கவனமாகப் படியுங்கள் -
போலியான வதந்திகளை நம்பி நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டு விடாதீர்கள்-
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து சென்ற ஆண்டு ஜூலை 1 வரை -
17-விதமான வரிகள், 23 கூடுதல் வரிகள் வசூலிக்கப்பட்டு வந்தன -
இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரே வரியாக GST என்ற பெயரில் மோடி அரசு கொண்டு வந்துள்ளது -
நாடு சுதந்திரம் பெற்றது முதல் 70 ஆண்டுகளில் மறைமுக வரி செலுத்தும் 66 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன -
2017-ல் GST அமல்படுத்தியபின் ஒரு வருடத்தில் மட்டும் புதிதாக 48 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன -
GST-க்குப் பின் பதினோரு கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர் -
130 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு மிகப் பெரிய நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மாண்டமான சீர்திருத்தம் இது-
ஒருவன் நல்ல காரியங்கள் செய்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டால் நிலைத்து நின்று விடுவானே என்ற பயத்தில் -
பலரும், அதாவது தேசவிரோத சக்திகள் -
பாமர மக்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பி அவர்களை நம்பச் செய்து விட்டனர் -
திருச்செந்தூர் கோவிலில் என்னிடம் ஒரு நடுத்தர வயது அம்மாள் "தம்பி, மோடி GSTவரி போட்டு பஸ் டிக்கெட் எல்லாம் விலை அதிகமாயிடுச்சு தம்பி" என்றார்கள் -
பேருந்து கட்டணத்திற்கும் GST-க்கும் சம்பந்தம் இல்லை என்பது அவருக்குத் தெரியவில்லை, ஆனால், அவர் பொய்யான செய்திகளால் நம்ப வைக்கப்பட்டுள்ளார் -
நாம் அனைவருமே ஒரு புகைப்படத்தைப் பார்த்திருப்போம், அதில் ஒரு பெட்டிக்கடையின் முன் ஒரு இளநீரை வைத்து அதில் GST 28% என்று எழுதியிருக்கும் -
உண்மையில் 20 லட்சத்திற்குள் வியாபாரம் செய்பவர்களுக்கு GST அறவே கிடையாது ஒன்று -
இரண்டாவது, இளநீர்க்கு GST கிடையாது -
ஆனால், இது போன்ற பொய்யான தகவல்களை திட்டமிட்டு பரப்பினார்கள் -
அடுத்ததாக, சென்ற வருடம் உணவக பில்களையெல்லாம் பொறுக்கி எடுத்து வந்து பாருங்கள் இட்லிக்கெல்லாம் மோடி வரி போட்டு விட்டார் என்று புலம்பினார்கள் -
ஆனால்,GST-க்கு முன் உணவகங்களில் வாட் வரி உட்பட 22.5% வரி வசூலிக்கப்பட்டது என்பதுதான் உண்மை -
ஆனால், GST-ல் அது வெறும் ஐந்து சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது -
அதுவும் கூட, சரவணபவன் போன்ற உயர் தர உணவகங்களில் மட்டும் தான் -
ஏழை மக்கள் உண்ணும் சாதாரண உணவகங்களில் கிடையாது -
அடுத்ததாக இந்தக் கூத்தாடிகள், தங்கள் சினிமாக்களில், தொடர்ந்து 28% வரி வசூல் செய்யும் நாடு என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர் -
உண்மையில் வெறும் ஐந்து சதவீதமான ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் தான் 28% வரி -
அதுவும் GST வருவதற்கு முன் 30% இருந்தது -
2% குறைந்ததை வசதியாக மறைத்து விட்டு விஷத்தைக் கக்குகின்றனர் -
மற்றுமொரு முக்கியமான விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும் -
லாரி டிரைவர்கள் இதை நன்கு உணருவார்கள் -
GST வருவதற்கு முன் ஒவ்வொரு மாநில எல்லைகளிலும் இருந்த சுங்கச்சாவடிகளில் நூற்றுக்கணக்கில் வாகனங்கள் காத்துக் கிடக்கும் -
சில நேரங்களில் ஐந்து நாட்கள் வரையில் கூட காத்திருக்க வேண்டியிருக்கும் -
அதுவும் எப்படி? டிரைவர் வாகனத்திலேயே அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வாகனத்தை நகர்த்திப் போட்டு முன்னேற வேண்டும் -
ஒற்றை டிரைவராக மாட்டிக் கொண்டால் பாத்ரூம் கூட போக முடியாது -
மேலும் எரிபொருள் செலவு வேறு -
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் -
ஆனால், இன்று GST யால் - இ - வே பில் - வந்த பின்பு -
சுங்கச்சாவடிகளே நாடு முழுவதும் கிடையாது -
ஒரு வினாடி கூட வாகனங்கள் காத்திருப்பதில்லை -
இதனால், 30 % அளவிற்கு எரிபொருள் சேமிக்கப்படுகிறது -
இவற்றையெல்லாம் தான் நாம் பாமர மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் -
சீமான், போன்ற அடிமுட்டாள்கள் மீம்ஸ்களைப் படித்து விட்டு வந்து -
அப்பத்தா, சித்தப்பா, கடலை மிட்டாய், ஓலைக் கொட்டாய் என்று உளறிக் கொட்டுவதை நம்பும் மக்களும், அதை ஒளிபரப்பும் ஊடகங்களும் இருக்கும் நாட்டில் -
உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சிரமம்தான் -
ஆனாலும், முயன்றால் நிச்சயம் முடியும்
🕉🕉🕉🕉🕉🕉🚩 கருடன்
No comments:
Post a Comment