவனும் இல்லை அல்லாவும் இல்லை ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்பு பலகையில் எழுத தைரியம் உள்ளதா?

12. உங்கள் மனைவிகளையும் உங்கள் கட்டுமரங்களின் துனைவிகளையும் பொதுமேடையில் வைத்து தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த முடியுமா?

13. இந்துக்கள்  உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி சி எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் தமிழன், வேண்டாம் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது என்று உங்களால் அறிக்கை விட முடியுமா? உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா?

14. பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை கொல் என்ற உங்களால் அந்த பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா?

15. குங்குமம் வைத்தவரை நெற்றியில் என்ன காயம் ரத்தம் வந்திருக்கிறதே என்று கேலி பேசியவர் வைணவத்தை பரப்பிய ராமானுஜரைப்பற்றி எழுதுவதை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா?

16. ஹிந்துக்கள் தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லீம்கள் பர்தா அனிகிறார்கள்.ஹிந்துக்கள் தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தவர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும் பர்தா கழட்டும் நிகழ்ச்சி நடத்தும் ஆண்மை இருக்கிறதா?

17. பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன் சூத்திரன் என்ற பிரிவு அவரவர்களின் பிறப்புத் திறனை கொண்டு நெறியமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது பாமரேனியன் வகை நாய்க்குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா?

18.ஈ வெ ரா கொள்கைகளின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் அவர் கொள்கைகளை வேறு எவரும் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் சென்றீர்களே ஏன்? அவர் கொள்கைகள் பரவக்கூடாது என்ற எண்ணமா? அல்லது சில்லறை பறிபோய்விடுமே என்ற பயமா?

19. பூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்பு சட்டைபற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா?

20. ஒன்றின்மீது நம்பிக்கை இருந்தால் அதை பின்பற்றவேண்டும். இல்லையென்றால் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயமில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும் கடவுளையும் தூற்றி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா?.

முடிந்தால் இதற்கு பதில்கூறி தெளிவு பெறுங்கள். உங்களை இனங்கண்டுள்ளனர் மக்கள் உங்கள் அடுக்கு பேச்சை கேட்டு ஏமாந்த காலம் கடந்தகாலமாயாச்சு,....

சர்தார்_வல்லபாய்_படேல் பெரும்பாண்மை ஆதரவும் ஆளும் தகுதியும் இருந்தும்

#சர்தார்_வல்லபாய்_படேல்
பெரும்பாண்மை ஆதரவும் ஆளும் தகுதியும் இருந்தும் #நேருவின் சூழ்ச்சியாலும், #மகாத்மா_காந்தியின் ஒருதலை பட்சமான முடிவாலும் #இந்தியாவின் முதல் பிரதமர் எனும் பட்டத்தை இழந்தவர்.

தனது வாரிசு அரசியலுக்கு இடையூறு என்பதால் நேருவால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டவர்.

இந்திய வரலாற்றில் தங்களது குடும்ப பெயர் மட்டும் தான் பேசப்பட வேண்டும் என்பதால் வரலாறு பாடத்திட்டத்திலிருந்தே #இந்திரா_காந்தியால் ஓரங்கட்டப் பட்டவர்.

சுதந்திர இந்தியாவை எட்டு நாடுகளாக சிதற வைத்து இந்தியா ஒருபோதும் ஒரு வல்லரசாக மாறாமல் இருக்க #சீனாவின் உதவியுடன் முயன்ற #கம்யூனிஸ்ட்களின் கனவை சுக்கு நூறாக்கியவர்.

இன்றைய மாபெரும் இந்திய வரைபடம் உருவாக காரணமானவர்.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்..

இத்தனை காலம் புறக்கணிப்பட்ட இரும்பு மனிதர்
சர்தார் வல்லபாய் படேலின் பெயர் இன்று உலகம் முழுவதும் பேச வைத்த #பிரதமர்_மோடிக்கு மனமார்ந்த நன்றி.

பி.கு : 2989 கோடி ரூபாய் வீண் சிலவு என கூவும் அல்லக்கைகளுக்கு...
இது வெறும் 182 மீட்டர் கொண்ட ஒரு சிலை மட்டும் அல்ல.
பட்டேல் அருங்காட்சியகம்.
மிக பெரிய கம்யூனிட்டி ஹால்.
3D projector
சிலையின் உள்ளே நுழைந்து 153 மீட்டர் வரை லிஃட்டில் மேலே சென்று சர்தார் சரோவர் அணைகட்டு மற்றும் அதன் பரந்தவெளிகளை கண்டு மகிழும் வசதி.

