Wednesday, 12 December 2018

*ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவு என்பதை விட படிப்பினையை தந்து இருக்கிறது என்றே சொல்லலாம்!

*ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவு என்பதை விட படிப்பினையை தந்து இருக்கிறது என்றே சொல்லலாம்!

பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்களில் மீண்டும் ஆட்சிக்கு  வர இயலாத காரணம் மாநில உள் விவகாரங்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. மக்களின் மன வலிமையை உடைத்து அதன் மூலம் தனது ஆட்சி கனவை அரங்கேற்றிக் கொள்ளும் காங்கிரஸ் தற்போது அதே யுக்தியை பாஜக ஆட்சி செய்த மூன்று மாநிலங்களில் செய்தது என்பதற்கு திரு.ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரமே சாட்சி! இந்தியாவின் கடவுச்சீட்டு ( passport)  பெறுவது நலமா? என்று பல வருடங்கள் யோசித்து பின் கிடைக்க போகும் அதிகாரம் பலன் தரும் என்பதற்காக இந்திய கடவுச்சீட்டு பெற்றவர்கள் நான் "இந்து பிராமணன்" என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது நான்கரை வருட மத்திய பாஜக ஆட்சி! அந்த வகையில் பாஜக கொள்கை ரீதியாக வெற்றியை பெற்று இருக்கிறது. தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் தங்களது முந்தைய ஆட்சியில் செய்த நன்மைகள் என்ன என்னவென்று சொல்லி மக்களிடம் வாக்குகளை பெறவில்லை! ஏனெனில் பட்டியல் செய்ய அவர்கள் ஒன்றும் செய்து விடவில்லை. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மூன்று மாநிலங்களிலும் குறிப்பிட்ட வளர்ச்சி என்பது  பாஜக ஆட்சி அமைந்து  ஏற்படுத்தப் பட்டவை. காங்கிரஸ் ஆண்ட காலத்தில் தீவிரவாதம், குண்டாயிசம் அதிகமாக இருந்த மாநிலங்களாக இருந்தது. அதை சீர் செய்த முயற்சிகளில் பாஜக வெற்றி பெற்று இருந்தது. மக்கள் மாற்றம் தேடி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வில்லை மாறாக திரு.ராகுல் காந்தி அவர்களது பொய் பிரச்சாரத்தில் ஏமார்ந்து விட்டனர்!*

*பாஜக உறவுகளே! இந்தியாவை பூர்வீக தாய்நாடாக கொண்ட சாமான்யன் யார் என்றாலும் கட்சியில், ஆட்சியில் முக்கிய இடத்தை பிடிக்க முடியும் என்ற கொள்கையை கொண்ட அதை நிரூபித்து காட்டிய  ஒரே ஒரு தேசிய கட்சியான பாஜகவில் தனிமனித துதி பாடும் நிகழ்வுகள் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை.  ஐந்து மாநில தேர்தல் முடிவு என்பது நம்பிக்கை மிகுந்த வெற்றிகளை பெற்று வந்த நமக்கு தடைக்கல்லாகி இருக்கிறது. அந்த தடைக் கல்லை உடைத்து படிக்கற்களாக மாற்றும் சக்தி நமது பாஜக உறவுகளுக்கே இருக்கிறது! காரணம் இந்தியாவில் ஏக போக ஆட்சியை கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு மேல் நடத்திய காங்கிரஸ் கட்சியால்  தகர்க்க முடியாத கம்யூனிஸ்ட் கோட்டைகளை தகர்த்த பெருமை நமக்கே உரியது!அந்நிய துர்பாக்கிய சக்திகளுக்கு வாய்ப்பூட்டு இட முடியாமல் அவர்கள் பின் வால் பிடித்து நடந்த காங்கிரசின் அரை நூற்றாண்டு கடந்த ஆட்சியை போல இல்லாமல் கடிவாளம் போட்டதும் நமது கட்சிதான்.*

*மக்களின் பேராதரவை பெற்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பாஜக  சுய தன்மையை, வரலாற்று தொன்மையை மீட்டு எடுப்பதில் வெற்றியை நோக்கியே நமது பயணம் உள்ளது! இந்திய வரலாற்றில் ஊழல் இல்லாத மத்திய அரசு அமைந்தது கடந்த நான்கரை ஆண்டுகளில் தான்! இந்த மகத்தான சாதனை தொடர பாடுபட வேண்டும்.*

*பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நமது கவனம் முழுமையும் களப்பணி, களப்பணி என்று மட்டுமே இருக்க வேண்டும். ஊடக முக்கியத்துவம் என்பதை தாண்டி களம் மட்டுமே கருத்தாக அமைய வேண்டும். நாம் வீழ்ந்து விட வில்லை, சற்று சரிவில் இருக்கிறோம். சரி செய்து விடும் சரிவுதான். யோசித்து களம் ஆடுங்கள்!*

*வெற்றி நமதே!!!*

*A.M.K.மணிவண்ணன்*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...