சுற்றுலா பயணிகள் தங்க 250 டென்ட்கள் கொண்ட டென்ட் சிட்டி.
அங்குள்ள பழங்குடி மக்களின் அருங்காட்சியகம்.

அவர்களின் உற்பத்தி சந்தை.
மலர் கண்காட்சியகம்.
எல்லா மாநிலங்களுக்கும் அவர்களின் விருந்தினர் இல்லம்.

இப்படியாக உலகின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா தளம் கூட.
எனவே செலவு செய்த பணம் சில வருடங்களிலேயே வருவாயாக அரசுக்கு திரும்ப கிடைக்கும்.

எனவே அந்த பணத்தை நினைத்து யாரும் ஒப்பாரி வைக்க வேண்டாம்.

இப்படி ஒப்பாரி வைக்கும் பல #முட்டாள்கள் தான்
#அமெரிக்காவுக்கு போனால் முதலில் செய்வது அங்குள்ள #சுதந்திர_தேவி சிலை முன் நின்று போட்டோ
எடுத்து #முகநூல் பக்கத்தில் போட்டு பெருமை கொள்கிறார்கள்.

சீனா அத பண்றான்,அமெரிக்கா இத பண்றான் என்று வாயை பிளக்க வேண்டியது..இந்தியா ஏதாவது செய்தால் இது தேவையற்றது,வீண் செலவு என்று வாய்ச்சவுடால் பேசுவது.

ராக்கெட் அனுப்புனா சில கூமுட்டைகள் ஒப்பாரி வைக்கும்,ஆனால் mobile use பண்ண முண்டி அடிச்சுக்கிட்டு வரும்..
பாரிசில் உள்ள எபில் towerஐ வாய்ப்பிளந்து என்னே அருமை என்று பாப்பாங்க, சீனாவுல கடலுக்கு நடுவுல பாலம் கட்டுனா wow சூப்பர் ன்னு சொல்லுவாங்க, அரபு நாட்டுல இருக்கு புஜ்ஜு கலீபா என்ற உயரமான கட்டிடத்தை வாய்ப்பிளந்து பாப்பாங்க ஆனால் #இந்தியாவில் இருக்கும் உயரமான பட்டேலின் சிலையை waste என்று கூறும் முட்டாள் கூமுட்டைகளை என்ன என்று திட்டுவது என்று தெரியவில்லை.

இப்படி தான் INS சென்னை என்ற Destroyer கப்பலை இந்தியா சில வருடத்திற்கு முன்பு படையில் இணைத்தது. அது கட்ட 4000 கோடி செலவானது, அதற்கு சில கூமுட்டைகள் இந்த கப்பல் தேவையா என்று வாய்ச்சவுடால் விடுதுங்க, சீனா காரன் எல்லையில வந்து நின்னா போதும் இந்தியாவுக்கு எதிராவும்,இந்திய இராணுவத்துக்கு எதிராவும் கூவுறது.

இன்னும் சில முட்டாள்கள் சொல்றாங்க இந்த சிலை கற்ற காசுக்கு பெட்ரோல் விலையை கம்மி பண்ணி இருக்கலாம் என்று.
ஏங்க பெட்ரோல் விலை ஏன் உயர்ந்தது என்று தெரிந்து கொண்டு வந்து கூவுங்க..

இந்த சிலை எப்ப கட்ட ஆரம்பிச்சாங்க என்று இந்திய தேசிய இராணுவ முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ போட்டு இருக்கேன் பாத்து தெரிஞ்சுக்கங்க.

அமெரிக்கா ஈரான் மேல விதித்த பொருளாதார தடையால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு பெட்ரோல் விலை ஏறியது.இது புரியாம பட்டேல் சிலையை விமர்சனம் என்ற பெயரில் இழிவு படுத்த முயற்சிக்குறாங்க அவிங்க நோக்கம் என்ன என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள் மக்களே..

இந்திய சுதந்திர போராட்ட வீரரும்,இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை நாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது ?
இந்தியன் என்று பெருமை கொள்கிறவர்கள் மட்டும் இந்த பதிவை share பண்ணுங்க..
🇮🇳ஜெய் ஹிந்த்🇮🇳
🇮🇳வந்தே மாதரம்🇮🇳
🇮🇳இந்தியன்🇮🇳

நன்பரின் பதிவு..

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...